பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 12, 2008

அவுட்லுக் மேல் லுக்விடும் கலைஞர்


Crossing That Bridge
Tamil Nadu CM M. Karunanidhi, the man who once wondered aloud "who Ram was" (and got the knickers of the believers in a twist), isn't exactly the rationalist he makes himself out to be. After an astrologer advised him he must never take a left turn while going to office (it's apparently bad luck), the Kalaignar now goes to the state secretariat via the busy Mount Road instead of the beach route along the Marina. It seems as the years pile on, Karunanidhi is dumping his rationalist baggage and taking stellar omens rather too seriously. Meanwhile, every morning priests assemble at his Gopalapuram residence for pujas and prasadam. While Karunanidhi's new-found faith has raised a few eyebrows among DMK old-timers, it still hasn't attracted the kind of ridicule bete noire Jayalalitha gets for her obsession with astrologers and numerologists. Maybe Amma should get pointers from the wily old Periyar acolyte on how to move the pieces in the god game.


இது, அவுட்லுக் பத்திரிக்கையில் வந்தது. இதற்கு ஆற்காடு வீராஸ்வாமி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.....


ஆற்காடு வீராசாமி அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸில்,

முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி குறித்து உள்நோக்கத்துடன், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உங்களது இதழில் செய்திக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பகிரங்கமாக, எந்தவித நிபந்தனையும் இன்றி மன்னிப்பு கேட்க வேண்டும். உங்களது அடுத்த இதழில் மன்னிப்பு தெரிவிக்கப்பட வேண்டும்.

தவறினால், சிவில் மற்றும் கிரிமினல் சட்டப் பிரிவுகளின் கீழ் உங்கள் மீது அவதூறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே முதல்வர் செல்லும் பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பத்திரிகை தர்மத்தை மீறும் வகையிலும், முதல்வருக்கு அவதூறை ஏற்படுத்தும் நோக்கிலும் இதுபோன்ற செய்தியை அவுட்லுக் வெளியிட்டுள்ளது.

தனது தலைவரின் கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடிப்பவர் முதல்வர் கருணாநிதி. இந்த அவதூறான செய்தியைப் பார்த்து அவர் மிகவும் வேதனைப்பட்டார்.

இது மிகப் பெரிய பொய். மேலும் இந்த செய்தியோடு சேர்த்து போடப்பட்டிருக்கும் கேலிச் சித்திரமும் மிகவும் மோசமானதாக உள்ளது. அவுட்லுக் இதழின் மோசமான போக்கைக் காட்டுவதாக உள்ளது.
( அப்படி ஒன்றும் மோசமாக இல்லை, கேலி சித்திரம் கேலியாக தான் இருக்கும், ரவிவர்மா ஓவியம் போலா இருக்கும் ? )

ஒரு செய்தியை பிரசுரிப்பதற்கு முன்பு அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய அவுட்லுக் தவறி விட்டது. அதிலும் சமூகத்தில் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு தலைவர் குறித்த செய்தியை பிரசுரிப்பதற்கு முன்பு அதுகுறித்து தெளிவுபடுத்திக் கொள்ளத் தவறியது மிகப் பெரிய தவறாகும்.

தனது சிறு வயது முதலே பகுத்தறிவுக் கொள்கையில் தீவிரமாக இருப்பவர் முதல்வர் கருணாநிதி. தந்தை பெரியாரின் தீவிர ஆதரவாளர், அவரது கொள்கைகளை தவறாமல் பின்பற்றுபவர். திராவிட இயக்கத்தின் வழி வந்தவர்.

தனது இத்தனை கால அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் தனது கொள்கைகளை அவர் விட்டுக் கொடுத்ததில்லை.

அப்படிப்பட்ட முதல்வர் மீது அவதூறான எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தி மிகவும் மோசமானது. உள்நோக்கத்துடன் கூடியது.

திமுகவின் அனைத்துக் கொள்கைகளும், பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டவை. சமீபத்தில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததும் கூட அதன் அடிப்படையில்தான்.

எனவே முதல்வர் குறித்து வெளியாகியுள்ள இந்த செய்திக் கட்டுரை, குழப்பத்தை விளைவிக்கும் நோக்கத்துடன், அவதூறை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது செய்தி என்று கூறியுள்ளார் ஆற்காடு வீராஸ்வாமி.

