பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 04, 2008

சட்டசபையில் ஜெ பேச்சு: பா.ம.க.-காங்கிரஸ் கண்டிக்காதது ஏன்? - கலைஞர் கேள்வி

சட்டசபையில் அரசுக்கு எதிராக பேசிய ஜெயலலி தாவை காங்கிரஸ் மற்றும் பா.ம.க. கண்டிக்காதது குறித்து கருணாநிதி வருத்தம் அடைந்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத் துக்கு அ.தி.மு.க. பொதுச் செய லாளர் ஜெயலலிதா கடந்த வெள்ளிக்கிழமை திடீர் என்று வந்தார் சட்டசபையில் அவர் பேசும் போது தி.மு.க. அரசை கடுமையாக குறி கூறி பேசினார்.

விடுதலைப்புலிகளை ஆத ரிப்பவர்களை கைது செய் யும் விவகாரம் குறித்தும், அவர் களை கைது செய்ய சட்டம் குறித்தும் அவர் பேசினார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாகவும் அவர் பேசினார்.

அமைச்சர் அன்பழகனை உதவி பேராசிரியர் என்றும் அவர் குறிப்பிட்டார். இதை தொடர்ந்து சபையில் அமளி ஏற்பட்டது.

தமிழக அரசை ஜெயலலிதா கடுமையாக குறை கூறியதை கூட்டணி கட்சிகளான காங் கிரஸ் மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் கண்டிக்கவில்லை.

ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளே இதை கண்டிக்காமல் மவுனமாக இருந்தது முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. பெருத்த ஏமாற்றத்தையும் அளித் துள்ளது. தனது ஏமாற்றத் தையும் வருத்தத் தையும் அவர் அந்த கட்சிகளுக்கு தெரிவித்து இருக்கிறார்.

ஜெயலலிதா தி.மு.க.வை கடுமையாக தாக்கிய பேசிய போது காங்கிரசும், பா.ம.க.வும் தங்களை மோசமாக கை விட்டு விட்டன. நீங்கள் மவுனமாக உட்கார்ந்து கொண்டீர்கள் நாங்கள் தான் எங்களை காப்பாற்றிக் கொள்ள நேர்ந்தது என்று அவர்களிடம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கோவிந்தசாமி மட்டும் ஜெயலலிதாவின் பேச்சுக்கு சற்று கண்டனம் தெரிவித்து இருந் தார்.

காங்கிரஸ் மவுனம் சாதித்தது குறித்து மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கூறும் போது "இக்கட்டான நிலையில் நாங்கள் இருந்தோம்'' விடுத லைப்புலிகளுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான பிரச்சினை என்பதால் எங்களால் எதையும் கூற முடிய வில்லை.

இதில் எங்களை குற்றம் கூற முடியாது. நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தால் எங்களையும் விடுதலைப்புலிகளின் ஆதர வாளர்கள் என்று குற்றம் சாட்ட அவருக்கு அதிக நேரம் ஆகாது என்று குறிப்பிட்டார்.

தனிப்பட்ட குற்றச்சாட் டுகளை அவர் கூறியதும் சிக்கலை மேலும் தூண்டி விடத்தான் என்றும் அந்த காங்கிரஸ் உறுப்பினர் தெரி வித்தார்.

தனது 100 பக்க உரையை முழுமையாக படிக்க முடி யாமலும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவா தத்துக்கு சரியான பதில் அளிக்க முடியாமலும் போய் விட்டதே என்று கருணாநிதி கவலைப்பட்டார்.
(நன்றி: மாலைமலர்)

4 Comments:

Anonymous said...

ஜெ ஏன் இப்படி எல்லோரும் மறந்து போன அன்பழகனை பெரியாளாக்கி கருணாநிதியின் கோபத்துக்கு ஆளாகிறார். அதுவும் ஒரு லெக்சரரை உதவிப் பேராசிரியர் ஆக்கினால்?

அன்பழகன் எந்த துறையில் பேராசிரியர்?

Anonymous said...

ஜெ என்னத்தச் சொல்லி விட்டார் என்று யார் கண்டிப்பது? ஜெ என்ன அப்படி தவறாகச் சொல்லி விட்டாராம்? அன்பழகன் என்ன சட்ட நிபுணரா அவர் வெறும் விரிவுரையாளாரக இருந்தவர்தானே என்று கேட்டிருக்கிறார்.

இதில் என்ன மரியாதை குறைவு?

அன்பழகன் என்ன வேலை பார்த்தாரோ அதைத்தானே ஜெ சொல்லியிருக்கிறார்? அதற்கு எதற்கு கருணாநிதி வருத்தப் பட வேண்டும்?

அன்பழகனை, ஜெ ஒரு ப்யூன் என்று சொல்லியிருந்தாலோ அல்லது பள்ளிக்கூட வாத்தியார் என்று சொல்லியிருந்தாலோ வேண்டுமானால் மரியாதை குறைவு என்று சொல்லலாம். அப்படி எதுவும் சொல்லவில்லையே?

