சிற்றிதழ்கள் எல்லாம் அச்சாவது ஒரே இடத்தில் தான், அச்சடிப்பவர் அதை படித்துப் பார்த்தால் அடுத்த முறை அச்சடிக்க மாட்டார். அதனால்தான் நாம் அவற்றைப் படிக்க வேண்டியுள்ளது. சிற்றிதழ்கள் என்று அழைக்கப்படும் இலக்கிய இதழ்களைப் பற்றியது இந்தக் கட்டுரை.
சிற்றிதழ்களில் எழுதுபவர்கள், நடத்துபவர்கள் நிறைய பேர் இலக்கிய மேதைகள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்; அது தவறு. சிறு புத்தியுடைவர்கள் ( குறுகிய புத்தி என்று படிக்கவும் ). திராவிட கட்சிகளுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. இவர்களும் அரசியல் காரணங்களுக்காக தங்கள் அட்டைப் படங்களை மாற்றுபவர்கள். அல்லது அட்டைப்படங்களுக்காக உள் இதழையே புறக்கணிப்பவர்கள். எப்போதும், பிராமண துவேஷம் இருக்கும், வியாபாரத்துக்காக பிராமணர்கள் - அதாவது பிராமண முத்திரை விழாத முற்போக்குப்(?!) பிராமணர்கள் இவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். கோவை குண்டு வெடிப்பை நியாயப்படுத்துபவர்கள், பொடா சட்டத்தை எதிர்ப்பவர்கள். பாவம், ஞாநியின் சமீபத்திய கருணாநிதி குறித்த கட்டுரைக்குப் பின் தான் இவர் பூணூல் போட்ட ஆசாமி என்றே இவர்களுக்குத் தெரிந்தது. (முரசொலியில் வேலை செய்த போது ஞாநி தினமும் சட்டையணிந்தே அலுவலகத்துக்கு வந்ததால் இவர்களுக்குத் தெரியவில்லை.)
இதில் எழுதும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லோரும் மாதா மாதம் எழுதுபவர்கள். எழுத ஒண்ணு கிடைக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கு வெளிநாட்டு சரக்கு. 100 வருஷத்துக்கு முன்பு எழுதிய டால்ஸ்டாய் கதை மொழிபெயர்ப்பு, அல்லது பழைய படத்தை பற்றிய கட்டுரை என்று ஏதாவது எழுதுவார்கள்.
திடீர் என்று ஒரு மாதம் ஒருவரைக் காணவில்லை என்றால் அவருக்கும் இதழுக்கும் ஏதோ சகிக்க முடியாத உள்நாட்டுப் பிரச்சினை என்று முடிவு செய்துவிடலாம். முற்று புள்ளி இல்லாமல் பெரிய வாக்கியங்களாக எழுதும் இவர்கள் தாங்கள் தான் பெரிய ஆள் என்று நினைத்துக்கொள்பவர்கள். எழுதும் எழுத்தாளர்கள் பலபேர் egoist.
இவர்களது பெரிய பலம் என்ன் என்றால் எதையுமே யாருக்கும் புரியாத நூடூல்ஸ் பாணி மொழி நடையில் குழப்பமாக எழுதுவது. பக்கம் பக்கமாக அலுப்பு தரும் நடையில் புரியாத வார்த்ததகளைப் போட்டு தங்கள் அறிவு ஜீவித் தனத்தை நிலை நிறுத்திக் கொள்வது. இந்தச் சிறு பத்திரிகைகளைச் சேர்ந்தாற்போல் ஒரு வாரம் ஒரு நபர் படித்தால் பயித்தியக் கார ஆஸ்பத்திரிக்குப் போய் விடுவார்.
தற்போது ஜெயமோகன் அவர்கள், எனிஇந்தியன் மாத இதழில் தமிழச்சி, கனிமொழி இருந்தால் எழுத மாட்டேன் என்கிறார். அவர்கள் எழுத்துத் துறையில் மிக மோசமான படைப்பளியாகவே இருந்துவிட்டு போகட்டும், ஆனால் இவரின் வாதம் எவ்வளவு முட்டாள்தனமானது. இனி ஒரு இதழுக்கு எழுதும்போது அந்த இதழின் பிற படைப்பாளர்களின் பெயர்களையும் காட்டி ஒப்புதல் வாங்கியே எழுத்தை ஒருவரிடமிருந்து வாங்க வேண்டுமா? சிற்றிதழுக்கு எழுதினால் அறிவும் சிறிதாகிவிடுமா என்ன? இல்லை இவர் வசனம் எழுதும் படத்தின் கேசட்டை கனிமொழி வெளியிட்டால் இவர் நான் வசனம் எழுத மாட்டேன் என்று குழந்தை போல் அடம்பிடிப்பாரா ?