சரி, வீராசாமி என்ற பெயரை வீராஸ்வாமி நியூமராலஜி முறையில் மாற்றினார் என்று பத்திரிக்கைகள் சொன்னதற்கு ஏன் இந்த பகுத்தறிவு குஞ்சு வக்கீல் நோட்டீஸ் அனுப்பவில்லை ?

7 Comments:

Indian Voter said...

பாதுகாப்பு காரணங்களினால் தான் முதல்வர் வேறு பாதையில் செல்கிறார் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமாக உள்ளது. இது பற்றி வேறு விதமாக அவுட்லுக் எழுதியிருப்பதனால் ஆற்காட்டார் / முதல்வர் கோபம் கொள்வதும் நியாயமே.

ஆனால், கீழ்கண்ட வரிகள் பற்றி ஆற்காட்டார் எதுவும் சொல்லவில்லையே? அப்போ, இது மட்டும் உண்மையா?

>> Meanwhile, every morning priests assemble at his Gopalapuram residence for pujas and prasadam.

Arun said...

திமுகவின் அனைத்துக் கொள்கைகளும், பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டவை.

ஒன்றும் இல்லை என்று சொல்வதற்கு பகுத்தறிவு தேவையில்லை

சமீபத்தில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததும் கூட அதன் அடிப்படையில்தான்.
இவனுங்களோட பகுத்தறிவை வைத்து ஆராய்ந்து புத்தாண்டு தினத்தை மாத்தினாங்களாம்.... ஆச்சிரி்யகுறி போடுங்கப்பா..!!!!!!!!!
முட்டா பயளுக.. திருந்தவே மாட்டானுங்க.

Anonymous said...

இதுவரை பெரும்பாலும் சென்றுவந்த, டிராபிக் கண்ட்ரோலில் உள்ள பீச் ரோடு வழியாக செல்வது பாதுகாப்பா? அல்லது டிராபிக்இல் விழி பிதுங்கும் மௌன்ட் ரோடு வழியாக செல்வது பாதுகாப்பா? எல்லாம் அந்த பகுத்தறிவு பகலவனுக்கே வெளிச்சம்!!

Anonymous said...

சரி, வீராசாமி என்ற பெயரை வீராஸ்வாமி நியூமராலஜி முறையில் மாற்றினார் என்று பத்திரிக்கைகள் சொன்னதற்கு ஏன் இந்த பகுத்தறிவு குஞ்சு வக்கீல் நோட்டீஸ் அனுப்பவில்லை ?

---

nice punch :)

Hari said...

"பகுத்தறிவின் Outlook" என்று தலைப்பு வைத்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்

:)))

Anonymous said...

http://satrumun.com - முதல்வர் கலைஞர்பற்றி அவதூறான செய்தி: “அவுட்லுக்” இதழுக்கு ஆர்க்காடு வீராசாமி நோட்டீஸ்

Hariharan # 03985177737685368452 said...

//சரி, வீராசாமி என்ற பெயரை வீராஸ்வாமி நியூமராலஜி முறையில் மாற்றினார் என்று பத்திரிக்கைகள் சொன்னதற்கு ஏன் இந்த பகுத்தறிவு குஞ்சு வக்கீல் நோட்டீஸ் அனுப்பவில்லை ? //

தை மாதமா- சித்திரை மாதமா எனும் குழப்பத்தில் இன்னும் 2008 புதுவருட பாம்பு பஞ்சாங்கம் (ஈரோடு பதிப்பு)வெளிவரவில்லை.

பாரம்பரியமாக ஏழு சதாப்தங்களாக தான் வாங்கும் ஈரோட்டு பதிப்பு பாம்பு பஞ்சாங்கம் வெளி வந்தவுடன் அமைசர் வீராஸ்வாமி காக்கா வலம்பறப்பதைப் பார்த்தபின் வீட்டில் இருந்து வெளிப்பட்டு நோட்டீசு அனுப்பும்படி முருகு ஜோதிட மணி ஜோஸியர் அறிவுரை சொன்னதை மதித்து நடப்பதால் தான் தாமதம் அய்யா!