பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 15, 2008

சேது சமுத்திர திட்ட பிரச்சினை: மந்திரிகள் கூட்டத்தில் அம்பிகா சோனி வெளிநடப்பு

சேது சமுத்திர திட்ட பிரச்சினை பற்றி நடைபெற்ற மந்திரிகள் கூட்டத்தில் இருந்து மந்திரி அம்பிகா சோனி வெளிநடப்பு செய்தார்.


சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இப்பிரச்சினையில் கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கான பதில் மனுவை மத்திய அரசு தயாரித்து உள்ளது.

இந்த மனு பற்றி மத்திய மந்திரிகள் குழு நேற்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தியது. இதில் மூத்த மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, அர்ஜுன் சிங், பரத்வாஜ், கபில் சிபல் ஆகியோர் பங்கேற்றனர். மத்திய தரை வழி மற்றும் கப்பல் போக்குவரத்து மந்திரி டி.ஆர்.பாலு, சுற்றுலா மற்றும் கலாசார துறை மந்திரி அம்பிகா சோனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மோதல்

கூட்டத்தில் சேது சமுத்திர திட்டப் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கான மனுவில் இடம் பெற்றிருக்கும் சில கருத்துக்களுக்கு அம்பிகா சோனி ஆட்சேபம் தெரிவித்தார்.

அப்போது சேது சமுத்திர திட்டத்துக்கு அம்பிகா சோனி தடைக்கல்லாக இருப்பதாக டி.ஆர்.பாலு கூறியதாகவும், இதைத்தொடர்ந்து அவருக்கும், அம்பிகா சோனிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றதாகவும் தெரிகிறது.

அந்த நேரத்தில் கபில்சிபல் பேசுகையில்; சேது சமுத்திர திட்டம் பற்றி அம்பிகா சோனிக்கு எதுவும் தெரியவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அதைத் தொடர்ந்து மந்திரிகள் இடையே சூடான வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது அம்பிகா சோனிக்கு ஆதரவாக யாரும் பேசவில்லை.

வெளிநடப்பு

இது அவருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே மந்திரிகள் கூட்டத்தில் இருந்து அவர் ஆவேசத்துடன் வெளிநடப்பு செய்தார். அவர் நேராக வீட்டுக்கு புறப்பட்டு போய் விட்டார்.

மூத்த மந்திரியான பிரணாப் முகர்ஜி இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், அம்பிகா சோனியை சமாதானப்படுத்துவதற்காக போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

ஆனால், அம்பிகா சோனி சமாதானம் அடையவில்லை. மந்திரிகள் கூட்டத்தில் தன்னை அவமதித்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

பிரதமருக்கு கடிதம்

இந்நிலையில் மந்திரிகள் கூட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பிரதமருக்கு அம்பிகா சோனி கடிதம் எழுத உள்ளார்.
(நன்றி: தினத்தந்தி)

2 Comments:

Anonymous said...

அம்பிகா சோனி என்ற கிருத்துவப் பெண்மனி அமைச்சர் இந்த சேதுத்திட்டத்திற்கு நிரந்தர சமாதி கட்டிய பெருமைக்கு மூல காரணம்.

இந்த விவகாரத்தில் பாஜபா ராமர் பால மீட்புக்குழு என்று அமைத்து ஒரு வருடமும் ஒன்றும் குலையாமல் திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த மதிப்பைப்பெற்றிருந்தது. ஆனால், தற்குறித்தனமான சில வரிகள் இந்த திட்டத்தை ஏதோ இந்து விரோத திட்டமாக்கி விட்டது.

இப்போது இந்த திட்டத்திற்கு பாதுகாப்பு முதல் சுனாமி வரை பல சாக்குப்போக்குகளை சொல்லி இந்த திட்டம் ஒரு உருப்படாத திட்டம் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. பாலுவின் ஒரே குறி இதில் கிடைக்கும் சுளையான காண்டிராக்ட். அவர் குடும்பத்தினருக்கும் கப்பல் கம்பனிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வதந்தி. கலைஞருக்கோ செம்மொழி, கலர் டீவி போல பல பைசா பெறாத வெற்றிகள் இருந்தும் ஒரு நல்ல திட்டமும் வெற்றிசெய்ய முடியவில்லையே என்று நாளை மக்கள் தூற்றுவார்களே என்ற கவலை. அம்பிகா சோனி பாஜபாவுக்கு செய்த இந்த மகத்தான உதவியை என்றும் அவர்கள் மறக்கக்கூடாது.

Litmuszine said...

Dear Anony,
"//பாலுவின் ஒரே குறி இதில் கிடைக்கும் சுளையான காண்டிராக்ட். அவர் குடும்பத்தினருக்கும் கப்பல் கம்பனிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வதந்தி//"

உண்மையின் இன்னொருபெயர் வதந்தி என்றால் , இது வதந்திதான்.


"//கலைஞருக்கோ செம்மொழி, கலர் டீவி போல பல பைசா பெறாத வெற்றிகள் இருந்தும் ஒரு நல்ல திட்டமும் வெற்றிசெய்ய முடியவில்லையே என்று நாளை மக்கள் தூற்றுவார்களே என்ற கவலை."//

இதில் கவலை என்பதுதான் நிஜ வதந்தி!!. அவருக்கும் அவர் குடும்பத்தார்க்கும் பங்கு சென்று கொண்டிருக்கிறது என்று ஒரு வதந்தி உள்ளது என்பது உங்கள்ளுக்கு தெரியுமா?