பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 15, 2008

தேர்தல் (அரசியல்) கமிஷன் ?

டாக்டர் பட்டம் வாங்கியதற்கு எதிர்ப்பு: சோனியாவுக்கு நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் தயக்கம் என்ற செய்தியை தொடர்ந்து அடுத்த நாள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது. அதில் உள்ள அரசியல் பற்றி...


பெல்ஜியம் மன்னரிடம் இருந்து விருது பெற்றதன் மூலம் "ஆர்டர் ஆப் லியோபோல்ட்' சங்க உறுப்பினராக சோனியா காந்தி ஆகிவிட்டார் என்றும், அந்த சங்கத்தின் 1வது சரத்தின்படி அவர் அந்நாட்டு மன்னரின் விசுவாசி ஆகிவிட்டார் என்றும் எனவே அவரது எம்.பி. பதவி செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்றும் மனுவில் ராஜன் வலியுறுத்தி உள்ளார்.

இந்த மனுவை அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாம் தேர்தல் கமிஷனின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார். இந்த மனுவை ஆய்வு செய்த தேர்தல் கமிஷனின் சட்டப்பிரிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சோனியா காந்தியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப பரிந்துரை செய்தது.

ஆயினும், இதுதொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் என்.கோபாலசுவாமிக்கும், இதர கமிஷனர்கள் நவின் சாவ்லா, எஸ்.ஒய். குரேஷி ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் நோட்டீஸ் அனுப்புவது தாமதமானது.

இந்நிலையில், இப்பிரச்சனை குறித்து தேர்தல் கமிஷன் மீண்டும் ஆய்வு செய்தது. அப்போது சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப என்.கோபால சுவாமியும், நவீன் சாவ்லாவும் ஒப்புக்கொண்டனர். ஆனால் இதற்கு எஸ்.ஒய்.குரேஷி எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் 2க்கு 1 என்ற அடிப்படையில் சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

துக்ளக் கேள்வி பதில்...

கே : மத்திய தேர்தல் கமிஷனர்கள் மூவரையும் சம அதிகாரம் உள்ளவர்களாக்க, சட்டத்திருத்தம் செய்ய உத்தேசித்துள்ள மத்திய அரசின் முடிவு பற்றி?

ப : தங்களுக்கு வேண்டியவரான, தங்களுக்கு சாதகமாகச் செயல்படத் துடிப்பவரான, சாவ்லா என்ற தேர்தல் கமிஷனரின் பதவிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாமல் அவரை காப்பாற்றுவதற்காக, காங்கிரஸ் செய்ய முனைந்துள்ள முயற்சி இது. தேர்தல் கமிஷனை மீண்டும், வெறும் தலையாட்டி பொம்மையாக்கி விடக்கூடிய இந்த முயற்சி ஆபத்தானது.


0 Comments: