பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 13, 2008

எஸ்.வி.சேகர் ராஜிநாமா ? பொதுக்குழுவுக்கு அழைப்பு வரவில்லை என்று விரக்தி

சென்னையில் இன்று நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு அழைப்பு அனுப்பாததால் விரக்தி அடைந்த எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்ய தலைமை செயலகத்துக்கு வந்தார். மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எஸ்.வி.சேகர். அவர் இன்று காலை தலைமை செயலகத்துக்கு வந்தார். அங்கிருந்த நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்துக்கு தன்னை அழைக்கவில்லை என்றும் இதனால் ராஜினாமா செய்ய வந்திருப்பதாகவும் கூறினார். பொதுக்குழுவுக்கு அழைப்பிதழ் வரவில்லை என்பதை கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தினீர்களா? அழைப்பிதழ் ஏன் அனுப்பவில்லை? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த சேகர், அழைப்பிதழ் வரவில்லை என்றுதான் நான் சொல்ல முடியும், அழைப்பிதற் அனுப்பாதது ஏன் என்று கேட்டால் எப்படி சொல்வது?. இதுபற்றி அம்மாவுக்கு தெரியப்படுத்தி விட்‌டேன் என்றார். இதைத்தொடர்ந்து சபாநாயகர் அறை நோக்கி செல்ல முயன்ற எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ.வை, அ.தி.மு.க. நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். எஸ்.வி.சேகரின் வருகையால் சட்டமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. எஸ்.வி.சேகரின் திடீர் ராஜினாமா முடிவால் அ.தி.மு.க. வினரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.....

சட்டசபை வளாகத்தில் செல்போனில் பேசிய பிறகு எஸ்.வி. சேகரிடம் மாற்றம் ஏற்பட, தான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வந்த செய்திகள் தவறானவை என்று கூறினார்.

தனது புதிய காருக்கு சிறப்பு எண் வாங்குவதற்காக தான் கோட்டைக்கு வந்ததாக அவர் கூறியதன் மூலம் அங்கொரு காமெடி நாடகம் அரங்கேறியது. அவரை சிலர் "அன்புடன்' அங்கிருந்து அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாப்பூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகர் கடந்த சில மாதங்களாக கட்சி தலைமை மீது அதிருப்தி கொண்டி ருப்பதாக கூறப்படுகிறது.
அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டதையடுத்து கட்சியில் ஓரங்கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே எஸ்.வி.சேகர் கடந்த முறை சட்டசபை கூட்டத்திற்கு வரவில்லை என்று கூறப்பட்ட போதிலும் அண்மையில் முடிவடைந்த சட்டசபை கூட்டத் தொடரில் பல நாட்கள் அவர் கலந்து கொண்டார். ஆனால் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் அவர் பங்கேற்க வில்லை.

இதற்கிடையே, கடந்த மாதம் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள எஸ்.வி.சேகருக்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அழைப்பு அனுப்பப்பட வில்லை என்று சொல்லப்படுகிறது. அது போலவே இன்று சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவும் அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து எஸ்.வி.சேகர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறைக்கு வெளியே நிருபர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக் காட்சி, கேமிராக்காரர்கள் குவிந்தனர். பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய நாடகம் போல இந்த நிகழ்ச்சிகள் காணப்பட்டன.

ஆனால் சபாநாயகர் ஆவுடையப்பன் வரவில்லை. துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி மட்டும் வந்திருந்த தாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், சபாநாயகரின் செயலாளர் அறை வழியாக எஸ்.வி.சேகர் வெளியேறியதை பார்த்த நிருபர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி கேமிராக் காரர்கள் அவரை பின்தொடர்ந்து ஓடினர்.

அப்போது எஸ்.வி.சேகருடன் வந்த ஒருவர், "வேண்டாம், வேண்டாம்' என்று கூறியபடி எஸ்.வி.சேகரை வெளிய அழைத்துச் செல்ல முற்பட்டார்.

அப்போது அங்கே நின்றிருந்த அதிமுக ஆதரவு பத்திரிகையாளர் செல்போனில் ஒரு எண்ணை அழைத்து தொடர்பு கொண்டு அந்த செல்போனை எஸ்.வி.சேகரிடம் கொடுத்தார். செல்போனில் அவர் பேசிய பின்னர் மீண்டும் அங்கிருந்தவர்களை பார்த்து எதற்காக என்னை பின் தொடர்ந்து வருகிறீர்கள் என்று சிரித்தபடி கேட்டார்.

