பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 19, 2008

ரேவதி தமிழ் பெயரா ?

செங்கல்பட்டு நகர திமுக செயலாளர் நா.சதீஷ்பாபு-ரேவதி திருமணத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார்.

அப்போது பேசிய முதல்வர், மணமகன் பெயர் சதீஷ்பாபு வடமொழியை சேர்ந்தது. அதை மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். மணமகள் ரேவதி பெயர் வடமொழியா, தமிழா எனத் தெரியவில்லை என்றார்.

அப்போது மணமகன் சதீஷ்பாபு தனது பெயரை மாற்றி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து குன்றக்குடி அடிகளாரிடம் ஆலோசித்த முதல்வர், அவருக்கு அன்புச்செல்வன் என தமிழ்ப்பெயர் சூட்டுவதாக அறிவித்தார்

நீங்களே சொல்லுங்கள் ரேவதி தமிழ் பெயரா ? ஓட்டு பெட்டி சைடில் இருக்கு

ஒரு அவுட் ஸ்டாலின் தமிழ் பெயரா ?

23 Comments:

Anonymous said...

"Karunanidhi" is itself not a Tamil name!!

Unknown said...

ரேவதி என்பது 27 நக்ஷத்ரங்களில் ஒன்று. இந்துக்கள் பின்பற்றும் முறையில் நக்ஷத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் சமஸ்க்ருதப் பெயர் உண்டு. தமிழிலும் அவையே சில இடங்களில் மருவியும் சில இடங்களில் அப்படியேவும் உபயோகப்படுகிறது. உதாரணத்திற்கு ஆருத்ரா என்ற சமஸ்க்ருதப் பெயர் ஆதிரை என்று மருவி - அது சிவனின் நக்ஷத்திரமாகையால் திருவாதிரை ஆனது (பெருமாளின் நக்ஷத்திரத்திற்கும் திரு உண்டு - திருவோணம் - ஷ்ரவணம், தமிழில் ஓணம் ஆனது). சில நக்ஷத்திரங்கள் தமிழில் தனது சமஸ்கிருதப் பெயராலே வழங்கப்படுகிறது - உதாரணம் பரணி, ரோகிணி, ஸ்வாதி. ரேவதியும் இந்த வகையை சேர்ந்ததே.

ரேவதி தமிழ் இல்லை என்று ஓட்டும் போட்டு விட்டேன். இது விளக்கம்.

Anonymous said...

Revathi is not a Tamil name at all. If I am right, the name of Balaram's (Krishna's elder brother in our mythology) wife is Revathi. Also, a star's (vedic astrology) name is Revati. Here is an extract of Cologne Sanskrit Dictionary:
"Cologne Digital Sanskrit Lexicon: Search Results
1 revati f. = %{revatI} , the wife of Bala-ra1ma Hariv. ; N. of Rati (wife of Ka1ma-deva) L.
2 revatI f. of %{reva4t} above ; (also pl.) N. of the fifth Nakshatra RV. &c. &c. ; a woman born under the NñNakshatra Revati1 Pa1n2. 4-3 , 34 Va1rtt. 1 Pat. ; (in music) a partic. Ra1gin2i1 Sam2gi1t. ; N. of a female demon presiding over a partic. disease or of a Yogini1 (sometimes identified with Durga1 or with Aditi) MBh. Katha1s. Sus3r. &c. ; of the wife of Mitra BhP. ; of a daughter of the personified light (%{kAnti}) of the Nakshatra Revati1 and mother of Manu Raivata Ma1rkP. ; of the wife of Bala-ra1ma (daughter of Kakudmin) Hariv. Megh. Pur. ; of a wife of Amr2itodana Buddh. ; of various other women HParis3. [888,2] ; Tiaridium Indicum L. ; Jasminum Grandiflorum L. ; pl. `" the wealthy ones "' or `" the shining one's "' (applied to cows and the waters) RV. VS. Gr2S3rS. ; N. of the verse RV. i , 30 , 13 (beginning with %{revatI}) VS. TS. Br. &c. ; of the Sa1man formed from this verse A1rshBr. ChUp. ii , 18 , 1 ; 2 ; of the divine mothers L."

Many names which we think are pure Tamil names are not really Tamil names. It is a surprise that T.N. CM who proclaims himself as a great scholar does not know this.

Anonymous said...

