பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 18, 2008

வெறும் ஈடுபாடு, ஆனால் விசுவாசம் அல்ல! - எஸ்.குருமூர்த்தி

சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட "கிங் ஆஃப் லெபால்ட்' விருது பற்றி எஸ்.குருமூர்த்தி கட்டுரை ( நன்றி: தினமணி )

எர்ணாகுளத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மட்டும் அத்தகைய வழக்கைத் தொடரவில்லை என்றால், இந்தியர்களில் பலருக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட "கிங் ஆஃப் லெபால்ட்' விருது பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. அந்த வகையில் வழக்கறிஞர் ராஜனுக்கு நாம் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.

2006-ம் ஆண்டு சோனியா காந்திக்கு பெல்ஜியம் அரசு வழங்கிய "ஆர்டர் ஆஃப் லெபால்ட்' விருது குறித்து மற்றவர்களைப் போல வழக்கறிஞர் ராஜன், அவ்வளவு அசிரத்தையாக எடுத்துக் கொள்ளவில்லை.

மற்றவர்களுக்கு தமாஷாகப்பட்ட விஷயத்தை அவர் அவ்வளவு எளிதான விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

2006-ம் ஆண்டு நவம்பர் 15-ம் நாள் பெல்ஜியத்தின் மிக உயரிய விருதுக்கு சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

பெல்ஜியம் அரசின் இரண்டாவது மிக உயரிய விருது என்ற பெருமையும் இதற்கு உண்டு.

பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர், பிற நாட்டின் விருதை ஏற்கக் கூடாது; அதன் மூலம் அவர்களுடைய நாட்டுப் பற்றுக்குக் குந்தகம் ஏற்படலாம்.

இந்த அடிப்படையில் லெபால்ட் விருது குறித்து மேலும் தீவிரமாக ஆராய்ந்துள்ளார் ராஜன். இது வழக்கமான நம்ம ஊர் ரோட்டரி சங்க விருதைப் போன்றோ அல்லது லயன்ஸ் கிளப் விருதைப் போன்ற ஜிலுஜிலு காகிதம் அல்ல; பெல்ஜியம் நாட்டின் மீது பக்தியுடனும், விசுவாசத்துடனும் இருப்பவர்களுக்கு அந்நாட்டு அரசர் வழங்கிக் கெüரவிக்கும் பட்டயம் இது என்பதும் அவருக்குப் புலனாகியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த இந்தியப் பிரஜையான வழக்கறிஞர் ராஜன், இது குறித்து புகார் மனுவை 2007-ம் ஆண்டு மே மாதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதோடு, பெல்ஜியம் அரசரின் உயரிய விருதை ஏற்றுக் கொண்டதற்காக சோனியா காந்தியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

நல்லவேளை, அப்போது குடியரசுத் தலைவராக இருந்தவர் நாணயத்துக்கும் சுதந்திரமாக இயங்குவதற்கும் பெயர்போன ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

ஒருவேளை இவருக்கு அடுத்து வந்த சோனியா காந்தியின் விசுவாசியான பிரதிபா பாட்டீலிடம் இந்தப் புகார் மனு போயிருந்தால், இந்த விவகாரம் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

தம்மிடம் வந்த புகார் மனு குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்தார் அப்துல் கலாம். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணைய உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

தலைமைத் தேர்தல் ஆணையர் தவிர மற்ற இரு உறுப்பினர்களும் சட்டத்திற்கு விசுவாசம் இல்லாமல் வேறு எங்கோ விசுவாசம் உள்ளவர்களாக இருந்தனர். அதனாலேயே சோனியா காந்தியை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்பதற்கான காரண விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்புவது தொடர்பாக தீவிர அக்கறை காட்டவில்லை.

இதனாலேயே இவ்விரு உறுப்பினர்களும் இந்த புகார் மனுவை தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பாமல் பல மாதங்களைக் கடத்தி வந்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தில் மட்டுமே புகைந்து வந்த இந்த பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக செய்தி ஊடகங்களுக்குக் கசியத் தொடங்கியது.

