பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 06, 2008

திமுக - காங்கிரஸ் பனிப்போர் ?

விடுதலைப்புலிகள் பற்றி ஜெ சட்டசபையில் பேசிய போது, காங்கிரஸ் கட்சி ஒண்ணும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்க வைத்தார்....

காங்கிரஸை பொறுத்தவரை தர்மசங்கடமான நிலைமை. விவகாரம் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் பற்றி இருந்ததால், எழுந்து நின்று எதையாவது சொல்லப்போக... காங்கிரஸ் கட்சி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு என்று யாரும் சொல்லிவிடக்கூடாதே என்ற பயம் எங்கள் எல்லாருக்கும் இருந்தது. ஜெயலலிதா மிகச் சாமர்த்தியமாக அந்த பிரச்னையைக் கையில் எடுத்து காங்கிரஸ் உறுப்பினர்களை மௌனமாக இருக்கச் செய்துவிட்டார்..


என்று பீட்டர் அல்போன்ஸ் பெருமையாக கூறுகிறார்.

காங்கிரஸ் கட்சி சும்மா இருந்ததால் கலைஞர் கொஞ்சம் அப்செட் ஆனார்.
பின்னர்...

நெல்லையில் கிருஷ்ணசாமி, சிதம்பரம், இளங்கோவன் பகிரங்கமாக திமுக மேல் குற்றம் சாட்டிபேசினார்கள். அடுத்த நாள் "ஆட்சியை இழக்கவும் தாங்கள் தயாராக இருப்பதாக" கலைஞர் அறிக்கை விட்டார். உடனே கிருஷ்ணாசாமி நாங்க திமுகவை விமர்சிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

ஜூவிக்கு அவர் அளித்த பேட்டியில்

"தேர்தலுக்கு இன்னும் நாட்கள் நிறைய இருக்கிறது. அதனால், இப்போதே அது பற்றியெல்லாம் எதுவும் சொல்ல முடியாது. கூட்டணி குறித்தெல்லாம் முடிவு செய்வது, எங்கள் தலைவி அன்னை சோனியாதான். எல்லாருக்கும் ஒன்றை மட்டும் நாங்கள் உறுதியாக சொல்லமுடியும். தமிழகத்தைப் பொறுத்த வரையில், காங்கிரஸ் தயவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது"
என்கிறார்.


அதே சமயம் எங்களுக்கும் தி.மு.க-வுக்கும் எந்த நெருடலும் இல்லை என்றும் சொல்லுகிறார்.

'விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்துவேன்' என்று வீரமாக பேசிய திருமாவளவன் மீது கலைஞர் நடவடிக்கை எடுக்காமல் பாசத்துடன் இருப்பது பற்றி காங்கிரஸ் மேலிடத்துக்கு நியூஸ் போயிருக்கும்.

சமிபத்திய நிகழ்வுகளை பார்த்தால் ஜெ காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் தன் உறவை புதுபிக்க விரும்புவதாகவே தெரிகிறது. காங்கிரஸும் எல்லா வாய்ப்புக்களையும் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. விஜயகாந்த் கூட கூட்டணி வைத்துக்கொண்டாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.

காங்கிரசாரின் போக்கு குறித்து கட்சி மேலிடத்தில் திமுக தலைமை புகார் செய்ததாக கூறப்படுகிறது. மத்தியில் கூட்டணி அரசுக்கு எந்த நெருக்கடியும் வந்து விடக்கூடாது என்று கருதிய காங்கிரஸ் மேலிடம், திமுக தங்களுடைய முக்கியமான கூட்டணி கட்சி என்றும், யாரும் அக்கட்சியை விமர்சிக்கவில்லை என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியிருந்தார்.

இன்று காலை கிருஷ்ணசாமி டெல்லி சென்றிருக்கிறார். திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கான காரணம் குறித்து கிருஷ்ணசாமியிடம் கட்சி மேலிடம் விளக்கம் கேட்கும் என்று கூறப்படுகிறது.

போய்விட்டு வந்து என்ன விளக்கம் சொல்லுவார் என்று எல்லோருக்கும் தெரியும்

3 Comments:

Anonymous said...

