பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 11, 2008

கலைஞர் ஜெயகாந்தன் சில ஒற்றுமைகள்

சும்மா பழைய விஷயங்களை படித்த போது வந்த சிரிப்பு இங்கே உங்கள் பார்வைக்கு

மீசை முறுக்கிய சிங்கம் ஜெயகாந்தன் முன்பு சொன்னது:

"தி.மு.க. பதவி ஏற்றதிலிருந்து தமிழகத்தின் ஒழுக்கமும், நற்பெயரும் சீரழிந்துபோனது என்பதுதான் நிதர்சனம். வளர்ச்சி இவர்கள் இல்லா விட்டாலும் ஏற்படும். நாம் வளர்கிற நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அரசியலுக்கும், ஆட்சியதிகாரத்துக்கும் லாயக்கற்றவர்கள் என்பது தமிழர்தம் அனுபவம்! இதை அப்போதே, ‘தி.மு.க&வும் அ.தி.மு.க&வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று காமராஜர் எல்லாருக்கும் போதித்தார். யாரும் கேட்கவில்லை. மட்டைகள் என்றால் அந்தக் கட்சிகள். குட்டை என்றால் என்ன? ஊழல் குட்டை! திராவிடர் கழகம் போல இந்த இரண்டு கட்சிகளும் தேர்தல் அரசிய லில் இருந்து இனியாவது விலகி இருந்தால், தமிழகத்தின் எஞ்சிய மானமாவது மிஞ்சும்!"


"பதவி, பட்டம், வெகுமதி செல்வம் இவை தேடாமலும் வரும். வருவதையெல்லாம் நான் அங்கீகரிக்க மாட்டேன். எனது எல்லைகளை கறாராக தீர்மானித்தே ஏற்பேன்"


‘ஸம்ஸ்கிருத ஸேவா ஸமிதி’ சார்பாக ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டு விழாவில், “வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்”, “தமிழை விட சமஸ்கிருதம் உயர்வானது. சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது”, “தமிழறிஞர்கள் தன்னைத் தானே நக்கிக் கொள்கிற நாய்கள்”


மீசை இறங்கிய (அ)சிங்கம் இப்போது சொன்னது:

"நிறைய விருதுகளை நான் பெற்றிருக்கிறேன். நான் அறிந்தவரை இதுதான் மிகவும் சிறப்பான விருது(முரசொலி விருது) என்று நான் கருதுகிறேன்."








கலைஞர் முன்பு சொன்னது:
'"இந்து" என்றால் "திருடன்" என்று விஷ்வகோஷ் என்ற இந்தி அகராதியில் போட்டுள்ளது.



இன்று: சாய்பாபா, அன்னை, இந்த மாதம் வேலூர் தங்க கோயில் விஜயம். திருட்டு சொத்தில் உதவி என்றால் பரவாயில்லையா ?

7 Comments:

Anonymous said...

The tagline under the photograph terms Rajathi Ammal as 'Chief Minister's "wife"'.

Did Deccan Chronicle realise the mistake?

Arun said...

ஹிஹிஹி...
இந்த ரெண்டு பேரோட புத்தியும் தெரிஞ்சதுதான..
பணம்னா பிணமும் வாய பொலக்குமாம்.. இவனுங்க அதுக்கும் மேல எதாவது செய்வானுங்க..

T.V.ராதாகிருஷ்ணன் said...

Jayalalitha aatchiyil irundhapodhu avarai aadharichchu aadhayam adaindhuvittu.. pin Kalaignar aatchiyil avarai aadhariththa KOLGAIVEERAR(???!!1)Veeramani Yai listil serkka marandhuvitteergale...

Hari said...

ஜெயகாந்தனை மட்டையடியாக "(அ)சிங்கம்" என்று விளிப்பது அநாகரிகம். சில கருத்துக்களில் அவரின் நிலைப்பாடு விமர்சனத்துக்கிரியது தான். இருந்தாலும் முரசொலி விஷயத்தை மட்டும் வைத்து கொண்டு அவரை விமர்சிப்பது சரியல்ல. இந்த விருது குறித்து, அவரது ஞான கர்வம் தொனிக்கும் பேட்டி இதோ :

http://sifymax.com/bbradio/musicplay.php?f=JK_Sugadev_05mar07-128k.wma

Anonymous said...

ஏதோ வயதான காலத்தில் உதவி செய்தவருக்கு நன்றி சொல்லுகிறார் விட்டுத் தள்ளுங்கள்.

Viji Sundararajan said...

Sila Nerangalil Sila manidharhal :)

குயில் said...

கலைஞர் ஒரு சாணக்கியன் அதனால் தான் ஜெயகாந்தன் போன்றோர்களை எந்தநேரத்தில் தன்வசப்படுத்தவேண்டுமோ அந்தநேரத்தில் வசப்படுத்தியுள்ளார். ஆனால் ஜெயகாந்தன் போன்ற எழுத்தளார்கள் இதனை புரிந்துகொள்ளது ஏன் என்று தெரியவில்லை. இவரும் அதே குட்டையில் ஊறிய மட்டையோ