பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 11, 2008

ரிலையன்ஸ் பவர் பங்கு ஏமாற்றம்


எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிய ரிலையன்ஸ் பவர் பங்கு பழிவாங்கியது !


அனில் திருபாய் அம்பானி குழுமத்தை சேர்ந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனம் முதல் முறையாக பங்குகளை வெளியிட்டது.

ரிலையன்ஸ் பவர் பங்குகள் எந்த விலையில் பட்டியலிடப்படும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு இருந்தது. பங்கு வெளியீட்டின் போது இதன் பங்குகள் அதிகபட்சமாக ரூ.450 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ரூ.100 முதல் 150 வரை அதிகமாக பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரிலையன்ஸ் பவர்பங்கு அதன் விற்பனை விலையை விட குறைவாக ரூ.430க்கு பட்டியலிடப்பட்டது.

பின்னர் இந்நிறுவன பங்குகள் 445 ரூபாய் அளவில் வர்த்தகம் செய்யப்பட்டன.
இதனிடையே சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகத்தில் 230 புள்ளிகள் சரிந்தது.

முன்னதாக அனில் அம்பானி, மணியடித்து ரிலையன்ஸ் பட்டியலிடுவதை தொடங்கி வைத்தார். இதனிடையே தேசிய பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் பவர் பங்குகள் ரூ.530க்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

ரிலையன்ஸ் பவர் பங்கு வெளியீடு இந்திய மூலதன சந்தையில் முக்கிய நிகழ்வு என்று அனில் அம்பானி கூறியுள்ளார்.

3 Comments:

அறிஞர். அ said...

சென்னைக்கு அருகில் தான் நிலம் வாங்கியிருக்கிறார்களாமே? நிலம் மட்டும் தான் வாங்கியிருக்க அதன் கட்டுமானப்பணிகள கூட தொடங்க இன்னும் மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என்று பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் தெரிவித்தார்.

manipayal said...

பங்கு மார்கெட்டில் 21 வருடமாக உள்ள நான் இன்னுமொரு தகவலும் தருகிறேன். அனில் அம்பானியும் அவருக்கு நெருங்கிய சிலரும் இந்த ரிலையென்ஸ் பவர் பங்குகளை பெற ஒரு பங்குக்கு(per share) 17 ரூபாய்தான் கொடுத்துள்ளார்கள்.

manipayal said...

முதல் முறை உங்கள் வலைக்கு வருகிறேன். பதிவுகளும் லேஅவுட்டும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.