நீங்கள் ராஜினாமா செய்யப் போவதாக செய்தி வந்துள்ளதே, சபாநாயகரை சந்தித்தீர்களா? என்று நிருபர்கள் கேட்ட போது, நான் எனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வந்த செய்திகள் தவறானவை; அத்தகைய எண்ணம் எனக்கு இல்லை. நான் அதிமுக என்னும் கட்டுப்பாடான கட்சியில் புரட்சித் தலைவி தலைமையில் செயல்படும் சட்டமன்ற உறுப்பினராகவே இருக்கிறேன் என்று எஸ்.வி.சேகர் கூறினார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: எதற்காக சட்டசபைக்கு வந்தீர்கள்?
பதில்: வருகிற 20ம் தேதி நான் எனது சொந்தப் பணத்தில் ஒரு கார் வாங்க இருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அதற்கு பேன்சி நம்பர் வாங்குவதற்காக இங்கே வந்தேன். அந்த நம்பரை போக்குவரத்து துறையில் தான் வாங்க வேண்டும். இங்கு இவ்வளவு நடந்த பிறகு நான் நாளைக்கு தான் போக்குவரத்து துறை அதிகாரிகளை சந்தித்து அந்த நம்பரை கேட்க இருக்கிறேன்.

கே: பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உங்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறதே?
ப: அழைப்பு அனுப்பாததற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. யாருக்கு அழைப்பு அனுப்புவது என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவெடுக்கும். எனக்கு அழைப்பு வரவில்லை என்பதை அதிமுக தலைமை நிலைய நிர்வாகி மகாலிங்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். கட்சி மேலிடத்திற்கும் அதனை தெரியப்படுத்தி உள்ளேன்.

கே: அழைப்பு வராததால் வருத்தம் அடைந்து ராஜினாமா செய்ய முன் வந்தீர்களா?
ப: நான் கட்டுப்பாடு உள்ள அரசியல்வாதி. சராசரி அரசியல்வாதி அல்ல. அழைப்பு வராததற்கெல்லாம் ராஜினாமா செய்ய முடியாது. இப்போதும் நான் சிரித்துக் கொண்டு தானே இருக்கிறேன். இதில் வருத்தத்திற்கு எங்கே இடம் இருக்கிறது.

கே: வந்த செய்திகள் வதந்தியா?
ப: அதைத்தானே நான் மறுக்கிறேன்.

கே: ஆளுங்கட்சி தரப்பில் இந்த வதந்தி பரப்பப்பட்டதாக கருதுகிறீர்களா?
ப: என் கட்சியிலேயே என்னை பிடிக்காதவர்களும் இதை செய்திருக்கலாமே. இதற்காக ஆளுங்கட்சியை குறை சொல்ல மாட்டேன். இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

அப்போது ஒருவர் கூட்டத்தில் புகுந்து எஸ்.வி.சேகரை அலாக்காக தூக்க முயன்றார். கேமிராக்கள் படம் எடுத்து கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வந்தவரோ, "அண்ணே வாங்க அண்ணே, அம்மா கூப்பிட்டு வரச்சொன்னாங்க, வாங்க அண்ணே பொதுக்குழு கூட்டத்திற்கு போகலாம்' என்று கூறினார்.

இதை அடுத்து அவருக்கும், எஸ்.வி.சேகருக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது. கேமிராக்கள் படம் பிடித்துக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டி சத்தம் போடாமல் இருக்குமாறு அவரிடம் எஸ்.வி.சேகர் கூறினார்.

இதன்பின்னர் சட்டசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காருக்கு அவர் விரைந்து சென்றார். அவரை பின்தொடர்ந்து நிருபர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி கேமிராக்காரர்கள் சென்றனர்.

எஸ்.வி.சேகரை அழைத்துச் சென்றவர் தென்சென்னை மாவட்ட அதிமுக துணை செயலாளர் சைதை வைத்தி. சேகர் தனது காரில் புறப்பட்டதும் அவரை தொடர்ந்து சைதை வைத்தியும் சென்றார். அவருடன் அந்த காரில் எம்.என்.நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரன் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்திற்கு எஸ்.வி.சேகரை அழைத்துச் செல்வதாக சைதை வைத்தி கூறினார்.

