கலைஞர் கவிதை பற்றி நேற்று முனி பதிவில் ஒரு குறிப்பு இருந்தது. புரியவில்லை, விளக்கவும் என்று சிலர் கேட்டிருந்தார்கள்.
அவர்களுக்காக சென்னை தமிழில் கலைஞர் கவிதை...
சூரியக் குடும்ப சூழ்ச்சியாம்! - கலைஞர் கவிதை
"ஆரியக் குடும்பத்து ஆரணங்கு தான் நான்" என்று
அறை நடுவே அறைகூவல் விடுத்திட்ட அம்மையார்க்கு
அறுபதாம் அகவை வர;
வசந்தம் வந்தது என வாழ்த்துப் பாடி
ஆயிரக்கணக்கில் செலவிட்டு
அவர் சீடகோடி விளம்பரங்கள் செய்திடுங்கால்,
"சூரியக்குடும்பத்து சூழ்ச்சிகள் தாக்காது காத்திடும்
ஈரிலைப் பந்தலென" அவரை வர்ணித்து;
சூரியன் மீது சுள் என்று கோபத்தை உமிழ்கின்றாரே;
என்ன விந்தை?
அண்ணா கண்ட சின்னம் சூரியன் என்பதும்
அதன் பெயரையே டி.வி., க்கு வைத்துள்ளார் என்பதும்
அறியாமல் செய்த தவறா?
அண்ணாவையே மறந்து
அழுக்காறு மிகுந்ததின் விளைவா?
அம்மையே நீவீர்
வாழ்க நன்று;வாழ்க!
நம்மாளுங்க ராவடியாம்! - கவிதைக்கு விளக்கவுரை
பாப்பாத்தி நாந்தாம்மே, பப்பு வேவாதுன்னு
கூப்பாடு போட்டிச்சி கும்பலுக்கு நடுவால
காப்பாத்து சாமீ, கண்ணாலம் அறுவதாம்!
கஸ்மாலம் ஊரெல்லாம் கலீஜு பண்ணிட்டாங்க
சூரியன் சூழ்ச்சிக்கு ரெட்டயெல காவல், ஏரியாவெல்லாம் என்னான்னாமோ சொன்னாங்க பார்றா ங்கொய்யால பேருவெச்ச பெரியாளு யார்றான்னு கேக்குதுங்க எங்கபோயி முட்டிக்க நான்?
அண்ணாத்தொர தெரியாதா? மெய்யாவே தெரியாதா?
என்னாத்த நாஞ்சொல்ல ஏஞ்சாமி அவுருதான்யா.
அண்ணாரு வெச்சபேரு அல்லார்க்கும் தெரியும்டா பன்னாட இதுங்களுக்கு பலவிசயம் மறந்துடுச்சி
என்னாவோ போ, எகத்தாளம் பேசிடுச்சி
மன்னிச்சி வுட்ருமாப்ள மவராசி வாளட்டும்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, February 26, 2008
சூரியக் குடும்ப சூச்சியாம் - நம்மாளுங்க ராவடியாம்!
Posted by IdlyVadai at 2/26/2008 12:05:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
இன்னாமா கவுதை எழுதி இருக்கே ! இட்லி வடை..! எங்கே கத்துகினே இந்த மதராஸ் பாஷையிலே எழுதுறது ??
சொம்மா புல்லரிக்குது போ !! எம்.கே கேட்டருன்னாக்க நாண்டுகினு புட்டுகுவாரு.. அப்பால 2 நாள் லீவ் தான் போ ! மொரசொலில சொல்லி இத்த போடச்சொல்லுறேன் !!
கண்ணாலம் இல்லபா!! வயசு பா!!
சோக்கா கீதுபா!!
-அரசு
தல,
இந்த கவிதை உங்க கையில கீதா??
இன்னாபா இது தலீவர் டையிலி மாறன் குடும்பத்தையே ரவுண்டு கெட்டறாரு .... உன்கு எதாவது மெஸேஜ் கீதா??
Post a Comment