பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 26, 2008

ஹாத்வே அழகிரி - சுமங்கலி தயாநிதி

அழகிரி பேட்டி, அமைச்சர் தயாநிதி மாறன் பற்றி...



அழகிரி பேட்டி ( நன்றி: ரிப்போட்டர் )

சென்னையிலுள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தொடர்பான பிரச்னையில் உங்கள் பெயர் அடிபடுகிறதே?

‘‘கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பிரச்னைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அதற்கான அவசியமும் இல்லை. பொதுவாகவே தமிழகத்தில் எந்தப் பிரச்னை என்றாலும் என் தலையை உருட்டுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. அதுபோல இந்தப் பிரச்னையிலும் என்னை இணைத்து சிலர் பேசியிருக்கலாம்..’’

சென்னையில் நடந்த கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்ற பிறகுதான் பிரச்னை எழுந்ததாகக் கூறியிருக்கிறார்களே..?

‘‘அதாவது கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தங்கள் கோரிக்கையைச் சொல்வதற்காக முதல்வரைச் சந்திக்க விரும்பினார்கள். அவர்களின் கோரிக்கையை முதல்வரிடம் கொண்டு செல்லும் ஒரு சாதனமாக (கருவியாக) என்னைக் கருதினார்கள். அதனால் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு என்னை அழைத்தார்கள். அதில் நான் பங்கேற்றேன். அதில் என்ன தவறிருக்கமுடியும்? அந்தக் கூட்டத்துக்குப் பிறகுதான் பிரச்னை எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.’’

கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு மிரட்டல், அச்சுறுத்தல், கடத்தல், கைது எனச் செய்திகள் தொடர்ந்து வருகின்றனவே?


‘‘இது நீங்கள் காவல்துறையிடம் கேட்க வேண்டிய கேள்வி. என்றாலும் ‘எங்களிடம் யாரும் புகார் தரவில்லை. நாங்கள் யாரையும் கைது செய்யவில்லை’ என சென்னை போலீஸ் கமிஷனர் கூறியிருக்கிறாரே.’’

ஆளும்கட்சி சொல்வதை காவல்துறை செய்கிறது என பா.ம.க. எம்.எல்.ஏ. ஒருவர் சொல்லியிருக்கிறாரே?


‘‘அவர்கள் எந்த நோக்கத்தில் பேசுகிறார்கள் எனப் புரியவில்லை. கலைஞர் தலைமையிலான தமிழக அரசின் வெளிப்படையான நடவடிக்கைகள் அவர்களுக்குத் தெரியும். என்றாலும் யாரையோ திருப்திப்படுத்திட வேண்டும் என்பதற்காக இப்படிப் பேசுகிறார்கள். வேண்டுமானால் இனி, ‘எதிர்க்கட்சியினர் சொல்வதைக் கேளுங்கள்’ என காவல்துறைக்கு இவரைப் (பா.ம.க. எம்.எல்.ஏ.) போன்றவர்கள் உத்தரவிடட்டும்.’’

தயாநிதி மாறன் அளித்த பேட்டியில் ‘நீங்கள் ‘ஹாத்வே’க்கு மாறவேண்டும்’ என கேபிள் ஆபரேட்டர்கள் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து மிரட்டப்பட்டார்கள் எனச் சொல்லியிருக்கிறாரே?

‘‘இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? ‘உஜாலாவுக்கு மாறிவிட்டோம்’ என்ற விளம்பரத்தைத்தான் நான் பார்த்திருக்கிறேனே தவிர, வேறெதற்கும் மாறுங்கள் எனச் சொல்லும் விளம்பரங்களைப் பார்த்ததில்லை.’’

‘இந்த கேபிள் தொடர்பான பிரச்னைகள் மற்றும் கைதுகள் முதல்வருக்குத் தெரியாமல் நடக்கின்றன. அவருக்குத் தெரிந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்’ என்கிறாரே தயாநிதி மாறன்?

