பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 11, 2008

மனிதனிடம் வளர வேண்டியது அடக்கமே தவிர ஆணவமல்ல. - கலைஞர்

விஜயகாந்த் பேச்சு, கலைஞர் அறிக்கை

விஜயகாந்த் பேச்சு
இங்கு அரசியல் பேசக்கூடாது என்று தான் நினைத்தேன். ஆனால் பேசித்தான் ஆக வேண்டும். தேர்தலுக்கு முன்பு பல தடவை உங்களை சந்தித்து ஓட்டு கேட்டேன். எனது கட்சிக்கு 28 லட்சம் ஓட்டுகள் கிடைத்துள்ளது.

மக்களுடன் கூட்டணி

எனக்கு ஓட்டுப் போட்டதற்கு நான் உங்களிடம் உண்மையை பேசி பகிர்ந்து கொள்கிறேன். என்னிடம் இருப்பதை மக்களுக்கு கொடுக்கிறேன்.

நான் மக்களுடன் தான் கூட்டணி அமைத்துள்ளேன். வேறு யாருடனும் கிடையாது. என்னை அரசியலில் இருந்து ஒழிக்க நினைக்கிறார்கள் நான் பயப்பட மாட்டேன்.

தனித்து போட்டி

இப்போது கூடியிருக்கும் மக்களிடம் நான் கேட்கிறேன் பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமா அல்லது தனித்து போட்டியிட வேண்டுமா? என்பதை நீங்களே சொல்லுங்கள்.

(உடனே அங்கு கூடி இருந்த மக்கள் தனித்து போட்டியிட வேண்டும் என்று கோஷமிட்டனர்.)

தொடர்ந்து விஜயகாந்த் பேசியதாவது:-

சட்ட சபையில் பேசிய ஜெயலலிதா தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறினார். அதற்கு முதல்-அமைச்சர், மணிசங்கர் அய்யர், சேஷன் போன்றவர்கள் உங்கள் ஆட்சியில்தான் தாக்கப்பட்டனர் என்று பதில் அளித்தார். இப்படி இந்த 2 கட்சிகளும் ஒருவரை ஒருவர் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறுகிறார்கள்.

இதற்குத்தான் தே.மு.தி.க.வுக்கு ஒரு முறை ஓட்டு போடுங்கள் என்று கேட்கிறேன். தேர்தலின் போது ஓட்டுக்கு யார் பணம் கொடுத்தாலும் பெற்றுக் கொள்ளுங்கள் அது உங்களின் பணம்தான். ஆனால் வாக்களிக்கும் போது மறக்காமல் தே.மு.தி.க.வுக்கு ஓட்டுப் போடுங்கள்.

வீட்டுக்கு ஒருவருக்கு வேலை

"அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியும் கற்போம்'' என்று நான் சொல்கிறேன். என்னை பார்த்து அரசியல் தெரியாது என்று எல்லாம் குறை கூறி பேசுகிறார்கள்.

நீங்கள் ஒழுங்காக இருந்தால் நான் எதற்கு தனித்து கட்சி தொடங்குகிறேன். நான் எனது சொந்தப் பணத்தில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் கல்விக்கு உதவி செய்கிறேன். தமிழக அரசு இலவச டி.வி. வழங்குவதை நான் வரவேற்கிறேன். ஆனால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுங்கள் என்று நான் கூறுகிறேன்.

நீங்கள் வெண்டைக்காய், கத்திரிக்காய், தேங்காய், ஜவுளி, மீன் போன்றவற்றை எப்படி தரம் பார்த்து வாங்குகிறீர்களோ, அதே போல் தரம் பார்த்து ஓட்டுப் போடுங்கள்.

என் வீட்டில் மின்சார வேலி அமைத்து இருப்பதாக தி.மு.க.வினர் குறை சொல்கிறார்கள். உண்மையில் அந்த வேலிக்கு மக்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த பதிப்பும் ஏற்படாத வகையில் சோலார் பிளேட்டில் இருந்து கிடைக்கும் குறைந்த மின் அழுத்தம் உள்ள மின்சாரத்தைதான் பயன்படுத்துகிறேன்.கலைஞர் அறிக்கை:
தே.மு.தி.க.வைச் சேர்ந்த ஒருவரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள கோவில்பட்டிக்குச் சென்ற அந்த கட்சியின் தலைவர் தான் திருமண விழாவில் அரசியல் பேசக் கூடாது என்று இருந்ததாகவும், தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி அலங்கோலத்தைப் பார்க்கும் போது பேச வேண்டிய அவசியம் வந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டு ஆட்சியிலே அப்படி என்ன அலங்கோலம்ப விருத்தாச்சலம் தொகுதி மக்கள் இவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து சட்ட மன்றத்திற்கு அனுப்பியது. எதற்காக! ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்த போது பேரவையிலே வந்து ஆட்சியின் அலங்கோலத்தை அங்கே வந்து பட்டியலிட்டிருந்தால் அதற்கு பதில் கிடைத்திருக்குமல்லவா?

ஆறு பேர்களைக் கொண்ட ம.தி.மு.க. சார்பில் ஆளுநர் உரையிலே பேசுகிறார்கள், ஏன் சுயேச்சை உறுப்பினர் கூட ஒருவர் அங்கே பேசுகிறார். ஒரு கட்சியை நடத்தும் தலைவர் நான்தான் ஆட்சிக்கே வரப்போகிறேன் என்று சொல்லுபவர் பேரவையிலே வந்தல்லவா அவர் காணும் அலங்கோலங்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும். அதை விட்டு எங்கேயோ சந்து முனையிலே போய் நின்று கொண்டு சிந்துபாடினால் என்ன செய்வது.

தமிழகத்திலே அப்படி என்ன அலங்கோல ஆட்சி நடக்கிறதுப ஏழை எளிய மக்களுக்கு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறதே அதை அலங்கோலம் என் கிறாரா? விவசாயிகளுக்கு சுமார் 7000 கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு கடன்கள் ரத்து செய்யப்பட்டதை அலங்கோலம் என்று கூறுகிறாரா? மகளிருக்கு இலவச எரிவாயுவுடன் கூடிய அடுப்புகள் இலவசமாக வழங்கப்படும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 60 கோடி ரூபாய் செலவில் 3 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த மகளி ருக்கும்,
இரண்டாம் கட்ட மாக 160 கோடி ரூபாய்ச் செலவில் 8 லட்சம் குடும்பங் களுக்கு வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை அவற்றில் 2 லட்சத்து 17 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மகளிருக்கும் வழங் கப்பட்டுள்ளதே, அதை அலங்கோலம் என்கிறாரா?

இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி கள் இல்லாத ஏழை, எளியவர் களுக்கெல்லாம் தொடர்ந்து வண்ணத் தொலைக் காட்சிப் பெட் டிகள் வாங்கி வழங்கப்பட்டு வருகிறதே, அது அவருக்கு அலங் கோலமாகத் தெரிகிறதாப தொழிலாளர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியிலே போனஸ் என்பதே இல்லாத நிலைமை இருந்ததை மாற்றி, தற்போது அவர்கள் எல்லாம் போனஸ் பெறுகின்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறோமே, அது தே.மு.தி.க. தலைவருக்கு அலங்கோலமாகத் தெரிகிறதா?.

நிலமற்ற ஏழை எளிய விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் வழங்கப்பட்டு வருகிறதே, பல ஆண்டுக்காலமாக வழங்கப்படாமல் இருந்த வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறதே, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்பதற்காக தமிழகத்திலே புதிய புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கச் செய்து பல்லாயிரக் கணக்கானோர்க்கு வேலை கிடைக்க ஏற்பாடுகள் நடை பெற்று வருகிறதே அதையும் மீறி இன்னும் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு மாதந்தோறும் அரசே நிதி உதவி அளித்து வருகிறதே, இவைகள் எல்லாம் தே.மு.தி.க. தலைவருக்கு அலங்கேலமாகத் தெரிகிறது என்றால் அவர் கருத்தில் கோளாறு இருக்கிறது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது.

அதிகாரத்தைப்பயன் படுத்தி மக்களை சுரண்டு வதாகவும், நெல்லையிலே உள்ள மக்களிடம் அந்தத் தலைவர் கூறியிருக்கிறார். ஆட்சிக்கு வர வேண்டும், முதல்-அமைச்சராக வேண்டுமென்றெல்லாம் நினைக்கும் அவர் ஏதோ ஒரு சாதாரணப் பேச்சாளரைப் போல குற்றச்சாட்டுகளை பொறுப்பில்லாமல் கூறக் கூடாது. மக்களைக் சுரண்டு கிறோம் என்றால் எந்த மக் களை எப்படி என்று விளக் கம் தர வேண்டாமா?

உருப்படியாக எந்த காரிய மும் செய்யப்படவில்லை என்று பேசியிருக்கிறாரே, மேலே பட்டியலிடப்பட் டுள்ள காரியங்கள் எல்லாம் உருப்படியானவைகளாக அவ ருக்குத் தெரியவில்லையாப சென்னையிலே 9700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கிடவும் 1340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கிடவும், நமது உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜப்பான் நாட்டிற்குச் சென்று பேச்சு வார்த்தையை வெற்றிகரமாக நடத்தி அடுத்த மாதம் ஒப்பந்தம் கையெ ழுத்தாக உள்ளதே.

அது தே.மு.தி.க.தலைவ ருக்கு உருப்படி யான காரியமா கத்தெரியவில்லையா? 8-ந்தேதி நடைபெற்ற ஒரே நாள் அமைச்சரவை கூட் டத்தில் 16ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பளிக்க தக்கவிதத்தில் ஒப்புதல் அளிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதே. அது உருப்படியான காரியமில் லையா? தமிழ்நாட்டு மக்களே நீங்கள் தான் இது பற்றி தீர்ப்பு வழங்க வேண்டும்.

