பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 21, 2008

சுப்பிரமணியசாமி கோரிக்கை

சுப்பிரமணியசாமி கோரிக்கை. சீரியஸாக எடுத்துக்கொள்ள கூடாது....

பெல்ஜியம் நாட்டின் விருது பெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியாவின் குடியுரிமை ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: சேதுசமுத்திர திட்டத்தில் தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொண்டுள்ள நிலைபாடுகள் அவர்களுக்கே பாதக விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பது மத உணர்வுகளை புண்படுத்தும் செயல் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறுஆய்வு மனுவில் கூறியது. இதே வாதம் சேதுசமுத்திர திட்டத்திற்கும் பொருந்தும். ராமர் பாலத்தை இடிப்பது, கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நடவடிக்கையாகும்.

இதே போல் மத்திய அரசு ராமர் பாலம் மனிதரால் உருவாக்கப்பட்டது அல்ல என்றும், இயற்கையாக தோன்றியது என்றும் கூறியது. தற்போது அஸ்ஸாமில் ஜோர்ஹாத் மாவட்டத்தில் ஒரு ஆற்றின் இடையே அமைந்துள்ள மஜூலி தீவு புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று யுனஸ்கோ அமைப்பிடம் மத்திய அரசு கோரியுள்ளது.

இந்த தீவு கலாச்சார பின்னணி கொண்ட இயற்கை அமைப்பு என்று மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, ராமர் பாலம் இயற்கை அமைப்பு என்று கூறி அதை இடிக்கலாம் என்ற மத்திய அரசின் கருத்து அர்த்தமற்றதாகி உள்ளது.

பெல்ஜியம் நாட்டு மன்னரிடமிருந்து கடந்த 2006ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆர்டர் ஆப் லியோபால்ட் என்ற விருதை பெற்றுள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தின் படி இந்த விருதை பெற்றுள்ள சோனியா, நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க தகுதி இழக்கிறார்.

இது குறித்து தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீசுக்கு சோனியா பதில் அளிக்காமல், காங்கிரஸ் கட்சி சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம் நாட்டின் விருதை பெற்றுள்ள சோனியா, அந்நாட்டு மன்னருக்கு என்னென்றும் விசுவாசம் காட்டுவதாக பிரமாணம் எடுத்துக் கொண்டு, ஆர்டர் ஆப் லியோபார்ட் உறுப்பினர்கள் சங்க பதிவேட்டில் கையொப்பம் இட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த 1985ம் ஆண்டில் சென்னை சட்ட மேலவை உறுப்பினராக இருந்த கே.எஸ்.ஹாஜா ஷரீப் ஐரோப்பிய நாடான மோனாக்கோவின் கவுரவ தூதுவராக பதவி ஏற்றார்.

இதற்காக சென்னை உயர்நீதிமன்றம் அவர் எம்எல்சி பதவி வகிக்கும் தகுதியை இழந்து விட்டதாக தீர்ப்பளித்தது. இதன் அடிப்படையில் சோனியாவின் எம்பி பதவியும் பறிக்கப்படவேண்டும்.

மேலும், சோனியாவுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்திய குடியுரிமை ரத்து செய்யப்படவேண்டும். தமிழகத்தில் இந்து கோயில்களின் நிர்வாகத்தை மத தலைவர்கள் அமைப்பிடம் அரசு ஒப்படைக்க வேண்டும். இதுகுறித்து முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதி உள்ளேன். அவர் பதில் அளிக்காவிடில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறினார்.
( செய்தி: மாலைமலர் )

9 Comments:

Anonymous said...

சுப்பிரமணியசாமி சொல்லறதெல்லாம் போடுற அளவுக்கு இட்லிவடையாருக்கு செய்தியே கெடைக்காம போயிடுச்சே!

Anonymous said...

என்ன இட்லி வடை உங்களுக்கு சமீப கால வரலாறு கூடவா மறந்து விட்டது? சுப்ரமணிய சுவாமியை சீரியசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறீர்கள். சுப்ரமணிய சுவாமியினால் ஹெக்டே முதல்வர் பதவியில் இருந்து விலக நேர்ட்டது, சுப்ரமணிய சுவாமி போட்ட கேசினால் ஜெயலலிதா வன வாசம் போக நேரிட்டது, சு சுவாமி போட்ட கேசினால் கேரள முல்லை அணைக்கட்டின் உயரம் உயர்த்தப் பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லியுள்ளது, சு சுவாமி போட்ட வழக்கால் சேது சமுத்திரத் திட்டம் ஆட்டம் கண்டுள்ளது. சு சுவாமியின் முயற்சியால்தான் 90ல் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப் பட்டது. சு சுவாமி கொடுத்த மனுவினால்தான் சோனியா பிரதமர் பதவி ஏற்க முடியாமல் போனது. இத்தனைக்கும் பின்னே ஒரு மடையன் தான் அவரை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியும். சோனியாவின் இந்த ஒரு பிரச்சினையை வைத்து கூட அவரால் சோனியாவின் அரசியல் வாழ்வுக்கு சமாதி கட்ட முடியும். அதே போல கருணாநிதி சமீபத்தில் போட்டத் இன அழிப்புத் தீர்மானத்தை வைத்தே அவனை உள்ளே வைக்க, அவன் ஆட்சியைக் கலைக்க சு சுவாமியால் முடியும். சு சுவாமி சில தவறுகள் செய்திருக்கிறார், நம்பகத்தன்மையை இழந்து விட்டார் ஆனால் செய்த தவறுகளை உணர்ந்து இப்பொழுது உண்மையான தேசீயவாதியாக இயங்கி வருகிறார். அவரால் ஊழல் அரசியல் வாதிகளும், இன வெறுப்பைத் தூண்டும் கருணாநிதி போன்ற சதிகாரர்களும், சோனியா போன்ற இத்தாலிய சிலை கடத்தல்காரிகளும் அழியப் போவது உறுதி.

