டாக்டர் பட்டம் வாங்கியதற்கு எதிர்ப்பு: சோனியாவுக்கு நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் தயக்கம்.. இது எப்படி குற்றமாகும் என்று எனக்கு தெரிவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்கப்பா
காங்கிரஸ் தலைவர் சோனி யாவுக்கு கடந்த 2006ம் ஆண்டு பெல்ஜியம் அரசு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. சோனியா பெல்ஜியம் சென்று இந்த விருதை பெற்றார்.
சோனியா இந்த விருதை பெற்றது சட்ட விரோதமானது. எனவே அவரது எம்.பி. பதவியை பறித்து அவரை தகுதி இழப்பு செய்ய வேண்டும் என்று கேரளா மாநில வக்கீல் ஒருவர் தலைமை தேர்தல் கமிஷனில் மனு செய்தார்.
இந்த மனு மீதான ஆலோசனை நேற்று நடந்தது. தலைமை தேர்தல் கமிஷ னின் 3 அதிகாரிகளும் விவா தித்தனர். இதில் அவர்களுக் கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.
சோனியாவுக்கு இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதாப வேண் டாமாப என்பதிலும் அதிகாரி களுக்கிடையே குழப்பம் ஏற்பட்டது. எனவே நேற்று நடந்த கூட்டம் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
அரசியல் சாசன சட்டப்படி இந்த மனு மீது தேர்தல் கமிஷன் ஆலோசித்து ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண் டும். அந்த பரிந்துரை அடிப் படையில் ஜனாதிபதி உத் தரவு வெளியிடுவார். ஆனால் இந்த பிரச்சினையில் தொடக்கத்திலேயே தேர்தல் கமிஷன் அதிகாரிகள் முடிவு எடுக்க இயலாமல் தவிப் புக்குள்ளாகி இருக்கிறார்கள். இன்று அவர்கள் மீண்டும் கூடி பேச திட்டமிட்டுள்ளனர்.
(நன்றி: மாலைமலர் )
13/2/08 தினமலர் செய்தி
புதுடில்லி:பெல்ஜியம் நாட்டு விருதை பெற்ற பிரச்னையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு நோட்டீஸ் அனுப்புவது தொடர்பாக தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
பெல்ஜியம் நாட்டு சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டவர், எப்படி இந்திய எம்.பி., பதவியில் நீடிக்க முடியும்?' என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளதால், சோனியா பதவிக்கு ஆபத்து எழுந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா, கடந்த 2006ல் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பெல்ஜியம் நாட்டுக்கும் சென்றார். பெல்ஜியத்தில் வழங்கப்படும் மிக உயர்ந்த குடிமக்களுக்கான ஆர்டர் ஆப் லியோபோல்ட்' விருது, சோனியாவுக்கு வழங்கப்பட்டது. சகிப்புத் தன்மையுடைய சமுதாயத்தை உருவாக்கும் முயற்சிக்கு உதவி செய்ததற்காக, இந்த விருதை, சோனியாவுக்கு வழங்குவதாக பெல்ஜியம் அறிவித்தது.
இந்த விருதை பெறுவோர், பெல்ஜியம் நாட்டின் அரசியல் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்' என்ற உறுதி மொழி அளிப்பது வழக்கம். சோனியாவும் இதுபோன்று உறுதி மொழி அளித்துள்ளார்.இந்த விஷயம், கேரளாவைச் சேர்ந்த வக்கீல் ஒருவருக்கு தெரியவந்தது. பெல்ஜியம் நாட்டு சட்ட திட்டங்களுக்கு கட்டுப் பட்டவர், இந்திய பார்லிமென்டில் எப்படி உறுப்பினராக இருக்க முடியும்? எனவே, சோனியாவை எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என வலியுறுத்தி, ஜனாதிபதியிடம் மனு அளித்தார்.
