மகாகவி பாரதியாரைப் பற்றி கனிமொழி எம்பி பேசிய பேச்சுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பன்னாட்டு தமிழ் நடுவத்தின் 2வது தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய கவிஞர் கனிமொழி. "தமிழ் மெல்லச்சாகும் என்று கூறிய பாரதிக்கு இது ஒரு அரை கூவல் தமிழ்வாழும் அதையாராலும் அழிக்க முடியாது என்று மாணவர்கள் சூளுரை ஏற்க வேண்டும் என்று வீர உரையாற்றி இருப்பதாக வெளிவந்த பத்திரிகை செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
பாரதியின் பாடலை பழுதுற படித்துவிட்டு, அந்த பழுத்த கவிஞன் மீது பழிசுமத்தி இருக்கும் செயல்கண்டு நடுக்கமுற்றேன். தமிழால் பாரதி தகுதிபெற்றதும், தமிழ் பாரதியால் தகுதிபெற்றது என தமிழ் கூறும் நல்லுலகம் ஏகோபித்த குரலால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த முண்டாசுக் கவிஞனின் பாடலை முழுமையாகப் படிக்காமல், முரணாகப் புரிந்து கொண்டு, அவன் காண விருப்பப்பட்ட புதுமைப் பெண்களுள் ஒருவரான நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பழிசுமத்தி இருப்பது, அந்த இறவாத கவிஞனை அவமானப்படுத்து வதாகும்.
பாரதி தன் பாடல்களுள் ஒன்றாக தமிழ்தாய் என்னும் தலைப்பில் தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் என்னும் உப தலைப்பில் "தாயுமாணவர் ஆனந்த் களிப்புச் சந்தமாக எழுதிய கவிதை வரிகளில் மற்ற மொழிகளுக்கு நிகரான நுட்பங்களும், மேன்மை கலைகளும் தமிழினில் இல்லை என்று தமிழ் துவேசம் கொண்ட ஒரு பேதை உரைப்பதாகவும், அந்த பெரும் பழியைத் தீர்க்க எட்டுத்திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று தமிழ்மக்களை தமிழ்த்தாய் வேண்டுவது போலவும் ஒரு கற்பனையான உரையாடலை கவிதை வரிகளாக்கினான். அப்பாடல் வரிகள் இதோ"இன்னொரு சொல்லினைக் கேட்டேன் இனி
ஏது செய்வேன் எனதாருயிர் மக்காள்
கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்
புத்தம் புதிய கலைகள்பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கேஅந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவும் கூடுவதில்லைஅவை
சொல்லுத் திறமை தமிழ் மொழிக்கில்லை
மெல்லத்தமிழினிச் சாகும்அந்த
மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்
என்றந்தப்பேதை உரைத்தான்ஆ
இந்த வசை எனக்கெய்திடலாமோ!
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"
இது தான் அந்தப்பாடல்
இப்படி ஒரு பேதை தமிழை பதிக்க, அதற்கு வருந்திய தமிழ்த்தாய் தமிழ் மக்களிடம் வேண்டுவதாக வந்த அந்த கற்பனைப் பாடலை தவறாக உள்வாங்கிக் கொண்டு, அந்த மாபெரும் தமிழ்க் கவிமீது பாய்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்குங்காணோம்'
என்றவன் பாடலை பிழையுற உணர்ந்து கொண்டு, ஒரு பெருங்கவி மீது கரும்பழி சுமத்தியிருப்பது கவலைக்குறியது. அதுவும் தொல்காப்பியப் பூங்கா தந்த முதலமைச்சரின் "தமிழ்தோட்டத்தில் பூத்த கவிஞர்' இப்படி தவறாக தமிழ்க்கவியின் மீது தகாத பொருளால் குற்றம் சுமத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, February 26, 2008
அட நம்ம சரத்குமார் !
Posted by IdlyVadai at 2/26/2008 04:34:00 PM
Labels: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
10 Comments:
இட்லி ஐயா,
இந்த அறிக்கைக்கு சரத்குமார் அவர்களை மனதார பாராட்டுகிறேன். தமிழ் மீது உண்மையான பற்று கொண்டவர் என்பது இதனால் அறியக்கிடைக்கிறது. கனிமொழி ஒரு டுபாக்கூர் என்பது இதனால் இன்னொரு முறை நிரூபணம் ஆகிறது.
இது பற்றி நான் இன்று போட்ட பதிவு இதோ
கவிதை படிக்காத கனிமொழி
http://jayaraman.wordpress.com/2008/02/26/kanimozhi/
இந்த செய்தியை இணையத்தில் வைத்ததற்கு வாழ்த்துக்கள்.
நன்றி
ஜயராமன்
இவளை கவிஞர் கனிமொழின்னு ஏன்யா ஏத்தி விட்டீங்க.. தமிழை ஒழுங்காக படிக்கக் கூட திராணியற்று, வாரிசு அரசியல் மூலமாக வந்து தேசிய கவியை இழிவு படுத்துமளவுக்கு ஆகிவிட்டாளா?!
இவங்க எல்லாம் "கவிஞருங்க" - அடப் போங்கய்யா.
