பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 04, 2008

விடுதலைப்புலிகள் பற்றி சிதம்பரம், இளங்கோவன், கிருஷ்ணசாமி, கலைஞர்

விடுதலைப்புலிகள் பற்றி ப.சிதம்பரம், இளங்கோவன், கிருஷ்ணசாமி பேச்சு...
இவர்களுக்கு கலைஞர் ரெஸ்பான்ஸ்.


ப.சிதம்பரம்
விடுதலைப்புலிகள் இயக்கம், தடை செய்யப்பட்ட இயக்கம். 1984-ல் ராஜீவ்காந்தி இலங்கை சமாதானம் குறித்து பேசும்போதெல்லாம் நானும் உடன் இருந்திருக்கிறேன். சென்னையில் நள்ளிரவு வேளையில் நானே தனியாக கார் ஓட்டி பிரபாகரன் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று பேசியிருக்கிறேன். இலங்கையில் அமைதி திரும்பத்தான் ராஜீவ் காந்தி நடவடிக்கை எடுத்தார்.

இலங்கையில் ஒரு பேச்சுவார்த்தை நடக்கும்போது ஒரு ராணுவ வீரன் ராஜீவ் காந்தியின் தோளில் அடித்தான். இலங்கை தமிழருக்காக அவர் அதை தாங்கிக்கொண்டார். அமைதி ஏற்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளை நாங்கள் மறக்கவில்லை. விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுகிறவர்களுக்கு அந்த வரலாறு தெரியாது. தமிழ் மக்கள் மீது ராஜீவ் காந்தி வைத்திருந்த எல்லையில்லா அன்பு அவர் கொலை செய்யப்படும் அளவுக்கு கொண்டு சென்றுவிட்டது.

அவரது படுகொலைக்கு காரணமான, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக நிதி திரட்டுதல், உதவி செய்தல், பணம் அனுப்புதல் போன்ற செயல்கள் நடந்து வருகிறது. இந்த செயல்கள் எல்லாம் மத்திய அரசுக்கு தெரியாமல் இல்லை. தமிழக அரசுக்கு உளவுத்துறை என்ன தகவல்கள் தருகிறார்களோ அதேப்போல மத்திய அரசுக்கும் உளவுத்துறையினர் தகவல் தருகிறார்கள்.

எனவே கலைஞர் அவர்களே இந்த பிரச்சினையில் உங்களுக்கே உரிய சாதுர்யத்துடன், கவனத்துடன் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று கேட்கிறேன். மேலும் வளர்ந்து விடாமல், தீவிரம் அடைந்து விடாமல் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


இளங்கோவன்

ராஜீவ் காந்தியை கொன்றவர்களை மறக்க வேண்டுமாம், இங்கே ஒரு உருவம் கேட்டுக்கொண்டு இருக்கிறது.

110 கோடி மக்கள் புகழ்ந்து கொண்டு இருக்கும் தலைவரை கொன்றவர்களுக்கு இங்கு டிஜிட்டல் பேனர்கள் வைக்கிறார்கள். ராஜீவ் காந்தியை கொன்ற விடுதலைப்புலிகளின் நடமாட்டத்தை தமிழ்நாட்டில் அறவே நிறுத்த வேண்டும். அவர்களுக்கு ஆதரவு தருபவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

கிருஷ்ணசாமி

தமிழகத்திற்கு வந்த ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் கொன்று விட்டனர். 17 ஆண்டுகள் ஆகிவிட்டதே என்று கூறுகிறார்கள். நூறு ஆண்டுகள் ஆனாலும் எங்களது தலைவரை கொன்றவர்களை எக்காரணம் கொண்டும் மன்னிக்க மாட்டோம். விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களையும் மன்னிக்க மாட்டோம். திருமாவளவன் விடுதலைப்புலிகளுக்கு வக்காலத்து வாங்குகிறார். அதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவர் மீது முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்கள் மூலம் கேட்டு கொள்கிறோம்.

