பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 14, 2008

காங்கிரஸ் பார்வையாளர் ஒரு ஆந்திர பார்ப்பனர் - வீரமணி கண்டுபிடிப்பு

விஜயகாந்துடன் சந்திப்பு காங். மேலிட பார்வையாளர் அருண் குமார் சில நாட்களுக்கு முன் சந்தித்தார். அதற்கு வீரமணி கண்டன அறிக்கை...


`தி.மு.க. தலைவர் கலைஞர் யாரை ஆதரித்தாலும், உறுதியாக உண்மையாகவே இருப்பார். எதிர்த்தாலும் அதிலும் உறுதி காட்டுவார்'' என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே தெளிவாகக் கூறியுள்ளாரே.

( கலைஞரும் முன்பு "கிராப் வெட்டிய காஷ்மீர் பாப்பாத்தி' என்று இந்திரா காந்தியை அன்பாக அழைத்தார் )

தமிழ்நாடு காங்கிரஸ் பார்வையாளராக நியமனம் பெற்றுள்ள அருண்குமார் என்ற ஆந்திர பார்ப்பனர். அவரது கட்சி ஊழியர் கூட்டத்தில், சென்ற சில நாட்களுக்கு முன் திருச்சியில் பேசும்போது நான் நடிகர் விஜயகாந்தை சந்தித்து அரசியல் பேசினேன்.

( இதுக்கு எதற்கு ஜாதியை இழுக்கனும் ? இதில் ஆந்திர பார்ப்பனார் என்று முத்திரை வேற. பெயரில் மட்டும் வீரம் இருந்தால் போதுமா ? )

அதை இப்போது வெளியிடமாட்டேன் என்று பேசியுள்ளார். அதுமட்டுமல்ல அவர் பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையிலும், மரியாதை நிமித்தமாகக்கூட தமிழ்நாட்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதன் தலைவர் முதல்வரை இதுவரை சந்திக்கவும் கூட இல்லை.

அப்படிப் பேசுவது அவரது உரிமை என்றாலும், அத்தகைய கருத்துகள் இப்போதைய நிலையில் தி.மு.க. தொண்டர்களிடையே தி.மு.க. கூட்டணியின் ஆதரவாளர்களிடையே எத்தகைய அரசியல் விளைவுகளை உருவாக்கும் என்பதை யோசித் திருக்க வேண்டாமா?

( எதற்கு யோசிக்கனும் ? எனக்கு புரியவில்லை, அவர்கள் கட்சி அவர்கள் இஷ்டம் இவரை நம்பினால் நாய்க்கு கூட பால் கிடைக்காது )

தமிழ்நாட்டில் காங்கிரஸ், தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணியிலிருந்து கொண்டே எதிரணியில் உள்ளவர்களுடன் ரகசியமாக பேசி வேறு ஏதோ திட்டம் வகுக்கிறார்கள் போலும் என்று நினைத்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி எப்படி வெற்றிகளை பெற்று மீண்டும் மத்தியில் பா.ஜ.க. கூட்டணியை வீழ்த்தி, மதச்சார்பற்ற அரசை நிறுவ முடியும் என்று சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டாமா?

தி.மு.க.வைப் பொறுத்த வரையில் எதற்கும் தயாராக இருக்கிறது என்பதை அதன் தலைவர் கடந்த 3.2.08 அன்று சென்னையில் தெளிவாகக் குறிப்பிட்டு விட்டார்.

எங்கள் நிலைப்பாட்டில் மாறுதல் இல்லை. காங்கிரஸ் பேச்சாளர் டெல்லியில் கூறிய பின்பும் இங்கே சில கருத்துக்கள் வைக்கப்படுவது, வீண் குழப்பத்தை விதைக்காதாப அதன் பாரதூர விளைவுகள் எப்படி இருக்கும்ப

அதுபற்றி உங்களுக்கென்ன கவலை என்று எங்களை யாரும் கேட்க முடியாது; காரணம் மதச்சார்பற்ற அணி உருவாக வேண்டும் என்பதற்கு, எங்கள் பங்கை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் ஒரு மக்கள் இயக்கம்; பதவி நாடாத லட்சிய சமுதாய இயக்கம் எங்கள் இயக்கம். இப்படி எழுதுவதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்பதே கூடுதல் தகுதியுமாகும்.

