பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 07, 2008

வீரமணி எங்களுக்கு அட்வைஸ் செய்ய வேண்டாம் - ராமதாஸ்

சேது சமுத்திர திட்டம் குறித்த விஷயத்தில் நான் தெரிவித்த கருத்து முதலமைச்சர் கருணாநிதி கூறியதுதான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக எந்த பாதையில் செல்வது என்பது குறித்து வீரமணி ஆலோசனை சொல்லத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


தைலாபுரத்தில் ராமதாஸ் பேட்டி:

சேது சமுத்திர திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும். எந்த தளத்தில் என்பது முக்கியமல்ல, திட்டம் தான் முக்கியம் என்று நான் தெரிவித்த கருத்துக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

இந்த கருத்தை நானும் தொடக்கத்திலேயே தெரிவித் துள்ளேன் என்று கூறிய கருணாநிதி, 60 சதவிகித பணிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாற்று வழித்தடம் என்று கூறுவது திட்டத்தை நிறைவேற்றவிடாமல் செய்வதற் காகத்தான் என்று கூறியுள்ளார்.

கருணாநிதியின் பதில் வெளிவந்த அதே நேரத்தில் முரசொலியில் ராமதாசின் குரல் சமீப காலமாக வேறு யாருடைய குரல் போலவோ மாறி ஒலிக்கிறது என்று கிண்டல் செய்யப்பட்டுள்ளது.தொடக்கத்தில் என்று கருணாநிதி கூறியிருப்பது 10 ஆண்டுக்கு முன்பு அல்ல 5 மாதங்களுக்கு முன்புதான் என்று கூறியுள்ளார்.

கருணாநிதி எந்த நோக்கத்தில், எந்த அடிப்படையில் கூறினாரோ, அதே விருப்பத்தின் பேரில்தான் என்னுடைய கருத்தை தெரிவித்தேன். அதுவும் தோழமை கட்சிகள் கூடி முடிவெடுக்கலாம் என்று தெரிவித்தேன். இது வேறு யாருடைய குரலும் அல்ல கருணாநிதியின் குரல்தான்.

மத உணர்ச்சியை தூண்டி இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட முயலும் மதவாத சக்திகளை ஏற்கனவே கண்டித்திருக்கிறேன். ராஜாவுக்கு மிஞ்சிய ராஜ விசுவாசி போல செயல்படும் வீரமணியும், மாற்று அரசியல்பாதை தேட வேண்டாம்; மாற்றி கொள்ளாத அரசியல்பாதையை தேடுங்கள் என எனக்கு உபதேசம் செய்துள்ளார். இவர் எனக்கு பாடம் சொல்லித்தர தேவையில்லை, அதற்கான தகுதியும் அவருக்கு இல்லை. எங்கள் வழி தெளிவானது.

தமிழ்நாட்டின் உரிமைக்கு தமிழர்களின் நலனுக்கு எது சிறந்ததோ அதில் நாங்கள் நடைபோடுகிறோம். அதிமுக ஆட்சியில் கருணாநிதி நள்ளிரவில் வீடுபுகுந்து கைது செய்யப்பட்ட போது, அதிமுக அணியில் இருந்த நான் ஓடோடி சென்று அவரை சந்தித்தேன். அப்போது வீரமணி, யார் பக்கம் இருந்தார்.

கருணாநிதியும், முரசொலி மாறனும் நாடகம் ஆடி, அதிமுக ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாக அவர் கூறிய கருத்தை ஜெயா டிவி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது.
எந்த ஆட்சி வந்தாலும் அந்த ஆட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக வீரமணி இருப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அவரது ஆலேசானைகள் எங்களுக்கு தேவையில்லை என்று வீரமணிக்கு கடிதம் எழுதியுள்ளேன். கருணாநிதிக்கும் நகல் அனுப்பியுள்ளேன்.

என்னுடைய கவலையெல்லாம் தமிழகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகின்றன என்பதுதான். மற்ற மாநிலங்களில் ஏதாவது பிரச்சனை என்றால் அங்கே அனைத்து கட்சிகளும் கூடி முடிவு செய்து செயல்படுகிறார்கள். ஆனால் இங்கோ அதிமுகவும், திமுகவும் வேறு வேறு நிலைப்பாடு எடுப்பதால்தான் சிக்கல் நீடிக்கிறது. ஒரே பொதுவான நிலை எடுத்திருந்தால் காவிரி பிரச்சனைக்கு எப்போதோ தீர்வு கண்டிருக்க முடியும்.
இந்த 2 கட்சிகளின் அரசியல் குரோதத்தால் தமிழகம் பாதிக்கப்படுகிறது. தமிழகத்தின் நலனை பற்றி சிந்திக்க மறுக்கும் மற்ற மாநிலங்களுக்கு நாம் உதவிகளை வழங்கி கொண்டிருக்கிறோம்.

தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் நீதி விசாரணை நடத்தலாம் என ஆலோசனை தெரிவித்தேன். எடுத்த எடுப்பிலேயே அதனை நிராகரித்த முதல்வர், ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க தயார் என கூறியுள்ளார். ஆதாரம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.

1 Comment:

Anonymous said...

வீரமணி என்கிற சாரங்கன் கோனாரும், ராமதாஸ் படையாச்சியும் ஜாதி சண்டை போட்டுக்கொள்வது சுவாரசியமாகத்தான் இருக்கிறது.