பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 25, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 25-02-08

இந்த வாரம் முனி இட்லிவடைக்கு எழுதும் கடிதம். கொஞ்சம் பெரிசு, வேலை இல்லை என்றால் படிக்கவும் ;-)

அன்புள்ள இட்லிவடை,

நலமா? உனக்கு சமைக்கத் தெரியுமா? தெரியாதென்றால் எதற்கும் திருமணத்திற்கு முன்பே வரப்போகும் மனைவிக்கு சமைக்கத் தெரியுமா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு முடிவெடு. பெண்ணியக்காரகள் குரலெடுப்பார்கள் என்று பயந்தால் சொந்தமாய் கற்றுக்கொள். எதற்கும் இந்த நியூஸைப் பார் - மனைவி நன்றாக சமைத்து போட வேண்டும் என்று ஒரு கணவர் எதிர்பார்ப்பது தவறல்ல. அதே நேரத்தில் சமையல் செய்யத் தெரியவில்லை என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து விவாகரத்து செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு பரபரப்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆக பெண்கள் எல்லாம் பிளாக்கில் மட்டும் தான் சமையல் செய்கிறார்கள் எழுதுகிறார்கள் போலிருக்கிறது. கணவனே கண்கண்ட தெய்வம் எல்லாம் பழைய படம். புதிய படம் கணவனே சமையல் செய்யும் தெய்வம்.

சமையல் பற்றி இன்னொரு செய்தி.

ருசியான உணவு வழங்காத அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தார் லாலுபிரசாத் யாதவ் - இது செய்தி. இதை தொடந்து மேலும் சில சஸ்பெண்ட் ஆடர்களை கல்கியில் படித்தேன் அவற்றிலிருந்து சில

- அமைச்சர் சொன்ன ஜோக்குக்குத் தாமதமாக சிரித்த அதிகாரி மாற்றம். (இனி எப்பவுமே சிரிக்கமுடியாது.)
- அமைச்சர் தலையில் உச்சாபோன காக்கையைப் பிடிக்காத அதிகாரிக்கு கல்தா. (அமைச்சரை மட்டும் காக்காபிடித்தால் போதாது.)

இது நம்ம சரக்கு..

- சாய்பாபா தந்த மோதிரத்தின் சைஸ் சரியாக இல்லாததால் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சஸ்பெண்ட்

சென்னையில் இயேசு யார்' என்று தலைப்பிட்ட 12 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை வீடு வீடாக வினியோகித்து வருகின்றனர். அதில் "இயேசுவை நம்புகிறவர்கள் நல்ல கதி அடைவார்கள் என்றும், நம்பாதவர்கள் நரகத்திற்குத் தள்ளப்படுவார்கள்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவை ஏற்றுக் கொள்கிறவர்கள் கீழ் கண்ட எளிய ஜபம் செய்யவும் என்று கேட்டு ஜபத்தின் வாசகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி மதமாற்றம் பற்றி எஸ்.குருமூர்த்தி அவர்கள் கட்டுரையை சில வருடங்கள் முன் எழுதியிருந்தார், முடிந்தால் அடுத்த வாரம் அனுப்புகிறேன்.

ஜாதிக் கட்சிகளுடன் நோ கூட்டணி என்று விஜயகாந்த் சொன்னதற்கு திருமாவளவன், "எங்கள் கட்சியினால் 107 பிற்படுத்தபட்ட ஜாதிகள் பயன் அடைந்துள்ளன" என்று பதில் சொல்லியுள்ளார். இனிமேல் "Cast your vote" என்று சொல்லுவதை காட்டிலும் "Caste your vote" என்று தான் சொல்லனும் போலிருக்கிறது..

'குடிசை' ஜெயபாரதி ஆனந்த விகடன் பேட்டியில், விவேக்/வடிவேலு இரண்டு பேரும் தேசிய விருது வாங்க இவரை அணுகினார்கள் என்று பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் இரண்டு பேரும் கதையெல்லாம் கேட்டுவிட்டு 'புரொடியூசரையும் பிடித்துக்கொண்டு வாருங்கள்' என்று சொல்லி அனுப்பிவிட்டார்களாம். காமெடி நடிகர்களிடம் வேற என்னத்தை எதிர்பாக்க முடியும் ?

அதிர்ச்சியில் ஆயா
அரைக்கீரை விற்கிறான்
அம்பானி

- பரிதியன்பன்

இந்த எஸ்.எம்.எஸ் ஹைக்கூ நன்றாக இருக்கிறதா? செல்ஃபோனில் சிற்றிதழ் நடத்தும் கன்னிக்கோவில் இராஜா என்பவர் அனுப்பியது. தினமும் ஹைக்கூ, சிற்றிதழ் அறிமுகம், இலக்கியவிழா, போலியோ தினம் ( போலி இல்லை ), இரத்த தான முகாம் என்று உபயோகமான தகவல்களை அனுப்புகிறார். உனக்கும் எஸ்.எம்.எஸ் வேண்டும் என்றால் 98412 36965 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்.