தி.மு.க.விற்கு மக்கள் நலனில் அக்கறையில்லை என் கிறார் தே.மு.தி.க தலைவர். இந்த பணிகள் எல்லாம் மக்கள் நலனில் அக்கறையில்லாமலா செய்யப்பட்டுள்ளதுபபொய் சொல்வதற்கும் ஒரு எல்லை இல்லையாப திருமணம் ஆகாமல் ஆண்டு கணக்கில் காத்திருக்கும் பெண்களுக் கெல்லாம் வாழ்வளிக்க வேண் டுமென்பதற்காக திருமண நிதி உதவி திட்டம் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் 15ஆயிரம் ரூபாய் வீதம் பல் லாயிரணக்கானவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதே. மக்கள் நலனில் அக்கறை இல்லாத செயலாஇது

அது போலவே கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி அரசின் சார்பில் அளிக் கப்படுகிறதே. அது மக்கள் நலனில் அக்கறையில்லாத செயலா?

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது எந்த ஆட்சியிலே கழக ஆட்சியில் அல்லவா? அது மக்கள் நலனில் அக்கறை இல்லாத செயலா? இந்தியாவிலே எந்த மாநிலத்திலேயாவது அமைப்புசாரா தொழிலாளர் களுக்காக தமிழகத்திலே அமைக்கப்பட்டுள்ளது போல வாரியங்கள் அமைக் கப்பட்டு, அந்ததொழி லாளர்களுக்கெல்லாம் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறதா?

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு அரசு அலுவலர்களுக்கு ஏதா வது பிரச்சினை ஏற்பட்டது உண்டா? நெசவாளர்கள் வாழ்விலும் வளம் சேர்க்க வேண்டுமென்பதற்காக இலவச மின்சாரச்சலுகையை அவர்களுக்கு அளித்ததோடு, இலவச வேட்டி, சேலைத்திட்டத்தையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வரு கிறோமே, அது மக்கள் நலனில் அக்கறை இல்லாத செயலாப மக்களுக்கு இந்த ஆட்சியிலே எந்த நன்மையும் இல்லை என்று எந்த ஆதாரத்தை வைத்து அவர் கூறுகிறார்.

தேசியகட்சியும் தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்ய வில்லை என்று மத்திய அரசை ஆளும் கட்சி மீதும் குறை கூறியிருக்கிறார். தேசிய கட்சி தமிழக மக்களுக்கு ஏன் ஒன்றும் செய்யவில்லை தமிழை செம்மொழியாக அறி வித்திருப்பது தற்போதுள்ள மத்தியஅரசு தானே!

சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் கொடுத் தது எந்த ஆட்சியிலேப தற் போதைய ஆட்சியிலே தானே! கடல் நீரை குடிநீராக்கும் திட்டதிற்கு 1000 கோடி ரூபாய் தர ஒப்புதல் கொடுத்தி ருப்பதும் இன்றைய மத்திய ஆட்சி தானேப எல்லா வற்றையும் ஒரேயடியாக மறைத்து விட்டு நான் தான் புத்தர், மற்றவர் எல்லாம் அயோக்கியர் என்ற ரீதியில் பேசுவது நல்லதாப

எழுப்பப்படும் குற்றசாட் டுகளை புள்ளி விவரங்களோடு மறுத்துப்பதில் கூறினால் அவருக்கு வேடிக்கையாக இருக்கிறதாம்! அவரிடம் ஆதா ரம் இருந்தால், புள்ளி விவரங் கள் தெரிந்தால், தான் கூறு கின்ற குற்றச்சாட்டுகளோடு அவற்றையும் இணைத்துச் சொல்வதுதானே! எந்த விவரமும் இல்லாமல் வாயில் வந்ததை எல்லாம் பேசுவேன் என்ற பாணியில் பேசினால் என்ன செய்வதுப நடிகரைப் பார்ப்பதற்காக கூடுகின்ற ரசிகர்கள் கூட் டத்தை எல்லாம் தனது கட்சிக்காரர்களின் கூட்டம் என்று எண்ணி கொண்டு எல் லோரையும் இழிவாகப் பேச நினைப்பது தவறு.

கச்சத்தீவு பற்றி எல்லாம் கோவில்பட்டி கூட்டத்தில் பேசியிருக்கிறார். எல்லாருக்கும் எல்லாமும் தெரிந் திருக்க நியாயமில்லை. அந்த வகையில் கச்சத்தீவு பற்றி உண்மை விவகாரங்கள் அவ ருக்கு தெரிந்திருக்காது. தெரிந் தவர்களிடமாவது கேட்டு பேசியிருக்கலாமே!