ஜெயமோகன் எனி இந்தியனில் எழுதாதற்கு தமிழச்சி, கனிமொழி என்று அவர் காரணம் சொன்னாலும் அது காரணமாக இருக்க முடியாது. ஜெயமோகன் உயிர்மையில் எழுதும் ரெகுலர் எழுத்தாளர். ஆனால் எந்நேரமும் எல்லா பெரும் எழுத்தாளர்களிடமும் பணத்திற்கு பஞ்சப்பாட்டு பாடும் மனுஷ்யபுத்திரன் தமிழச்சியின் கவிதைத் தொகுப்பை மட்டும் ஆடம்பரமாக வெளியிட்டதில் கோபம். இவரே இதை புத்தகச் சந்தையில் பலரிடம் சொல்லியிருக்கிறார். இதில் நியாயமில்லாமல் இல்லை. தன் படைப்புகளுக்கு இந்த டிஜிட்டல் பேனர், விழா கூட்டம் போன்றவை ஏன் இல்லை என்ற ஏக்கம். இதற்கு இவர் பா.விஜய், வைரமுத்து, வாலி போல் ஜால்ரா அடிக்காதது தான் காரணம் என்று யோசித்திருந்தால் தெரிந்திருக்கும். அல்லது தமிழச்சி மாதிரியானவர்கள் சொந்தக் காசில் அதையெல்லாம் செய்துகொண்டிருப்பார்கள் என்ற தமிழ்நாட்டு குஞ்சுக்குளவானுக்குக் கூட தெரிந்தவிஷயம் இவருக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம்தான். (இதில் வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து மனுஷ்யபுத்திரன் பத்ரியிடம் புளகாங்கிதமடைவது அடுத்த காமெடி. ஐயா, வந்த கூட்டம் தமிழச்சிக்கு வந்த கூட்டமய்யா, அவருடைய தமிழ் இலக்கியத்துக்கோ, உயிர்மைகாகவோ வந்ததல்ல என்பதை மனசாட்சியைக் கேட்டுச் சொல்லுங்கள். வந்தவர்களில் எவ்வளவு பேர் கறை(கரை) வேட்டி கட்டியவர்கள் என்று கவுண்ட் செய்தீர்களா ?) கனிமொழி, தமிழச்சி போன்றவர்கள் அடுத்த முறை உயிர்மையில் எழுதினால் இவர் எழுதாமல் இருந்துவிடுவாரா? கனிமொழி காலச்சுவடில் இருப்பவர்; உயிர்மை ஞாநிக்கு கண்டனக் கூச்சல் போட்ட கூட்டதிற்குப் போனதால் உயிர்மையுடன் கொஞ்சம் ராசியானார். அதுவும் வருங்கால மத்திய அமைச்சர் வேறு. வியாபார நோக்கில் பார்த்தால் ஜெயமோகனைக் காட்டிலும் தமிழச்சியும், கவிஞர் கனிமொழியுமே இப்போது எல்லா பத்திரிகைகளுக்கும் தேவை.
மனுஷ்யபுத்திரன் வியாபாரிகளிலும் படுமோசமான வியாபாரி. பார்ப்பனர்களை எதிர்த்துக்கொண்டே பார்ப்பன சுஜாதாவின் படைப்பாக்கத்தில் பெரும்பணம் பார்த்தவர். இதில் சுஜாதா என்ற அறிவுஜீவி கனிமொழி, தமிழச்சிகளை அபத்தமாய் தூக்கிவிட்ட கொடுமையையும் சொல்லவேண்டும். ஏன் ? ஜால்ரா தான்!
இதுபோன்ற சுற்றியிருக்கும் இதுநாள் வரை ஜெயமோகன் எழுதிக்கொண்டிருந்த இன்னபிற சிறுபத்திரிகைகள் செய்த அரசியல், அவரை எப்படியாவது எனி இந்தியனில் எழுதவைக்க கூடாது என்ற நல்லெண்ணம் மட்டுமே காரணம். என்ன ஜெயமோகன் இது கூட புரியவில்லையா ? ஏழாம் உலகத்திலா இருக்கீங்க ?
