பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 21, 2008

ஆயுள் விருத்தி ஹோமம் ஜெ இன்று காலை 4 மணி நேரம் சாமி தரிசனம்

திருக்கடையூர் கோவிலில் ஜெயலலிதா நடத்திய ஆயுள் விருத்தி ஹோமம் இன்று காலை 4 மணி நேரம் சாமி தரிசனம்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது 60-வது பிறந்த நாளையொட்டி நாகை மாவட்டம் திருக்கடைïரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்ய முடிவு செய்தார்.

ஜெயலலிதா வருகையை யொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் கோவிலை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். நேற்றும், இன்று காலையும் ஜெயலலிதா கோவிலுக்குள் சென்றதும் மற்ற பக்தர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை. இன்று காலை திருமணம் செய்வதற்காக கோவிலுக்கு வந்து இருந்த மணமக்கள் கோவில் வளாகத்தில் வெகு நேரம் மாலையுடன் காத்து இருந்தனர்.

ஜெயலலிதா வருகையையொட்டி நாகை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஓ.எஸ்.மணியன், துணை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயபாலன், திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர் பவுன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் உள்பட அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கோவில் முன்பு திரண்டு இருந்தனர்.

"கடவுள் முன் அனைவரும் சம்மம்" என்று போர்டில் எழுதியிருந்ததாக சொன்னார்கள்.

11 Comments:

Arun said...

/"கடவுள் முன் அனைவரும் சம்மம்" என்று போர்டில் எழுதியிருந்ததாக சொன்னார்கள்//

அப்பிடி போடு அருவாள..

Anonymous said...

Idly Vadai what is your relationship with IndiaInteracts?

Anonymous said...

என்ன இட்லி ... சமத்துவத்தை பற்றிலாம் ?
அட போடா அம்பி ..


ஆதரவுடன்
கோழி.

Anonymous said...

இதே கோவிலில் தன் 60 கல்யாணத்தைச் சிறப்பாக நடத்திக் கொண்ட பகுத்தறிவுக் கொழுந்து, பெரியாரின் சீடர், நாத்திகக் குஞ்சு, சுயமரியாதைச் சிங்கம் டாக்டர். கா.காளிமுத்து 60ம் கல்யாணம் செய்து கொண்ட 1 வருடத்திற்குள்ளேயே செத்துப் போனார். ஒரு வேளை இங்கு பூஜை செய்து விட்டு சர்ச்சில் போய் இன்னொரு மனைவியுடன் இன்னொரு 60ம் கல்யாணம் செய்து கொண்ட பாவத்தின் தோஷமாகவும் இருக்கலாம். ஜெயலலிதாவுக்கு அந்தப் பிரச்சினைகள் இல்லை.

ஜெயலலிதா நீடூழி வாழட்டும். அகந்தைகள் குறையட்டும். ஆணவம் அழியட்டும். மீண்டும் மக்கள் நலனில் மட்டுமே அக்கறை கொண்ட பிற மனிதர்களை மனிதர்களாக மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கருணாநிதி என்னும் அரக்கனை அழிக்க இவரை விட்டால் வேறு ஆளில்லை ஆகவே ஜெயலலிதா பல்லாண்டு வாழ திருக்கடையூர் அபிராமி அம்மன் அருள் புரியட்டும்

Rama Karthikeyan said...

Was this an equivalent of 60am Kalyanam?

Anonymous said...

60 ம் கல்யாணம் னு சொன்னாங்க...ஜெயலலிதா வூட்டுக்காரர் சோபன் பாபு அங்கன இருந்தாரா ? ...ஆரையும் உள்ளாற உடலையாமே ?

என்ன கருமம் இது சரவணன் ? சிங்கள் க்கு 60ம் கல்யாணமா ? கான்செப்ட் டே சரியில்லையே ?

உண்மைத்தமிழன் said...

/"கடவுள் முன் அனைவரும் சம்மம்" என்று போர்டில் எழுதியிருந்ததாக சொன்னார்கள.//

இட்லிவடை ஸார்,

கடவுளே அவுங்கதான.. அப்புறம் அவுங்க யாருக்கு பயப்படணும்..? அப்படித்தான நினைப்பு அவுகளுக்கு..?

அது சரி.. ஏதோ அம்மையார் ஆட்சிதான் நடக்குற மாதிரி இந்த ஆட்சிலேயும் ஏன் 100 போலீஸை குவிச்சு வைச்சு, பக்தர்களை உள்ளே விடாம செஞ்சாங்க..?

அம்மாவின் 'புகழ்' பரவணும்னு செஞ்ச 'சதி'யோ..?

தப்பு ரெண்டு பேர் மேலேயுமே இருக்கு..

Anonymous said...

Exchange of Garlands with SASI" Conceptaeeee Sariya Illayeee" It seems what is in the dark is coming to light ?

Anonymous said...

Now many go to temple with a demand. When they believe that their demands are fulfilled by certain God, then they increase the frequency of their visit to the temple. When this information spreads among their relatives and friends that God and temple become famous. If Jaya can satisfy certain sect of people, then she is equivalent to God for those people. What is wrong in it? That is why they fall in her feet, prise her, ... This we do to God also when our demands (desire) is fullfilled.

Anonymous said...

//அம்மாவின் 'புகழ்' பரவணும்னு செஞ்ச 'சதி'யோ..?

தப்பு ரெண்டு பேர் மேலேயுமே இருக்கு..//

இதைவிட கேவலமா யாரும் அம்மாவுக்கு அடிவருட முடியாதுய்யா. முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கனையே மிஞ்சிட்டே!

Anonymous said...

ANNA see the insult to you.!!!