தை முதல் நாள் தமிழ்ப்புத் தாண்டு என்று தற்போது அறிவிக்கப்பட்டு சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதை பற்றியும் பேசி ஏன் இத் தனை ஆண்டு காலம் கொண்டு வரவில்லை என்று கண்டுபிடித்து ஒரு கேள்வியைக் கேட்டு இருக்கிறார். நல்ல வேளை! அண்ணாவின் நினை விடத்தைப் பார்த்து, ஏன் 1967 வரையில் சென்னை ராஜ்யம் என்பதை மாற்றி "தமிழ்நாடு'' எனப் பெய ரிடவில்லை எனக் கேட்காமல் போனாரேப தமிழ்ப்புத்தாண்டு "தை முதல் நாள்'' என்பதை நடைமுறைப்படுத்த தான் இப்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை ஏன் முன்பே கொண்டு வரவல்லை என்கிறாரே, இவர் ஏன் முன்பே கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கேட்டு நாம் சிரிக்கலா மல்லவா!

மின் பற்றாக்குறை பற்றியும் பேசி, மத்திய அரசிடம் கேட்க லாமே என்றெல்லாம் கருத்து தெரிவித்திருக்கிறார். மின் பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றியும், நான் கடந்த முறை டெல்லி சென்ற போது பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் அந்த துறையின் அமைச்சரிடமும் மின் பற் றாக் குறை குறித்து பேசி, அவர் களும் உடனடியாக தமிழ கத்திற்கு 300 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் வழங்கிட ஏற்பாடு செய்த செய்திகள் எல்லாம் ஏடுகளில் விரிவாக வெளிவந்திருக்கின்றன.

அவற்றை எல்லாம் படிக்காமல் தே.மு.தி.க தலை வர் தமிழக அரசு மீது குறை கூறி இருக்கிறார். அரசி யல் கட்சியை தொடங்கி அதனை நடத்திடவும், ஆட்சி நடத்திடவும் விரும்புகிறவர், அன் றாடம் நாளேடுகளைப் பார்ப்பதும், அதிலே அரசு சார்பில் எடுக்கப்படுகின்ற முயற்சிகளைப் படித்து தெரிந்து கொள்வதும் முக்கிய மல்லவா!

ஊழல் பற்றி எல்லாம் அவர் கூட்டத்திலே பேசி இருக்கிறார். எந்த திட்டத்திலே ஊழல்ப ஒப்பந்த புள்ளிகள் கோருவதிலே கூட திறந்த வெளி ஒப்பந்தப்புள்ளிகள் என்று குறிப்பிட்டு, எல்லா வற்றிலும் வெளிப்படையாக ஆட்சி நடைபெறுகிறது. வண்ணத் தொலைக் காட்சி பெட்டிகளை வாங்குவதற்கான சட்டப் பேரவை உறுப்பினர்கள் குழுவிலே இடம் பெறவே மறுத்து விட்டு, இப் போது ஊழல் என்று உரைக்க லாமா!

பேசுகிறவர்கள், அவர்களே ஒரு முறை தம்முடைய முகத்தை கண்ணாடிக்கு முன் நின்று பார்த்துக் கொண்டால் நல்லது. யார் ஊழல் வாதி என்பது அப்போது தெளிவாக அவருக்குப் புரியும். அதை விடுத்து பிறர் மீது புழுதியை வாரி இறைக்க நினைப்பது சரியல்ல.

சிமெண்ட் பிரச்சினை பற்றி பேசும் போது 20 லட்சம் டன் சிமெண்ட் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் 1500 டன் சிமெண்ட் தான் விற்பனையாகியிருக்கிறது என்கிறார்கள் என்று குறிப் பிட்டிருக்கிறார். 20 லட்சம் டன் சிமெண்ட் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று அரசு சார்பில் எப்போதும் கூற வில்லை. ஒரு லட்சம் டன் அதாவது 20 லட்சம் மூட் டைகள் சிமெண்ட் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று தான் அரசு சார்பில் கூறப்பட்டது.

20 லட்சம் டன் சிமெண்டிற் கும் 20 லட்சம் மூட்டைக்கும் வேறு பாடு தெரியாமல் பேசு வதாப எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று இல்லை. பண்ருட்டியார் போன்ற தெரிந்தவர்கள் யாரிடமாவது கேட்டு கொண்டு, அதை குறித்து வைத்து கொண்டு பேச கூடாதாப அது மாத்திர மல்ல, தனியார் சிமெண்ட் மூட்டைகள் பிளாஸ்டிக் பை களிலே வழங்கப்படுகிறது என்றும், அரசு மூலம் வழங்கப்படும் சிமெண்ட் சாக்கு பைகளிலே வழங்கப்படுகிறது என்றும் அதிலே ஏதோ ஊழல் என்றும் அந்த தலைவர் பேசி இருக்கிறார். அதிலே என்ன ஊழல் சொல்கிறார் என்றே புரியவில்லை.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கே யார் வேண்டு மென்றாலும் கட்சி ஆரம்பிக் கலாம். தலைவர் ஆகலாம். அதிலே எந்த தவறும் கிடை யாது.