ஐயா சிறுபத்திரிகை எழுத்தாளர்களே, நீங்கள் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுபவர்களைவிட வெகுஜன வாசகர்களைவிட உயர்ந்தவர்களாகவே இருந்துவிட்டுப் போங்கள். தமிழ் அப்படிப்பட்ட எழுத்தாளர்களுக்கான சரியான அங்கீகாரத்தைத் தரவில்லை என்ற நாணயத்தின் இன்னொரு பக்கத்தையும் வெட்கத்துடன் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் அதே காரணத்திற்காக வெகுஜனத்தைவிட கீழான பண்புகளுடன் வலம்வரவேண்டுமா? சிறுபத்திரிகைகளில் குழுமனப்பாங்கு கேவலம் என்று திராவிட மற்றும் வெகுஜனங்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது, அந்தக் குழுக்களின் இருப்பால்தான் இலக்கிய விவாதங்கள் முழுவீச்சில் அடுத்தடுத்த கட்டத்துக்கு செல்வதாக நம்பும் ஜெயமோகன் போன்ற விமர்சன விசுவாசிகள் தங்கள் எதிர்ப்பையும் அதே எழுத்தின்மூலம் காண்பிக்கலாமே. ஏன் இவர்கள் படைப்புகள் சொத்தையானவை, ஏன் இவர்களுக்கான அங்கீகாரம் நியாயமற்றது என்ற உங்கள் மதிப்பீட்டு விளக்கக் கட்டுரையையே எனி இந்தியன் முதல் இதழில் எழுதி எங்களுக்கும் எடுத்துச் சொல்லுங்களேன்.
அதைவிடுத்து, சமரசம் செய்து இவர்களுக்கு சரியாக ஒரு இதழில் எழுதமுடியாதென்றால் தனியொரு படைப்பாளியாக உங்களுக்கே உங்களுக்கான இதழை உருவாக்கித்தான் எழுதமுடியும்.
இந்தக் கூத்துக்கு லக்கிலுக் எடுத்துப் போட்டிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் விமர்சனம் அதைவிடக் கேவலம். ஜெயமோகனின் எந்த விமர்சனம் புனிதபிம்பம் எஸ்ராவை இந்த அளவு பாதித்து, சமகால எழுத்தாளரை இப்படி எழுதவைத்தது என்றும் யோசித்து இதைச் சொல்லியிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும். (நாளைக்கே ஜெயமோகன், எஸ்.ரா சந்தித்துக்கொண்டால் போலியாக வணக்கம் சொல்லும் காட்சியை பர்க்கலாம்). ஜெயமோகனைப் போன்ற எழுத்துத் தவசிகள் தன் அங்கீகாரத்துக்காக இப்படி எல்லாம் செய்யவேண்டியிருப்பதும், தமிழச்சிகள் டிஜிட்டல் வெளிச்சங்களில் மிளிர்வதும் 'உயிர் தமிழுக்கு; உடல் மண்ணுக்கு' என்று வசனம்விடும் திராவிடக் கழகங்களுக்கு கேவலம் என்று எப்போது உறைக்கப் போகிறது.
எது எப்படியே, இப்போதெல்லாம் பத்திரிகைகளில் அட்டைபடத்தில் கனிமொழி அல்லது மோடி படத்தை போடுவது ஃபேஷன்.
ஜால்ராவுக்கு ஒன்று, எதிர்ப்புக்கு ஒன்று என்ற ரீதியில்.
வாழ்க தமிழ்!
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, February 07, 2008
சிறு பத்திரிக்கைகள் - சின்ன புத்தி
Posted by IdlyVadai at 2/07/2008 11:00:00 PM
Labels: இட்லிவடை ஸ்பெஷல், கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
23 Comments:
//அடுத்த முறை அச்சடிக்க மாட்டார். அதனால்தான் நாம் அவற்றைப் படிக்க வேண்டியுள்ளது. //
//திராவிட கட்சிகளுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை.//
//முற்று புள்ளி இல்லாமல் பெரிய வாக்கியங்களாக எழுதும் //
// இதழின் பிற படைப்பாளர்களின் பெயர்களையும் காட்டி ஒப்புதல் வாங்கியே எழுத்தை ஒருவரிடமிருந்து வாங்க வேண்டுமா? //
//ஜால்ராவுக்கு ஒன்று, எதிர்ப்புக்கு ஒன்று என்ற ரீதியில்.//
ரொம்ப ரசிச்சு படிச்சேன் இட்லி.. எந்தா அளவுக்குன்னா.. "நாந்தான் இட்லிவடையோ"ன்னு எனக்கே சந்தேகம் வர அளவுக்கு :-)
தமிழ் சிற்றிதழ் நடத்துபவர்கள் பெயருக்குத் தக்கவாறே சின்ன புத்தியும் படைத்தவர்களாக இருக்கிறார்கள். பொறாமை, பூசல், கோஷ்டி மனப்பான்மை, அரசியல்வாதிகளை எதிர்ப்பது போல் நடித்துக் கொண்டே அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா போடுவது, எதிராளிகளை வலி வரும் அளவுக்கு இடுப்புக்குக் கீழே அடிப்பது, கேஸ் போடுவது, மிரட்டுவது, அசிங்கமாக எழுதுவது என்று ஒரு தாதாவுக்குரிய அத்தனை குணாதிசியங்களும் படைத்தவர்களே பெரும்பாலான சிறு பத்திரிகையாளர்கள். சில உதாரணங்களைப் பார்க்கலாம்
காலச் சுவடு பத்திரிகையில் இருந்து பிரிந்து சென்ற ஒரு குழு சு ரா வை மிகக் கேவலமாகச் சித்தரித்து ஆபாசக் கட்டுரை எழுதியது
காலச் சுவடும் தன் பங்குக்குக் குறைந்ததல்ல. எதிராளிகளை மிரட்டுவது இவர்களுக்குக் கை வந்த கலை. வெங்கட் சுவாமிநாதன் அவர்களுக்கு இயல் விருது அளிக்கப் பட்ட பொழுது எழுந்த சர்ச்சையை முன் வைத்துத் தள்ளாத வயது என்றும் பாராமல் அவர் மீது வக்கீல் நோட்டீஸ் அனுப்பி அவரை வயதான காலத்தில் மிகுந்த மன வருத்தத்திற்கும், சொல்லொணா மன உளைச்சல்களுக்கும் உள்ளாக்கி சித்ரவதை செய்தது.