இந்த மனு, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்டது.இது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி, தேர்தல் ஆணையர்கள் நவீன் சாவ்லா, குரேஷி ஆகியோர் நேற்று முன்தினம் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த பிரச்னையில், சோனியாவுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது தான், இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இதுபற்றி தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:இது தொடர்பாக விளக்கம் கேட்டு, சோனியாவுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பக் கூடாது என, மற்ற இரு தேர்தல் ஆணையர்களிடமும், தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி வலியுறுத்தியுள்ளார். நோட்டீஸ் அனுப்புவதில் தவறு எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், மற்றொரு தரப்பு இதை மறுத்துள்ளது.
`இதுபோன்ற விருதுகளை ஏற்கனவே, முன்னாள் அமெரிக்க அதிபர் மற்றும் யுகோஸ்லாவிய தலைவர் ஆகியோருக்கு வழங்கப் பட்டுள்ளன. இது முட்டாள் தனமான குற்றச்சாட்டு. இந்த புகாரை அடிப்படையாக வைத்து, சோனியாவுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை' என மற்றொரு தரப்பு வலியுறுத்தியுள்ளது.
இதனால், சோனியாவுக்கு நோட்டீஸ் அனுப்பும் பிரச்னையில் தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. விரைவில், தேர்தல் ஆணையர்கள் மீண்டும் கூடி, இதுபற்றி ஆலோசனை நடத்தவுள்ளனர்.இவ்வாறு தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
சோனியாவுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்தால், அவருடைய எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.தேர்தல் ஆணையர்களில் ஒருவரான நவீன் சாவ்லா, பாரபட்சமாக செயல்படுவதாக பா.ஜ., ஏற்கனவே குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், சோனியா நோட்டீஸ் விவகாரத்தில், தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு எழுந் துள்ளது. இதனால், நவீன் சாவ்லாவிற்கு எதிரான, தனது பிரசாரத்தை பா.ஜ., மீண்டும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, February 12, 2008
டாக்டர் பட்டம் வாங்கியதற்கு எதிர்ப்பு: சோனியாவுக்கு நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் தயக்கம்
Posted by IdlyVadai at 2/12/2008 12:00:00 PM
Labels: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
இது என்ன கூத்து?
பொது நல வழக்கு, பொது நல மனு - இவற்றை மிக அதிகமாக தவறாக பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள் தான் என நினைக்கிறேன். கௌரவ முனைவர் பட்டமெல்லாம் நம்மூரில் ரூபாய்க்கு ரெண்டு என விற்கப்படுகையில், கொஞ்சம் வித்யாசமாக பெல்ஜியம் சென்று இந்த விருதை சோனியா வாங்கியதில் என்ன தவறு? இதற்கெல்லாம் ஒரு மனு, ஆலோசனை, முடிவு. எல்லாம் நம் தலையெழுத்து.
Dear Idly vadi,
You heading is incorrect.
It was not the honourable Doctor given by the Belgian university, but for the 'Order of Leopold - Grand Officer'given by the Belgian Govt in Nov 2006.
The issue is, "receiving of the Belgian honour amounted to owing allegiance to the Constitution of that country". (A PIL by Kerala Advocate)
So naturally her postion of holding a Member of Parliament under our Indian Constitution is under a (Big?) question.
Further Note:
In that honour receiving cermony amomg her lengthy speech, she said
"This is the first time that so many rare priceless sculptures have been taken abroad from among the treasures housed in museums all across India." (to display in Belgium for a 4 month long festival of India).
அந்த சிலை எல்லாம் நம்ம ஊருக்கு பத்திரம்மா திரும்பியச்சா?
To view what she received
http://www.orderofleopold.be/en/cat01.htm#grandofficier
Aravind
>>>>
This is the first time that so many rare priceless sculptures have been taken abroad from among the treasures housed in museums all across India."
>>>>>
ithu ellam romba too much
itha kaekurathukku aalae illaya..
ippovae ippadi .. ithula intha amma PM aachuna naatayae vithudum poola...
makkalae ushaar...
அரவிந்த தகவலுக்கு நன்றி.
Dear Idly Vadai,
A news coverage on issuing notice to Mrs. Sonia Gandhi has come in Dinamalar explaining the reason. Kindly update in Idlivadai.
Neelanarayanan
Post a Comment