கலைஞர்
ஏதோ தமிழ்நாடு விடுதலைப் புலிகளின் வேட்டைக் காடாக ஆகி விட்டது என்ற உணர்வில் காங்கிரசாரும் பேசுகிறார்கள். இதற்காக வருத்தப்படுகிறேன். நேற்று காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, ப.சிதம்பரம் உள்பட பலரும் நாகர்கோ வில் கூட்டத்தில் பேசும்போது தமிழ்நாடு விடுதலைப்புலி களின் வேட்டைக்காடாக மாறி விட்டது போல் பேசி இருக்கிறார்கள். இது மிகவும் வருத்தப்படக் கூடியது.

இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் அதை தடுத்து நிறுத்த முதலில் நிற்பது நான்தான். காங்கிரஸ் மட்டு மல்ல தி.மு.க., பா.ம.க., திரா விடர் கழகம் ஆகியோருக்கும் அந்த பொறுப்பு உண்டு. யார்-யார் தி.மு.க. தோழமை கட்சியாக உள்ளார்களோ அவர்களுக்கும் இந்த பொறுப்பு உண்டு. இவர்கள் கூட்டணி யில் இருந்து கொண்டு தான் பேசுகிறார்களா? என்ற மாச்சரியத்தை ஏற்படுத்தும் விடுதலை சிறுத்தைகளுக்கும் அந்த பொறுப்பு இருப்பதாக கருதுகிறேன்.

அதனால் தான் கூட்டணி யில் உள்ளோரிடம் சில கருத்து வேறுபாடு தோன்றினாலும் அவர்களும் இந்த விஷயத்தில் திருந்த வேண்டும் என்? தற்காக அறிவுரை கூறி இருந்தேன். தமிழ்நாட்டில் யார் தேச விரோதமாக ஈடுபடுபட்டாலும் சரி, சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்டாலும் சரி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த சட்ட நடவடிக்கை களுக்கு அவர்கள் உள்ளாவார் கள் என்று சட்டசபையிலேயே அறிவித்தேன். அதை சட்ட மாக்குவோம் என்று அமைச்சர் துரைமுருகனும் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன் பிறகும் இன்னும் விடுதலைப்புலிகளுக்கு கருணாநிதி இங்கு இடம் கொடுத்து விட்டார் என கூறு கிறார்களே. இதை நினைக்கும்போதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது.

விடுதலைப்புலிகளை ஆதரித்ததில் எம்.ஜி.ஆரா, கருணாநிதியா என்பதற்கு எம்.ஜி.ஆருக்கு நிகர் இதில் யாரும் கிடையாது.

கருணாநிதிக்கு ஒரு துரும்பு கூட விடுதலைப்புலிகள் மீது ஆதரவு கிடையாது என்று ஆங்கில பத்திரிகையிலேயே பேட்டி கொடுத்தவர் சட்ட சபையில் பேசும்போது நீ நாட்டை காட்டிக் கொடுக்கிறாய் என்று பேசினார். இதை கேட்டதும் அங்கி ருந்த காங்கிரஸ் உறுப்பினரான பீட்டர்அல் போன்ஸ் எழுந்து இல்லை என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும். நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் ப.சிதம் பரமும், இது போன்று தான் பேசுகிறார். நான் அவரது செய்தியை காலையில் பார்த்ததும் ப.சிதம்பரத்துக்கு போன் செய்தேன்.

ஏதோ தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு இருப்பது போல் பேசி இருக்கிறீர்களே. இது சரியில்லை என்று நான் சொன்ன போது அவர் நீங்கள் சரியாகத்தான் நடவடிக்கை எடுக்கிறீர்கள். கையாளு கிறீர்கள் என்று பதில் அளித்தார்.

நான் அவருக்கும் சாதாரண மக்களுக்கும் விஷயம் புரிய வேண்டும் என்பதற்காக இதுவரை விடுதலைப் புலிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரிக்கிறேன்.

