பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 15, 2008

விஜயகாந்த், சரத்குமார், வைகோ பற்றி நக்கல் அடிக்கும் சந்திரசேகர்

இந்த வார விகடனில் வந்த காமெடி பேட்டி..
ஞாநி குமுதத்திற்கு போன பின் எப்படியாவது 8 பக்கத்தை நிறப்ப வேண்டும் என்ற அவர்களின் கஷ்டம் தெரிகிறது...
இந்த வாரம் சந்திரசேகர் பேட்டி, ஜெயமொகன் வலைப்பதிவில் எழுதியது என்று நிறப்பிவிட்டார்கள், அடுத்த வாரம் ?



விளாசுகிறார் 'வாகை' சந்திரசேகர்

''வாங்க வாங்க... கச்சேரியை ஆரம்பிப்போமா!'' வரவேற்கிறார் 'வாகை' சந்திரசேகர். இந்த நடிகர் கம் அரசியல் வாதியிடம் தி.மு.கவின் முதல் 'மாறன் விருது' பெற்ற உற்சாகம் ததும்பி வழிகிறது.

கிளிச் சீட்டு போல ஒருவர் பெயர் சொன்னாலே போதும்.. சும்மா வூடு கட்டி அடிக்கிறார்.

''விஜயகாந்த்...''

''என் 'மாஜி' நண்பர் விஜயகாந்த், தன்னோட ஆபீஸ்ல பெரியார் படத்துக்குப் பொட்டுவெச்சு பூஜை பண்ணின புரட்சி அரசியல்வாதி! ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு ஒரிஜினாலிட்டி கிடையாது. 'விஜயராஜா'ங்கிற தன்னோட பேரை, ரஜினிகாந்த்தைப் பார்த்து ஆசைப்பட்டு விஜயகாந்த்னு மாத்திக்கிட்டவர். யாரும் பட்டம் கொடுக்காமலேயே தலைவர் கலைஞர், எம்.ஜி.ஆர். ரெண்டு பேரோட பட்டங்கள்ல இருந்தும் உருவி 'புரட்சிக் கலைஞர்'னு பட்டப் பேர் வெச்சுக்கிட்டவர். தொப்புள்ள பம்பரம் விட்டுக் கிடைச்ச வரவேற்புல கட்சி ஆரம்பிச்ச இவருக்கெல்லாம், கொள்கைத் தலைவர் கலைஞரைப் பத்திப் பேசக் கூடத் தகுதி கிடையாது. நெல்லை இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமா நடத்தி முடிச்ச ஸ்டாலினை கேலி பண்றாரு விஜயகாந்த். 56 வயசு ஸ்டாலினுக்கு 40 வருஷ பொது வாழ்க்கை அனுபவம் இருக்கு. ஆனா, இவரு 50 வயசுக்கு மேலதான் அரசியலுக்கே வந்திருக்காரு.

'முதலமைச்சர் ஆவேன்'னு சொல்லித்தான் கட்சியையே ஆரம்பிச்சாரு. எங்க தலைவர் 16 வயசுல இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்காக, அரசாங்கத்துக்கு எதிரா கொடி பிடிச்சவர். அப்ப அவர் நெனைச்சுப் பார்த்திருப்பாரா, தமிழ்நாட்டுக்கு அஞ்சு தடவை முதலமைச்சரா இருப்போம்னு!

'என் கட்சிக்கு இளைஞர்கள்கிட்ட இருக்குற வரவேற்பைப் பார்த்துட்டுதான் தி.மு.க. இளைஞர் அணி மாநாடு நடத்துது'னு வாய் கூசாமச் சொல்றாரு, 'பேட்டிங்'கே தெரியாத இந்த கேப்டன். கொஞ்சம் விட்டா, 'நான் பொறந்து வளர்ந்து கட்சி ஆரம்பிப்பேன்னு தெரிஞ்சுதான் 'தி.மு.க'னு ஒரு கட்சியை அப்பவே ஆரம்பிச்சுட்டாங்க'னு சொன்னாலும் சொல்வாரு! 'இளைஞர்களே இல்லாம இளைஞரணி மாநாடு நடத்துறீங்களே'னு புலம்புறாரு. எனக்குத் தெரியாதா இவரோட இளமையைப் பத்தி? சினிமாவுல 36வது பிறந்த நாளையே பத்து வருஷமா கொண்டாடிட்டு இருந்தவர்தானே என் 'மாஜி' நண்பன்!