தமிழ்நாட்டு மண்ணின் மனோபாவம் என்பது திராவிட இயக்கத்தை அப்படையாகக் கொண்டதே. 1971-ல் ராமனை தேர்தல் பிரச்சினையாக்கி, காமராஜரும், ஆச்சாரியாரும் ஒருங்கிணைந்து நின்று தி.மு.க.வை எதிர்த்து தோல்வி அடைந்த சரித்திரம் என்ற பழைய சுவடுகளைக் கொண்ட மண் தமிழக மண்.

எனவே தேவையற்ற குழப்பத்தை விதைக்காமல் இருப்பதன் மூலமே, மதவாத சக்திகளை வீழ்த்த முடியும். மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன், கவலையுடன் நாம் கூறுகி றோம்.

மேலும், சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை பாதியில் கிடப்பில் போட்டால், அதற்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பெரும் விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுவது நமது கசப்பான கடமையாகும்.

( இருப்பது 10 தொண்டர்கள், இதுக்கு இவ்வளவு பில்டப் )

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங்கும் இதுபற்றி இணக்கமாக சிந்திக்க வேண்டும்.

( இவர்கள் சிந்தித்திருந்தால் கூட்டணி வந்திருக்குமா ? குஜராத்துக்கு பிறகு மூக்கை கூட சிந்த முடியாத நிலமை அவர்களுக்கு )

அகில இந்திய தலைமை எடுக்க வேண்டிய ஒரு முக்கிய முடிவை இங்குள்ள பல் குழுவினரும் பல வகையில் பேசுவது, காங்கிரஸ் கட்சிக்கு பலத்தை ஊட்டாது; பலவீனப்படுத்தவே செய்யும்.

இன்றேல், மதவாத சக்திகளும், பிற்போக்கு சக்திகளும் இந்தியாவை அசல் இந்துத்துவா நாடாக ஆக்கிவிடும் அபாயம் தவிர்க்க முடியாது.ராமதாஸ் வீரமணி பற்றி சொன்ன கருத்து ( படிக்காதவர்களுக்கு )
கிராமங்களில் "ராஜாவுக்கு மிஞ்சிய ராஜவிசுவாசி' என்று கூறுவர். அதற்கு உதாரணமாக தமிழகத்தில் திகழ்பவர் தி.க. தலைவர், மன்னிக்கவும் – மானமிகு தமிழர் தலைவர் வீரமணிதான். நாங்கள் எந்த வழியில் நடைபோட வேண்டும் என்று வீரமணி பாடம் சொல்லித் தர தேவையில்லை. அதற்கான யோக்கியதையும் அவருக்கில்லை. கடந்த 2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் நள்ளிரவில் தான் கைது செய்யப்பட்டதை (கருணாநிதி) விவரித்துள்ளார். ஜெயா டி.வி., அதை மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டியதை, ஈ.வெ.ரா. திடலில் போட்டுக் காட்டி, "நான்கு முறை முதல்வராக
இருந்தவர் இப்படி நாடகமாடலாமா?' என்று கேட்டவர்தான் வீரமணி. எந்த ஆட்சி வந்தாலும், அந்த ஆட்சியின் கொள்கை பரப்புச்செயலாளராக வீரமணி இருப்பதில்
எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

– டாக்டர் ராமதாஸ் பேட்டி 8.2.08


7 Comments:

ஜயராமன் said...

இட்லீ ஐயா,

வீரமணியின் அறிக்கை சவடால் என்பது எப்போதுமே கலைஞரின் பினாமி வரிகள் என்பது கத்துக்குட்டிக்குக்கூட தெரியும். தனித்துப்போட்டிதான் என்று மறுநாளே விஜயகாந்த் சொல்லிவிட்டார். இருந்தாலும், கலைஞருக்கு உதறல் குறையவில்லை. இப்போது தங்கக் கோயிலுக்கு போய் பிரார்த்தனை செய்துகொள்ளட்டும். போகிற போக்கில் ஸ்டாலினை முதலமைச்சாராக பார்த்துவிட்டு போவேனா என்று ஒரு தகப்பனாக ஏங்குகிறார் அவர். நன்றாக ஜோஸ்யம் பார்த்துக்கொள்வார் என்று அவர் கட்சிக்காரர்களே பெருமையாக சர்டிபிகேட் கொடுத்துக்கொள்கிறார்கள். மஞ்சள்துண்டுக்கு போறாத காலம்தான் இப்போது.

