பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 02, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 02-02-08

இந்த வாரம் முனிக்கு இட்லிவடை கடிதம்....

முனீஸ்,

குட் மார்னிங்.

அடுத்த வாரம் முதல் குமுதத்தில ஞாநியின் ஓ-பக்கங்கள் வருது தெரியுமா ? முன்பு தீம்தரிகிட பத்திரிக்கையில “தீம்தரிகிட இதழில் வெளியாகும் படைப்புகள் அந்தந்த படைப்பாளர்களுக்கே உரிமையுடையவை. தீம்தரிகிட இதழில் வெளியானவற்றை மேற்கோள் காட்டி எவரும் பயன்படுத்தலாம் - படைப்பாளியின் உரிமையை தன் உரிமையாக அறிவித்து வரும் குமுதம் இதழ்களைத் தவிர” என்று ஒரு அறிவிப்பு இருக்கும். காலம் பதில் சொல்லும் என்பார்கள், ஞாநியின் காலம்(Column) பதில் சொல்லுமா ? ஆக மொத்தம் குமுதம் ஆனந்த விகடன் ஆக போகுது, விகடன் குமுதம் ஆகபோகுது. சரி ஞாநியை 'விருப்பப்படி இருக்க விடுங்கள்' ஆமென்

எனி இந்தியன் புதிய பத்திரிக்கை ஆரம்பிக்க போறாங்க ‘திண்ணையில்' அறிவிப்பு வந்திருக்கு பார்த்தையா ? மாநாடு, பத்திரிக்கை என்றால் அதில் முதல்ல கொடியேற்றுவது நம்ம தமிழச்சி தங்கபாண்டியன் தான். இதழ் பல்சுவையா இருக்கணும் என்ற காரணத்துக்கோ என்னவோ ஜெயஸ்ரீ இதில எழுதறாங்க. எனக்கு உள்ள ஒரே கவலை, தமிழச்சி பேரை முன்னாடி போட்டுவிட்டு ஜெயமோகன் பெயரை அப்பறம் போட்டிருக்காங்க, ஜெயமோகன் கோவப்படாம இருக்க நீ தான் அருள் புரியணும். இதழின் ஆசிரியர் ஹரன்பிரசன்னா என்று போட்டிருப்பது இந்த பத்திரிக்கையின் பலம். வாழ்த்துகள்.

சரத் ஒரு பேட்டியில் இப்படி சொல்லியிருக்கார்

இலவசங்கள் கொடுத்து மக்களை இந்த அரசு கெடுக்கிறது. மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்து பொருளாதார அடிப்படையில் அவர்களை முன்னுக்குக் கொண்டு வந்து தாமாகவே எதையும் வாங்கிக் கொள்கிற சக்தியை உருவாக்க வேண்டுமே தவிர, ஆட்சியைப் பிடிப்பதற்காக இப்படியெல்லாம் கொடுத்து அவர்களை கேவலப்படுத்தக் கூடாது.

1977 என்று வர போகும் ஸ்டில்லை பாரு. இதில் சரத் எந்த கோலத்தில இருக்கார் ? சினிமா நல்லா வியாபாரம் ஆகணும் என்று இப்படியெல்லாம் கொடுத்து மக்களை கேவலப்படுத்த கூடாது என்று சரத்தை நான் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார் ?

திருமா 'கருத்துரிமை மீட்பு மாநாடு' என்ற பெயரில் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா ? “என்னை பொறுத்த வரை புலிகளுக்கு ஆயுதம் கடத்தும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றால் அதற்காகப் பெருமைப்படுவேன்' என்று சொல்லியிருக்கிறார். இவர் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம் இல்லை, தேச துரோக குருதி.