அதிமுக பொதுக் குழுவில் பரபரப்பு
எஸ்.வி.சேகர் தமது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப் போவதாக பரவிய செய்தி அதிமுக பொதுக்குழுவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடனடியாக எஸ்.வி.சேகருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றனர்.

எஸ்.வி.சேகரின் வீட்டு தொலைபேசி, செல்போன் ஆகியவை அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன. இதனால் எஸ்.வி.சேகருடன் அவர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை.

எனவே அதிமுக நிர்வாகிகள் சிலரை அழைத்து அவரை சமாதானம் செய்து அழைத்து வருமாறு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

எஸ்.வி.சேகர் லேட்டஸ்ட் டி.வி.டி வால் பையன். நல்ல சிரிப்பு நடகம் விருப்பம் உள்ளவர்கள் வாங்கி பாத்துக்கொள்ளலாம்.

6 Comments:

Indian Voter said...

எஸ். வி. சேகர் மற்ற அதிமுக.வினர் மாதிரியல்லாது சற்றேனும் சுயமாக சிந்திக்க கூடியவர். எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினாராக இருப்பினும் மயிலை தொகுதிக்கு தன்னாலயின்றவற்றை செய்துள்ளார். அவரை போன்றவர்களை ஜெயலலிதா உதாசீனப்படுத்துவது மடத்தனம்.

சொல்லப்போனால், சேகருக்கு அதிமுக அல்லது தி.மு.க. இரண்டும் சரியான கட்சியே அல்ல. 2004-லேயே அவர் பா.ஜ.க. பக்கம் போயிருக்க வேண்டும். ஒரு மிகத் தவறான முடிவு எடுத்ததன் பயனை இப்பொழுது அனுபவிக்கிறார்.

Anonymous said...

இதனிடையே, அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து அவர், சட்டசபை வளாகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். பகல் 1.10 மணியளவில் பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபத்திற்கு அவர் சென்றார். அப்போதுதான் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசி முடித்தார்.

பின்னர் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் விருந்துண்ண சென்றனர். அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் எஸ்.வி.சேகரை உணவருந்தும் கூடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

சைவ உணவு பிரிவில் அவர் அமர்ந்து சாப்பிட்டார். பொதுக்குழு நிகழ்ச்சிகளை படம் பிடிக்க வந்த தொலைக்காட்சி மற்றும் புகைப்படக் காரர்களை அதிமுக நிர்வாகிகள் அழைத்து வந்து எஸ்.வி.சேகர் பொதுக்குழுவில் உணவருந்தும் காட்சியை படம் பிடிக்கச் செய்தனர்.

http://www.maalaisudar.com/newsindex.php?id=9245%20&%20section=19

http://www.maalaisudar.com/newsindex.php?id=9238 & section=1

அதிமுக பொதுக்குழுவிற்கு அழைப்பு இல்லாததை தொடர்ந்து சட்டமன்ற அதிமுக உறுப்பினரும், நகைச்சுவை நடிகருமான எஸ்.வி. சேகர் தமது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறப்பட்டதை தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
.
சட்டசபை வளாகத்தில் செல்போனில் பேசிய பிறகு எஸ்.வி. சேகரிடம் மாற்றம் ஏற்பட, தான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வந்த செய்திகள் தவறானவை என்று கூறினார்.

தனது புதிய காருக்கு சிறப்பு எண் வாங்குவதற்காக தான் கோட்டைக்கு வந்ததாக அவர் கூறியதன் மூலம் அங்கொரு காமெடி நாடகம் அரங்கேறியது. அவரை சிலர் "அன்புடன்' அங்கிருந்து அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாப்பூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகர் கடந்த சில மாதங்களாக கட்சி தலைமை மீது அதிருப்தி கொண்டி ருப்பதாக கூறப்படுகிறது.
அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டதையடுத்து கட்சியில் ஓரங்கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே எஸ்.வி.சேகர் கடந்த முறை சட்டசபை கூட்டத்திற்கு வரவில்லை என்று கூறப்பட்ட போதிலும் அண்மையில் முடிவடைந்த சட்டசபை கூட்டத் தொடரில் பல நாட்கள் அவர் கலந்து கொண்டார். ஆனால் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் அவர் பங்கேற்க வில்லை.

