பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 13, 2008

டி.ஆர்.பாலு வெளிநாட்டு விஜய மர்மங்கள்

கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி. ஆர். பாலு,
நவம்பர் 2004 பனாமா, மற்றும் கெய்ரோ ஆகிய இடங்களுக்கு போயிட்டு வந்துள்ளார்,
மொத்த செலவு 5,59,183. இந்த செலவை அரசாங்கத்திற்கும் அனுப்பியிள்ளார். இதில் தப்பில்லை, ஆனால் எதற்கு போனார் என்று பதிவு செய்யவில்லை, இது தப்பு.
அவரின் வெளிநாட்டு விஜயங்களும் அதன் மர்மங்களும்...

மர்மம் 1: அலுவலக நிமித்தமான இந்த விஜயத்தில், இவருடன் யாரும் உடன் செல்லவில்லை
மர்மம் 2: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் Dev Asish Bhattacharya என்பவர் "எதுக்குப்பா போனீர்கள்?" என்று கேட்டதற்கு கிடைத்த சின்ன பதில் - "Not known"
மர்மம் 3: வெளிநாட்டுக்கு போய்விட்டு வந்த அமைச்சர் வாடிக்கையாக "visit report" (விஜயம் பற்றிய அறிக்கை) ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் டி.ஆர்.பாலு அதை செய்யவில்லை.
மர்மம் 4: செலவுக்கான ரசீதுகளை தன் சொந்த இலாகாவிற்கு அனுப்பாமல் cabinet secretariat அனுப்பியுள்ளார்.
மர்மம் 5: இந்த மாதிரி வெளிநாட்டுக்கு மத்திய அமைச்சர் செல்ல வேண்டும் என்றால் அதற்கு பிரதமர் அனுமதி வேண்டும். இந்த "Not Known" விஜயத்திற்கு பிரதமர் ஏன் அனுமதி அளித்தார் ?
மர்மம் 6: அக்டோபர் 25-27, அமெரிக்கா சென்ற அமைச்சர் டி.ஆர்.பாலு, விஜயத்தின் அறிக்கையை சமர்பித்தார் ஆனால் அதுல் எதுவும் இல்லை. அதை பற்றி கேட்டால் கிடைக்கும் பதில் - "relevant file is not traceable"
மர்மம் 7: இதே மாதிரி செப்டம்பர் 2005 அரசாங்க செலவில் சிங்கபூர் சென்றுள்ளார், ஆனால் எதற்கு சென்றார் என்று தெரியவில்லை, அல்லது போயிட்டு வந்த அறிக்கையை சமர்பிக்கவில்லை.
மர்மம் 9: இந்த நியூஸை இன்னும் தமிழ் நாளிதழ்கள் கண்டுகொள்ள வில்லை.

சேது கால்வாய் வழியாக கப்பல்கள் போகலாம் என்று இவர் சொல்லுவதை எப்படி நம்பலாம் ? ராமர் தான் காக்க வேண்டும்.

( செய்தி ஆதாரம்: டைம்ஸ் ஆப் இந்தியா )

12 Comments:

Anonymous said...

"//இந்த நியூஸை இன்னும் தமிழ் நாளிதழ்கள் கண்டுகொள்ள வில்லை//"

மத்த மினிஸ்டரா இருந்தா ஆட்டோ வரும்!!
இருதார T.R.Baaaalu வோட இந்த நியூஸை கண்டுகிட்டா கப்பல் அல்லவா வரும்!!!

Arun said...

அடாடாடா... இவங்கள என்னப்பா பண்ரது... ஒன்னும் சொல்ரதுக்கே இல்ல..

//மர்மம் 2: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் Dev Asish Bhattacharya என்பவர் "எதுக்குப்பா போனீர்கள்?" என்று கேட்டதற்கு கிடைத்த சின்ன பதில் - "Not known"//
இன்னும் கொஞ்ச நாட்கள்ல "Not known"க்கு பதிலாக, “Cannot provide" ன்னு பதில் வரும்.. அப்போ தெரியும் நம்ம நிலைமை..

//மர்மம் 9: இந்த நியூஸை இன்னும் தமிழ் நாளிதழ்கள் கண்டுகொள்ள வில்லை//
தமிழக மீடியா போகும்பாதை தெளிவாக தெரிகிறது.

Anonymous said...

Recently Stalin also had gone missing for a few days and later on he was found to have gone abroad to some Far East country (Malaysia I think). Coupled with Baalu's hush-hush visit news, I feel there is a pattern to all these travels. May be it is a fit case for enquiry by the Enforcement Directorate under FEMA or even Interpol.

Reg. Tamil media's non-interest in this matter, all these so-called investigative journals like Junior Vikatan etc are capable of beating a dead snake only. They can't even put forth a probing query when it comes to questioning the TN politicians. Only Cho & Gurumurthy has got REAL GUTS & Backbone and they have proved that time & again.