அன்பழகன் பார்த்த வேலையை விட அதிகமான பதவியில் அவரை அழைக்க வேண்டும் என்று கருணாநிதி எதிர்பார்க்கிறாரா? தகுதி இல்லாமல் இவர் டாக்டர் பட்டம் உதயகுமாரனைக் கொன்று வாங்கியது போல அன்பழகனுக்கும் கேட்க்கிறாரா? எது மரியாதை குறைவு?

ஒரு வேளை அன்பழகன் 2 வருடம் கூட உருப்படியாக கல்லூரி வேலை பார்க்காததால் அப்படிப் பட்ட ஒருவரைப் போய் உதவி பே என்று அழைக்கிறாரே என்று குற்ற உணர்வில் சொல்லுகிறாரா? எதனால் மரியாதை குறைவு?

கருணாநிதி உண்மையான விஷயமான தமிழ் நாடு தீவீரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என்பதை மறைத்து பிரச்சினையைத் திசை திருப்ப இந்த பேராசிரியர் பிரச்சினையை எடுத்திருக்கிறார். அன்பழகன் உண்மையில் விரிவுரையாளர் என்று அழைக்கப் படுவதற்குக் கூடத் தகுதியில்லாத ஒருவர். தன் சொந்த ஜாதிக் காரர்கள் நடத்தும் கல்லூரியில் படித்து விட்டு அங்கேயே ஜாதி அடிப்படையில் வேலையும் வாங்கிக் கொண்டு அந்த வேலைக்கும் ஒரு நாள் கூட உருப்படியாகப் போகாதவர். அவரைப் போய் பேராசிரியர் என்று அழைத்தால் தமிழ் நாட்டில் உள்ள உண்மையான பேராசிரியர்களுக்கு எல்லாம் அவமானம். ஆகவே ஜெயலலிதா அவரை உ பே என்று அழைப்பதைக் கூட நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

ஜெயலலிதாவுக்குக் கொஞ்சம் பிரசன்ஸ் ஆஃப் மைண்ட் இல்லை. அன்பழகன் 40 வருசத்துக்கு முன்னாடி என்ன செய்தார் என்பதை சட்டசபையிலேயே கேட்டு மானத்தை வாங்கியிருக்கிருக்க வேண்டும்.

நாளைக்கே இவரை யாரேனும் மிஸ் ஜெயலலிதா என்று அழைத்தால் இவரும் கோபப் படக் கூடாது., இவர் எந்த புர்ச்சியும் செய்ய வில்லை. அப்படிப் பட்டப் பெயர் கொடுத்து அழையாதீர்கள் என்று இவர் அறிக்கை விட வேண்டும், இல்லாவிட்டால் அன்பழகனைக் குறை சொல்ல இவருக்கும் அருகதையில்லாமல் போய் விடும்

அறிஞர், தந்தை, கலைஞர், நாவலர், புர்ச்சி தலைவர், புர்ச்சிதலைவி, பேராசிரியர், பெரியார் என்றெல்லாம் இந்தப் பன்னாடைகள் தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்வது தமிழகத்தின் சீழ் பெற்று அழுகிப் போன பண்பாட்டுச் சீரழிவையே காட்டுகிறது

Anonymous said...

அவர்கள் எதற்காக கண்டிக்க வேண்டும். ஆட்சியில் அவர்கள்
பங்கேற்றால் பொறுப்பு உண்டு.
இல்லாதபோது திமுகதான் ஜெயின் பேச்சை எதிர்கொள்ள வேண்டும்.
கருணாநிதி தான் தேச விசுவாசி என்பதைக் காண்பிக்க முயற்சி
எடுத்தாலும், காங்கிரஸ் நம்புகிற மாதிரி தெரியவில்லை.

Anonymous said...

ஆயி அப்பன் வெச்ச பேர மறந்துடறது...சொந்தமா ஒரு புனை பெயர் வச்சிகிடறது..அனானி சொன்ன மாதிரி..புரட்சி, கலைஞர், நாவலர், பேராசிரியர், டாக்டர்... இப்படி தினுசு தினுசா தன்னை தானே கூப்பிட்டுக்கிறது...இந்த மாதிரி படிக்காத, பண்பாடு இல்லாத தமிழ் அரசியல் வாதிகளுக்கு நீங்கள் ஒட்டு போட்டு ஆட்சியில் உட்கார வைத்ததற்கு மக்கள் தான் தங்களை செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்..

சட்ட சபையில் போது பிரச்சினைகளை அலசி தீர்வு காணாமல், சப்பை மேட்டருக்கு செருப்பால் அடித்துக்கொள்கிறார்கள்..

ஐயோ பாவம் தமிழ் நாட்டு மக்கள்..