மேலும் யாருக்காவது யாராவது விருது கொடுத்து விட்டால் உடனே விருது கொடுத்தவர்களை மிரட்டும் வேலைகளைச் செய்வதிலும் இந்த சிறு பத்திரிகை தாதாக்கள் எத்தர்கள்.
ஒரு முறை அமெரிக்காவில் இருக்கும் கஷ்டப் படுவதாகச் சொன்ன ஒரு கவிஞருக்கு உதவ முன் வந்தனர். கொடுப்பதை ஒரு விருதாகக் கொடுத்து விடலாம் என்று கொடுத்தனர்.உடனே போட்டி சிற்றிதழ் கோஷ்டிக்கு மூக்கில் வேர்த்து விட்டது. உடனே கால்ச் சுவடு கிளம்பி அமெரிக்க நண்பரிடம் 'நீ யார்? எதற்காகக் கொடுக்கிறாய்? எப்படிக் கொடுக்கலாம்? எவ்வளவு கொடுத்தாய்? உன் அருகதை என்ன?" என்றெல்லாம் சி பி ஐ ரேஞ்சுக்குக் குடைந்து எடுத்து மிரட்டி விட்டார்கள். நண்பர் அதுக்கு அப்புறம் இலக்கிய வாந்திகள் என்ற பெயரைக் கேட்டாலே துண்டைக் காணும் துணியைக் காணும் என்று அரண்டு போய் ஓடுகிறார் :))
பத்திரிகை சுதந்திரம், பேச்சுரிமை என்றெல்லாம் வாய் கிழியப் பேசுவார்கள் எழுதுவார்கள் ஆனால் இந்த சின்ன புத்தி சிறு பத்திரிகையாளர்களின் பத்திரிகைச் சுதந்திரம் லட்சணத்தைக் கொஞ்சம் பார்க்கலாம். வெங்கட் சுவாமிநாதன் மீது கேஸ் போட்டவர்கள் ஒரு குழு என்றால் இணையம் மூலமாக பேச்சுரிமைக்கு பரந்த இடம் கொடுத்து வரும் திண்ணை குழுமத்தை மிரட்டினார் ஞாநி என்ற சிறு பத்திரிகையாளர். மாயவரத்தான் என்ற வாசகர் எதிர் வினையில்தன் கருத்தைச் சொல்லப் போக உடனே, பொங்கி எழுந்து ருத்ர தாண்டவம் ஆடி விட்டார் எழுத்துரிமைக்காகப் போராடும் ஞாநி. டாய், எவண்டா அவன் என்னை எதிர்த்து எழுதியது என்று சண்டியர்த்தனம் செய்து திண்ணை மீதும் மாயவரத்தான் மீதும் கேஸ் போடுவேன் என்று மிரட்டினார். மேலும் திண்ணை தன் கட்டுரைகளை நீக்க வேண்டும் என்று பேட்டை ரவுடி ரேஞ்சில் மிரட்டல் விட, திண்ணை என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று சொல்லி விட்டார்கள். அப்புறம் ஆள் கப் சிப்.