அழகிரி என்பதில் கிரி என்பது தமிழ்ச் சொல்லா?
பேரன் (கனிமொழி மகன்) பெயர் ஆதித்யா என்று இருக்கிறது, அதை
இன்னும் ஏன் மாற்றவில்லை.
கனிமொழி கணவர் பெயர் அரவிந்தன்
என்பதும் வட் மொழிச் சொல்.அதை
ஏன் மாற்றவில்லை.
ஸ்டாலின் தமிழ்ச்சொல்லே அல்ல.
அதுபோல்தான் தயாநிதி,கலாநிதி
என்கிற பெயர்களும்.பாவம் சதீஷ்
பாபு :(.
இப்படியே போனால் பாயைப் அவர் பிராண்டும் நாள் விரைவில் வரும் :)

வால்பையன் said...

சரி, ரேவதி தமிழ் பெயரல்ல என்று விளக்கமும் கிடைத்து விட்டது,
ரேவதி என்ற பெயருல்லவர்கள் அனைவரையும் கலைஞரிடம் அனுப்பிவிடுவோமா வேறு பெயர் மாற்ற!!??

வால்பையன்

Anonymous said...

சிவாஜி படத்துக்கு வரிவிலக்கு கொடுக்கறப்ப பெயர்ச்சொல் எந்த மொழில இருந்தாலும் மாத்தத் தேவையில்லன்னுவாரு. ஆனா, கட்சித்தொண்டன் பேரை மட்டும் மாத்துவாராமா? என்னமோ போங்க...

Anonymous said...

கேணப்பயல் நாட்டிலே கிறுக்குப்பயல் நாட்டாமை அப்படின்னு ஒரு சொலவடை உண்டு. அது அப்படியே பொருந்துகிறது. :)

ஆதித்யா, அரவிந்தன் எல்லாம் மாற்றனுமா?...என்ன கேள்வியிது. இட்லியாரே, இந்த மாதிரி பகுத்தறிவுக்கு ஒவ்வாத கேள்விகளை இனியும் பிரசுரித்தால், விகடனுக்கு நேர்ந்த கதி உங்களுக்கும் என்று எச்சரிக்கிறோம்.

Anonymous said...

வீராஸ்வாமியோட பேரன் பேரு ஹர்ஷா என்று நியூஸ்பேப்பர்லே படிச்சேன்

பினாத்தல் சுரேஷ் said...

வால்பையன் அசிங்கமா பேசாதீங்க!

Anonymous said...

தமிழா தமிழில்லையா என்பதைக் காட்டிலும், பரிச்சியமானதா இல்லையா என்பதே இங்கு பிரச்சினை!

இப்பொழுது புழங்கும் தமிழில் ஆயிரக்கணக்கான வட மொழிச்சொற்கள் உள்ளன. நமக்கு அவை பழக்கமாகிவிட்டதால் நாம் அவற்றை கவனிப்பதில்லை.
करुणानिधिः, कलानिधि:, रॆवती, करि (யானை), कायम् (உடல்), मनस्, कक्षि (கட்சி), என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

Viji Sundararajan said...

title patthavooddanna, stalin peerru dhaan ninaivil vanddhuddhu...u already mentioned :)

Anonymous said...

ஒருவன் தன் கல்யாணத்திற்கு தன் வீட்டுப் பெரியவர்களை அழைக்கலாம், உறவினர்களை, நண்பர்களை அழைக்கலாம் ஆசி வாங்கலாம். (edited) ஒரு முறை எம் ஆர் ராதாவை ஒருவன் திருமணத்திற்கு அழைக்க அவர் மேடையில் மணமகனைப் பார்த்துச் சொன்னது இது "என்னைப் போல ஒரு மொள்ளமாரியைப் போய் உன் கல்யாணத்துக்குப் கூப்புடிருக்கியே உனக்கெல்லாம் அறிவு இருக்கா? உன் பொண்டாட்டி கொஞ்சம் அழகா இருந்தா நானே தள்ளிக் கொண்டு போய் விடுவேன் அப்படிப் பட்ட ஆட்களைப் போய் ஆசி செய்யக் கூப்பிடுகிறாயே, உனக்கு எல்லாம் அறிவு இருக்கா? " என்று வெளிப்படையாகச் சொன்னார். அப்படிப் பட்டவனைக் கூப்பிட்டால் இப்படித்தான் அப்பன் ஆத்தா வைத்த பெயரை மாத்தச் சொல்வான், மானம் கெட்ட ஜென்மங்களும் மாத்தித் தொலையும். இவன் வீட்டில் நாய்குட்டி வரைக்கும் சமிஸ்கிருதப் பெயர். இவன் மந்திரி ஆற்காடு வீராசாமி தன் பெயரை வீராஸ்வாமி என்றும் பாலு பாஆலு என்றும் மாற்றி வைத்துக் கொள்கிறார்கள். இவன் பொண்டாட்டி அடையாறு டிராஃபிக் சிக்னல் அளவுக்குப் பொட்டு வைத்துக் கொள்கிறாள் ஆனால் இவன் மட்டும் ஊரில் இருப்பவன் பெயரெல்லாம் மாத்தச் சொல்வான், குங்குமம் வைத்தால் காட்டுமிராண்டி என்பான். முதலில் கருணாநிதி என்னும் வடமொழிய்ப் பெயரை இவன் மாற்றி விட்டு வந்து ஊருக்கு உபதேசம் செய்யட்டும். வந்துட்டானுங்க வட மொழி தென் மொழி பிரிவினை பேச அயோக்கியப் பயலுக. இவனைக் கூட்டி ஆசி வாங்கிய அந்த சதீசு எப்படிப் பட்ட ஆசாமியாய் இருக்க வேண்டும்? இவனோட பகுத்தறிவு ப்ரோகிதத்துக்கு ஒரு லட்ச ரூபா தட்சணை வேற வாங்கிக் கொள்வான்
(edited)