இனியும் இதைத் தவிர்க்க முடியாது என்ற சூழ்நிலையில், பிப்ரவரி 13-ம் தேதி கூடிய தலைமைத் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் இரு வேறுபட்ட முடிவுகளை எட்டினர்.

தலைமைத் தேர்தல் ஆணையரின் முடிவுப்படி சோனியா காந்திக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்புவதற்கு ஆணைய உறுப்பினரில் ஒருவரான நவீன் சாவ்லா மட்டும் ஒப்புக் கொண்டார்.

மற்றொரு உறுப்பினரான எஸ்.ஒய். குரேஷி, பெல்ஜியம் அரசு வழங்கிய லெபால்ட் விருது குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கலாம் என்று கருத்துத் தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சகத்திடம் சாதகமான பதிலைப் பெற்று அதன் மூலம் சோனியா காந்தி தப்பிப்பதற்கு வழி ஏற்படும் என்பதால் குரேஷியின் கருத்தைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏற்கவில்லை. அந்தவிதத்தில் குரேஷியுடன் ஒத்துப்போனார் சாவ்லா!

உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையிலும் சோனியாவுக்கு நோட்டீஸ் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. பொதுவாகத் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் விவாதிக்கும் விஷயங்கள் பத்திரிகை ஊடகங்களுக்கு வருவதில்லை.

ஆனால் இம்முறை உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல் வெளிச்சத்துக்கு வந்து பொது விவாத விஷயமாகிவிட்டது.

மக்களவை உறுப்பினரோ அல்லது மாநிலங்களவை உறுப்பினரோ வெளிநாட்டு விருதை ஏற்றுக் கொண்டாலோ அல்லது அதற்குச் சம்மதித்தாலோ, அவரைத் தகுதி நீக்கம் செய்யலாம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் (விதி 102) கூறுகிறது.

அந்த வகையில் பெல்ஜியம் அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் லெபால்ட்' விருதை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டது, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தகுதி நீக்கம் செய்யும் அளவுக்கு இட்டுச் சென்றுள்ளது.

"ஆர்டர் ஆஃப் லெபால்ட்' விருதில் அப்படி என்னதான் உள்ளது?

இது குறித்து "கூகுள்' தேடுபொறியில் "ஆர்டர் ஆஃப் லெபால்ட்' குறித்து அலசினால் ஏறக்குறைய 5,46,000 பேர் இவ்விருதுக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

"ஆர்டர் ஆஃப் லெபால்ட்' அமைப்புக்கு தனி இணையதளம் உள்ளது. மேலும், இதுகுறித்து "விக்கி பீடியா'-வில் (தகவல் களஞ்சியம்) இடம் பெற்றுள்ள விஷயம் வியப்பானது.

""உறுப்பினர்களுக்கு மட்டுமே பெல்ஜியம் அரசர் கையால் இவ்விருது வழங்கப்படும். இந்த விருது பெறுவோர் பெல்ஜியம் குடிமக்களாக இருக்க வேண்டும். சில சமயங்களில் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கும் இவ்விருது வழங்கப்படும்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் வெளிநாட்டுப் பிரஜை, பெல்ஜியம் ராணுவத்துக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்தவராக இருக்க வேண்டும். அல்லது பெல்ஜியம் மக்கள், பெல்ஜியம் மாகாணத்துக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவியவராக இருத்தல் வேண்டும்.''

"ஆர்டர் ஆஃப் லெபால்ட்' விருதுக்கான சங்கம் 1944-ம் ஆண்டு பெல்ஜியம் சட்ட விதிகளின்படி ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சங்கம் உருவாக்கப்பட்டதன் அவசியம் குறித்த விளக்கம் சிறப்பானது.

பெல்ஜியம் அரசருக்கும், பெல்ஜியம் நாட்டிற்கும் உள்ள முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் இவ்விருது பெறுவோர் இருக்க வேண்டும் என்பதே விருதுபெறும் பெல்ஜியம் பிரஜைகளுக்கான விளக்கம்.

விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் (வெளிநாட்டவர்களாக இருந்தாலும்) பெல்ஜியம் அரசருக்கும், பெல்ஜியம் நாட்டவர்களுக்கும் தனது முழு ஈடுபாட்டை, விசுவாசத்தை, ராஜபக்தியை வெளிபடுத்துபவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியெனில் சோனியா காந்தி இந்தத் தகுதி வரையறைகளை பூர்த்தி செய்கிறாரா?

அப்படியெனில் இவ்விருதுக்காக பெல்ஜியம் நாட்டின் மீது தனது விசுவாசத்தை சோனியா காந்தி வெளிப்படுத்த வேண்டுமல்லவா? அது மட்டுமல்ல; அந்நாட்டு மக்களுக்கும், அந்த நாட்டு அரசருக்கும் தனது ராஜபக்தியை வெளிப்படுத்த வேண்டும்.

இது எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, இந்த விருதைப் பெறுவோர், அந்நாட்டுச் சட்டப்படி உறுதி மொழி எடுக்க வேண்டும்.

""ஆர்டர் ஆஃப் லெபால்ட் விருதைப் பெறும் நான், இந்த விருதுக்கான பெருமையைக் குலைக்கும் வகையில் செயல்படமாட்டேன். விருதுக்கான சட்ட திட்டங்களை மதித்து அதற்குரிய உறுப்பினராகக் கட்டாயம் செயல்படுவேன்,'' என்று உறுதி மொழியும் எடுக்க வேண்டும்.

அந்த வகையில் பார்க்கும்போது, இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்தியும், இத்தகைய உறுதி மொழியைக் கட்டாயம் எடுத்தாக வேண்டும்.

தற்போது தேர்தல் ஆணையம் முன் உள்ள பிரச்னை இதுதான். மக்களவை உறுப்பினர் ஒருவர், பெல்ஜியம் மக்களுக்காகவும், அரசருக்காகவும் இத்தகைய உறுதி மொழியை ஏற்று, அந்த விருதைப் பெற ஒப்புக் கொள்வதை அனுமதிக்கலாமா? என்பதுதான்.

இந்த விஷயத்தைத் தேர்தல் ஆணையம் எப்படிக் கையாள்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.

ஆர்டர் ஆஃப் லெபால்ட் விருதைப் பெற்றுக் கொள்ள சோனியா காந்தி சம்மதம் தெரிவித்ததை, பெல்ஜியம் நாட்டுக்கு விசுவாசம் காட்டும் செயல்போலத் தோன்றுகிறது என்று கருதினார் தலைமைத் தேர்தல் ஆணையர். இது தெரிந்தவுடன் அதிர்ந்துபோனார் ஆணையத்தின் ஓர் உறுப்பினர்.

தலைமைத் தேர்தல் ஆணையரின் கருத்தை மாற்ற அந்த உறுப்பினர் கொஞ்சம் மிகையாகச் செயல்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இன்னும் சொல்லப்போனால் அவரே சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, தில்லியில் உள்ள பெல்ஜியம் தூதரகத்தின் கருத்தை வெளியுறவு அமைச்சகம் மூலம் கேட்டுப் பெற்றிருக்கிறார்.

அந்தக் கடிதத்திலும், வெளியுறவுத் துறையின் விளக்கத்திலும், ஆர்டர் ஆஃப் லெபால்ட் பெறுபவர்களுக்கான அமைப்பு பற்றிய சட்டத்தைப் பற்றியோ அல்லது அந்தச் சட்டத்தில் கூறியுள்ளபடி பெல்ஜியம் நாட்டுக்கு விசுவாசத்துடனும் அனுசரணையாகவும் லெபால்ட் பட்டயம் பெறுபவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி எந்த விளக்கமும் இல்லை என்பதை தலைமைத் தேர்தல் ஆணையர் சுட்டிக்காட்டினார் என்று தெரிகிறது.

இதற்கு மறுப்பாக இந்திய அரசியல் சட்டத்தில் விசுவாசம் மற்றும் அனுசரணை என்கிற வார்த்தைகள் லெபால்ட் பட்டயத்தில் இல்லை என்று பிடிவாதம் பிடித்ததாகவும் தெரிகிறது.

