பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 29, 2008

சுஜாதா - கலைஞர், வைகோ, கமல் இரங்கல்...

சுஜாதா மறைவிற்கு கலைஞர் வைகோ, கமல் இரங்கல்....

பன்முக திறமை கொண்ட எழுத்தாளர் சுஜாதா மறைவு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
.
இதுதொடர்பாக முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புகழ்பெற்ற எழுத்தாளர் சுஜாதா இயற்கை எய்திய செய்திகேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். "ரங்கராஜன்' எனும் இயற்பெயர் கொண்ட இவர் தமது துணைவியார் பெயரையே "சுஜாதா' எனப் புனைபெயராகக் கொண்டு எழுதினார்.

கணினி அறிவாற்றல் மூலம் அறிவியல் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்துள்ளவர்; பெல் நிறுவனத்தில் பணியாற்றிய பொழுது இவரது தலைமையிலான குழுவே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை உருவாக்கியது என்பதுகுறிப்பிடத்தக்கது.

சுஜாதா மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். இவரது பிரிவால் வாடும் இவரது குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.

வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
நவீன இலக்கியப் படைப்பாளி சுஜாதா திருவரங்கத்தில் வளர்ந்து பொறியியல் பட்டதாரியானவர். அவர் கணையாழி இலக்கிய இதழ் மூலமாகத் தமிழ் கூறும் நல்லுலகைத் தன்பால் ஈர்த்தவர். தான் எழுதிய "நைலான் கயிறு' மூலமாக ஆயிரக்கணக்கான வாசகர்களைக் கவர்ந்தார்.

அறிவியல் கருத்துகளைத் தனது கதைகள் மூலம் அறிந்து கொள்ள அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூறு, குறுந்தொகை மற்றும் வைணவப் பாசுரங்களுக்கு எளிய நய உரைகளை வழங்கியவர். திரைப்படத் துறையிலும் வசனங்கள் எழுதி முத்திரை பதித்தார்.

உடல்நலமின்றித் தனது 73ஆவது வயதில் அவர் மறைந்த செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கமல் அறிக்கை:

சுஜாதா அவர்களுடைய மரணம் நெருங்குவதை நான் உணர்ந்தே இருந்தேன். அவரும்தான். வழக்கமாக எழுத்தாளர்கள் சமரசம் செய்வதை இழுக்காகவும், தோல்வியாகவும் நினைப்பார்கள். ஆனால் சுஜாதா அவர்கள், சமரசம் செய்து கொள்வது அவசியம், சமுதாயக் கடமை என்றே நினைத்தார். அதனால் தான் சிலசமயம் நாம் எதிர்பார்க்கிற வீரியம் குறைந்தது போல ஒரு பிரமை தோன்றும். அவருடைய வாழ்க்கைமுறை, நெறி அது. விஞ்ஞானமும் கற்றறிந்தவர் என்பதால் எழுத்தை அவர் தொழிலாக நினைக்கவில்லை.

.
தொடரும் ஒரு காதலாகவே நினைத்தார். அதனால் அவருக்குத் தன் எழுத்தைப் பற்றி செறுக்கு இல்லை. அவருடைய சினிமா எழுத்தை வைத்து தயவு செய்து யாரும் சுஜாதாவை கணித்துவிடாதீர்கள். அதுவும் பெரும் சமரசம்தான். சினிமாவுக்காகவும், நட்புக்காகவும், அன்புக்காகவும் அவர் செய்து கொண்ட சமரசம். இருந்தாலும் சுஜாதா என்னும் அந்தப் பெயரை பெரியதாக வட்டம்போட்டுக் காட்டிய சினிமாவுக்கு ஓரளவுக்கு வேண்டுமென்றால் நன்றி சொல்லலாம். மற்றதெல்லாம் இலக்கியத்திற்கே உரித்தானது.

தர்மம் கிடைக்கும் இடத்தில் தான் பிச்சைக்காரர்கள் கூடுவதுபோல், கொடுக்கும் இடத்தில்தான் இன்னும் எதிர்பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்பொழுது சுஜாதா இன்னும் கொடுத்திருக்கலாம் என்று சொல்வதைவிட, கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டிய நேரமாகவே இதை நான் கருதுகிறேன்.