இட்லி வடை

ரொம்பவும் அப்பாவியா இருக்கீங்க. காங்கிரஸ் நிஜமாகவே விடுதலைப் புலிகள் ஆதரவைக் கண்டிக்கிறார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அட போங்க சார், ஒரு வேளை அப்பாவி காங்கிரஸ்காரன் (இன்னும் காந்தி கட்சி என்று நினைப்பவன்) எவனாவது தி மு க மேல் புலி ஆதரவுக்காக உண்மையான கோபம் கொண்டு இருக்கலாம். காங்கிரஸ்காரர்களுக்கு உண்மையிலேயே விடுதலைப் புலி மேல் ஆத்திரம் இருந்தால் கருணாநிதி கூட கூட்டு வைத்திருப்பார்களா? கருணாநிதியும் ராஜீவ் கொலையில் உடந்தையாளர்தானே? எப்படிப் பட்ட ஒரு பத்தினி தன் கணவனைக் கொன்றவர்களுடன் கூட்டுச் சேருவாள்? ஆக சோனியாவுக்கும் ராஜீவ் கொலையில் பங்கு இருக்கிறது என்று சு சுவாமி சொல்லும் குற்றசாட்டில் உண்மை இருப்பது அவர் கருணாநிதி கூட கூட்டு வைப்பதில் இருந்தே புரிந்து போய் விட்டது.

இப்பொழுது காங்கிரஸ்காரர்கள் போடுவது மாய்மாலம், டிராமா, மந்திரி பதவி வாங்க நடத்தும் பேரம். கருணாநிதியின் உண்மையான கூட்டாளியான சோனியா இவர்களை அமைதிப் படுத்தி விடுவார். நான் கேட்ப்பதற்குக் காங்கிரஸ்காரர்கள் பதில் சொல்லட்டும்.

1. சோனியா ஏன் முருகன் தூக்குத் தண்டனையில் தலையிட்டார்? யார் அந்த உரிமையை அவருக்குக் கொடுத்தது. பலியானது அவரது கணவர் மட்டும் அல்ல, போலீஸ்காரர்களும் பொது மக்களும் கூட, அவர்களிடம் கேட்டார்களா முருகனுக்குத் தூக்கை நிறுத்தலாமா வேண்டாம் என்று? சோனியாவுக்கும் புலிகளுக்கும் இந்த விஷயத்தில் நடந்த உடன்பாடு என்ன?

2. விறு விறுப்பாகத் தேர்தல் நடந்த சமயத்தில் சரியாக ராஜீவ் கொலை நடக்கும் நாளிலும் அதன் முந்திய நாளிலும் தி மு க வின் அத்தனைப் பொதுக்கூட்டங்களும் ரத்து செய்யப் பட்ட மர்மம் என்ன? என்ன உடந்தை?

3. ராஜீவ் கொலையாவதற்குச் சரியாக ஒரு நாள் முன்பாக கருணாநிதியின் வீட்டு ஒட்டு மொத்தக் குடும்பங்களும் நாய் குட்டிகள் உட்பட கோவாவிற்குப் போய் ஒளிந்து கொண்டதன் மர்மம் என்ன? யாரவாது பீக் எலக்ஷன் டையத்தில் வெக்கேஷன் போவார்களா?

4. பத்மநாபாவைக் கொன்ற சிவராசனைக் கருணாநிதி எளிதாக இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் சுதந்திரமாக வந்து போக அனுமதித்த மர்மம் என்ன?

5. டி ஆர் பாலுவின் கெமிக்கல் கம்பெனி டாங்கரில் சிவராசன் கடத்தப் பட்டதன் மர்மம் என்ன?

6. இப்படி வெளிப்படையாக ராஜீவ் காந்தி கொலையில் உடந்தையாக இருந்த கருணாநிதியின் கொலைகாரக் கும்பல்களுடன் சோனியா கூட்டு வைத்த ரகசியம் என்ன? கொலையும் செய்வாள் பத்தினி என்பது உண்மைதானா?

7. இப்பொழுது விடுதலைப் புலிகள் ஆதரவை எதிர்க்கும் காங்கிரஸ் கருணாநிதி கவிதை பாடிய பொழுதும், புலிகளுக்கு தானே எழுதி சினிமா தயாரித்துக் கொடுத்த பொழுதும் மசுத்தைப் புடுங்கிக் கொண்டிருந்ததா?

8. ஜெயின் கமிஷனில் மிகத் தெளிவாகக் கருணாநிதியின் உடந்தை நிரூபிக்கப் பட்ட பின்பும் கருணாநிதியுடன் கூட்டு வைத்த சோனியா எப்படிப் பட்ட ஒரு மனைவியாக இருக்க முடியும்? அப்படிக் கூட்டு வைத்த காங்கிரஸ்காரர்கள் எப்படிப் பட்ட மனிதர்களாக இருக்க முடியும்?