இதே ஞாநிதான் சுஜாதாவைப் பார்த்து இன்னும் செத்து ஒழியவில்லையா என்றும் கேட்டவர். அத்தனை வக்கிரம் பிடித்த மிருகங்கள் இந்த சிறு மதியாளர்கள். பலர் இந்த சிறு பத்திரிகைகளை ப்ளாக் மெயில் செய்வதற்கே நடத்துகிறார்கள் அந்தக் காலத்து லட்சுமிகாந்தன் மஞ்சள் பத்திரிகை போல
மேலும் இந்த சின்னப் புத்தி பத்திரிகையாளர்களுக்கு ஒரு வித நோய் உள்ளது. அதாவது தீவீரவாதத்தை ஆதரிப்பதும், இந்திய, இந்துத்துவ சார்புள்ளவர்களை மிகக் கேவலமாக திட்டி தங்கள் மதச்சார்பின்மையை நிறுவிக் கொள்வதும் ஆகும். எங்காவது இஸ்லாமியத் தீவீரவாதிகள் குண்டு வைத்தால் உடனே காலச்சுவடு அந்தோணி சாமி மார்க்ஸ் எனப்படும் அ.மார்க்ஸ் என்ற தனது ஆஸ்தான தூதுவர் தலைமையில் ஒரு குழுவை அனுப்பி தீவீர்வாதிகளுக்கு ஆதரவாக ஒரு பெரிய கண்டு பிடிப்பை எடுத்து விடும். குண்டடி பட்டுச் செத்தவர்கள் பற்றி ஒரு மூச்சு கூட விடாது. இதை ஒரு சடங்காகவே செய்து வருகிறது.
போட்டிக்குப் பத்திரிகை நடத்தும் மனுச புத்திரன் எனப்படும் சாகுல் ஹமீதோ தன் மதத்தினர் செய்யும் தீவீரவாதத்தைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசமாட்டார். மோடியை மட்டும் கண்டித்து ஸ்பெஷல் மலர் போடுவார். இப்படி மதத் தீவீரவாதத்தில் இரட்டை வேடம் போடுவது இந்த சிறு மனம் கொண்ட சின்னப் புத்தி கொண்ட கோணல்காரர்களின் மற்றொரு சிறப்பு அம்சம்.
பார்ப்பன எதிர்ப்பு என்பது இவர்களுக்குத் தாரக மந்திரம். இந்தியா, இந்து எல்லாம் இவர்களுக்குப் பிடிக்காத கெட்ட வார்த்தை
இப்பொழுது எல்லா சிறு மதி பத்திரிகையாளர்களுக்கும் காவல் தெய்வம் கனிமொழியும் அவரது தொண்டரடிப் பொடிகளான சல்மா, தமிழச்சியும்தான். அவர்கள் உட்கார் என்று சொன்னால் இவர்கள் நெடுஞ்சான்கிடையாகத் தவழ்ந்து விடுவார்கள்
இந்தச் சின்னப் புத்திக் கவிஞர்கள் சிலர் கருணாநிதியின் கையைப் பிடித்தால் உடம்புக்குள் அதிர்வலைகள் ஏற்படுவதாகக் கரெண்டு அடிப்பதாகச் சொல்லி ஜால்ரா போட்டதை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது :))
சுருங்கச் சொல்வதென்றால் மலம் துடைக்கக் கூட அருகதையில்லாத பத்திரிகைகள்தான் இவை
கீழ்க்கண்ட வரிகள் தப்பிதமாக வந்து விட்டது
"ஒரு முறை அமெரிக்காவில் இருக்கும் கஷ்டப் படுவதாகச் சொன்ன ஒரு கவிஞருக்கு உதவ முன் வந்தனர்"
"ஒரு முறை அமெரிக்காவில் இருக்கும் சில நண்பர்கள், இந்தியாவில் இருக்கும் கஷ்டப் படுவதாகச் சொல்லப் பட்ட ஒரு கவிஞருக்கு உதவ முன் வந்தனர்" என்று திருத்திப் படிக்கவும்
//வந்தவர்களில் எவ்வளவு பேர் கறை(கரை) வேட்டி கட்டியவர்கள் என்று கவுண்ட் செய்தீர்களா ?)//
ரீடரில் பார்த்து இதைப் பத்தி சொல்ல வந்தா அதுக்குள்ள அப்டேட்டா!! நல்லா இருங்க சாமி!!
