பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 06, 2008

கனிமொழி சொல்வதைக் கேளுங்கள்!

கனிமொழி சொல்வதைக் கேளுங்கள்! என்ற தலைப்பில் கல்கி தலையங்கம். முன்பே இட்லிவடையில் சொல்லியதை போல், அமைச்சர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்று இந்த தலையங்கம் சொல்லுகிறது. வெட்கி தலைகுனிய வைக்கும் தலையங்கம்.

தமிழகத்தில் பெண்களுக்கும் பெண்மைக்கும் என்ன ‘மரியாதை’ கிடைக்கிறது என்பதற்கான சோக சாட்சியம்தான் சமீபத்தில் நடந்த சட்டசபை விவாதம்! பா.ம.க. உறுப்பினர் வேல்முருகன் தொடங்கி வைக்க, ஆற்காடு வீராசாமியும் துரைமுருகனும் அளித்த பதில்கள் அதிர்ச்சியுடன் அவமானமும் ஏற்படுத்தின.

இந்தக் கேவலத்தைச் சாடி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதர் சயீத் பேசியிருப்பது மிகுந்த ஆறுதல் தருகிறது. பெண்களின் உண்மை யான பிரச்னைகளைக் குறித்து சட்டசபையில் விவாதிப்பதற்குப் பதிலாக ‘ஈரைப் பேனாக்கி’ப் பேசியதைக் கண்டித்திருக்கிறார் பதர் சயீத். வேல்முருகன் ஙண் துரைமுருகன் விவாதத்தை அனுமதித்த தோடன்றி, அகௌரவமான சொற்களில் பெண்கள் குறித்துப் பேசப்பட்டவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்கத் தவறிய சபா நாயகரையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார் பதர் சயீத்.

‘சிவாஜி’ பட விழாவுக்கு வந்தபோது, சங்கடப்படுத்தும் விதமாக உடை உடுத்தி வந்ததற்காக ஸ்ரேயா மன்னிப்புக் கேட்டாகிவிட்டது. அதன் பிறகு விவாதத்துக்கே அவசியம் இல்லை.

மேலும், உண்மையான பிரச்னை ஸ்ரேயாவின் உடை மட்டும் அல்ல. ஒரு பெண்ணை மீடியாவும் சமூகமும் எப்படிப் பார்க்கின்றன என்பதே பிரச்னையின் ஆணிவேர். பத்திரிகைகளும் சினிமாவும் டீ.வி.யும் பெண்ணை போகப் பொருளாகச் சித்தரிப்பதால், ரசிகர் களும் அவர்களை அவ்வாறுதான் காண முடிகிறது. அரசியல் தலைவர்களும், தமிழ்ப் பண்பாட்டைக் காப்பதாகக் கூறிக்கொள்ளும் ஆட்சியாளர்களும் மீடியா பிரதிநிதிகளாகத்தான் இயங்குகிறார்களேயொழிய, பெண்களின் கௌரவத்தை மதித்துப் போற்றும் சிந்தனையாளர்களாக இல்லை. பதர் சயீத் பேசியபோதுகூட அவர்கள் வெட்கித் தலை குனியவில்லை. தங்களுக்குள் சிரித்துக்கொண்டு கிளுகிளுத்ததோடு அல்லாமல், பதர் சயீத் பேசிய தமிழையும் கிண்டல் செய்திருக்கிறார்கள். தமிழில் அவர் பேச முயன்றதை வரவேற்று மகிழ்ந்திருக்க வேண்டாமோ!

எல்லாவற்றைக் காட்டிலும் வேடிக்கை, தமிழக சட்டசபையில் பெண்களைக் கேவலமாகப் பேசிய தினத்தில்தான், ஆளுங்கட்சி எம்.பி. கனிமொழி, சென்னையில் ஒரு கூட்டத்தில் பெண்களை மீடியா இழிவுபடுத்திக் காட்டுவது பற்றி வருந்தி விரிவாகப் பேசியிருக்கிறார்.

ஜனநாயக நாட்டில் நடை - உடை - பாவனைக்குச் சட்டம் விதிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், நாகரிக வரம்புகள் மீறப்படுகிறபோது எச்சரிப்பதும் கண்டனம் செய்வதும், பொதுவாழ்வில் பொறுப்பான நிலைகளில் இருப்போ¡¢ன் கடமை. அத்தகைய வரம்பு மீறல்களுக்கு அவர்கள் துணை போகாமல் இருப்பது அவசியம்; ஊக்குவிக்காமல் இருப்பது அதைவிட அவசியம்.

முதல்வரும் அமைச்சர்களும், பெண்களை போகப் பொருளாகச் சித்தரிக்கும் சினிமா, குத்துப்பாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மணிக்கணக்காக அவற்றில் நேரமும் செலவிடுகிற போது, தமிழகத்தின் ரசனையும் கலாசாரமும் ஒட்டுமொத்தமாக அடிவாங்குவது உண்மை.

பெண்களை போகப் பொருளாக்குவதும் அவர்களைப் பற்றி மலினமாகப் பேசுவதும் வா¢சையாகப் பல சமூகப் பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். பெண்மையை மதிக்காத சமுதாயம் விரைந்து பாழாகும்.

இதை பதர் சயீத்தோ அல்லது கல்கி தலையங்கமோ சொன்னால், இன்றைய ஆட்சியாளர் களுக்கு விளங்காமல் போகலாம்; விளங்கினாலும், ஏற்புடையதாக இராது. அவர்களுடைய கட்சியைச் சேர்ந்த கனிமொழியின் கருத்தையாவது கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்; ஏற்றுக் கொள்ளட்டும்!

3 Comments:

Anonymous said...

கமேடியோ காமெடி ...
தங்களுடிய அரசியல் பற்றிய பதிவுகள் நல்ல நகைச்சுவை உணர்வை ஊட்டுகிறது....
நீங்க சினிமா,கிசு கிசு எழுதுவதில் தான் கை தேர்ந்தவர் போல ...
ஹா ஹா ஹா ..ஹூ ஹூ ஹூ

வால்பையன் said...

//முதல்வரும் அமைச்சர்களும், பெண்களை போகப் பொருளாகச் சித்தரிக்கும் சினிமா, குத்துப்பாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மணிக்கணக்காக அவற்றில் நேரமும் செலவிடுகிற போது, தமிழகத்தின் ரசனையும் கலாசாரமும் ஒட்டுமொத்தமாக அடிவாங்குவது உண்மை.//

போகவில்லை என்றால் தேர்தல் பிரசாரத்தின் போது வரமாட்டார்களே!

வால்பையன்

Anonymous said...

ayyo ramaaaaaaaaaaaaaaa