அதேசமயம், பட்டயத்தில் குறிப்பிட்டுள்ள ராஜபக்தி, முழு ஈடுபாடு குறித்து குரேஷி எதுவுமே தெரிவிக்கவில்லை என்றும் தெரிகிறது.

எது எப்படியிருப்பினும் "பக்தி' என்ற வார்த்தை பட்டயத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் பெல்ஜியம் அரசரை வணங்கித்தான் சோனியா இந்த விருதைப் பெற வேண்டும். வெறும் விசுவாசத்துடன் மட்டுமல்ல.

இந்த விஷயத்தில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு சட்டத்தின்மேல் விசுவாசம்.

மற்ற இரு உறுப்பினர்கள் சோனியாவின் விசுவாசிகள். இந்த விசுவாச வித்தியாசத்தால்தான் சோனியா காந்திக்கு நோட்டீஸ் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது.

தேர்தல் ஆணைய உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் செய்தி ஊடகங்களில் மேலும் பெரிதாகாமல், தாற்காலிகமாகத் தடுக்கப்பட்டுவிட்டது.

சோனியா காந்திக்கு காரண விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்புவதென தலைமைத் தேர்தல் ஆணையர் எடுத்த முடிவை ஒருபுறம் ஆதரித்தும் மற்றொருபுறம் வெளியுறவு அமைச்சகத்தின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று குரேஷி கூறிய கருத்தையும் ஆதரித்திருக்கிறார் நவீன் சாவ்லா.

இப்படி வெளியுறவு அமைச்சகத்தை இந்த பிரச்னைக்குள் கொண்டுவர அவசியமில்லை என்கிற தலைமைத் தேர்தல் ஆணையரின் கருத்தை மற்ற இரண்டு உறுப்பினர்களும் ஏற்கவில்லை.

அந்த இரண்டு உறுப்பினர்களும் வெளியுறவு அமைச்சகத்தின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்குக் காரணம் என்ன?

இதுதான் சோனியா காந்தி பெற்ற பட்டயம், பெல்ஜியம் நாட்டுக்கு விசுவாசம், பக்தி தெரிவிக்கும் ஒன்று அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் கூறிவிட்டால் அந்த அடிப்படையில் பிரச்னை முடிந்துவிடலாம் அல்லவா? அதற்குத்தான் சோனியா விசுவாசிகளான அந்த இரண்டு உறுப்பினர்களும் இப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இப்போது தேர்தல் ஆணையம் முன் உள்ள பிரச்னை இதுதான்:

சோனியா காந்தி, பெல்ஜியம் நாட்டின் மீது தனது ஈடுபாடு மற்றும் ராஜபக்தியை வெளிக்காட்ட உறுதிமொழி எடுத்துக் கொள்வதானது, நமது அரசியல் சட்டப்படி பெல்ஜியம் நாட்டுக்கு விசுவாசத்துடனும் அனுசரணையுடனும் இருப்பதுபோல ஆகுமா என்பதே.

ஆக பிரச்னை பெல்ஜியம் நாட்டின் மீது "பக்தி'யுடன் இருப்பது, பெல்ஜியம் நாட்டின் மீது விசுவாசத்துடன் இருப்பதற்குச் சமமா என்பதுதான். ஆமாம் என்றால் சோனியா காந்தி பதவி பறிபோகும்.

ஆனால் இரண்டு தேர்தல் உறுப்பினர்கள் சோனியாவுக்கு ஆதரவாக இருப்பதனால் பெல்ஜியம் நாட்டின் மீது பக்தியுடன் இருப்பது, பெல்ஜியம் நாட்டின் மீது விசுவாசத்துடன் இருப்பதாக ஆகாது என்றுதான் அவர்கள் முடிவு செய்வார்கள் என்று தோன்றுகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையரை அவர்கள் ஒதுக்கிவிடுவார்கள் என்றும் தோன்றுகிறது.

அப்படி அவர்கள் முடிவு செய்தால், தேர்தல் ஆணையம் செய்தது சரியா, தவறா என்று மக்கள்சபைதான் முடிவு செய்ய வேண்டும்.

9 Comments:

Anonymous said...