‘‘அவர் இந்தத் தகவலை அவரது நாளிதழில் (தினகரனில்) கூறியிருந்தால், அதைப் படிப்பதற்கான வாய்ப்பு எனக்கில்லை. அந்த இதழை நான் படிக்கவும் மாட்டேன். அதுபோல அவர்கள் சேனலையும் பார்ப்பதில்லை.. ஆனால், முதல்வருக்குத் தெரியாமல் நடக்கின்றன என அவர் சொல்வதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. முன்பிருந்த முதல்வரைப் போல எடுப்பார் கைப்பிள்ளையாக, பிறர் சொல்வதை மட்டுமே கேட்டு ஆட்சி செய்யும் நிலையில் கலைஞர் இல்லை. அனைத்துத் துறைகளிலும் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக, முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்காக அல்லும்பகலும் பாடுபடுகிறார். ஏழைஎளிய மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை, சிந்தித்துச் சிந்தித்து செயலாக்கிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு இந்தியாவிலுள்ள முதுபெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கும் கலைஞர், எப்போதுமே சட்டத்துக்கு உட்பட்டுத்தான் நடப்பார். நேர்மையான நடவடிக்கையை மேற்கொள்வார் என்பது கலைஞரால் எம்.பி. பதவி பெற்ற தயாநிதிக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.’’

‘இத்தனை காலம் எனக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட சோதனைகள் இப்போது எங்களைச் சார்ந்து தொழில் செய்பவர்களையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது’ என தயாநிதிமாறன் வேதனையுடன் கூறியிருக்கிறாரே?

(கிண்டலாக) ‘‘யார் வேதனையில் கூறுகிறார்கள்.. யார் மகிழ்ச்சியில் கூறுகிறார்கள் என்பதெல்லாம் உங்களுக்குத்தான் தெரிகிறது. இத்தனை காலம் ஏற்பட்ட சோதனைகள் என தயாநிதி எதைச் சொல்கிறார்? கட்சிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட லட்சக்கணக்கானோர் தி.மு.க.வில் இருக்கும்போது, திடீரென தி.மு.க.வின் அரசியலில் நுழைந்த அவருக்கு எம்.பி. சீட் கொடுக்கப்பட்டது. அவரது வெற்றிக்காக கலைஞர் அரும்பாடுபட்டார். எம்.பி. பதவி பெற்றதோடு மத்தியில் கேபினட் அமைச்சர் பதவியையும் பெற்றார். தேசிய அளவிலான முக்கியத் தலைவர்களுக்கு கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டார். இதையெல்லாம்தான் சோதனை என்கிறாரா எனத் தெரியவில்லை. வேதனையோ.. வியர்வையோ சிந்தாமல் உச்சாணியில் அமர்த்தப்பட்டவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.’’

தயாநிதி மாறன் தி.மு.க. எம்.பி.யாக இருக்கிறார். அவர் தனது லெட்டர் பேடிலேயே அவர் சார்ந்த கட்சி ஆட்சி நடத்தும் மாநிலத்தின் காவல்துறையை விமர்சித்துக் கடிதம் கொடுத்திருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்...?

‘‘இது போன்ற சம்பவங்களின் போதுதான் அவர் கட்சியில் இருப்பதே தெரிகிறது. எத்தனையோ தி.மு.க. மாநாடுகள், கூட்டங்கள் நடந்து வருகின்றன. அங்கெல்லாம் அவரைக் காண முடியவில்லை.’’

தி.மு.க. எம்.பி.யாக இருந்து கொண்டு அவர் தி.மு.க. அரசின் காவல்துறையை விமர்சித்ததால், அவர் எம்.பி. பதவி குறித்தும் கட்சி வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளதாமே..?

‘‘அப்படியா.. அது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று தெரியும். கலைஞருக்கு கொடுக்கத்தான் தெரியும். பறிக்கத் தெரியாது.’’