முன்பெல்லாம் கட்சி ஆரம் பிப்பது என்றால், மக்களுக் காக பணியாëற்றி உழைத்து தியாகம் செய்து சிறைக்கு சென்று பாடுபட்டு கொள் கைகளை வகுத்து அவற்றை மக்களிடம் எடுத்து சென்று பரப்பித் தான் கட்சியை வளர்க்க வேண்டி இருந்தது.

தற்போது அத்தகைய நிலையெல்லாம் தேவை யில்லை என்றாகி விட்டது. அதைப் பற்றி நமக்கு விருப்பு வெறுப்பில்லை. ஆனால் அப்படி கட்சி ஆரம்பித்து தலைவராக வருபவர்கள் உண்மை நிலையை பேசி, நியாயம், நேர்மையோடு பேசினால் அது நாட்டிற்கும் நல்லது. மக்களுக்கும் நல்லது, ஏன் அவர்களுக்கும் நல்லது, இல்லையேல் சிரிப்புக்கு ஆளாக நேரிடும். உயர்ந்திட நினைக்கும் ஒரு மனிதனிடம் வளர வேண்டியது அடக்கமே தவிர ஆணவமல்ல.விஜயகாந்த் பதில் (13/2/08)
கடந்த 2 நாட்களாக நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பேசியதற்கு முதல்வர் கருணாநிதி அறிக்கை தந்துள்ளார். ஆட்சியிலே என்ன அலங்கோலம்? அவற்றை சட்டமன்றத்தில் பேசுவதை விட்டுவிட்டு சந்து முனையிலே சிந்து பாடலாமா? என்கிறார் கருணாநிதி.

சட்டமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு கொடுக்கப்படுகின்ற காலம் மிகமிகக் குறைவு. அப்படியிருந்தாலும் அமைச்சர்களுடைய குறுக்கீடுகள் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்கிறது.

இருந்தபோதும் இந்த முறை நான் சட்டமன்றத்தில் பேசுவதாக இருந்த நாளில் என் தொகுதியில் கட்சி நிர்வாகி ஒருவர் சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் நான் தொகுதிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. இதை முறைப்படி சபாநாயகரிடம் பேக்ஸ் மூலம் தெரிவித்து இருக்கிறேன்.

1991ல் இருந்து நீங்கள் எதிர்கட்சியாக இருந்த நேரத்தில் சட்டசபை பக்கம் கையெழுத்து போடுவதற்கும், சம்பளம் வாங்குவதற்கும் தவிர சட்டசபை பக்கம் போனதே கிடையாது.

தனது ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு போட்ட திட்டங்களை பட்டியலிட்டு இவையெல்லாம் அலங்கோலமாக தெரிகிறதா? என்று கேட்கிறார். திட்டங்களை நான் அலங்கோலம் என்று சொல்லவில்லை. அவை நிறைவேற்றப்படுகின்ற முறையில் தான் அலங்கோலம் தலைவிரித்து ஆடுகிறது.

முதல்வரின் 11வது திட்டக்குழு அறிக்கையின்படி ஏழைகளின் எண்ணிக்கை படிப்படியாக கூடி தற்போது 22 சதவீதத்தை எட்டியுள்ளது. இது ஆட்சி அலங்காரம் என்று கருணாநிதி பார்க்கிறார். அலங்கோலம் என்று நான் பார்க்கிறேன்.

கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுக வாக்குசாவடிகளை கைப்பற்றியும் தன் விருப்பப்படி அராஜகத்தால் கள்ள ஓட்டுகளைக் அளித்ததும், வாக்கு எண்ணிக்கையின் போது எதிர்கட்சியை சார்ந்த வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றதாக அறிவித்ததும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மறுதேர்தல் நடத்தியதும்,

கூட்டுறவு சங்க தேர்தலை அறிவித்து விட்டு முறைகேடுகள் காரணமாக இன்று வரைக்கும் நடத்த இயலாமல் உள்ளதே.. இவையெல்லாம் முதல்வரின் கண்ணுக்கு அலங்காரமாக தெரிகிறது. எனது பார்வையில் அலங்கோலமாக தெரிகிறது.

மதுரையில் நர்ஸ் ஒருவர் இறந்த போது விசாரணை முடிவதற்குள் பெற்றோரின் சம்மதம் கூட இல்லாமல் இரவோடு இரவாக போலீசை வைத்து உடலை எரித்தது ஏன்?. இது அலங்காரமா? அலங்கோலமா?.

இன்றைய நிலவரப்படி 49.7 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் காத்துக் கிடக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வேலைவாய்ப்பு தேடி அல்லல்படுகிறார்கள். இந்த இளைஞர்களின் எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது.

பொருளாதாரம் வளர்ச்சி நிலையை எடுத்துக்கொண்டால் இந்தியாவின் சராசரி வளர்ச்சியை விட தமிழ்நாடு பின்தங்கி கிடக்கிறது. கழக அரசுகள் கவர்ச்சி திட்டங்களில் காட்டும் அக்கறையை வளர்ச்சி திட்டங்களில் காட்டவில்லை என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.