////அடுத்த முறை அச்சடிக்க மாட்டார். அதனால்தான் நாம் அவற்றைப் படிக்க வேண்டியுள்ளது. //
//திராவிட கட்சிகளுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை.//
//முற்று புள்ளி இல்லாமல் பெரிய வாக்கியங்களாக எழுதும் //
// இதழின் பிற படைப்பாளர்களின் பெயர்களையும் காட்டி ஒப்புதல் வாங்கியே எழுத்தை ஒருவரிடமிருந்து வாங்க வேண்டுமா? //
//ஜால்ராவுக்கு ஒன்று, எதிர்ப்புக்கு ஒன்று என்ற ரீதியில்.//
ரொம்ப ரசிச்சு படிச்சேன் இட்லி.. எந்தா அளவுக்குன்னா.. "நாந்தான் இட்லிவடையோ"ன்னு எனக்கே சந்தேகம் வர அளவுக்கு :-)//
இம்புட்டுதான் எனக்கு புரிஞ்சுது. அதனால இந்த பின்னூட்டத்தை ரொம்ப ரசிச்சுப் படிச்சேன் பினாத்தல். எந்த அளவுக்குன்னா.. "நாந்தான் பெனாத்தலாரோ"ன்னு எனக்கே சந்தேகம் வர அளவுக்கு :-)
ayya,
couldn't understand anything... any how... good article to read... abt our writers
அருமையான கருத்துக்கள் என்று நீ நினைத்துக் கொண்டிரு. திராவிடர்களையோ,திராவிட பத்திரிக்கைகள் பற்றியோ,பகுத்தறிவு பகலவன் அய்யா.பெரியார் பற்றியோ பேசவோ உனக்கு என்ன தகுதி உள்ளது. மோடியை உத்தமன் என்று சொல்லும் உன் தாயை,சகோதரிகளை உன் கண்முன்னால் கதற கதற கற்பழிக்கப்பட்டு இருந்தால் நீ இப்படியெல்லாம் பேச மாட்டாய். இனிமேலாவது உன் நிலையை மற்றிக்கொள். பார்ப்பண மாமா,பாலிடிக்ஸ் புரோக்கர் சோ வின் துக்ளக் என்பது பன்றியை தின்று விட்டு வீசி எறிந்த பார்ப்பண எச்சில் இலை, அதைப் போய் நக்கித் தின்னும் நாய் தான் இட்லிவடை என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
ஐயா சில சந்தேகங்கள்
1,இது விருந்தினர் பதிவா, நடை இட்லி வடை நடை போல் இல்லை.ஜெமோவைப் பிடிக்காத
ஒரு முன்னாள் வலைப்பதிவர் எழுதியது போல் இருக்கிறது.அந்த ஏழுமலையானை கேட்டால் தெரியுமோ.
2,பினாத்தல் சுரேஷ்,இலவசக்
கொத்தனார், இட்லி வடை மூவரும்
ஒரு குழுவா இல்லை ஒன்றாக
யோசிக்கும் மேதாவி/முட்டாள்களா
3,இப்போது சிறுபத்திரிகை வேறு,
உயிர்மை போன்றவை வேறு வகை,
இது இ.வடைக்குத் தெரியாதா.
இன்னும் 500/400/300/200/100 பிரதிகள் அடித்து அடுத்த
இதழ் எப்போது வரும் என்று
தெரியாத சிறு பத்திரிகைகள்
உள்ளன.அவை கனிமொழியை
அட்டையில் போடமாட்டா.
எனவே சிறுபத்திரிகைகள் அல்லாதவர்களை அந்தப் பெயரும்
அழைக்க வேண்டாம்
இட்லி வடையாரும் சிறு பத்திரிக்கைகள் தொடங்கிடுவார் போல ..
ஹி ஹி ஹி ஹி ...
நண்பா உண்ண நினைச்சா சிரிப்பு தான் வருது ...நா தான் உன் கைல சொன்னேன்ல ,,நீ சினிமா ,கிசு கிசு ...இல்ல கணினி பத்திலாம் எழுது நல்ல மரியாதையாவது கிடைக்கும் ...
இனிமே தலகீழ் குட்டிக்காரணம் போட்டாலும் பிராமண பேரு மக்கள் வளர முடியாது ..(ஊஊஊஊஊ ).
அட நம்ம மக்க படிச்சிபுட்டானுங்க !
சரி இனிமேல் மேல் மக்கள் மறுபடயும் பிச்சை எடுக்கவேண்டியது தான் போல ...
மேல் குடி !மக்கள் மேல் குடி மக்களே ..
அன்புடன் ..
கோழி ..
ரொம்ப நாளைக்கப்புறம் சொந்த கட்டுரை(மை.பா.மு தவிர) எழுதியிருக்கிறீர்கள் போல?;-)
//இவர்களது பெரிய பலம் என்ன் என்றால் எதையுமே யாருக்கும் புரியாத நூடூல்ஸ் பாணி மொழி நடையில் குழப்பமாக எழுதுவது. பக்கம் பக்கமாக அலுப்பு தரும் நடையில் புரியாத வார்த்ததகளைப் போட்டு தங்கள் அறிவு ஜீவித் தனத்தை நிலை நிறுத்திக் கொள்வது. //
சிறு பத்திரிக்கைகளில் எழுதுபவர்களைத்தானே சொல்கிறீர்கள். என்னைப் போன்றவர்களை இல்லையே?!?! ;-))
கேள்விகள் ஒவ்வொன்றும் நியாயமானவை. ஆனால் கேட்டு என்ன பலன்?