பல விஷயங்களில் அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய எழுத்து ரசனையை, என்னுடைய தமிழ் வாசிப்பு ரசனையை உயர்த்திய முக்கியமான எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். என்னுடைய வாசிப்பு என்று சொல்லும்போது ஏதோ குறுகிய வட்டம்போல் ஆகியது. தமிழகத்தில் சுஜாதாவைப் படித்தவர்கள் எல்லோருமே வாசக தரத்தில் உயர்ந்தவர்களாகவே நான் கருதுகிறேன். நன்றி தமிழ் உலகம் அவருக்கு சொல்லும்.

Read More...

Thursday, February 28, 2008

சுஜாதா 1935-2008

பிரபல எழுத்தாளர் சுஜாதா காலமானார். வலைப்பதிவு/தமிழ் உலகில் எவ்வளவு பாப்புலர் என்று வரும் பதிவுகள் செய்திகளே சாட்சி...

தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா என்கிற எஸ். ரங்கராஜன், சென்னையில் புதன்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 73.

பொறியியல் பட்டதாரி... பெங்களூரில் உள்ள மத்திய அரசின் பாரத மிகுமின் நிறுவனத்தில் (பெல்) பொறியாளராகப் பணியாற்றினார். வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்த விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமை தாங்கினார். ஸ்ரீரங்கத்தில் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த அவர், சென்னை எம்.ஐ.டி.யில் பொறியியல் பட்டம் பெற்றவர்.

தமிழ் உரைநடை வரலாற்றில் பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோரைப் போலவே சுஜாதாவின் உரைநடையும் ஒரு மைல்கல்.

"தினமணி கதிர்', "குமுதம்' ஆகிய வெகுஜன பத்திரிகைகள் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களை விசிறிகளாக பெற்றவர். அதேசமயம், தீவிரமான சிற்றிதழ்களிலும் தனது படைப்புகளை அளித்து தமிழ் இலக்கியத்துக்கு முக்கிய பங்களித்தவர். குறிப்பாக மூத்த பத்திரிகையாளரும், "தினமணி' முன்னாள் ஆசிரியருமான கஸ்தூரி ரங்கன் நடத்திய கணையாழி சிற்றிதழில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடைசி பக்கத்தை மிக சுவாரஸ்யமாக எழுதியவர். ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் அப்பகுதியில் அவர் எழுதியவை அன்றைய இளம் தலைமுறையினரை பெரிதும் கவர்ந்தன.

ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ், ஹாரால்டு ராபின்ஸ் போன்ற ஆங்கில எழுத்தாளர்களின் மயக்கத்தில் கிடந்த இளம் தலைமுறையை தன் எழுத்தால் தமிழின் பால் ஈர்த்தவர். நவீன தமிழ் சிறுகதை உலகில் குறிப்பிடத்தக்க பல சிறுகதைகளை எழுதியவர் எழுத்தாளர் சுஜாதா. அவற்றில் குறிப்பிடத்தக்கது, ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பு.

70-களில் சிற்றிலக்கிய இளைஞர்கள் குழு ஒன்று தொகுத்த குருஷேத்ரம் தொகுப்பில் வெளியான "தனிமை கொண்டு' என்ற சிறுகதை பின்னாளில் குமுதத்தில் நைலான் கயிறு நாவலாக விரிந்து, அவருக்கு லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றுத் தந்தது.

தமிழ் உரைநடையில் நகைச்சுவையை அதன் உயர்ந்த எல்லைகளுக்கு கொண்டு சென்றவர் சுஜாதா என்றால் அது மிகையில்லை. (அவரது "மாமா விஜயம்' என்ற சிறுகதையை படித்துப் பாருங்கள்...)

அறிவியல் புனை கதைகள்... அறிவியல் புனை கதைகளை தமிழ் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. கணேஷ்-வசந்த் என்ற கதாபாத்திரங்களை உருவாக்கி, அந்த பாத்திரங்களை மையப்படுத்தி கதைகள் எழுதினார்.

அரசர் காலத்தை நவீன காலத்தோடு ஒப்பிட்டு, அவர் எழுதிய சிறுகதைப் தொகுப்பில் நகைச்சுவையும், உண்மைத் தகவல்களும் இழையோடும்.

திரைப்படத் துறையில்... பொறியாளர், எழுத்தாளர் என தொட்ட துறைகளில் எல்லாம் முத்திரை பதித்தார் சுஜாதா. இதைத் தொடர்ந்து, திரைப்படத் துறையில் கால் பதித்தார். நடிகர் கமலுடன் இணைந்து, விக்ரம் படத்தில் பணியாற்றினார். அந்தப் படத்தில் கதை - வசனம் எழுதினார்.

