பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 29, 2008

சுஜாதா - கலைஞர், வைகோ, கமல் இரங்கல்...

சுஜாதா மறைவிற்கு கலைஞர் வைகோ, கமல் இரங்கல்....

பன்முக திறமை கொண்ட எழுத்தாளர் சுஜாதா மறைவு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
.
இதுதொடர்பாக முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புகழ்பெற்ற எழுத்தாளர் சுஜாதா இயற்கை எய்திய செய்திகேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். "ரங்கராஜன்' எனும் இயற்பெயர் கொண்ட இவர் தமது துணைவியார் பெயரையே "சுஜாதா' எனப் புனைபெயராகக் கொண்டு எழுதினார்.

கணினி அறிவாற்றல் மூலம் அறிவியல் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்துள்ளவர்; பெல் நிறுவனத்தில் பணியாற்றிய பொழுது இவரது தலைமையிலான குழுவே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை உருவாக்கியது என்பதுகுறிப்பிடத்தக்கது.

சுஜாதா மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். இவரது பிரிவால் வாடும் இவரது குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.

வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
நவீன இலக்கியப் படைப்பாளி சுஜாதா திருவரங்கத்தில் வளர்ந்து பொறியியல் பட்டதாரியானவர். அவர் கணையாழி இலக்கிய இதழ் மூலமாகத் தமிழ் கூறும் நல்லுலகைத் தன்பால் ஈர்த்தவர். தான் எழுதிய "நைலான் கயிறு' மூலமாக ஆயிரக்கணக்கான வாசகர்களைக் கவர்ந்தார்.

அறிவியல் கருத்துகளைத் தனது கதைகள் மூலம் அறிந்து கொள்ள அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூறு, குறுந்தொகை மற்றும் வைணவப் பாசுரங்களுக்கு எளிய நய உரைகளை வழங்கியவர். திரைப்படத் துறையிலும் வசனங்கள் எழுதி முத்திரை பதித்தார்.

உடல்நலமின்றித் தனது 73ஆவது வயதில் அவர் மறைந்த செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கமல் அறிக்கை:

சுஜாதா அவர்களுடைய மரணம் நெருங்குவதை நான் உணர்ந்தே இருந்தேன். அவரும்தான். வழக்கமாக எழுத்தாளர்கள் சமரசம் செய்வதை இழுக்காகவும், தோல்வியாகவும் நினைப்பார்கள். ஆனால் சுஜாதா அவர்கள், சமரசம் செய்து கொள்வது அவசியம், சமுதாயக் கடமை என்றே நினைத்தார். அதனால் தான் சிலசமயம் நாம் எதிர்பார்க்கிற வீரியம் குறைந்தது போல ஒரு பிரமை தோன்றும். அவருடைய வாழ்க்கைமுறை, நெறி அது. விஞ்ஞானமும் கற்றறிந்தவர் என்பதால் எழுத்தை அவர் தொழிலாக நினைக்கவில்லை.

.
தொடரும் ஒரு காதலாகவே நினைத்தார். அதனால் அவருக்குத் தன் எழுத்தைப் பற்றி செறுக்கு இல்லை. அவருடைய சினிமா எழுத்தை வைத்து தயவு செய்து யாரும் சுஜாதாவை கணித்துவிடாதீர்கள். அதுவும் பெரும் சமரசம்தான். சினிமாவுக்காகவும், நட்புக்காகவும், அன்புக்காகவும் அவர் செய்து கொண்ட சமரசம். இருந்தாலும் சுஜாதா என்னும் அந்தப் பெயரை பெரியதாக வட்டம்போட்டுக் காட்டிய சினிமாவுக்கு ஓரளவுக்கு வேண்டுமென்றால் நன்றி சொல்லலாம். மற்றதெல்லாம் இலக்கியத்திற்கே உரித்தானது.

தர்மம் கிடைக்கும் இடத்தில் தான் பிச்சைக்காரர்கள் கூடுவதுபோல், கொடுக்கும் இடத்தில்தான் இன்னும் எதிர்பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்பொழுது சுஜாதா இன்னும் கொடுத்திருக்கலாம் என்று சொல்வதைவிட, கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டிய நேரமாகவே இதை நான் கருதுகிறேன்.

பல விஷயங்களில் அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய எழுத்து ரசனையை, என்னுடைய தமிழ் வாசிப்பு ரசனையை உயர்த்திய முக்கியமான எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். என்னுடைய வாசிப்பு என்று சொல்லும்போது ஏதோ குறுகிய வட்டம்போல் ஆகியது. தமிழகத்தில் சுஜாதாவைப் படித்தவர்கள் எல்லோருமே வாசக தரத்தில் உயர்ந்தவர்களாகவே நான் கருதுகிறேன். நன்றி தமிழ் உலகம் அவருக்கு சொல்லும்.

7 Comments:

Anonymous said...

கமல் கூறியுள்ளது, இரங்கல் செய்தி போல தெரியவில்லை...சுஜாதாவின் "Capacity" ஐ விமரிசிப்பது போல உள்ளது..

எனினும், தமிழ் உலகம் ஒரு அற்புதமான நவீன எழுத்தாளரை இழந்தது மிக்க வருந்தத்தக்கது..சுஜாதா வின் குடும்பத்தினருக்கு வலைப்பதிவாளர்களின் சார்பிலும், எங்களைப்போன்ற பின்னூடாளிகளின் சார்பிலும் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறோம்...வாழ்க அவர் செய்த தமிழ் தொண்டு !!

Anonymous said...

சுஜாதாவின் எழுத்துக்களை வைத்துப் பிழைப்பு நடத்திய விகடன் கேவலம் எவளோ ஒரு ந்டிகையை அட்டைப் படத்தில் போட்டிருக்கிறது. த் தூ வெட்க்கக் கேடு, இப்படியும் சில நன்றி கெட்ட இழி பிறவிகள்.

R. Jagannathan said...

Writer Sujatha's demise is a great loss to the Tamil readers. What a mastery he displayed in his writing skill and the subjects he touched - whether related to law or medicine or literature! I am choked with sadness and words fail me in expressing clearly how I feel. Two generations of readers of Tamil periodicals will surely miss him.
Sincere condolences to his family members and his friends and readers.
-R. Jagannathan,
Dubai

Anonymous said...

உங்க ஜெ மாஸ்டர் எதுவும் சொல்லலீங்களா?? :(

Anonymous said...

எழுத்தாளர் சுஜாதா குறித்து 'நாலாவது கண்'ணின் பார்வை இட்லி வடைக்கு தெரியுமா? பார்க்கவும். http://naalavathukann.blogspot.com

நாலாவது கண் said...

எழுத்தாளர் சுஜாதா குறித்து நாலாவது கண்ணின் பார்வையை கண்டீர்களா? பார்க்கவும். http://naalavathukann.blogspot.com

நாலாவது கண் said...

எழுத்தாளர் சுஜாதா குறித்து நாலாவது கண்ணின் பார்வையை கண்டீர்களா? பார்க்கவும்.
http://naalavathukann.blogspot.com