//பகலவன் அய்யா.பெரியார் பற்றியோ பேசவோ உனக்கு என்ன தகுதி உள்ளது. மோடியை உத்தமன் என்று சொல்லும் உன் தாயை,சகோதரிகளை உன் கண்முன்னால் கதற கதற கற்பழிக்கப்பட்டு
//
I think you are copy paste this sentense for ur every comments. We felt really bored. Please change somthing new!! :))
//அருமையான கருத்துக்கள் என்று நீ நினைத்துக் கொண்டிரு.
You and your groups thinking you are genius. Ofcourse every one has their rights to think themself as such. Poor fellow :(
-Jai Hind
can you please give me font i am not able to view the pages
yemba inga ennaa nadakkuthu?
அட அறிவு கெட்ட அநாநியே உருப்படியாக சந்தேகம் கேட்க்கக் கூட உனக்குத் துப்பில்லையே?
ஜெயமோகனைப் பிடிக்காத முன்னாள் வலைப்பதிவர் எழுதியது என்றால் இந்தக் கட்டுரையில் ஜெயமோகனை அல்லவா திட்டியிருக்க வேண்டும்? இருப்பதிலேயே கொஞ்சம் மரியாதை கொடுக்கப் பட்டுள்ளது இங்கு ஜெயமோகனுக்கு மட்டுமே என்பதைப் படிக்கும் எந்த மடையனும் புரிந்து கொள்வானே? ஜெயமோகன் எனி இந்தியனில் எழுத மறுக்கும் சப்பைக் காரணம் மட்டுமே இங்கு கேள்வி விமர்சிக்கப் பட்டிருக்கிறதே அன்றி ஜெயமோகனின் ஆளுமை பற்றியோ எழுத்து பற்றியோ இங்கு எதுவும் சொல்லப் படவில்லை
ஏன் ஏழுமலையானிடம் போய் கேட்க்க வேண்டும் பழநிமலையானை ஏன் கேட்கக் கூடாது? இருவரைக் கேட்டாலும் சொல்வார்கள் இட்லி வடை சுயமாகச் சிந்தித்துச் சுயமாக எழுத வல்லமையுள்ளவர் என்பதை. அடுத்த முறையாவது கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்தி உருப்படியான சந்தேகத்தைக் கேள்
//பகுத்தறிவு பகலவன் அய்யா.பெரியார்//
யார்? தமிழை காட்டுமிராண்டிகளின் பாஷை என்று சொன்னாரே, அவரா?
Idly vadai with good information.
offers good tamil information but get confusion when read.
welcome
"// அதைப் போய் நக்கித் தின்னும் நாய் தான் இட்லிவடை என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
//"
தமிழ் கோமணத்தை கட்டிகொண்டு இருப்பவர்களுக்கு எதிர் வினை செய்ய முடியவில்லையென்றால், தனி மனித தாக்குதல் தவிர வேறு ஏதும் தெரியாதா?
Aravind
ரொம்பநாள் கழிச்சி இங்கே பின்னூட்டுகிறேன்.
கட்டுரையை எழுதியது அண்ணன் ஹரன்பிரசன்னா தானே? :-)
கட்டுரையில் சில இடங்களில் ஹிண்ட் இருக்கிறது!!!!
லக்கிலுக், பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது நீங்கள் கேட்பது. எனக்கு எதுவும் எழுதவேண்டுமென்றால் என் பெயரிலேயே எழுதும் தைரியம் எனக்கிருக்கிறது. இட்லிவடை போன்ற அவசியமற்ற முகமூடிகள் எனக்குத் தேவையில்லை. இதுவரை இணையத்தில் முகமூடி போட்டுக்கொண்டு பின்னூட்டமோ பதிவோ நான் எழுதியதுமில்லை, எழுதப்போவதுமில்லை. உங்கள் ஹிண்ட்டுகளைக் குப்பையில் போடவும்.
//லக்கிலுக், பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது நீங்கள் கேட்பது. எனக்கு எதுவும் எழுதவேண்டுமென்றால் என் பெயரிலேயே எழுதும் தைரியம் எனக்கிருக்கிறது. இட்லிவடை போன்ற அவசியமற்ற முகமூடிகள் எனக்குத் தேவையில்லை. இதுவரை இணையத்தில் முகமூடி போட்டுக்கொண்டு பின்னூட்டமோ பதிவோ நான் எழுதியதுமில்லை, எழுதப்போவதுமில்லை. உங்கள் ஹிண்ட்டுகளைக் குப்பையில் போடவும்.//
ஹரன்பிரசன்னா!