'வாட்டர்' படத்தில் நடித்த மனோரமா(வயது 81) என்ற நடிகை சில நாட்களுக்கு முன் காலமானார். அதை தொடர்ந்து, தீபா மேத்தா மனோரமா பற்றி பேட்டி கொடுத்தார்(DNA என்ற பத்திரிக்கைக்கு), இதெல்லாம் ஓ.கே, ஆனால் பேட்டிக்கு பக்கத்தில் பெட்டிச் செய்தி ஒன்றும் போட்டு பேத்தியிருக்காங்க. என்ன கொடுமை இது ஆச்சி? அவங்களுக்கு ஆயுசு நூறுதான்.

ஐபிஎல் நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் 8 அணிகளில் இடம் பெற உள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் மும்பையில் நடைபெற்றது பார்த்திருப்பாய். இதே மாதிரி தமிழ் வலைப்பதிவுலகில் ஏலம் நடந்தால் எப்படி இருக்கும்? சர்வேசனிடம் தான் கேட்க வேண்டும்.

ஆன்மிகமும் பகுத்தறிவு இயக்கமும் ஒன்றோடு ஒன்று மோதாமல் சமுதாயப் பணி செய்ய வேண்டும் என்று கலைஞர் சொல்லியுள்ளார். மோதாமல் + சீண்டாமல் என்று சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இந்தியாவிலுள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள் திமிர்ப் பிடித்தவர்களாக உள்ளனர். இதர நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு மிகுந்த அதிகாரமும் செல்வாக்கும் இருப்பதாலேயே, அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்கிறார் அத்வானி. நோ கமெண்ட்ஸ்.

எஸ்.வி.சேகர் பொதுக் குழு மீட்டிங் நடக்கும் போது எதற்கு தலைமைச் செயலகம் சென்றார் என்பது பெரிய புதிராக இருக்கிறது. ஒரு பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார்--
"அரசு, போக்குவரத்துத் துறையில், அரசு வாகனங்களுக்கு பயன்படுத்தபடுத்துவதற்காக சில கார் எண்களை தனியாக ஒதுக்கி வைத்திருப்பார்கள் அந்த எண்களில் ஒன்றை தனி நபர் ஒருவருக்கு ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால், அதை அரசுதான் செய்ய வேண்டும். அதற்காகவே நான் சட்டமன்றச் செயலாளரைப் பார்க்கப் போனேன்" என்கிறார். போன வாரம் "காதுல பூ" டிராமா பார்த்தேன் ,நல்ல தமாஷான நாடகம்.

இந்த வாரம் துக்ளக் கொஞ்சம் கனமாக இருந்தது, என்னடா என்று பார்த்தால் ஜெ-யின் 60வது பிறந்த நாள் வாழ்த்து விளம்பரம் இரண்டு பக்கம் வந்துள்ளது. துக்ளகில் வருவதில் ஆச்சரியபட என்ன இருக்கிறது? ஆனால் தினகரன், தமிழ்முரசு நாளிதழ்களில், அதிமுகவினர் கொடுத்த ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து விளம்பரங்கள் பார்த்தால் நிச்சயம் நீ ஆச்சரியபடுவாய். ஒரு பக்கத்துக்கு இரண்டு என்ற கணக்கில் நேற்றைய தினகரன் முழுவதும் அம்மா அம்மா என்று கூவியது. அதே போல் தமிழ்முரசு பேப்பரிலும், தமிழ்முரசு டைட்டில் தவிர மற்றவை எல்லாம் ஒரே அம்மா காவியம்தான். உடனே கலைஞர் (வேற என்ன செய்வார், கொதித்து போய் இதை பற்றி ஒரு) கவிதையை தன்பங்குக்கு எழுதியிருக்கிறார். அம்மாவுக்கு, ஏதோ அவரால் முடிந்த பிறந்தநாள் அன்புக் காணிக்கை.( அதிலும் "சூரியக்குடும்பத்து சூழ்ச்சிகள் தாக்காது காத்திடும் ஈரிலைப் பந்தலென" என்ற விளம்பரம் அவரை ரொம்ப டிஸ்டர்ப் செய்துவிட்டது )

டென்ஷன் செய்த விளம்பரம் கீழே...(கிளிக் செய்து பார்க்கவும் )
டென்ஷனில் எழுதிய கவிதை
"ஆரியக் குடும்பத்து ஆரணங்கு தான் நான்" என்று
அறை நடுவே அறைகூவல் விடுத்திட்ட அம்மையார்க்கு
அறுபதாம் அகவை வர;
வசந்தம் வந்தது என வாழ்த்துப் பாடி
ஆயிரக்கணக்கில் செலவிட்டு
அவர் சீடகோடி விளம்பரங்கள் செய்திடுங்கால்,

"சூரியக்குடும்பத்து சூழ்ச்சிகள் தாக்காது காத்திடும்
ஈரிலைப் பந்தலென" அவரை வர்ணித்து;
சூரியன் மீது சுள் என்று கோபத்தை உமிழ்கின்றாரே;
என்ன விந்தை?
அண்ணா கண்ட சின்னம் சூரியன் என்பதும்
அதன் பெயரையே டி.வி., க்கு வைத்துள்ளார் என்பதும்
அறியாமல் செய்த தவறா?

