பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 14, 2008

கலைஞர் ஜோதிடம் பார்ப்பார்

தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டுள்ள தை முதல் நாளை திருவிளக்கு ஏற்றி, புத்தாடை அணிந்து தீபாவளி பண்டிகை போல கொண்டாட வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார் அந்த விழாவில் பேசிய முனைவர் அறிவொளி

"ஒவ்வொரு அரசனும் ஒரு ஆண்டை உற்பத்தி செய்துள்ளான். சாலிவாகன பேரரசை ஆண்ட மன்னர்கள், சாலிவாகன ஆண்டை உருவாக்கினார்கள். அவரவர்கள் பெயரை ஆண்டுக்கு வைத்தார்கள். ஆனால் கலைஞர் உருவாக்கிய ஆண்டுக்கு, தமிழ்ப் பெயரை வைத்துள்ளார். அவர் பெயர் வைக்கவில்லை. இனிமேல் சித்திரை முதல் நாள், தமிழ்ப் புத்தாண்டு இல்லாமல் போகுமா என்று என்னிடம் சிலர் கேட்டார்கள். அதுவும் இருக்கும். அது ஜோதிடக்காரர்கள் உருவாக்கியது. ஜோதிடம் என்றும் இருக்கும். ஜோதிடம் பார்க்காதவர்கள் யாரும் கிடையாது. நம்ம தலைவரும் (கலைஞர்) பார்ப்பார். அது எனக்குத் தெரியும்"


ரஜினி ராமர் பற்றி பேசிய போது உடனே பதில் சொன்ன முதல்வர். அறிவொளிக்கு ஏன் பதில் சொல்லவில்லை ?

அறிவொளிக்கு பதில் சொல்லாத முதல்வர் அவுட்லுக் பத்திரிக்கைக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்பியது எதனால் ?

9 Comments:

Anonymous said...

//இட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை.
இருந்தால் அது நான் இல்லை :-)
( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல
//

என்ன அறிவிப்பெல்லாம் தூள்பறக்குது? மறுபடியும் பிரச்சினையா?

IdlyVadai said...

அனானி

நேற்று ஒருவர் எனக்கு மெயில் அனுப்பியிருந்தார். ஏதோ ஒரு கருத்து குழுமத்தில் சேர்ந்ததற்கு நன்றி. ஆனால் நீங்க தானா ஒரிஜினல் இட்லி வடை என்று ?

இன்று எனக்கு idlyvadai2008 என்ற ஐடியிலிருந்து எனக்கு சாட் அழைப்பு வந்தது

இதன் விளைவே இந்த அறிவிப்பு :-)

Anonymous said...

உங்கள் வலைப்பதிவை பிஷிங் செய்தவன் பற்றி எழுத போகிறேன் என்று சில நாட்களுக்கு முன்னால் சொன்னீர்கள்? இன்னும் எளுதிகொண்டிருக்கிறீர்களா?

IdlyVadai said...

//உங்கள் வலைப்பதிவை பிஷிங் செய்தவன் பற்றி எழுத போகிறேன் என்று சில நாட்களுக்கு முன்னால் சொன்னீர்கள்? இன்னும் எளுதிகொண்டிருக்கிறீர்களா?//

நோ கமெண்ட்ஸ் !

Anonymous said...

அறிவொளி, தான் கலைஞர் ஜோதிட பலன்களைப் படிப்பதை ஜோதிடம்
பார்ப்பார் என்று கூறியதாக இன்னும்
அறிக்கை விடவில்லையா :)

Anonymous said...

இட்லிவடைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்/நலம்விரும்பிகள் போலும்,
அதனால் அந்தப் பெயரை விரும்பி பயன்படுத்துகிறார்கள். யாராவது தங்கள் குழந்தைக்கு இட்லிவடை என்று பெயர் வைத்துவிடப் போகிறார்கள், ஜாக்கிரதை :)

Unknown said...

நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அறிவொளி குறிப்பிட்டது கலைஞரை அல்ல. அந்த குறிப்பிட்ட மேடைக்கு தலைவராக இருந்தவரைத்தான் (பெயர் தெரியவில்லை - மலேசிய தமிழ் பேச்சாளர்). அதனைத் தொடர்ந்து அந்த மேடைத்தலைவர் அதற்கு விளக்கம் அளித்தவாறு - "நீங்கள் சொல்வதுபோலில்லை, நான் ஜோதிடம் பார்ப்பதில்லை, ஆனால் வாஸ்து என்கிற வஸ்துவின் மேல் சில நாட்களாக நம்பிக்கை உண்டென்று" கூறினார். தலைவர் என்று அம்மேடையில் கூறியது கலைஞரை அல்ல.

Anonymous said...

டோண்டுவின் பதிவொன்றில் இட்லிவடை என்ற பெயரில் கொமெண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. கொமெண்டு பஞ்சத்தில் வாடிபோயிருக்கும் அவரே இட்லிவடை பெயரில் கொமெண்டு போட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.

http://dondu.blogspot.com/2008/02/blog-post_14.html

Anonymous said...

இட்லிவடையின் பெயரில் தமிழ்நாடுடோல்க் களத்தில் அங்கத்தவரானவர் ஒரு பிரபல வலைப்பதிவாளர் என காற்றுவாக்கில் செய்தி அடிபடுகின்றது