ஐயோ பாவம்
சரத்குமாருக்கு நன்றி. கனிமொழி"கருணாநிதிதானா"? கலைஞரிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.
I doubot if sarath kumar can "write" like this... some "pulavar" ghost writers's contribution I suppose.....
யார் எழுதிக் கொடுத்தாலும் தமிழ் மொழிக்கு ஒரு இடர் என்றால் கச்சையைக் கட்டிக்கொண்டு சரத்குமார் கிளம்புவது வரவேற்கத்தக்கது. அவர் பெயரிலோ அவரது குழந்தைகளின் பெயரிலோ தமிழ் இல்லை என்பது வேறு கதை. ஆனால் அறிக்கையை நல்ல தமிழில் எழுதிக் கொடுத்தவர் அவரது காலை வாரிவிட்டார். கனிமொழி பேசியது முற்றிலும் சரி. தமிழ் இனி மெல்லச் சாகும் என்று தான் சொல்லவில்லை ஒரு பேதையின் வாய்வழி பாரதி சொன்னார். அந்த இழிநிலையை - தமிழின் இழிநிலையை - மாற்றி அமைக்க வேண்டும் என்றுதான் கனிமொழி அறைகூவல் விட்டிருக்கிறார். அன்று மட்டுமல்ல இன்றும் தமிழகத்திலும் வெளியிலும் தமிழ் மெல்லச் செத்துக்கொண்டுதான் இருக்கிறது. மொரேசியஸ், தென் ஆபிரிக்கா, பியூஜி போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழை மறந்துவிட்டார்கள். கனடாவில் கூட புலம்பெயர்ந்த தமிழர்களின் அடுத்த தலைமுறையினரில் பாதிப்பேர் தமிழை மறந்துவிட்டார்கள் அல்லது மறந்து வருகிறார்கள். மேலும் எனது உடலிலும் தமிழ் குருதி ஓடுகிறது என மார்தட்டும் ஜெயலலிதாவின் தொலைக்காட்சியில் தமிழ்படும் பாடு சொல்லிமாளாது. எல்லோரும் ஆங்கிலத்தைத்தான் சரளமாகப் பேசுகிறார்கள். தமிழை ஆங்கிலத்தோடு கலந்து ஈவு இரக்கமின்றி தமிழைக் கொலை செய்கிறார்கள். நிகழ்ச்சிகளுக்கு கொஞ்சமும் அஞ்சாமல் ஆங்கிலம் அல்லது வடமொழித் தலைப்புக் கொடுத்துள்ளார்கள். கோல்ட் கடி, ஜெயம், வீட்டுக்கு வீடு லூட்டி.....இந்தத தொலைக்காட்சியைப் பொறுததளவில் தமிழ் மெல்லச் சாகவில்லை. கடுமையாகச் சாகடிக்கிறார்கள். ஜெயலலிதா சின்னப் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் போது வடமொழிப் பெயர்களையே வைக்கிறார். ஜெயலலிதாவை தமிழ்நாட்டில் இருந்து கன்னடத்துக்கு ஓடச்செய்தால் மட்டுமே தமிழ் தப்பிப் பிழைக்கும். சரத்குமார் கனிமொழியை விட்டுவிட்டு ஜெயலலிதா பக்கம் கவனம் செலுத்தினால் புண்ணியமாக இருக்கும்.
- சொம்பு நக்கி சோமு
(சங்கு மாமாவோட மச்சான்...)
World Of Warcraft gold for cheap
wow power leveling,
wow gold,
wow gold,
wow power leveling,
wow power leveling,
world of warcraft power leveling,
world of warcraft power leveling
wow power leveling,
cheap wow gold,
cheap wow gold,buy wow gold,
wow gold,
Cheap WoW Gold,
wow gold,
Cheap WoW Gold,
world of warcraft gold,
wow gold,
world of warcraft gold,
wow gold,
wow gold,
wow gold,
wow gold,
wow gold,
wow gold,
wow gold
buy cheap World Of Warcraft gold d3i6v7zy
இட்லி ஐயா,
இந்த மாதிரி அருவருக்கத்தக்க மற்றும் மிகவும் மலிவான பின்னூட்டங்கள் அவர்களின் தரத்தையே சொல்கின்றன.
ஜயா டிவி என்பது தமிழ்க்கொலை என்று சொல்கிறவர் கலைஞர் டிவியைப்பற்றி ஒன்றையும் சொல்லக்காணோம். சட்டசபையிலேயே அமைச்சர்கள் விளக்க வேண்டிய இழிநிலையில் இருக்கும் தொலைக்காட்சி அது.
வெளிநாட்டுக்கு இடம் பெயறும் தமிழர்கள் தமிழை மறந்துவிட்டார்களாம். மாறாக, தமிழகத்துக்கு வாழ வரும் மக்கள் தமிழ் பேசிக்கொண்டிருக்கிறார்களே. அது வளர்ச்சி இல்லையா. அரசியல்வாதிகளின் தமிழ்ப்பற்று நகைப்புக்குரியது. இந்த அருவருப்பாசாமியின் பின்னூட்டமும் அதே.
nalla irukku
Post a Comment