இதற்கிடையே, கடந்த மாதம் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள எஸ்.வி.சேகருக்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அழைப்பு அனுப்பப்பட வில்லை என்று சொல்லப்படுகிறது. அது போலவே இன்று சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவும் அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து எஸ்.வி.சேகர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக செய்தி பரவியது. இதைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறைக்கு வெளியே நிருபர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக் காட்சி, கேமிராக்காரர்கள் குவிந்தனர். பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய நாடகம் போல இந்த நிகழ்ச்சிகள் காணப்பட்டன.

ஆனால் சபாநாயகர் ஆவுடையப்பன் வரவில்லை. துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி மட்டும் வந்திருந்த தாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், சபாநாயகரின் செயலாளர் அறை வழியாக எஸ்.வி.சேகர் வெளியேறியதை பார்த்த நிருபர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி கேமிராக் காரர்கள் அவரை பின்தொடர்ந்து ஓடினர்.

அப்போது எஸ்.வி.சேகருடன் வந்த ஒருவர், "வேண்டாம், வேண்டாம்' என்று கூறியபடி எஸ்.வி.சேகரை வெளிய அழைத்துச் செல்ல முற்பட்டார்.

அப்போது அங்கே நின்றிருந்த அதிமுக ஆதரவு பத்திரிகையாளர் செல்போனில் ஒரு எண்ணை அழைத்து தொடர்பு கொண்டு அந்த செல்போனை எஸ்.வி.சேகரிடம் கொடுத்தார். செல்போனில் அவர் பேசிய பின்னர் மீண்டும் அங்கிருந்தவர்களை பார்த்து எதற்காக என்னை பின் தொடர்ந்து வருகிறீர்கள் என்று சிரித்தபடி கேட்டார்.

நீங்கள் ராஜினாமா செய்யப் போவதாக செய்தி வந்துள்ளதே, சபாநாயகரை சந்தித்தீர்களா? என்று நிருபர்கள் கேட்ட போது, நான் எனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வந்த செய்திகள் தவறானவை; அத்தகைய எண்ணம் எனக்கு இல்லை. நான் அதிமுக என்னும் கட்டுப்பாடான கட்சியில் புரட்சித் தலைவி தலைமையில் செயல்படும் சட்டமன்ற உறுப்பினராகவே இருக்கிறேன் என்று எஸ்.வி.சேகர் கூறினார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: எதற்காக சட்டசபைக்கு வந்தீர்கள்?
பதில்: வருகிற 20ம் தேதி நான் எனது சொந்தப் பணத்தில் ஒரு கார் வாங்க இருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அதற்கு பேன்சி நம்பர் வாங்குவதற்காக இங்கே வந்தேன். அந்த நம்பரை போக்குவரத்து துறையில் தான் வாங்க வேண்டும். இங்கு இவ்வளவு நடந்த பிறகு நான் நாளைக்கு தான் போக்குவரத்து துறை அதிகாரிகளை சந்தித்து அந்த நம்பரை கேட்க இருக்கிறேன்.

கே: பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உங்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறதே?
ப: அழைப்பு அனுப்பாததற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. யாருக்கு அழைப்பு அனுப்புவது என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவெடுக்கும். எனக்கு அழைப்பு வரவில்லை என்பதை அதிமுக தலைமை நிலைய நிர்வாகி மகாலிங்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். கட்சி மேலிடத்திற்கும் அதனை தெரியப்படுத்தி உள்ளேன்.

நீங்கள் ராஜினாமா செய்யப் போவதாக செய்தி வந்துள்ளதே, சபாநாயகரை சந்தித்தீர்களா? என்று நிருபர்கள் கேட்ட போது, நான் எனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக வந்த செய்திகள் தவறானவை; அத்தகைய எண்ணம் எனக்கு இல்லை. நான் அதிமுக என்னும் கட்டுப்பாடான கட்சியில் புரட்சித் தலைவி தலைமையில் செயல்படும் சட்டமன்ற உறுப்பினராகவே இருக்கிறேன் என்று எஸ்.வி.சேகர் கூறினார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: எதற்காக சட்டசபைக்கு வந்தீர்கள்?
பதில்: வருகிற 20ம் தேதி நான் எனது சொந்தப் பணத்தில் ஒரு கார் வாங்க இருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அதற்கு பேன்சி நம்பர் வாங்குவதற்காக இங்கே வந்தேன். அந்த நம்பரை போக்குவரத்து துறையில் தான் வாங்க வேண்டும். இங்கு இவ்வளவு நடந்த பிறகு நான் நாளைக்கு தான் போக்குவரத்து துறை அதிகாரிகளை சந்தித்து அந்த நம்பரை கேட்க இருக்கிறேன்.