கடந்த 1 ஆண்டு காலத்தில் தி.மு.க. அரசு பதவிக்கு வந்த தில் இருந்து இதுவரையில் விடுதலைப்புலிகளுக்காக பால்ரஸ் குண்டுகள் அலு மினிய கட்டிகள் வெடி பொருட்கள் கடத்தியதாக கடந்த 15-5-2006 முதல் 30-1-2008 வரை பதிவு செய்யப்பட்ட வழக்கு 12. இந்த வழக்கில் கைது செய்யப் பட்டவர்கள் 103 பேர். இதில் விடுதலைப்புலிகள் 13 பேர் ஆவர்.

(இவ்வாறு அறிவித்து விட்டு கைதான விடுதலைப் புலிகளின் பெயர் விவரங்களை வாசித்தார்)

இது மட்டுமல்ல விடு தலைப்புலிகளின் ஆதரவாளர் கள் 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இலங்கை தமிழர்கள் 31 பேர். இந்திய தமிழர்கள் 61 பேர்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் 40 பேர் சிறையில் உள்ளனர். இதில் 3 பேர் விடுதலைப்புலிகள். எனவே இந்த கணக்கு எங்களிடம் உள்ளது. இது மத்தியில் உள்ள உளவுத் துறைக்கு தெரியாமல் இருக்காது. அதுவும் நிதி அமைச்சர் பொறுப்பில் உள்ள ப.சிதம்பரத்துக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை.

யார்-யார் தேச விரோத காரியங்களில் ஈடுபட்டாலும் தி.மு.க. அரசு அவர்களை தி.மு.க. அரசு மன்னிக்காது. மன்னிக்காது, மன்னிக்காது என 3 முறையல்ல 30 முறை, 300 முறை கூட சொல்லுவேன். இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை, ஒற்றுமையை காப்பாற்ற இந்தியா வளமான நாடாக இருக்க அந்த வளத்தை மேலும் மேலும் வலுப்படுத்த திராவிட நாடு கொள்கையை கைவிட்ட தலைவர் அண்ணா. அவரது வழியில் என்றும் செயல்படும் நமது ஆட்சியிலும் தேச துரோகத்துக்கு இடம் இல்லை.

ஆனால் எங்கள் மீது இப்படி ஒரு பழியை போட்டுத்தான் ஆட்சி மாற்றம் வரும் என்றால் அந்த ஆட்சி மாற்றத்தை சந்திக்க தயார். எங்கள் மீது வீண் பழி சுமத்தாதீர்கள். இது நாட்டுக்கு நல்லதல்ல. தமிழக மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். அவர்களிடம் எந்த சஞ்சலத்தையும் உண் டாக்க வேண்டாம்.

மக்களின் வாழ்க்கை முன் னேற்றத்துக்காக அன்றாடம் ஒரு திட்டம் அறிவித்து செயல் படுத்துகிறோம். அதற்காக மத்திய அரசும் உதவுகிறது. தனி சலுகை அளித்தும் செம் மொழிக்கு உதவுகிறார்கள். எனவே யாரோ சிலர் சதிகா ரர்கள் செய்யும் சூழ்ச்சிக்கு அரசியலில் தெளிவு பெற்ற வர்கள் பலியாகக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன். பலியாக மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

1 Comment:

Anonymous said...

இலங்கையில் ஈழ மக்களுக்கு அமைதியை கொண்டுவந்தது பாரதிய ஜனதா கட்சிதான்..

அதனைத்தான் தமிழகத்து ஈழ மக்கள் ஆதரவாளர்கள் தினந்தோறும் திட்டி வருகின்றனர்.

இதோ..

India's Peace and War
[TamilNet, Wednesday, 20 February 2008, 01:24 GMT]
The now defunct Ceasefire Agreement in Sri Lanka was mooted and shadow-managed by the BJP government, according to Indian journalist, M.R. Narayan Swamy. Wickramasinghe and Pirapaharan were aware of this top secret mission of India, supervised by Vajpayee's Advisor Brajesh Mishra, but not J.N. Dixit who succeeded him with the change of government in May 2004. Dixit had to learn it from Wickramasinghe. The CFA signed in February 2002 was unilaterally withdrawn by the Sri Lanka government in January 2008. Swamy's revealing and the chronology of events implicate the Congress establishment and the ego war of the Chanakyas (Machiavellis) of New Delhi in belligerency returning to Sri Lanka.

