பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 07, 2008

நடிகர் குணால் தற்கொலை

தமிழ் திரையுலகில் "காதலர் தினம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் குணால் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை தற்கொலை செய்து கொண்டார்.

ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில் கதிர் இயக்கத்தில் வெளியான "காதலர் தினம்' என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகில் கதா நாயகனாக அறிமுகமானவர் குணால். அதைத் தொடர்ந்து "வருஷமெல்லாம் வசந்தம்', "புன்னகை தேசம்', "அற்புதம்' உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
அவருக்கு (வயது 27). திருமணமான அவருக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தை களும் இருக்கிறார்கள்.

அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

1 Comment:

manipayal said...

குனால் பற்றிய சில தகவல்கள், சில திருத்தங்கள்

அவரின் வயது 31. அவர் மனைவியோடு சில வருடங்களாக வாழவில்லை. குழந்தைகளையும் பார்க்க அனுமதி அளிக்கப்படவில்லை. இவையே அவை மன உளைச்சலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஒரு மும்பை நடிகையுடன் வாழ்ந்து வந்தார். அந்த நடிகையே முதலில் குனால் தூக்கில் தொங்குவதை பார்த்து போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.