தலைமைத் தேர்தல் ஆணையர் ரொம்ப நல்லவரா இல்ல நல்லவர்ன்னு நீர் பட்டம் கொடுக்குரீரா ?

உன்னோட பதிவு ஒரே டமாசு தான் போ :))

கோழி கூவும் ...

Unknown said...

//
தலைமைத் தேர்தல் ஆணையர் ரொம்ப நல்லவரா இல்ல நல்லவர்ன்னு நீர் பட்டம் கொடுக்குரீரா ?

உன்னோட பதிவு ஒரே டமாசு தான் போ :))
//

இட்லி வடை,

இவன்னுங்களுக்கெல்லாம் இரதத்லே நாட்டுப்பற்று கொஞ்சம் இருந்தா கோபம் கொஞ்சம் வரும்..ஆனா இவனுக இரதத்லே வேற ஏதோ ஓடுது அதன் இப்படி சிரிகான் ....

Anonymous said...

தேசபக்தன் சுப்பிரமணி அவர்களுக்கு .

//தலைமைத் தேர்தல் ஆணையர் தவிர மற்ற இரு உறுப்பினர்களும் சட்டத்திற்கு விசுவாசம் இல்லாமல் வேறு எங்கோ விசுவாசம் உள்ளவர்களாக இருந்தனர்//

//தலைமைத் தேர்தல் ஆணையரின் கருத்தை மாற்ற அந்த உறுப்பினர் கொஞ்சம் மிகையாகச் செயல்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது
இதற்கு மறுப்பாக இந்திய அரசியல் சட்டத்தில் விசுவாசம் மற்றும் அனுசரணை என்கிற வார்த்தைகள் லெபால்ட் பட்டயத்தில் இல்லை என்று பிடிவாதம் பிடித்ததாகவும் தெரிகிறது.//

//இந்த விஷயத்தில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு சட்டத்தின்மேல் விசுவாசம்.//கவனிக்க !

//மற்ற இரு உறுப்பினர்கள் சோனியாவின் விசுவாசிகள். இந்த விசுவாச வித்தியாசத்தால்தான் சோனியா காந்திக்கு நோட்டீஸ் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது.//

//தலைமைத் தேர்தல் ஆணையரை அவர்கள் ஒதுக்கிவிடுவார்கள் என்றும் தோன்றுகிறது.//

இப்பதிவில் அனைத்து இடங்கலளிலும் தலைமைத் தேர்தல் ஆணையரை ரொம்ப நலவருன்னு சொல்லி இருக்கார் மிஸ்டர் எஸ் .குருமூர்த்தி ..அதற்க்க்காகதான் நான் அப்படி ஒரு கமெண்ட் போட்டேன் ..

இதை புரிந்துகொள்ளாமல் //ஆனா இவனுக இரதத்லே வேற ஏதோ ஓடுது அதன் இப்படி சிரிகான் ....// ன்னு உணர்ச்சி வசப்பட்டு எழுதுறீங்க ..

சோனியா காந்தி வாங்கிய "ஆர்டர் ஆஃப் லெபால்ட்' விருது குறித்து நான் எதுவும் சொல்லவில்லையே !

பாசத்துடன்
கோழி ..

Anonymous said...

தலைமைத் தேர்தல் கமிஷனர் திரு.கோபால்ஸ்வாமி தமிழ்நாட்டு, (பழைய) தஞ்சை மாவட்ட ஐயங்கார். இதற்கும் இட்லிவடைக்கும் இந்த சோனியா கேஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படீன்னும் மண்டபத்துல யாரோ பேசிண்டு இருந்தா :-)

Anonymous said...

தேர்தல் கமிஷன் முடிவு சோனியாவுக்கு ஆதரவாக வரும் பட்சத்தில் (அப்படித்தான் வரும்) சுப்ரீம் கோர்ட்டில் யாரும் வழக்குத் தொடர முடியுமா? ஒரு இத்தாலியா மாஃபியா தலைவிக்கு அடிமையாக இருக்க முதெலும்பில்லாத மன்மோகன் முதல் நாட்டின் மூத்த குடிமகள் வரைத் தயாராக இருக்கும் பொழுது எப்படி உருப்படும் இந்தியா?