நீங்கள் இம்மீடியேட்டாக டென்ஷன் ஆவது தான் எனக்கென்னவோ பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது.
ஹிண்டுகளை குப்பையில் போடவேண்டுமா ஆராயவேண்டுமா என்று இப்பின்னூட்டத்தை படிப்பவர்கள் முடிவு செய்துக் கொள்ளட்டும்.
1) இட்லிவடை மொக்கை பதிவு எழுதினாலும் திருப்பதியில் மொட்டை போடும் சிரத்தையோடு ஏதாவனு ஒரு பின்னூட்டம் போடும் ஹரன்பிரசன்னா இங்கே காணவில்லை.
2) இந்த ஜெமோ பிரச்சினையே ஹரன்பிரசன்னா ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் சிற்றிதழுக்கான விளம்பர Campaign என்பதாக பரவலான ஒரு பேச்சு உண்டு. முடிந்தவரையில் எதிர்மறையாகவோ, நேர்மறையாகவோ விளம்பரம் தொடர்ந்து வந்துகொண்டிருப்பது கண்கூடு (விளம்பரங்கள் தவறு என்று எப்போதும் சொல்லமாட்டேன்)
3) சமீபத்தில் (2008ல்) ஹரன்பிரசன்னா எழுதிய வலைக்கும்மியை படித்தவர்கள் அதே நடை அச்சு அசலாக இக்கட்டுரையிலும் இடம்பெற்றிருப்பதை அறியலாம்.
4) இன்னபிற, குஞ்சுகுளவான் போன்ற வார்த்தைகளை ஒரிஜினல் இட்லிவடை பயன்படுத்துவதில்லை. அய்யராத்து பாஷை எப்படியாவது அவர் பதிவில் எங்கேயாவது அவரை அறியாமல் வந்துவிடும். இக்கட்டுரையில் அப்படியெல்லாம் எதுவுமில்லை.
இதெல்லாம் எனக்கு தோன்றிய ஹிண்ட்ஸ்கள். இவற்றை ஹரன்பிரசன்னா குப்பையில் போடட்டும். இந்த பின்னூட்டத்தை காணும் வாசகர்கள் இந்த கணிப்பை ஆராய்ந்துப் பார்க்கட்டும் :-)
ஹரன் அவர்களே! சில நேரங்களில் உண்மை பதட்டத்தை தரக்கூடும். நீங்கள் பதட்டமாக இருப்பது எனக்கு இன்னொரு ஹிண்ட் :-))))
பதிவில் லக்கிலுக் எடுத்து போட்டதை கேவலம் என்று சொல்லியிருக்கக்கூடாது. பாருங்கள். எவ்வளவு கோபமாக வந்து கன்னாபின்னாவென்று மட்டை சுழற்றுகிறார்..
//இதெல்லாம் எனக்கு தோன்றிய ஹிண்ட்ஸ்கள். இவற்றை ஹரன்பிரசன்னா குப்பையில் போடட்டும். இந்த பின்னூட்டத்தை காணும் வாசகர்கள் இந்த கணிப்பை ஆராய்ந்துப் பார்க்கட்டும் :-)//
வாவ்... எவ்வளவு புத்திசாலி நீங்கள்! மிக ஆச்சர்யமாக இருக்கிறது உங்கள் கண்டுபிடிப்புகள்.
என்ன செய்ய... நீங்கள்தான் தமிழ் வலைப்பதிவின் தலையாய பதிவர். நாளைய நம்பிக்கை நட்சத்திரம். புரட்சி பதிவர். இதை எல்லாரும் ஒத்து கொண்டேதான் ஆகவேண்டும்.
பாவம்... பிரசன்னா. அவர் உங்க அளவு புத்திசாலி இல்லை. அவருக்கு இப்படி எல்லாம் யோசித்து தான்தான் இப்படி ஒரு பதிவை எழுதியிருக்கிறோம் என்றெல்லாம் கண்டுபிடிக்க தெரியாது.
இனி செய்ய வேண்டியது பிரசன்னாவிற்க்கு ஒரு பட்டம் வழங்கி, ஒரு போலி பதிவு தொடங்கி அவரை மேலும் பதட்டமடைய செய்யா வேண்டும்.
உங்களிடமிருந்து தமிழ்கூறும் நல்லுலகம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறது. களப்பணி காத்திருக்கிறது. வாருங்கள்.
aamam sandehame illai..ithu var dhaan..
Post a Comment