‘ஓட ஓட விரட்டினால் நான் எங்கேதான் போவேன்’ என தயாநிதி மாறன் சொல்கிறாராமே?

‘‘இது என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியல்ல. எனக்குச் சம்பந்தமில்லாதது இது. அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அவருக்கும் எனக்கும் எந்த ஒட்டோ, உறவோ கிடையாது.’’

ஒரு சீனியர் அமைச்சர் உங்களை உசுப்பிவிடுகிறார் என்கிறார்களே?

‘‘உசுப்பிவிடுவதற்கு நான் ஒன்றும் உறங்கிக்கொண்டிருப்பவன் அல்ல. மற்றவர்கள் சொல்வதைக் கேட்பேன். அதே நேரத்தில் சுயமாகச் சிந்திப்பேன். சுயமரியாதைக்கு பங்கம் வராதவாறு முடிவெடுப்பேன்.’’

‘ஹாத்வே’யில் உங்களுக்கும் அமைச்சர் ஆற்காட்டாருக்கும் பங்குண்டு என்கிறார்களே?

(சற்று கோபமாக) ‘‘எதில்தான் என்னை விட்டிருக்கிறார்கள்? ஏதாவது வில்லங்கம் என்றால் அதில் என் பெயரை இழுத்துவிடுவது வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் கூட மதுரை சம்பக்குளம் மயானத்தை மாநகராட்சியில் தீர்மானம் போட்டு அகற்றினார்கள். உடனே அதற்குக் காரணம் நான்தான் என சிலர் பேசினார்கள். இந்தச் சம்பவம் நடந்தபோது நான் சென்னையில் இருந்தேன். அதனால் எனக்கு இது குறித்துத் தெரியாது. என் காதுகளுக்கு இந்தத் தகவல் வந்தவுடன் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினேன். மீண்டும் மயானம் இருந்த இடத்தில் செயல்பட ஏற்பாடு செய்தேன். கடந்த ஞாயிறன்றே முடிந்த விஷயம் இது. பத்திரிகைகளிலும் இது தொடர்பான செய்தி வந்தது. மீண்டும் மயானம் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், மயானம் அகற்றப்பட்டு அப்படியே இருப்பது போலவும், மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருப்பது போலவும் இன்றைக்கு வந்த ஓர் இதழில் செய்தி வந்திருக்கிறது. இது விஷமத்தனமல்லவா. இதற்கு நான் என்ன சொல்லமுடியும்? இதுபோலத்தான் எல்லா விஷயங்களும்.’’

உங்கள் மகனை பங்குதாரராகக் கொண்டு ‘ராயல் கேபிள் விஷன்’ ஆரம்பிக்கப்பட்டிருக்கிறதாமே.?


‘‘வேறு யாராவது இந்த நிறுவனத்தைத் தொடங்கியிருந்தால், நீங்கள் கேள்வி கேட்டிருக்கமாட்டீர்கள். என் மகன் என்பதால் கேட்கிறீர்கள். அவர் என்ன பாவம் செய்தார்? அவர் தொழில் தொடங்கக்கூடாதா? தொழில் தொடங்குவது என்பது ஜனநாயக விரோதச் செயலா?’’

உங்கள் பிறந்தநாள் விழா முடிந்தபின்னரும் கூட அது ஆடம்பர விழா என்ற விமர்சனங்கள் ஓயவில்லையே?