இந்த அறிக்கையில் சரியான காமெடி என்னடாவென்றால் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டு இருந்துகொண்டே மற்றவர்களுடன் பேசுவதை வீரமணி குறை சொல்கிறார். கிழிஞ்சது கிருஷ்ணகிரி. கலைஞர் வாஜபேயின் முதுகில் எத்தனை நாட்களாக குத்திக்கொண்டிருந்து கடைசியில் வாசனின் அந்திம கிரியை பில்லையும் போட்டு அரசாங்கத்தில் பணம் வாங்கிக்கொண்டு பின்னர் சொக்கவைக்கும் சோனியா ராகம் பாடின வீரர் அல்லவா. ஒருவேளை வீரமணி கலைஞரைத்தான் உள்குத்து வைக்கிறாரோ, என்னவோ!!

Anonymous said...

Oruthara pathi pesara podhu indha allavu research panraar veeramani, appadinnu santhosha pattuttu, indha comments jolly'a kettu kittu irukkanum. Adha vittutu, jaadhi yedhukku izhukaraarnu kekaradhu, sinna pulla thanamaa irukku.

i come from srirangam. Gopurathukku keezha, DK kootam adikadi nadakkum...adhoo poraan paaru paarpaan ------, appadinnu kathikittae irupaanunga...But noone would even turnback to look at them.. Atleast now, they have installed a periyar status 100 metres away from the Gopuram...and so they have moved away !! the best way to treat DK is to be indifferent. And people have learned that well.

with regards
manikandan

R.Subramanian@R.S.Mani said...

Jayaraman, please don't kill VASAN to tell the truth about the Kalaignar - I think it is MARAN and not VASAn - I pray VASAN to long live-
Suppamani

ஜயராமன் said...

/// கலைஞர் வாஜபேயின் முதுகில் எத்தனை நாட்களாக குத்திக்கொண்டிருந்து கடைசியில் வாசனின் அந்திம கிரியை பில்லையும் போட்டு அரசாங்கத்தில் பணம் ... ///

/// Jayaraman, please don't kill VASAN to tell the truth about the Kalaignar - I think it is MARAN and not VASAn - I pray VASAN to long live-
Suppamani ///

ஐயா,

தவறு நேர்ந்துவிட்டது.. மிகவும் வருந்துகிறேன். நேற்றிரவே இதைப்பார்த்து பின்னூட்டமிடப் பார்த்தேன். எரர் வந்தது. இப்போது மறுபடியும் பதிகிறேன். மாறனைத்தான் இப்படி வாசன் என்று எழுதிவிட்டேன்.

Anonymous said...

வீரமணியை யாராவது பொருட்படுத்துகிரார்களா?. அவர் தன் விசுவாசத்தைக் காண்பிக்க ஏதாவது
உளறிக்கொண்டேதான் இருப்பார்.
பெரியார் விட்டுப் போன பணம்,
பத்திரிகை,கட்டிடம் எல்லாம் இருக்கும்
போது இப்படி பஜனை பண்ணி தான் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதுதான் அவர் வேலை.

சீனு said...

வர வர வீரமணி சு.சாமியை போலவே ஆனாராம். இந்த பதிவு 'போட்டுத்தாக்கு' பகுதியில் அல்லவா வர வேண்டும்?

அடைப்புக்குறியில் இருக்கும் கமென்ட் ஒவ்வொன்றும் அருமை.

Anonymous said...

வீரமணிக்குத்தான் அறிவு இல்லை. அவரையும் ஒரு மனிதரென்று நம்பி அவர் பேட்டியை வெளியிட்ட பத்திரிக்கைகாரங்களை என்ன செய்ய. அதுசரி சுப்பிரமணியசாமி பின்னாடி பேனாவை தூக்கிக்கொண்டு திரிஞ்சவங்கதானே. பக்கத்தை நிரப்ப வழியில்லைன்னா எங்ககிட்ட வரச்சொல்லுங்க.