Anonymous said...

Hello

You and Cho are unique in one issue that both are number one critics of Karuna regardless of the reliability of the news. we can find this kind of news only in Idly vadai or thuklak. kindly continue your duty as it is side splitting laughter.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

இட்லிவடையின் தரம் அனானி பின்னூட்டங்களில் பல் இளிக்கிறது.

Anonymous said...

இட்லிவடை, உங்க எல்லா கருத்துக் கணிப்புலயும், "போடா புண்ணாக்கு, எங்களுக்கு வேற வேலை இல்லையா?" ன்னு ஒரு column வைங்அக. எங்களுக்கு வசதியா இருக்கும். சர்வேசன் தான் அதுக்கெல்லாம் சரி.

Hariharan # 03985177737685368452 said...

ரேவதியை விடுங்க.

கருணாநிதி,தயாளு,கலாநிதி, தயாநிதி,ஸ்ஸ்டாலின், துர்கா, உதயநிதி எனும் பெயர்கள் எல்லாம் தமிழா??

குன்றக்குடி அடிகளே காவடி எடுத்தாலும் இதெல்லாம் தூயதமிழில் மாறப்போவதில்லை...

சதீஷ்பாபு பாவம்!
கருணாநிதிக்கு அவ்வப்போது கொப்புளிக்கும் தமிழுணர்வு....
தமிழ்மொழி நிலை அய்யோபாவம்!

வால்பையன் said...

//வால்பையன் அசிங்கமா பேசாதீங்க!//

வேறு பெயர் மற்ற என்று தெளிவாக குறிபிட்டுள்ளேனே!
அப்புறம் ஏன் சாமி வம்புக்கு இழுக்குரிங்க!

even i like ur way of thought

வால்பையன்

Anonymous said...

கனிமொழியின் மகன் பேர் ஆதித்யா !! இது தமிழ் பெயரா?? கருணாநிதியே தமிழ் பெயர் இல்லையே !!!!!

மு.க.வுக்கு மண்டை குழம்பிக்கிட்டிருக்கு, !!!

Anonymous said...

ரேவதி சம்ஸ்கிருதப்பெயர். அதற்கு சரியான தமிழ்ப் பெயர் குட்டி ரேவதி. சிறு இலக்கிய ஆசிரியர்களிடம் கேளுங்கள் சொல்வார்கள்.

Anonymous said...

தமிழ் (equivalent names) நட்ஷத்திரங்கள் முறையே: புரவி, அடுப்பு, ஆரன், சகடு,மான்ரலை, மூதிரை, கழை, காடிறு, அரவு,கெடுனுகம், கணை, உத்திரம், கை, அறுவை,விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, முற்குளம்,கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழ், முரசு, தோணி ஆகியவை. (ref மள்ளம் மலர் quoted in மங்கையர் மலர்).

ஆக ரேவதி = தோணி

வல்லிசிம்ஹன் said...

நன்றி அனானி.
என் பெயருக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்று தெரிந்ததில் உண்மையில்
மிக்க மகிழ்ச்சி. அதுவும் தோணியைப் போல ஒரு உதவும் பொருளின் பெயரால் அழைக்கப் படுவது மிகுந்த பெருமையே.
மனமார்ந்த நன்றி.
ரேவதிநரசிம்ஹன்

Anonymous said...

ஆக ரேவதி = தோணி

அப்படினாக்க மஹிந்தர் சிங் தோணி யோட பேரு "ரேவதியா" ?

இட்லி வடையோட உண்மையான பேரு பரணி யா ? அதுக்கு தமிழ்ல அடுப்பு ன்னு போட்டிருக்கு ?

இது எப்படி இருக்கு ?