Hariharan # 03985177737685368452 said...

//மர்மம் 9: இந்த நியூஸை இன்னும் தமிழ் நாளிதழ்கள் கண்டுகொள்ள வில்லை.//

நவம்பர் 2004ன்னா தமிழக மீடியா ஜெயேந்திரர் கதை புனைவதில் மும்முரமாய் இருந்தது.

2007 நவம்பரில் தமிழகமீடியா ஜெயேந்திரர் ஆடுபலியிட்டார்னு அடிச்சுவிடுவதில் பிஸியாக இருந்தது :-))


போலீஸ் புகழ் ஜெயலட்சுமி போன்ற மேட்டர்ன்னா சிறப்புப் பதிப்பு போட தமிழ் மீடியா தயாராகத்தான் இருந்தது!
இருக்கிறது! இருக்கும்!

கொள்ளையடிப்பதைக் கொள்கையாகக் கொண்ட கழகக் குஞ்சு டி.ஆர்.பாலு ஏதோ ரசீதெல்லாம் வேற சமர்ப்பித்திருக்காரா?

அட நமீதாவை / ச்சுரயாவை வச்சு ஒரு விழா எடுங்கப்பா இதுக்கு!

பனாமா /அமெரிக்கா செல்லும் வழியில் டிரான்ஸிட்டில் சோனியாவுக்கு டாக்குடரு பட்டம் தர பெல்ஜியத்தில் நடைபெற்ற விழாவுக்கு அரிய சிலைகளை அன்பளிப்பாகத்!!! தருவதற்காக எடுத்துக்கொண்டு ஒத்தாசையாக போனாரோ? கூட்டிக் கழிச்சு பாருங்க கூட்டணி (கொள்ளை) தர்மம் சரியா வரும்

நடந்தேறும் டே லைட் ராபரிக்கு மர்மம் 1-9 தேவையா ??

Anonymous said...

இந்த நியூஸை இன்னும் தமிழ் நாளிதழ்கள் கண்டுகொள்ள வில்லை
------------------------------
இந்த வார தெஹல்காவில் இரு உயர் போலிஸ் அதிகாரிகளின் வாரிசுகளுக்கு அண்ணா பல்கலைகழகத்தில் சிறப்பு கோட்டாவில் இடம் தரப்பட்டது
குறித்து ஒரு கட்டுரை இருக்கிறது.
இது போல் முதல்வரின் கோட்டாவில்தான் போதுமான
மதிப்பெண்கள் இல்லாத போதும்
வைரமுத்துவின் மகனுக்கு
பொறியல் இடம் கிடைத்தது,
அண்ணா பல்கலையில். இதை
அவரே சில வாரங்களுக்கு
முன் ஆ.விகடனில் தெரிவித்துள்ளார்.
தமிழக ஊடகங்கள்/வலைப்பதிவாளர்கள்
இது போன்ற செய்திகளில் ஆர்வம்
காட்டுவதில்லை.

Anonymous said...

http://www.hindu.com/2008/02/13/stories/2008021350520200.htm

IdlyVadai said...

http://www.hindu.com/2008/02/13/stories/2008021350520200.htm இருப்பது மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் துணை வேந்தர் சம்பந்தமான வழக்கு

Anonymous said...

டி ஆர் பாலு கால்வாய் தோண்ட ஆர்டர் கொடுத்த கமிஷணை வாங்கித் தானே நேரடியாகப் பல்வேறு அக்கவுண்ட்களில் போடச் சென்றிருக்கிறான். இதை சுப்ரமணியசாமிதான் ஆராய்ந்து கேஸ் போட்டு உண்மையைக் கொணர வேண்டும்

Anonymous said...

டி ஆர் பாலுவை தூக்கிவிட்டு அவரது இடத்தில் திருச்சி சிவாவை போடப்போவதாக வதந்தி

பனாமா போனது அங்குள்ள கணக்கு வழக்கில்லாத வங்கியில் பணம் போட.

Anonymous said...

http://www.hindu.com/2008/02/13/stories/2008021350520200.htm இருப்பது மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் துணை வேந்தர் சம்பந்தமான வழக்கு
-----------------------------------
ஆம், அதையும் பாலு மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்க்ளையும்
படித்தால் சில ஒற்றுமைகளைக் காணலாம்.

Anonymous said...

இந்தப் பதிவு இட்லிவடையின் பெங்களூர் கிளையிலிருந்து போடப்பட்டுள்ளது என பட்சி சொல்கிறது :-)

பெங்களூர் டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் மட்டுமே வந்த செய்தி இது. பொதுவாக டைஃம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியை அப்படியே நம்புவது அவ்வளவு நல்லதல்ல. அவர்கள் கடைந்தெடுத்த வியாபாரிகள்.

Anonymous said...

See dinamalar news also about Balu T.R.

It seems his KIng Chemicals busness is taking him to lot of places in world