வால்பையன் said...

//பெல்ஜியம் நாட்டின் விருது பெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியாவின் குடியுரிமை ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.//

பலமுறை வெளிநாட்டில் ஆட்டநாயகன் விருது பெற்ற டெண்டுல்கரை நாடு கடத்தி விடலாமா என்று கேட்டு சொல்லுங்கள் இட்லிவடை :))

வால்பையன்

Anonymous said...

ஆட்ட நாயகன் பட்டம் வாங்குவதற்கு அந்த நாட்டிடம் தன் விசுவாசத்தை அடகு வைக்கவில்லை டெண்டுல்கர் என்பதை அடித்துச் சொல்லுங்கள் இட்லி வடை. மூளைக்குப் பதிலாக வால் மட்டும் இருந்தால் இதுதான் பிரச்சினை. இங்கு மற்றொரு நாட்டுக்குத் தான் விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியம் செய்த பின்னர் விருது வாங்கியிருக்கிறார். டெண்டுல்கரும் அப்படி வாங்கியிருந்து, டெண்டுல்கரும் ஒரு எம் பியாக இருந்தால் கட்டாயம் டெண்டுல்கரையும் நீக்க வேண்டும் என்பதையும் புரியாத சின்னப் பசங்களுக்கு எடுத்துச் சொல்லுங்க இட்லி வடை

Anonymous said...

முதல்வர் கருணாநிதியை அவன்,இவனென்று சில நாட்களாக சொல்லும் பின்னூட்டத்தை இட்லிவடை அனுமதிப்பது சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. ஒருவேளை இட்லிவடையே இந்த அனானிமஸ் கமெண்டுகளை போடுகிறானா?

IdlyVadai said...

//முதல்வர் கருணாநிதியை அவன்,இவனென்று சில நாட்களாக சொல்லும் பின்னூட்டத்தை இட்லிவடை அனுமதிப்பது சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. ஒருவேளை இட்லிவடையே இந்த அனானிமஸ் கமெண்டுகளை போடுகிறானா?//

வரும் கமெண்டுகளை படிப்பதற்கே நேரம் இல்லை, இதில் நானே அனானிமஸ் எல்லாம் போட டைம் கிடையாது. சில கமெண்டுகளை ரிஜக்ட் செய்கிறேன், சிலவற்றை எடிட் செய்து போடுகிறேன். அப்படியும் அவன் இவன் என்று ஒருமையில் துரைமுருகன் போல் பேசும் கமெண்டுகள் வந்துவிடுகிறது. என்ன செய்வது ?

Anonymous said...

//அப்படியும் அவன் இவன் என்று ஒருமையில் துரைமுருகன் போல் பேசும் கமெண்டுகள் வந்துவிடுகிறது. என்ன செய்வது ?
//

நம்ம அம்மாவை அவள், இவள் என்று பேசுகிற கமெண்டுகளை மட்டும் குறிபார்த்து மட்டுறுத்துவதற்கு நன்றி இட்லிவடை

Anonymous said...

என்னங்கடா கருணாநிதியின் ஃபாலூஸ்களா, உங்க ஆள ஒருமையில விளிச்சா கோபம் பொத்துக் கிட்டு வருது? ஒரு முதல்வர் அதுவும் பத்து களுத வயசான கிழடு, தன் வயதுக்குத் தகுந்த மாதிர்யா பேசுறான்? ஒரு நிருபர் கேள்வி கேட்டா பதில் சொல்ல விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டுப் போகலாம், அதை விட்டுப் போட்டு ங்கோத்தா, ங்கோத்தான்னு 20 தடவ திட்டினானே அப்ப அவன் கிட்டப் போய் ஏண்டா நாயே அசிங்கமாப் பேசுறன்னு கேட்டீங்களா? முதல்ல அவனுக்கு அறிவுரை சொல்லி விட்டு இங்க வாங்கடா. கருணாநிதியை ஒருமையில் அழைப்பதே அவனோட தகுதிக்கு ரொம்ப அதிகம். முதல்ல மரியாதையைக் கருணாநிதிக்கு கற்றுக் கொடுத்து விட்டு இட்லி வடைக்குக் கற்றுக் கொடுக்கலாம். இந்தக் கமெண்ட்டுகளைப் போட்டது இட்லி வடை அல்ல, நான் தான். தகுதி தராதரம் பார்த்து எவனவெனக்கு என்னென்ன மரியாதை கொடுக்கணும்னு எனக்குத் தெரியும், சும்மா பொத்திக்கிட்டுப் போங்கடா

Anonymous said...

உங்களைப் பொருத்தவரை அவர் எப்படியும் இருக்கட்டும். அதற்காக தரம் தாழ்த்தி பேசாதிருங்கள். அவர் பேசுகிறார் அதனால் நான் பேசுகிறேன் என்ற உங்கள் வாதம் சரியானதல்ல. அப்படி என்றால் அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். நல்ல சகோதரனின் நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன். அது ஏன் யாராவது பொதுவா ஒரு கருத்தை சொன்னாக்கூட கருணாநிதியின் தொண்டனென்று முடிவு கட்றீங்க? அவரோட தொண்டர்களெல்லாம் கம்ப்யூட்டர் பக்கமெல்லாம் வருவாங்க?