அண்ணாவையே மறந்து
அழுக்காறு மிகுந்ததின் விளைவா?
அம்மையே நீவீர்
வாழ்க நன்று;வாழ்க!


பெருந்தலைவர் காமராஜரின் வாழக்கை வரலாற்றை காமராஜ் என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையைத் தழுவி 'முதல்வர் மகாத்மா' என்ற படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் கதை சுவாரசியமானது.

இந்தியா சுதந்திரமடைந்து அறுபது ஆண்டுகளுக்குப் பின் அவர் மீண்டும் வந்தால் இந்த நாடு எவ்வாறு அவரை எதிர்கொள்ளும்? நாட்டின் இன்றைய பிரச்சினைகளை அவர் எவ்வாறு எதிர்கொள்வார் என்பதைக் காட்டுகிறது இப்படம். தம் வாழ்நாளில் எந்த ஓர் அரசுப் பதவியையும் வகிக்காத மகாத்மா காந்தி இந்தியாவின் ஒரு மகாணத்தில் தேர்தலில் போட்டியிட்டு, வென்று முதல்வராவதுதான் கதை. எனக்கு ஒரு டவுட் காந்தி இருந்திருந்தால் ராமர் சேது பிரச்சனையை எப்படி எதிர்கொள்வார் என்பது தான். உனக்கு ஏதாவது தெரியுமா?

பிரிட்டனை பொருத்தவரை குண்டாக இருப்பவர்கள் ஆரோக்கியத்தை நினைத்து கவலைப்படு வதோடு, வரியையும் நினைத்து கவலைப்பட்டாக வேண்டும். காரணம் அந்நாட்டில் அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு அந்நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங் கள், உடல் பருமன் கொண்டவர் களுக்கு, பருமன் வரியை விதிக்க தீர்மானித் துள்ளனவாம். ( ஏதோ நமிதா படம் போட இந்த நியூஸ் )

5 Comments:

We The People said...

இட்லியாரே!

அந்த முதல்வர் கவிதை ஒன்னியும் பிரியலயே! யாராவது விளக்கவுரை குடுங்களேன்!!??

Gopalan Ramasubbu said...

//இனிமேல் "Cast your vote" என்று சொல்லுவதை காட்டிலும் "Caste your vote" என்று தான் சொல்லனும் போலிருக்கிறது..//


"In India, you don't cast your vote; you vote to your caste"

-V.N.Gadgil (Congress Spokesperson)

Anonymous said...

கலைஞர் ஐயா வெளிப்படையாகவே கேட்கின்றேன் 'மாறன் சகோதரர்கள் என்னதான் செய்யணும்னு நீங்க எதிர்பாக்கீங்க' டிவி சிமெண்ட் ன்னு வரிசையா கட்டங்கட்றீங்க. அப்புறம் என்ன குய்யோ முறையோ.

Anonymous said...

கிழவனார் கருணாநிதியை தி.மு.க கட்சியின் அடி பொடிகள் நன்றாக உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள். குடும்பத்துக்குள் குழப்படி செய்வது, இங்கிருந்து அங்கே மூட்டுவது, சுய சூனியம் வைப்பது போன்ற வேலைகள்..இதனால் அவர்கள் அடையும் லாபம் என்ன வென்றால், எம்.கே வுக்கு பின் , தி.மு.க வை குடும்ப அரசியலில் இருந்து பிரிப்பது...சுய லாபம் பார்ப்பது (இப்போது எம்.ஜி.ஆர் பெயரை சொல்லி கேப்டன், சரத், ஜெ ஜெ விளம்பரம் தேடிக்கொள்வது போல)

எல்லா கொக்குகளும் (ஜெ ஜெ , கேப்டன், சரத், மாட்டு மருத்துவக்குடி, தெருமா, காங்கிரஸ் குரூப் கள், மாறன் பிரதர்ஸ்) எம். கே வுக்கு எம். ஜி. ஆர் சமாதி பக்கத்தில் இடம் ரிசர்வ் செய்து விட்டு காத்துக்கொண்டிருக்கிறார்கள்..

இது எம். கே குடும்ப மர மண்டைகளுக்கு இன்னமும் உறைக்கவில்லை... ஸ்டாலின் இதற்க்கு மத்தியில் ஆப்பில் மாட்டிய குரங்கு வால் போல் தவிக்கிறார் போலும்.. அதற்கு மேல் அழகிரி.. இன்னும் சில ஆண்டுகளில் தெரிந்து விடும்...

R.Subramanian@R.S.Mani said...

Now "KEERAKKARA AYA" is having the prestigious competitor ANIL AMBANI- A RELLIABLE nEWS: rELIANC, aNIL aMBANI'S gROUP HAS PURCHASED THE dasaprakash hotel site and propose to build a corporate Hospital there".-suppamani-