நேற்றைய வீரமணி அறிக்கைக்கு இன்று வசந்தகுமார் கண்டனம். அட்லீஸ் இவர் ஒருவராவது இருக்கிறாரே... சும்மா சொல்லக்கூடாது, கேள்வி கேட்பதில் வசந்த் & கோ போல் டிஸ்கவுண்ட் எல்லாம் கொடுப்பதில்லை....
வீரமணிக்கு வசந்தகுமார் கண்டனம்.
சென்னை, பிப்.15: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தந்தை சுதந்திர போராட்ட வீரர். தேசப்பக்தி குடும்பத்தில் பிறந்த விஜயகாந்தோடு காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசுவது தேசவிரோத செயல் அல்ல என்று வர்த்தக காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பி னருமான எச்.வசந்தகுமார் கூறியிருக்கிறார்.
.
இந்த சந்திப்பை குறை கூறிய திராவிட கழக பொதுச் செயலாளர் வீரமணிக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். எச்.வசந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அருண் குமார்விமான பயணத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை ஏதேச்சையாக விமானத்தில் சந்தித்துள்ளார்.
இரண்டு அரசியல் முக்கிய தலைவர்கள் முதல் முறையாக சந்திக்கிற போது நாட்டைபற்றி பேசிக்கொள்வது வழக்கமான ஒன்றுதான்.
இதுகூட புரிந்து கொள்ள இயலாத பகுத்தறிவு காவலர் கி. வீரமணி , அவர்களுடைய சந்திப்பிற்கு புதிய காரணம் கண்டுபிடித்து அங்கலாய்த்து இருக்கிறார். மத்தியில் ஆளும் ஐக்கிய முன்னணியிலோ, தமிழகத்தில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியிலோ அங்கம் வகிக்காத வீரமணி, தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அருண் குமார் பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் அற்றவர்.
சுயமரியாதை சுடர் தந்தை பெரியார் , திராவிட கழகத்திற்கு சேர்த்து வைத்துள்ள சொத்தை சுகபோகமாகவும், சொகுசாகவும் அனுபவிப்பதற்காகவே பிறந்து வளர்ந்துள்ள வீரமணி மாநிலத்தில் யார் ஆட்சியில் அமர்ந்துள்ளார்களோ அவர்களுக்கு வெண்ஜாமரம் வீசுவது வீரமணி கண்ட பகுத்தறிவு கொள்கையாகும்.
கடந்த ஆட்சியின் போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டப்பேரவை யிலேயே நான் பாப்பாத்தி தான் என்று பேசியபோது ஆனந்தப்பட்ட வீரமணி, ஏதேச்சையாக விமானப் பயணத்தின் போது சந்தித்த தலைவர் அருண் குமாரை பார்ப்பனர் என்று குறிப்பிட்டிருப்பது அவருடைய பெரியாரிச தத்துவத்தின் மேதாவி தனத்தை காட்டுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் தந்தை சுதந்திர போராட்ட வீரர். தேசபக்தி குடும்பத்தில் பிறந்தவர் விஜயகாந்த். அவரோடு காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசுவது தேச விரோத செயல் அல்ல.
காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சியையும் காங்கிரஸ் தொண்டர்களிடையே எழுச்சியையும் உருவாக்கு வதற்காகவே பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் அருண் குமார்.
கூட்டணி பற்றி முடிவு எடுப்பது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியாதான்.
ஏதேச்சையாக விமான பயணத்தில் விஜயகாந்த்தை சந்தித்ததனாலேயே கூட்டணி மாறிவிடும். அல்லது கூட்டணிக்கு துரோகம் செய்கிறார் என்ற அபூர்வ கண்டுபிடிப்பு வீரமணியின் பகுத்தறிவை பறைசாற்றுவதாக உள்ளது.
கருணாநிதியின் கவனத்தை ஈர்க்க கருணாநிதியுடைய எத்தனையோ சாதனைகளை பாராட்டுவதை விட்டுவிட்டு, விமான பயணத்தின் போது சந்தித்துக்கொண்ட தலைவர்களின் நற்பண்பை கலகம் மூட்டும் விதமாக கருத்து வெளியிட்டிருப்பது பகுத்தறிவு வாதிக்கு உகந்ததல்ல என்பதை வீரமணி உணர்ந்து கொள்ள வேண்டும்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, February 15, 2008
வீரமணிக்கு வசந்தகுமார் கண்டனம்
Posted by IdlyVadai at 2/15/2008 03:33:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
From DMK AAC meeting
அதிமுக பொதுக் குழுவில் பேசிய ஜெயலலிதா, ராவணன், ராமர் என்று குறிப்பிட்டு தமிழர்களையும், தமிழ் உணர்வாளர்களையும் இழிவுப் படுத்தி திராவிடர்கள் மீது பகைமையை விஷமாக கக்கியிருப்பதாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
97 விழுக்காடு உள்ள தமிழர்கள் மற்றும் திராவிட இன உணர்வாளர்கள் இந்த தமிழர் விரோத தீய சக்திகளை தமிழகத்திலிருந்தே விரட்டி அடிப்பதை தங்களுடைய தலையாய கடமையாக கருதி பணியாற்ற வேண்டும் என்றும் அந்த தீர்மானம் கூறுகிறது.
//மாநிலத்தில் யார் ஆட்சியில் அமர்ந்துள்ளார்களோ அவர்களுக்கு வெண்ஜாமரம் வீசுவது வீரமணி கண்ட பகுத்தறிவு கொள்கையாகும்//
செறுப்படி!!!! போட்டுதள்ளு!!
தமிழ் நாட்டை விட்டு 3% பிராமணர்கள் அனைவரையும் அடித்துத் துரத்த வேண்டும் என்று கருணாநிதியும் அவன் கட்சியும் இன அழிப்புத் தீர்மானம் போட்டிருக்கிறாகளே அதைப் பார்க்கவில்லையா? இந்த இன வெறித் தீர்மானத்திற்காக ஏன் கருணாநிதியைக் கைது செய்யக் கூடாது? ராஜ் தாக்கரேவுக்கு ஒரு சட்டம் கருணாநிதிக்கு ஒரு சட்டமா? இதை எதிர்த்து ஏன் யாரும் கேஸ் போடவில்லை? ஏன் ஒரு கட்சி கூட எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை, இட்லி வடை கூடக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாரே?
Many centuries tamil people were put under endless stress by 3% community. Now Periyar and MK do something, these people cannot tolerate even simple things... Please let the 97% people get some living...You enjoyed for ages. Let us live together. Throw your superiority complex..
Post a Comment