நான் என்னை புத்தர் என்றும், மற்றவர்களை அயோக்கியர்கள் என்ற ரீதியிலும் பேசுவதாகவும் கருணாநிதி குற்றம் சாட்டுகிறார்.

என்னைப் பொருத்தவரை கோடான கோடி பாமரர்களில் நானும் ஒருவன் என்ற எண்ணம் கொண்டவனே தவிர இலக்கிய, இலக்கணம் கற்று டாக்டர் பட்டம் பெற்று தமிழினத் தலைவராக தன்னைக் கருதிக்கொள்ளும் கருணாநிதியைப் போல என்றும் நான் என்னை நினைத்தது இல்லை.

மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முன்னுரிமைத் திட்டங்களில் கழகங்கள் மத்திய ஆட்சியில் இடம் பெற்றிருக்கும் அக்கறை செலுத்தவில்லை என்பது தான் எனது குற்றச்சாட்டு. கச்சத்தீவை பற்றி எனக்கு தெரியுமா? என்று கருணாநிதி கேட்கிறார்.

1967ல் அண்ணா ஆட்சியை பிடித்ததும், 1969ல் அண்ணா மறைந்ததும், இவர் முதல்வர் ஆனதும் எனக்கு தெரிந்திருக்கும் போது 1974ல் நடந்த கச்சத்தீவு விவகாரம் மட்டும் எனக்கு தெரியாமல் போகும் என்று எந்த அடிப்படையில் சந்தேகப்படுகிறார்.

கச்சத்தீவை தாரைவார்த்தது மட்டும் இல்லை. ராமேஸ்வரம் கடலில் மீன் பிடிக்கும் உரிமையை பறிக் கொடுத்ததும் அதை திரும்ப பெற எந்தவிதமான முயற்சி எடுக்கப்படாததும் காவேரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளில் முறையாக தமிழகத்திற்கு பெறவேண்டியதை கூட தேசிய கட்சிகளோடு கூட்டணி சேர்ந்தபோது ஏன் பெறவில்லை என்றும் பேசினேனே தவிர வேறு என்ன?.

தமிழர்களின் நீண்டநாள் கனவாகிய சேதுசமுத்திர திட்டம் இன்று திரிசங்கு சொர்க்கமாக இருப்பதற்கு காரணம் தாங்கள் ராமரைப் பற்றி `அவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்' என்று மக்களின் உணர்வை புண்படுத்தும் விதத்தில் விமர்சித்தது தான் என்பது நாடறிந்ததே.

தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு தொடக்க நாளாக அறிவித்த சட்டம் கொண்டு வர கால தாமதம் ஏன்? என்ற என் கேள்விக்கு தமிழ்நாடு என்ற பெயரை வைக்க அறிஞர் அண்ணா ஏன் கால தாமதம் செய்தார் என்று நான் கேட்கவில்லை என்று கிண்டல் அடிக்கிறார்.

அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடனே தமிழகம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஆனால் 5வது முறை முதலமைச்சர் ஆன பிறகுதான் தமிழ் புத்தாண்டு தை முதல் நாளை அறிவித்தீர்களே ஏன் இதை முன்பே செய்யவில்லை? என்பதே என் கேள்வி.

நான் ஏன் முன்பே கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கேட்கிறார். தங்களை போன்ற அரசியல் சாணக்கியர் எல்லாம் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்ற நல்ல நம்பிக்கையில் ஏமாந்ததால்தான் கட்சி ஆரம்பிக்க காலதாமதம் ஏற்பட்டது.

கட்சி ஆரம்பிப்பதிலுள்ள கஷ்டம் கருணாநிதிக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. புதிதாக வீடு கட்டுவதற்கும், ஏற்கனவே கட்டிய வீட்டில் குடிபுகுவதற்கும் வித்தியாசம் உள்ளதை புரிந்து கொண்டால் போதுமானது.

இலவச மின்சாரம் என்று திட்டம் போட்டுவிட்டு மின்சாரமே கிடைக்காமல் இருந்தால் என்ன பயன்?. பற்றாக்குறையை சரிசெய்ய இதர மாநிலங்களிடமும், இந்திய அரசிடமும் கேட்டுள்ளேன் என்று தாங்கள் சொல்வதற்கு இங்கே போதுமான உற்பத்தி செய்யவில்லை என்பதே காரணம். இதுதான் ஒரு அரசின் லட்சணமா? என்பது என் கேள்வி.

நடிகரை பார்ப்பதற்காக கூடும் ரசிகர்களை கட்சிக்காரர்களின் கூட்டமாக கருதிக்கொண்டு நான் பேசுவதாக முதல்வர் கருணாநிதி எடுத்துரைக்கிறார். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆருக்கு கூடிய கூட்டத்தை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி. பிறகு எம்.ஜி.ஆரின் தொண்டர்களை விசிலடித்தான் குஞ்சுகள் என்று நினைத்து அவரை கட்சியிலிருந்து நீக்கி அவர் உயிரோடு இருக்கும் வரை ஆட்சிக்கு வரமுடியாமல் அவதிப்பட்டவரும் கருணாநிதியே.