Anonymous said...

ஆமாம், ரொம்ப நாளா நம்ம கம்யூனிஸ்ட் தோழர்கள் எல்லாம் சைனாவுக்கு "விசுவாசமா" பத்திரம் எழுதிக்கொடுத்துட்டு இந்தியாவுக்கு வேட்டு வெச்சுகிட்டிருக்காங்க. ஆனா, சைனா ஒரு பட்டயமும் இந்தாளுகளுக்கு கொடுக்க காணுமே. ம்ம்ம்!! என்ன இருந்தாலும் பெல்ஜியம் மாதிரி வருமா? ஆனாலும், சைனா நம்ப செஞ்சட்டை வீரர்களுக்கு கமுக்கமாத்தான் எல்லா "வசதி"யும் செஞ்சு கொடுக்கிறாங்களே, அது போதும்.

Anonymous said...

ஏங்க! இத்தாலியோட மட்டும்தான் சோனியா காந்தி "பக்தி"யாக இருக்கணுமா என்ன, பெல்ஜியத்தோடும் இருந்துவிட்டுப் போகட்டுமே!! இதுக்கு எதுக்கு கேசு, கோசு எல்லாம்?

மூக்கா அனானி

Anonymous said...

இது குறித்து மேலும் இங்கே படிக்கலாம் http://www.orderofleopold.be/en/sta01.htm. ( இதை ஏன் இட்லிவடை தரவில்லை? )

//அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் வெளிநாட்டுப் பிரஜை, பெல்ஜியம் ராணுவத்துக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்தவராக இருக்க வேண்டும். அல்லது பெல்ஜியம் மக்கள், பெல்ஜியம் மாகாணத்துக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவியவராக இருத்தல் வேண்டும்//

இப்படி அங்கே குறிப்பிடவில்லை.
In order to become a foreign member, one should prove his/her quality as a member of the Order as a foreigner and possess the nationality of a country, which maintains regular diplomatic relations with Belgium
இதில் ராஜ பக்தியும் இல்லை. ராணுவமும் இல்லை.

விக்கிபீடியா-வில்
Membership can only be granted by his majesty, King Albert II and is reserved to the very most important Belgian nationals and to some distinguished foreign persons who contributed in one way to the Belgian military, the Belgian civil society or the Belgian State
இதில் "civil society" யும் சேர்த்தே சொல்கிறார்கள்.

பெல்ஜியம் அரசு சோனியா-வுக்கு விருது வழங்கும் போது,
for her "constructive nationalism" and her efforts to foster a multicultural, tolerant society in India
என்றே சொல்லியிருக்கிறார்கள். இதில் பெல்ஜியம் பக்தி பற்றி ஒன்றுமே இல்லை. பார்க்க http://www.rediff.com/news/2006/nov/11sonia1.htm

இந்த விருதை அமெரிக்க President Eisenhower வாங்கியிருக்கிறார் என்பதும் விக்கிபீடியா-வில் இருக்கிறது. ( இதை அவர் ஜனாதிபதியாவதற்கு முன்பே வாங்கியிருக்கவேண்டும் என்பது என் best-guess )

இந்த விருதை சோனியா திருப்பி கொடுத்துவிட்டால் இந்த விவகாரம் அமுங்கி விடுமா?

இதே மாதிரி விருது பிரான்ஸ் நாட்டின் Chevalier award. இதை ரஷ்ய அதிபர் புடின் 2006-ஆம் ஆண்டு பெற்று இருக்கிறார்.

எனக்கென்னவோ இந்த விருது விவகாரம் சரியென்று தோன்றவில்லை. நம் தமிழ்நாட்டின் அரசியல் தலைகள் செய்யாததா?

இதை விட முக்கியமான சமாசாரம் கொண்டு போன அந்த அரிய சிலைகள் கதி என்ன ஆச்சு? திரும்ப கொடுத்துட்டாங்களா? Quattrochi எப்படி தப்பித்தார்?

Anonymous said...

Eating everything from tamil people and staying Tamilnadu, these 3% people worry about others....Do they know anything about honesty, equality, human values...