பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 14, 2008

அன்பழகன் உதவிப் பேராசிரியர் தான் - கலைஞர்

ஜெ சட்டசபைக்கு சென்று நிதி அமைச்சர் அன்பழகனை 'உதவிப் பேராசிரியர்' என்று சொன்னதால் சட்டசபையில் ரகளை ஏற்பட்டது. ஆனால் யார் முதன் முதலில் அன்பழகனை உதவிப் பேராசிரியர் என்று அழைத்தது ?நிதியமைச்சரை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, "உதவிப் பேராசிரியர்' என்று கூறியதற்கு, "எங்களுக்கெல்லாம் மூத்தவரான பேராசிரியரைக் கேவலமாக, இழிவாக, கேலியாகப் பேசியிருக்கிறார்' என்று சட்டசபையில் கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. 1969ல் அன்றைய முதல்வர் அண்ணாதுரை மறைந்த பின், தலைவர் தேர்தலில் நடந்த கடுமையான போட்டியின்போது, "தி.மு.க.வின் தலைவராக கருணாநிதியை அனுமதித்தால், என்னை என் மனைவி கூட மதிக்க மாட்டாள்' – என்று ஆவேசமாகக் கூறினார் அன்பழகன்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், "... அன்பழகன் என்பவர் எங்கும் பேராசிரியராகப் பணிபுரியவே இல்லை. உதவிப் பேராசிரியராகத்தான் வேலை பார்த்தார்...'
– என்று முதன் முதலில், கேவலமாக, இழிவாக, கேலியாகப் பேசினார், அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் கருணாநிதி. இது தமிழர்களின் மனதில் இன்றும் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது.


– இரா. அசோகன், சென்னை (தினமணி "வாசகர் கடிதம்' பகுதியில் : 7.2.2008)

1 Comment:

Anonymous said...

என்னக்கு ஒன்னு புரியல...
இவன எதுக்கு இன்னும் நாம 'கலைஞர்'னு சொல்லுரோம்??!!
இனிமேல் இவன் பேரு கலி-ஞன்.. நல்லா இருக்கா?? நல்லா இருக்காப்பா?? நல்லா இருக்காப்பா!!