ஆற்காடு வீராசாமி பதில்:(13/2/08)
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் பேசுவதற்கு கொடுக்கப்படு கின்ற காலம் குறைவு என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். திமுக பதவி பொறுப்புக்கு வந்தபிறகு 96 நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்றுள்ளது. இதில் 31 நாட்கள் தான் விஜயகாந்த் பேரவைக்கு வருகை தந்துள்ளார். வந்த நாட் களிலும் கையெழுத்துப் போட்டு விட்டு உடனடியாக சென்ற நாட்களே அதிகம்.

பேரவை நடைபெற்ற 96 நாட்களில் திமுக உறுப்பினர்கள் பேசுவதற்காக அளிக்கப்பட்ட நேரம் 27 மணி 8 நிமிடங்கள். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பேசிய நேரம் 41 மணி 17 நிமிடம். தேமுதிகவிற்கு பலமுறை வாய்ப்பளிக்கப்பட்டும் பேசிய நேரம் 1 மணி 15 நிமிடம்.
திமுக தலைவர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது சட்டசபை பக்கம் போனது கிடையாது, பேசியது கிடையாது என்றும் விஜயகாந்த் சொல்லியிருக்கிறார்.

1957 முதல் 1962 வரையில், 1962 முதல் 1967 வரையில் 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் தான் கருணாநிதி இருந்தார். 1976ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு அடுத்து வந்த தேர்தலிலும் எதிர்க்கட்சி வரிசையிலே தான் அவர் இருந்தார்.

அந்த காலக்கட்டத்தில் அவர் எடுத்துவைத்த வாதங்கள் சட்டமன்ற நடவடிக்கை புத்தகங்களில் பதிவாகி இருப்பதை இப்போதும் எடுத்துப் படித்துப் பார்க்கலாம். எனவே, அவர் எதிர்க்கட்சியாக இருந்தபோது பேரவை விவாதங்களில் கலந்து கொள்ளவில்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றிலே மறைக்கின்ற செயலாகும்.

ஆணவமாகவோ, அகம்பாவ மாகவோ தான் என்றைக்கும் பேசியதில்லை என்று விஜயகாந்த் கூறியிருக்கிறார். 10.2.2008 அன்று கோவில்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் "பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் எங்களிடம் தாருங்கள். யாராக இருந்தாலும் அவர்களது சட்டையைப் பிடித்து மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று உலுக்கிக் கேட்பேன்.

டெல்லியையே கலக்குகிறேன்' என்றெல்லாம் பேசி அந்த பேச்சு ஏடுகளில் வந்துள்ளதே, அது அவரது அடக்கத்தின் வெளிப்பாடான பேச்சு என்கிறாரா?

எம்ஜிஆருக்கு கூடிய கூட்டத்தைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். எம்ஜிஆர் உயிரோடு இருந்து திமுகவை முழு மூச்சோடு எதிர்த்து போட்டியிட்ட காலத்திலேதான் 1980ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி 40 இடங்களில் 38 இடங்களில் வெற்றி பெற்றார்.

கருணாநிதியை போன்ற அரசியல் வாதிகள் எல்லாம் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் ஏமாந்து விட்டதாகவும் விஜயகாந்த் அறிக்கையிலே கூறியிருக்கிறார். இவரை நம்பி மோசம் போனவர்கள் கருணாநிதியிடம் வந்து கண்ணீர் விட்ட கதையெல்லாம் தெரியாதா என்ன?

7 Comments:

Anonymous said...

Aanavam patthi karunanidhi, hahaha ! funny man !

அழிப்பான் said...

"இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி கள் இல்லாத ஏழை, எளியவர் களுக்கெல்லாம் தொடர்ந்து வண்ணத் தொலைக் காட்சிப் பெட் டிகள் வாங்கி வழங்கப்பட்டு வருகிறதே, அது அவருக்கு அலங் கோலமாகத் தெரிகிறதா"

இதை விட கேவலமான திட்டம் உண்டா என்ன ?

"வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்பதற்காக தமிழகத்திலே புதிய புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கச் செய்து பல்லாயிரக் கணக்கானோர்க்கு வேலை கிடைக்க ஏற்பாடுகள் நடை பெற்று வருகிறதே "

சென்னையில் மட்டுமே ,தெற்கு இன்னும் தேய்கிறதே ?

"அதையும் மீறி இன்னும் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு மாதந்தோறும் அரசே நிதி உதவி அளித்து வருகிறதே,"

யாருக்கு தேவை பிச்சை ,தேவை வேலை மட்டுமே

"இலவச வேட்டி, சேலைத்திட்டத்தையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வரு கிறோமே, "

அதை அணிந்து யாரையாவது பார்தீர்களா ?