கி.ராவின் எழுத்துகளுக்கு ஆதிமூலம் வரைந்த கோட்டோவியங்களைத் தொகுத்து உயிர்கோடுகள் என்ற நூலைக் கொண்டு வந்தவர் புதுவை இளவேனில். இந்த நூலை பார்த்த ஆதிமூலம் வியந்து பாராட்டினார். இந்த நூல் வெளியாகி நீண்ட நாள் கழித்து ஒரு முறை இளவேனிலை பார்த்த போது, ‘இந்த நூலை வெளியிட்டதால் பதிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டமாகி இருக்கும்' என்று கேட்டார். 'பத்தாயிரம் இருக்கும்' என்று சொல்லியிருக்கார் இளவேனில். உடனே பத்தாயிரம் ரூபாய்க்கான செக்கை பதிப்பாளருக்கு அனுப்பி விட்டார். பிறகு இளவேனிலை பார்த்து ‘இந்தப் பணியை செய்த உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டிருக்கார். “எதையும் எதிர்ப்பார்த்து இதை செய்யவில்லை என்று பதில் சொன்ன இளவேனிலிடம் அப்போது அவர் வரைந்து கொண்டிருந்த ஓவியத்தை முடிக்காமலேயே கீழே கையெழுத்திட்டு கொடுத்துவிட்டார்!. மனிதர்.

பாடகர் ஜேசுதாஸ் சபரிமலை, குருவாயூர் கோவில்களுக்கு நுழையக்கூடாது என்று சொன்னதற்கு ஜேசுதாஸ் ”நாய் பூனைகள் கூடக் கோவிலுக்குள் போகின்றன நான் போகக் கூடாதா என்று கேட்டிருக்கிறார். நல்ல கேள்வி தானே ?

கார் ரிப்பேர் செய்வது எப்படி என்று இங்கிலாந்தில் பல மெக்கானிக் கடைகள் சொல்லித் தருகின்றன. இவற்றில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகமாகச் சேருகிறார்கள். ‘மக்கர் செய்யும் கார்களைப் பழுது பார்ப்பதில் பெண்கள் நிபுணிகளாகத் திகழ்கிறார்கள் என்று கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தின் ஆய்வுக்குழு சொல்லுகிறது. ஏன் இந்தியாவில் இப்படி யாரும் வருவதில்லை. இதற்கு காரணம் தெரிஞ்சா சொல்லு...

ஜெயா டிவியின் கடிச்சா தங்கம் என்ற நிகழ்ச்சி தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும். பாஸ்கி தொகுத்து வழங்குகிறார் தெரியுமா ? இது நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி. இதில் நேயர்கள் கலந்து கொண்டு கடி ஜோக் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் மிகச் சிறந்த கடி ஜோக் சொல்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். நிகழ்ச்சியின் இடைஇடையே நகைச் சுவை காட்சிகள் காட்டப்படும். தினமும் சிரித்துக் கொண்டே தங்கம்.

அதனால் இந்த வாரம் ஒரு கடி ஜோக்: டெலிபோனில் எத்தனை முறை கால் போட்டாலும், அதை கையால் தான் போடணும் :-)

இந்த வரம் படித்த பழமொழி : 'டாப்-அப்' போட்டு பேசும் ஆண்களை நம்பு, மேக்-அப் போட்டு பேசும் பெண்களை நம்பாதே'

அடுத்த வாரம் கடிதம் போடு,
பை
இட்லிவடை

2 Comments:

Anonymous said...

சாமிக்கு எழுதுற லெட்டர்ல இப்படி சனியன் புடிச்ச போட்டோவை போட்ட உமக்கு முனீஸ்வரன் சாட்டையடி கிடைக்கப் போகுதுப்பூ..

Anonymous said...

கனிமொழி,தமிழச்சிக்கு கொடுக்க்ப்படும் முக்கியத்துவத்தை
கண்டித்து கனிமொழி வணக்கம் என்று
ஜெமொ அவர் தளத்தில் எழுதியுள்ளார். உயிர்மை கூட
அந்த இருவரையும் முன்னிறுத்துவதைக் குறித்து
அவர் ஆதங்கப்படுகிறார்.
இன்று உயிர்மைக்கு ஜெமொவை
விட அவர்கள்தான் தேவை என்பதை
அவர் உணர்ந்திருந்தாலும் அதை
இப்படித்தான் சொல்ல முடிகிறது.