ரெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போதே பயணிகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடனே ரெயில்வே போலீஸ் மற்றும் ஊழியர்களை உதவிக்கு அழைக்க டெலிபோன் வசதி செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசின் ரெயில்வே பாதுகாப்பு போலீஸ் தெற்கு ரெயில்வே, வோடாபோன் நிறுவனம் ஆகியவை சேர்ந்து இந்த வசதியை செய்துள்ளன. இதற்காக 9962500500 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாடு அறை சென்னையில் உள்ளது.
இந்த போனுக்கு தகவல் சொன்னால் உடனே அவர்கள் அந்த ரெயிலில் பயணம் செய்யும் பாது காப்பு போலீசாரின் செல் போனில் தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லி அறி வார்கள். அதே போல ரெயில்வே கார்டு நிலைய அதிகாரிக்கும் தகவல் கொடுப்பார்கள். இதன் மூலம் அடுத்த சில நிமிடங் களில் பயணிக்கு உதவி கிடைக்கும்.
இந்த வசதி 65 எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சென்னை மின்சார ரெயில்களிலும் கிடைக்கும். இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. அதற்கு 80 பேர் போன் செய்து உதவி பெற் றுள்ளனர்.
சமீபத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பய ணம் செய்த ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சக பயணி இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரி வித்தார். உடனே ரெயில்வே போலீசார் அந்த ரெயிலில் பயணம் செய்த டாக்டரை அழைத்து வந்து சிகிச்சை அளித்து காப்பாற்றி னார்கள்.
புதிய திட்டம் குறித்து ரெயில்வே ஐ.ஜி.மாகாளி கூறியதாவது:-
இதுவரை ரெயில் பயணி களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக 37 அழைப்புகளும், மருத்துவ உதவி கேட்டு 14 அழைப்புகளும், திருட்டு தொடர்பாக 16 அழைப்பு களும் வந்துள்ளன.
தனியாக பயணம் செய்த பெண்ணை ஈவ்டீசிங் செய்வ தாக புகார் வந்ததை அடுத்து ஒரு வாலிபரை கைது செய்தோம்.
இந்த வசதி செய்யப்பட்ட பிறகு உதவி தேவைப் படுபவர்களுக்கு நாங்கள் உடனடியாக உதவி செய் வதுடன் உரிய பாதுகாப்பு வழங்க முடிகிறது.
(நன்றி: மாலைமலர் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, February 06, 2008
9962500500
Posted by IdlyVadai at 2/06/2008 07:19:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
கலக்கறே லல்லு..
வரவேற்க தக்க திட்டம் ஆனால் எந்த அளவுக்கு பயனுள்ளதாக அமையும் என்று தெரியவில்லை ஏன் என்றால் ரயிலில் பயணம் செய்யும் போது செல்போன் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை. எனவே ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் ஒரு தொலைபேசி (Intercome) அதவது அந்த ரயிலில் பயணம் செய்யும் பாதுகாப்பு அதிகாரியை மட்டும் தொடர்புகொள்ளும் நிலையில் அமைத்தால் பயனுள்ளதாக அமையும்
நல்ல முயற்சி,
தொழில் நுட்பங்களை இம்மாதிரியான நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தினால்,
நாடும்,நாட்டு மக்களும் பயன் பெறுவர்.
வால்பையன்
*NOT FOR PUBLISHING* என்று பின்னுட்டம் போட்ட அன்பரே, மெயில் வந்திருக்கு இன்னும் படிக்கலை ;-)
<==
குயில் said...
வரவேற்க தக்க திட்டம் ஆனால் எந்த அளவுக்கு பயனுள்ளதாக அமையும் என்று தெரியவில்லை ஏன் என்றால் ரயிலில் பயணம் செய்யும் போது செல்போன் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை
==>
அதுக்கென்ன அலுவலகத்தில இருக்கறமாதிரி அருகருகே இன்டர்காம் வைக்கச்சொல்லிடுவோம்.அதவிட இது எளிது.
i also follow the suggestion.
Post a Comment