ஒரு தடவை நானும் விஜயகாந்த்தும் போய் கலைஞரைப் பார்த்தப்ப, 'பொது இடங்கள்ல பேசுறப்ப பளிச்னு சொல்றதுக்கு ஏதாவது வாக்கியம் சொல்லுங்க!'னு கேட்டாரு விஜயகாந்த். 'வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்!'னு அப்ப கலைஞர் எழுதிக் கொடுத்ததைத்தான், இப்பவும் இவர் வீராவேசமா பேசிட்டு இருக்காரு. நல்ல அரசியல் பண்ணி, மக்களுக்கு சேவையாற்றினா, தாராளமா வரவேற்கலாம். ஆனா, தேவையே இல்லாம தலைவரை இதே போல இவர் தொடர்ந்து விமர்சனம் பண்ணிட்டு இருந்தா, அதன் விளைவுகள் கடுமையா இருக்கும்!

இவர் என்னதான் குதிச்சுக் குதிச்சுக் கூத்தாடினாலும், தலைவரைப் பொறுத்தவரை விஜயகாந்த் ஒரு சுண்டைக்காய்தான்!''

''சரத்குமார்...''

''சரத்தும் எனக்கு நண்பர்தான். '2011ல் நான் தமிழ்நாட்டு முதல்வர் ஆயிடுவேன்'னு சொல்றாரு. அதுக்கு நான் கொஞ்சம்கூட ஆச்சர்யப்படலே! ஏன்னா... பத்து வருஷம் முன்னாடி நானும் அவரும் ரொம்ப சீரியஸா பேசிட்டு இருந்தோம். அப்ப திடீர்னு அவர், 'சந்துரு! தன்னம்பிக்கைதான் தளர்ச்சி இல்லாத முயற்சிக்கு மூலம்! நான் இன்னும் கொஞ்ச வருஷத்துல பி.எம். ஆயிருவேன்'னு சொன்னாரு. நான் வாட்ச்ல மணி பார்த்துட்டு, 'ஆமா சரத்! இப்ப மணி மூணு பி.எம்'னு சொன்னேன். அப்பவும் விடாம, 'இல்ல சந்துரு! இது டெல்லி பி.எம்! வேற வழியில்லே... ஆமா, பி.எம்தான் நமக்குச் சரியா வரும்!'னாரு. அதனால, அவர் 2011ல சி.எம். ஆவேன்னு சொல்றதுல எனக்கு ஆச்சர்யமே இல்லை. சினிமாவுல அவர் சுமாரான ஹீரோவா இருந்தாலும், அரசியல்ல அவர் ஒரு சூப்பரான காமெடியன்!''

''வைகோ...''

''சிறந்த குணச்சித்திர நடிகரா எனக்கு தேசிய விருது கொடுத்திருக்காங்க. ஆனா, மனசாட்சியைத் தொட்டுச் சொல்றேன்... அந்த விருதை நியாயமா வைகோவுக்குதான் கொடுத்திருக்கணும். கேக்குறவங்க, பாக்குறவங்க எல்லாரையும் சட்டுனு உணர்ச்சிவசப்படவெச்சு, அழவெச்சுருவாரு. 'எகிப்தில் அவன் அதைச் செய்தான்... மாஸ்கோவில் இவன் இதைச் செய்தான்...'னு முழங்கிக்கிட்டே இருப்பாரு. ஆனா, இவரு இங்கே ஒண்ணும் செய்யமாட்டாரு. தமிழ்நாட்டுல ஒரு பெரிய தப்பு நடந்துபோச்சுங்க. விஜயகாந்த்துக்குப் பதிலா வைகோ சினிமாவுல நடிச்சிருந்தா, பிச்சு உதறியிருப்பாரு!”

''பேருக்கு முன்னாடி நியூமராலஜிபடி 'வாகை' சேர்த்துகிட்டு இப்படி எல்லாரையும் திட்டினா, கட்சியில உங்களுக்கு மதிப்பு கூடும்னு நினைக்கிறீங்களா..?''

''மதிப்பெல்லாம் எனக்குத் தேவையே இல்லைங்க! ஏற்கெனவே கலைஞர் விருது, இப்ப மாறன் விருதெல்லாம் கொடுத்திருக்காரு தலைவரு. கடைசி வரைக்கும் தலைவனோட படையில சுறுசுறுப்பான ஒரு தொண்டனா இருக்கத்தான் ஆசைப்படறேன்!

என்னோட ஊரு மதுரைகிட்ட வாகைக்குளம். ஊருக்குள்ள சந்துக்கு சந்து சந்திரசேகருங்க பெருகிட்டதால, ஒரு தனி அடையாளத்துக்கு 'வாகை'னு ஊர் பேரைச் சேர்த்துக்கிட்டேன். அம்புட்டுதான்!''

கலகல காரசார அரசியல் பேட்டிக்கு, தமிழகத்தில் அடுத்த ஆள் ரெடி!
( நன்றி: ஆனந்தவிகடன் )

8 Comments:

Anonymous said...