Brajesh Mishra, son of a former Chief Minister of Madhya Pradesh comes from the background of Indian Foreign Service. He served as India's Ambassador to China. He became the Principal Secretary to the Prime Minister and National Security Advisor during Vajpayee's term as PM.

J.N. Dixit and M.K. Narayanan, both of Malayalee origins and retired from the service, were brought into the apex body of national security immediately after the Congress government came to power in May 2004. Dixit was High Commissioner of India in Sri Lanka during IPKF times. He retired as the Foreign Secretary of India. When Dixit, who held the title of the National Security Adivsor died, M.K. Narayanan was appointed to that post in January 2005. He was earlier the chief of the Intelligence Bureau of India (IB), from which he retired in 1992.


M. R. Narayan SwamyMr. Narayan Swamy's exclusive article to the Indo-Asian News Service (IANS) was released on Sunday. Narayan Swamy, who previously worked for United News of India, the AFP and The Strait Times in Singapore is now based in New Delhi and works with the IANS. He has authored two books on LTTE and its leader V. Pirapaharan, 'Tigers of Lanka: From Boys to Guerillas' (1994) and 'Inside An Elusive Mind - Prabhakaran' (2003).

The full text of his article follows:

India's covert role in Sri Lanka's ceasefire

By M.R. Narayan Swamy, New Delhi, Feb 17 (IANS)

Now that Sri Lanka has jettisoned the Ceasefire Agreement (CFA) with the Tamil Tigers, one of India’s best kept secrets can be revealed: it was New Delhi that quietly authored the process that led to the Norway-brokered pact. The dominant thinking in India and Sri Lanka, and even elsewhere, is that New Delhi has been a distant watcher to the goings on in the war-hit island barring its interactions with Colombo and countries like Norway as part of a “hands off” policy sparked off by former prime minister Rajiv Gandhi’s 1991 assassination.

While it is true that India took a detached view of the ethnic conflict in the aftermath of Gandhi’s killing, things changed shortly after Atal Bihari Vajpayee took office in 1998 at the head of a non-Congress coalition.

By 1999, the Indian state had concluded after years of study that there could never be a military winner in Sri Lanka: neither the government nor the Liberation Tigers of Tamil Eelam (LTTE) would reign supreme although at that stage the rebels appeared to hold an upper hand.

The Indian government then took the view that it was time for a major peace push in Sri Lanka.

Supervised by National Security Advisor Brajesh Mishra, the Indian establishment got into the act of ushering in peace in Sri Lanka, with just one rider: everything would be done away from media glare. Only a few would be in the know of what was being planned.

Then Sri Lankan president Chandrika Kumaratunga was waging a “war for peace” against the LTTE that steadily lost steam as the Tigers hit back with a military precision that stunned the world.

The stalemate was a continuation of what had happened earlier. The Indian military intervention in 1987-90 had run aground; the fighting between 1990 and 1994, mostly during Ranasinghe Premadasa’s presidency, led to no decisive result; and the war during Kumaratunga’s presidency was going the same way.

The Indian establishment, however, felt that Kumaratunga was incapable of making peace. What Sri Lanka needed, so went the reading, was a leader who was ready to shake hands with the LTTE with a long-term vision to bring peace to the country.

It may have been a coincidence, but political convulsions quickly rocked Colombo, destabilising Kumaratunga’s government and sparking an election in 2000 and a second election the next year.

The Indian establishment felt there was a need to bring in an international player to facilitate peace in Sri Lanka, a party both Colombo and the LTTE could do business with as they appeared incapable of talking to one another.

Kumaratunga’s first choice was France, but this the LTTE rejected.