ஆக காங்கிரஸ் போடுவது டிராமா. கூட்டுக் கள்வாணிகள். இளிச்சவாயர்கள் இவர்களை நம்பும் பொது மக்களே. விடுதலைப் புலிகள் போதை மருந்தை விற்றுக் கொடுக்கும் பணம் இந்த அரசியல்வாதிகள் அத்தனை பேர் பைகளிலும் புரள்கிறது. தமிழ் நாட்டையும் இந்தியாவையும் ஒட்டு மொத்தமாக அழிக்காமல் போக மாட்டார்கள் இந்த காங்கிரஸ், கருணாந்தி கயவாளிக் கூட்டங்கள்.

Anonymous said...

யாரோ அனானி ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.

உண்மையில் நரசிம்மராவின் மீது சோனியாவின் கோபமே ராஜீவ் கொலைக்கு பிறகு பிரபாகரனை தொடரவில்லை என்பதுதான். அதனால்தான் இந்த முறை ஆட்சிக்கு வந்ததுமே தீவிரமாக இலங்கைக்கு ஆதரவு வாரி வழங்கப்பட்டுள்ளது. திமுகவுடன் கூட்டணி வைத்து தொலைத்ததனால், வெளியே சொல்ல முடியவில்லை. அவ்வளவுதான். அவ்வ்வப்போது முருகன் என்று மதர் தெரசா மாதிரி நாடகம் வேறு ஆடவேண்டியுள்ளது.
ஏராளமான பண உதவி, ராணுவ உதவி இலங்கையில் கொட்டப்பட்டுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா படியுங்கள். எவ்வளவு ரகசியமாக இலங்கைக்கு உதவி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரியும்.

இன்னும் எவ்வளவுநாள் ஆட்சி என்று தெரியாததால், உடனே புலிகள் ஒழித்துக்கட்டப்படவேண்டும் என்பதில் இலங்கை அரசை விட தீவிரமாக இருப்பது சோனியா.

சமீபத்திய இலங்கை அரசு வெற்றிகள் சும்மா வரவில்லை. புர்ரதா?

Anonymous said...

புலிகள் எப்போதுமே தப்புக்கணக்கு போடுவதில் நிபுணர்கள். உலகெங்கும் வாழும் ஈழ மக்கள் இவ்வளவு ஆதரவு கொடுத்தும் அரசியல் ரீதியில் தவறான ஆட்களுடன் கூட்டணி வைத்ததாலும், ராஜதந்திர ரீதியில் தொடர்ந்து நல்லவர்களை கொலை செய்து வருவதாலும், அவர்களால் வெற்றி பெறவே முடியாது.

சோனியா ஆளும் காங்கிரஸ், அதோடு கூட்டணி வைத்திருக்கும் வைகோ, திருமா, திராவிடர் கழகம் கூட்டணியில் எப்படி உருப்பட முடியும்? சோனியா என்ன லூஸா? காங்கிரஸ் என்ன லூஸா? அந்த அம்மா வெளிப்படையாக புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்க முடியுமா? மக்கள் என்ன நினைப்பார்கள்? முதல் அனானி சொன்னதுபோல, கொலையும் செய்தாள் பத்தினி என்று நினைக்கமாட்டார்களா?

சோனியா ஆளும் காங்கிரஸ் எப்போதுமே புலி எதிர்ப்பில்தான் இருக்க முடியும். அது அரசியல் கட்டாயம். ஆகவே வேறுவழியின்றி பாஜகவுடன் நெருங்குவதுதான் புலிகளுக்கு ஒரே வழி. ஆனால், அவர்கள் கூட்டு சேர்ந்திருக்கும் திக, திமுக அந்த கூட்டணியையும் உடைக்கும். வெறும் திமுக ஆதரவு மட்டும் போதுமா தனி ஈழத்துக்கு?

பாஜக மத்தியில் ஆளும்போதுதான் புலிகள் ஓரளவுக்கு சொந்த அரசை நடத்தமுடிந்தது என்று யோசித்துபார்க்கவேண்டும்.

இன்றைக்கு புலி ஆதரவாளர்கள் பாஜக ஆதரவாளர்களாக இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால், திக கூட்டணியால் மதிகெட்டு பாஜகவை எதிர்த்து உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து இந்தியாவில் ஆட்சிக்கு வரும் பாஜக புலிகளையும் புலி ஆதரவாளர்களையும் முன்னை போல அரவணைக்காது.

இந்தியாவின் இரண்டு பெரிய கட்சிகளையும் பகைத்துக்கொண்ட புலிகளும் புலி ஆதரவாளர்களும் முட்டாள்கள்.