‘‘இதற்கான பதிலை ஏழை எளிய ஐம்பத்தேழு ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தி வைத்தபோதே நான் சொன்னேன். என் பிறந்தநாள் விழாக்கள் மூலம் அளிக்கப்படும் நலத்திட்ட உதவிகளை தி.மு.க.வினர் மட்டும் பெறவில்லை. பல்வேறு கட்சியினரும் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் சாதி, மத பேதம் பாராமல் ஏழை எளிய மக்களும் பயனடைந்திருக்கிறார்கள். இது சிலருக்குப் பொறுக்கவில்லை. விமர்சனங்கள் மூலம் ஏழைகளுக்கு நல்ல பயன்கள் கிடைப்பதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். என்னுடைய பிறந்தநாள் விழா மட்டுமல்ல; கலைஞரின் பிறந்தநாளையொட்டி எண்பத்து நான்கு ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்தி வைப்பேன். யார் எந்த மூலையில் நின்று இது குறித்துக் கத்தினாலும் எனக்குக் கவலையில்லை. கலைஞருக்காக உயிரைத் தரவும் சித்தமாக இருக்கும் தொண்டனுக்காகவும் ஏழை, எளிய மக்களுக்காகவும் நல்லதை _ என்னால் முடிந்ததை என் உயிர் உள்ளவரை செய்து கொண்டே இருப்பேன்.’’

எப்போது பிரச்னை என்றாலும் உங்கள் பெயர்தானே அடிபடுகிறது. பிரச்னையில் சம்பந்தமில்லாமல் உங்கள் பெயரை பிறர் சொல்ல முடியுமா?


‘‘நீங்கள் சொல்வது உண்மைதான். அதே நேரத்தில் அது ஏன் என்றும் யோசித்திருக்கிறேன். இன்றைக்கு தி.மு.க.வுக்கோ, தி.மு.க. தொண்டனுக்கோ ஏதாவது ஒரு பிரச்னை என்றால், அவர்கள் திரும்பிப் பார்ப்பதும் நினைத்துப் பார்ப்பதும் என்னைத்தான். காரணம், பிரச்னைகளில் அவர்களோடு நான் நிற்பேன் என அவர்களுக்குத் தெரியும். கலைஞரின் தலைமை தொடரவும் காலகாலத்துக்கு தி.மு.க. இயக்கம் நாட்டை ஆளவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு என்னைப் போல வேகமாகச் செயலாற்றக் கூடியவர்கள் கட்சியில் பலர் இருக்கிறார்கள். கட்சித் தலைவரின் மகன் என்பதால் அந்தப் பலரில் நான் முதன்மைப்படுத்தப்படுகிறேன். ஏதாவது புகார் கூறினால், விமர்சித்தால் நான் சோர்ந்து போவேன், ஒதுங்கிக்கொள்வேன் என எதிர்க்கட்சியினர் நினைக்கலாம். புகார் கூறி என்னை முடக்கிவிட்டால் மற்றவர்களும் அமைதியாகிவிடுவார்கள் என அவர்கள் கணக்குப் போடலாம்.. அதற்காகவே அவர்களால் நான் குறிவைக்கப்படுவதாக நினைக்கிறேன். ஆனால், அவர்கள் தீயை காகிதத்தால் மூடப் பார்க்கிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்’’



பரபரப்பை ஏற்படுத்திய தயாநிதிமாறன்

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மக்களவையில் மத்திய அமைச்சர்கள் பகுதியில் அமர்ந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
முதல்வர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்ட பிறகு மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் ஓரங்கட்டப்பட்டார்.

சுமங்கலி கேபிள்ஸ் நிறுவனத்திற்கும், ஹாத்வே நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட போட்டியால் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீஸ் கமிஷனரிடம் தயாநிதிமாறன் புகார் செய்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாள் விளம்பரங் களை தினகரன் மற்றும் தமிழ் முரசு பத்திரிகைகள் வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று காங்கிரஸ் தலைவி சோனியாவையும், அவரது மகன் ராகுலையும் சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ரெயில்வே அமைச்சர் லாலு பிரசாத் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, அவருக்கு பின் வரிசையில் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டசுக்கு அருகில் தயாநிதிமாறன் அமர்ந்திருந்தார்.

மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஏ.ராஜாவுக்கு முன்வரிசையில் தயாநிதிமாறன் அமர்ந்திருந்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

பழைய பதிவு: எலாஸ்டிக் இல்லாத ஜட்டி

1 Comment:

vivek.dgl said...

Aarasiyal illai yendral...
idlyvadai blog illai.......