இதைத் தொடர்ந்து, திரைப்பட இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். தான் வசனம் எழுதிய திரைப்படங்களில் தனி பாணியை கையாண்டார் சுஜாதா. நீண்ட வசனம் என்பதை உடைத்து, நறுக்கு தெரித்தாற் போல இரண்டே வரிகளில் வசனம் எழுதினார். இது, அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தது.

உடல் நலக்குறைவு: பல்வேறு தளங்களிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றிய எழுத்தாளர் சுஜாதா கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சில நாள்களாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், புதன்கிழமை இரவு உடல் நிலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் புதன்கிழமை இரவு 9 மணிக்கு காலமானார். அவருக்கு சுஜாதா என்ற மனைவியும், கேசவ பிரசாத், ரங்கா பிரசாத் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
(செய்தி: தினமணி )

Read More...

Tuesday, February 26, 2008

ஹாத்வே அழகிரி - சுமங்கலி தயாநிதி

அழகிரி பேட்டி, அமைச்சர் தயாநிதி மாறன் பற்றி...



அழகிரி பேட்டி ( நன்றி: ரிப்போட்டர் )

சென்னையிலுள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தொடர்பான பிரச்னையில் உங்கள் பெயர் அடிபடுகிறதே?

‘‘கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பிரச்னைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அதற்கான அவசியமும் இல்லை. பொதுவாகவே தமிழகத்தில் எந்தப் பிரச்னை என்றாலும் என் தலையை உருட்டுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. அதுபோல இந்தப் பிரச்னையிலும் என்னை இணைத்து சிலர் பேசியிருக்கலாம்..’’

சென்னையில் நடந்த கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்ற பிறகுதான் பிரச்னை எழுந்ததாகக் கூறியிருக்கிறார்களே..?

‘‘அதாவது கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தங்கள் கோரிக்கையைச் சொல்வதற்காக முதல்வரைச் சந்திக்க விரும்பினார்கள். அவர்களின் கோரிக்கையை முதல்வரிடம் கொண்டு செல்லும் ஒரு சாதனமாக (கருவியாக) என்னைக் கருதினார்கள். அதனால் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு என்னை அழைத்தார்கள். அதில் நான் பங்கேற்றேன். அதில் என்ன தவறிருக்கமுடியும்? அந்தக் கூட்டத்துக்குப் பிறகுதான் பிரச்னை எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.’’

கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு மிரட்டல், அச்சுறுத்தல், கடத்தல், கைது எனச் செய்திகள் தொடர்ந்து வருகின்றனவே?


‘‘இது நீங்கள் காவல்துறையிடம் கேட்க வேண்டிய கேள்வி. என்றாலும் ‘எங்களிடம் யாரும் புகார் தரவில்லை. நாங்கள் யாரையும் கைது செய்யவில்லை’ என சென்னை போலீஸ் கமிஷனர் கூறியிருக்கிறாரே.’’

ஆளும்கட்சி சொல்வதை காவல்துறை செய்கிறது என பா.ம.க. எம்.எல்.ஏ. ஒருவர் சொல்லியிருக்கிறாரே?


‘‘அவர்கள் எந்த நோக்கத்தில் பேசுகிறார்கள் எனப் புரியவில்லை. கலைஞர் தலைமையிலான தமிழக அரசின் வெளிப்படையான நடவடிக்கைகள் அவர்களுக்குத் தெரியும். என்றாலும் யாரையோ திருப்திப்படுத்திட வேண்டும் என்பதற்காக இப்படிப் பேசுகிறார்கள். வேண்டுமானால் இனி, ‘எதிர்க்கட்சியினர் சொல்வதைக் கேளுங்கள்’ என காவல்துறைக்கு இவரைப் (பா.ம.க. எம்.எல்.ஏ.) போன்றவர்கள் உத்தரவிடட்டும்.’’

தயாநிதி மாறன் அளித்த பேட்டியில் ‘நீங்கள் ‘ஹாத்வே’க்கு மாறவேண்டும்’ என கேபிள் ஆபரேட்டர்கள் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து மிரட்டப்பட்டார்கள் எனச் சொல்லியிருக்கிறாரே?