கே: பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உங்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறதே?
ப: அழைப்பு அனுப்பாததற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. யாருக்கு அழைப்பு அனுப்புவது என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவெடுக்கும். எனக்கு அழைப்பு வரவில்லை என்பதை அதிமுக தலைமை நிலைய நிர்வாகி மகாலிங்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். கட்சி மேலிடத்திற்கும் அதனை தெரியப்படுத்தி உள்ளேன்.

கே: அழைப்பு வராததால் வருத்தம் அடைந்து ராஜினாமா செய்ய முன் வந்தீர்களா?
ப: நான் கட்டுப்பாடு உள்ள அரசியல்வாதி. சராசரி அரசியல்வாதி அல்ல. அழைப்பு வராததற்கெல்லாம் ராஜினாமா செய்ய முடியாது. இப்போதும் நான் சிரித்துக் கொண்டு தானே இருக்கிறேன். இதில் வருத்தத்திற்கு எங்கே இடம் இருக்கிறது.

கே: வந்த செய்திகள் வதந்தியா?
ப: அதைத்தானே நான் மறுக்கிறேன்.

கே: ஆளுங்கட்சி தரப்பில் இந்த வதந்தி பரப்பப்பட்டதாக கருதுகிறீர்களா?
ப: என் கட்சியிலேயே என்னை பிடிக்காதவர்களும் இதை செய்திருக்கலாமே. இதற்காக ஆளுங்கட்சியை குறை சொல்ல மாட்டேன். இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

அப்போது ஒருவர் கூட்டத்தில் புகுந்து எஸ்.வி.சேகரை அலாக்காக தூக்க முயன்றார். கேமிராக்கள் படம் எடுத்து கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வந்தவரோ, "அண்ணே வாங்க அண்ணே, அம்மா கூப்பிட்டு வரச்சொன்னாங்க, வாங்க அண்ணே பொதுக்குழு கூட்டத்திற்கு போகலாம்' என்று கூறினார்.

இதை அடுத்து அவருக்கும், எஸ்.வி.சேகருக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது. கேமிராக்கள் படம் பிடித்துக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டி சத்தம் போடாமல் இருக்குமாறு அவரிடம் எஸ்.வி.சேகர் கூறினார்.

Hariharan # 03985177737685368452 said...

தமிழக திரா"விடக்"கட்சிகளில் ஒன்றான அதுவும் ஜெ.தலைமையிலான கட்சியில் இருந்து கொண்டு இந்த அளவுக்கு இன்னும் தோல்தடிக்காமல் இருக்கும் எஸ்.வி. சேகரின் சுயமாக முடிவெடுக்கும் துணிவைப் பாராட்டுகிறேன்.

பேன்சி நம்பர் காருக்கு வாங்க வந்தேன்னு சொல்லி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை இன்ஸ்டண்டாக நாரத கானசபா ஸ்டேஜ் ஆக்கியதையும் ரசிக்கிறேன்!

Nilofer Anbarasu said...

Basically he is a comedy actor.....I didnot get surprised by his act.

Anonymous said...

ஒருவேளை எஸ்.வி.சேகர் ராஜினாமா செய்திருந்தால் அ.தி.மு.க.,வின் பலம் 58 ஆக குறைந்திருக்கும். ஏற்கனவே, 60 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள அ.தி.மு.க.,வில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., போஸ் பதவி தற்காலிகமாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. அடுத்த சட்டசபை கூட்டத்தொடரின் முதல் மூன்று நாட்களுக்கு பின்னர் தான் இந்த சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும். இந்நிலையில், ராஜ்யசபாவுக்கு தேர்தல் நடத்தினால் அ.தி.மு.க.,வுக்கு இரண்டு எம்.பி., பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு பறிபோகும். எனவே தான் எஸ்.வி.சேகர் தனது பதவியை ராஜினாமா செய்வது பற்றிய நாடகம் தலைமைச் செயலகத்தில் அரங்கேறியதாக கூறப்படுகிறது.
- says Dinamalar

Anonymous said...

எது நாடகம், எது உண்மை என்பதே தெரியாத அளவிற்கு நடத்தப்பட்ட
பின் நவீனத்துவ நாடகம் இது. ஒவர் டு ஸ்ரீமான் ஜெயமோகன்ஜி