புதியாவார்ப்புகள் என்ற படத்தில் அறிமுகமாகும் இந்த சந்திரசேகர், அதில் பேசும் வசனம் 'மாமா சாணிய மிதிச்சிட்டேன்', ஏனோ அந்த வ்சனம்தான் நினைவுக்கு வருகிறது, என்ன ஒரு வித்தியாசம், இவர் பேசுவதைப் படித்தால் பீய மிதிச்ச்ச மாதிரி இருக்கு, இப்படியும் ஒரு பொழைப்பு ஹும்

Anonymous said...

>>>>>
என்னோட ஊரு மதுரைகிட்ட வாகைக்குளம். ஊருக்குள்ள சந்துக்கு சந்து சந்திரசேகருங்க பெருகிட்டதால, ஒரு தனி அடையாளத்துக்கு 'வாகை'னு ஊர் பேரைச் சேர்த்துக்கிட்டேன். அம்புட்டுதான்!''
>>>>>>

தனி அடையாளத்துக்கு நீ எதையாவது சாதிக்கணும் அத விட்டுட்டு நீயா பேரை சேத்துக்கிட்டு , இதுல விஜயகாந்தை சொல்லுறதுக்கு உனக்கு என்ன அருகதை இருக்கு.

எல்லாரும் சின்ன சின்ன தவறுகள் செய்யுறது சகஜம் தான்.. நீ மட்டும் ஒண்ணும், விதிவிலகில்லை ஆனா அது எல்லாம் ,உன்னோட natpooda இருக்குறப்போ செஞ்சத, இப்படி கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாம, கலைஞர் தூக்கி எரியுற விருது என்கிற biscut காக, பொதுவுல pootu உடைகுரியே ... நீ எல்லாம் போது பணிக்கு வரணும்னு யார் அழுதா..

விஜயகாந்த் ஆவது சினிமா ல ரஜினிகாந்த் மாதிரி இல்லடினாலும் எதோ தனுக்குனு ஒரு ரசிகர் கூட்டம் ஆவது இருக்கு..
நீ சினிமா ல என்ன கிழிசிடனு ippo அரசியலுக்கு வந்துட்ட..
unna மாதிரி ஆளுங்கள தான் அரசியல் நாறுது

இந்த பேட்டிக்கு எப்படியும் உனக்கு கலைஞர் கிட்ட இருந்து பேட்டா கிடைச்சு இருக்கும்.. ... அடுத்து பேட்டா இன்னும் ரேட் ஏதுரதுக்கு இன்னும் எவ்வளவு கேவலமா யார திட்டலாம்னு யோசி ..
இது எல்லாம் படிகுறோம் இல்ல.. எல்லாம் எங்க தலை எழுத்து
--
Raji

Anonymous said...

hmmm...

kevellamma irrukku chandrasekar...vettla summa vettiyya irrukalaam...

Anonymous said...

திரிஷாவின் டாட்டு பற்றிய மிகச் சிறந்த் கட்டுரை ஒன்றையும் பிரசுரித்திருக்கிறார்கள் விகடனின் தரம் மிகவும் தாழ்ந்துகோண்டுபோகின்றது

Anonymous said...

திரிஷாவின் டாட்டு பற்றிய மிகச் சிறந்த் கட்டுரை ஒன்றையும் பிரசுரித்திருக்கிறார்கள்

அதை இட்லிவடை மறு பிரசுரம்
செய்வார், படத்துடன் :)

Anonymous said...

//56 வயசு ஸ்டாலினுக்கு 40 வருஷ பொது வாழ்க்கை அனுபவம் இருக்கு//
அதுல 30 வருஷம் பொருக்கித்தனம் பண்ணிட்டு திரிஞ்சான்.. பாத்திமா பாபு விஷயமெல்லாம் நாங்க மரக்கல இன்னும்.

//சினிமாவுல அவர் சுமாரான ஹீரோவா இருந்தாலும், அரசியல்ல அவர் ஒரு சூப்பரான காமெடியன்!//
நட்புக்குள் நடந்ததை ஈனத்தனமாக cheap publicity காக சொல்லி இருந்தாலும், உண்மையதான் சொல்லி இருக்க..

ஒரு விருதுக்கு குடுத்ததுக்கு ரொம்ப நல்லா பேசியிருக்கான்யா.. இவன புடிக்கனும்யா.. புடிக்கனும்யா..

விகடன் - நான் சின்ன வயசுல இருந்து படிச்ச ஒரு நல்ல இதழ். இப்படி கேவலத்துக்கு ஒரு பேட்டி போடுவாங்கன்னு நெனைக்கல..

Anonymous said...

Anandavikatan can not survive even a week without bearing the breast of ladies/ actors/ spotswoman etc. Itis their bread and butter.

Anonymous said...

யாராவது கண்டிப்பாக விகடன் படிங்கன்னு சொன்னாங்களா. பிறகு எதுக்கு அந்தப்பக்கம் போறீங்க