India by then had zeroed in on Norway. Norwegian diplomats began visiting New Delhi. No publicity was given to these brainstorming trips.

Norway was picked for mainly three reasons: it was physically far removed from South Asia; it had no territorial ambitions; and it had a proven record in peace building.

Kumaratunga and the LTTE eventually settled on Norway as the peace facilitator. The war, however, continued to rage.

Norway’s chosen Special Envoy Erik Solheim travelled to Kilinochchi, the LTTE-controlled northern part of Sri Lanka, in November 2000 and met the group’s top leader, Velupillai Prabhakaran, for the first time.

The next month, the LTTE offered a ceasefire and extended it, month by month, for four months. After that the Tigers again took the offensive.

In July 2001, the LTTE virtually overran Sri Lanka’s international airport at Katunayake, dealing a shattering blow from which Colombo never recovered.

The second of the two elections followed, and Ranil Wickremesinghe, the opposition leader, became prime minister in December 2001. Events galloped at a rapid pace, in both New Delhi and Colombo, but all under wraps.

Overseen by New Delhi, a truce document began to be drafted. Norway was deeply involved in the exercise, roping in some of its veteran diplomats.

Eventually, this translated into CFA. India also told Norwegian diplomats to let the LTTE know about the Indian involvement in the entire effort.

On Feb 21, 2002, LTTE chief Velupillai Prabhakaran signed the CFA. Wickremesinghe put his signature a day later.

Since India never publicised its role in the developments, many Indians argued that New Delhi was letting Sri Lanka slip into Western hands!

By then, India had also mooted the idea of a Sri Lanka Monitoring Mission (SLMM), the first such international peace monitoring body outside the UN aegis. India wanted Nordic countries - Norway, Iceland, Sweden, Denmark and Finland - to make up the SLMM to oversee the ceasefire.

The arrangement between India and Norway was that the latter would keep New Delhi informed about its peace diplomacy. At some point of time, irritations did crop up in this deal but these were quickly sorted out.

The CFA was a watershed in Sri Lanka’s blood-soaked history but within months things began to go wrong.

Norway came under attack from large sections in Sri Lanka. Solheim bore the brunt of the criticism, at times too personal, though he was only the best-known face of an international exercise that had India’s solid backing and he himself had no axe to grind.

In May 2004, Vajpayee gave way to Prime Minister Manmohan Singh, who headed a Congress-led coalition government. J.N. Dixit, a former Indian envoy to Colombo during the turbulent 1980s, was named the new national security advisor.

The nuts and bolts of India’s involvement in Sri Lanka’s peace process was till then known only to a few in New Delhi.

Dixit’s eyes opened up when Wickremesinghe, who by then had lost power, flew to New Delhi and gave a detailed briefing about India’s deep and covert role in the entire process.

It was the first time Dixit realised that India had for years pursued a pro-active policy towards Sri Lanka but quietly - in complete contrast to the public perception that New Delhi had lost interest in the ethnic conflict.

Dixit was to learn quickly that this was also the case vis-à-vis Nepal and Bangladesh. Unfortunately, Dixit died in office in 2005, and with him died many secrets.

India’s active participation in the later much-maligned peace process in Sri Lanka is as deep as was its role in the military training of Tamil militants two decades ago.

Official India denies that it ever trained Tamils in warfare. In the case of the peace process, even many in India are not fully aware of the story.

This was evident in some of the statements made in India when Colombo axed the CFA. This has also been evident in repeated statements from many quarters in Sri Lanka urging India to step in and throw out ‘imperialist’ Norway and the West!

In Norway, one diplomat recently made a public comment about India’s entanglement with the peace process without, however, spilling out any details.

Vidar Helgesen, who was assistant foreign minister of Norway during the inception of the peace process and is now secretary general of the Stockholm-based International Institute for Democracy and Electoral Assistance, said: “I may reasonably say that the Norwegian contribution in structuring the CFA … was, indeed, crucial. However, we could not have achieved any success without the active role played by India at every step of the negotiations. Nothing could be attempted without Indian support at every step, including the CFA.”