"ஏன் முன்பே கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கேட்டு நாம் சிரிக்கலா மல்லவா!"

மழுப்பல்

"விவசாயிகளுக்கு சுமார் 7000 கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு கடன்கள் ரத்து செய்யப்பட்டதை அலங்கோலம் என்று கூறுகிறாரா?"

இந்த அஸ்திரம் தானே வெற்றிக்கு உதவியது? அது போகட்டும் பேங்க் நிலை இன்று ?

Anonymous said...

கேப்டனுக்கு கலைஞர் பதில் சொல்கிறார் என்றால், கேப்டனின் வளர்ச்சியை பாருங்கள்...ஒன்னு மட்டும் நல்லா தெரியுது...என் வாயால் சொல்ல கூடாது..! தி . மு . க எப்போ உடையும்ன்னு பலபேர் காத்திருக்கிற மாதிரி தெரியுது...கலைஞர் போன பின்பு..நடக்கும் உள் கூத்துகளை பார்க்கத்தானே போகிறோம்...விரைவில்...

Anonymous said...

விஜயகாந்த் ஒரு காமெடியன்...கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பசுமாடு இலவசமாக தரப்படும், யாரும் ரேஷன் கடைக்கு வரவேண்டாம், ரேஷன் பொருட்கள் வீடுதேடி வரும் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்துவிட்டு இப்போது கலைஞர் தரும் இலவச மின்சாரம், இலவச தொலைகாட்சி ஆகியவற்றை தவறாக விமர்சனம் செய்து மக்களை ஏமாற்றப்பார்கிறார்...இது விஜயகாந்தின் பச்சோந்தித்தனத்தையும், அரசியல் சுயநலத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது...கலைஞரை குடும்ப அரசியல் செய்கிறார் என்று விமர்சனம் செய்யும் ஒவ்வொரு அரசியல்வாதியும்(விஜயகாந்த் உட்பட) வாரிசு/குடும்ப அரசியல்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்...விஜயகாந்த் இன்னும் நான்கு வருடமில்லை நாற்பது வருடமானாலும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கமுடியாது...வேண்டுமானால் ஆந்திராவில் போய் முயற்சி செய்யலாம்...அங்கேயும் அவருக்கு சிரஞ்சீவி கடும்போட்டியாளராக இருப்பார்... ஆக மொத்தம் விஜயகாந்த் ஒரு பெரிய பூஜ்ஜியம்...

Anonymous said...

அரசியல்வாதிங்க மக்களுக்கு இலவசமாக எதையும் கொடுக்கல , அவுங்க கிட்ட இருந்த சுருட்டினத அவுங்க கிட்டயே கொடுக்குறாங்க அவ்வளவு தான். அப்படி செய்யும் போது மக்களுக்கு எவ்வளவு பயன் உள்ளதா seiyuraanganrathu தான் முக்கியம் . இலவச டிவி கொடுத்த அவுங்க என்ன பொதிகை ல வயலும் வாழ்வுமா பாக்க போறாங்க , கடன வாங்கியாவது வெட்டி சேனல்ல வெட்டி சீரியல் பாப்பாங்க. அதுக்கு பதில பசுமாடு கொடுத்தா , அதையும் யார்கிட்டயும் விக்காம கொஞ்சம் உடம்பு வளைச்சு உழைச்ச எவல்லோ பயன் உள்ளதா இருக்கும் . மக்களை கவரனும்ரதுக்காக , அவுங்களுக்கு எது தேவைன்னு யோசிக்காம , கவர்ச்சி திட்டங்கள் அறிவிக்குறாங்க.

A good leader is a one who concentrates on what people need rather than what people want.
Our's is not a developed country/state we are still in developing phase . If you look at vijayakanth's promises it addresses the basic needs of people it could no way be compared with kalaingar's "attractive" promises.


எதையுமே யோசிக்காம பேசுறது அரசியல் வாதிகளுக்கு வேணும்னா பழக்கமா இருக்கலாம் ஆனா நாம கொஞ்சமாவது , யார் பேசுறதுல உண்மை இருக்கு , யார் பேசுறதுல வெறும் கவர்ச்சி மட்டும் தான் இருக்குன்னு யோசிக்கணும் .
அதவிட்டுட்டு "உருப்படியான திட்டத்த " "காமெடி" சொன்ன ..
There is something wrong in what we perceive ..
people pls. grow up.

Anonymous said...

கலைஞர் தேவையில்லாமல் டென்ஷன் ஆகிறார்.விஜயகாந்த் வளர்ச்சி, பாமக குடைச்சல் காரணமோ.

Anonymous said...

கருணாநிதியும் விஜயகாந்தும் டிராமா போடுகிறார்கள். ஜெயலலிதாவின் ஓட்டைப் பிரிக்கக் காசு கொடுத்து விஜயகாந்தை கருணாநிதி வளர்த்து வருகிறார். இந்தச் சண்டையெல்லாம் சும்மா , ஏமாத்து