‘‘இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? ‘உஜாலாவுக்கு மாறிவிட்டோம்’ என்ற விளம்பரத்தைத்தான் நான் பார்த்திருக்கிறேனே தவிர, வேறெதற்கும் மாறுங்கள் எனச் சொல்லும் விளம்பரங்களைப் பார்த்ததில்லை.’’

‘இந்த கேபிள் தொடர்பான பிரச்னைகள் மற்றும் கைதுகள் முதல்வருக்குத் தெரியாமல் நடக்கின்றன. அவருக்குத் தெரிந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்’ என்கிறாரே தயாநிதி மாறன்?

‘‘அவர் இந்தத் தகவலை அவரது நாளிதழில் (தினகரனில்) கூறியிருந்தால், அதைப் படிப்பதற்கான வாய்ப்பு எனக்கில்லை. அந்த இதழை நான் படிக்கவும் மாட்டேன். அதுபோல அவர்கள் சேனலையும் பார்ப்பதில்லை.. ஆனால், முதல்வருக்குத் தெரியாமல் நடக்கின்றன என அவர் சொல்வதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. முன்பிருந்த முதல்வரைப் போல எடுப்பார் கைப்பிள்ளையாக, பிறர் சொல்வதை மட்டுமே கேட்டு ஆட்சி செய்யும் நிலையில் கலைஞர் இல்லை. அனைத்துத் துறைகளிலும் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக, முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்காக அல்லும்பகலும் பாடுபடுகிறார். ஏழைஎளிய மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை, சிந்தித்துச் சிந்தித்து செயலாக்கிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு இந்தியாவிலுள்ள முதுபெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கும் கலைஞர், எப்போதுமே சட்டத்துக்கு உட்பட்டுத்தான் நடப்பார். நேர்மையான நடவடிக்கையை மேற்கொள்வார் என்பது கலைஞரால் எம்.பி. பதவி பெற்ற தயாநிதிக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.’’

‘இத்தனை காலம் எனக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட சோதனைகள் இப்போது எங்களைச் சார்ந்து தொழில் செய்பவர்களையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது’ என தயாநிதிமாறன் வேதனையுடன் கூறியிருக்கிறாரே?

(கிண்டலாக) ‘‘யார் வேதனையில் கூறுகிறார்கள்.. யார் மகிழ்ச்சியில் கூறுகிறார்கள் என்பதெல்லாம் உங்களுக்குத்தான் தெரிகிறது. இத்தனை காலம் ஏற்பட்ட சோதனைகள் என தயாநிதி எதைச் சொல்கிறார்? கட்சிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட லட்சக்கணக்கானோர் தி.மு.க.வில் இருக்கும்போது, திடீரென தி.மு.க.வின் அரசியலில் நுழைந்த அவருக்கு எம்.பி. சீட் கொடுக்கப்பட்டது. அவரது வெற்றிக்காக கலைஞர் அரும்பாடுபட்டார். எம்.பி. பதவி பெற்றதோடு மத்தியில் கேபினட் அமைச்சர் பதவியையும் பெற்றார். தேசிய அளவிலான முக்கியத் தலைவர்களுக்கு கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டார். இதையெல்லாம்தான் சோதனை என்கிறாரா எனத் தெரியவில்லை. வேதனையோ.. வியர்வையோ சிந்தாமல் உச்சாணியில் அமர்த்தப்பட்டவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.’’

தயாநிதி மாறன் தி.மு.க. எம்.பி.யாக இருக்கிறார். அவர் தனது லெட்டர் பேடிலேயே அவர் சார்ந்த கட்சி ஆட்சி நடத்தும் மாநிலத்தின் காவல்துறையை விமர்சித்துக் கடிதம் கொடுத்திருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்...?

‘‘இது போன்ற சம்பவங்களின் போதுதான் அவர் கட்சியில் இருப்பதே தெரிகிறது. எத்தனையோ தி.மு.க. மாநாடுகள், கூட்டங்கள் நடந்து வருகின்றன. அங்கெல்லாம் அவரைக் காண முடியவில்லை.’’

தி.மு.க. எம்.பி.யாக இருந்து கொண்டு அவர் தி.மு.க. அரசின் காவல்துறையை விமர்சித்ததால், அவர் எம்.பி. பதவி குறித்தும் கட்சி வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளதாமே..?

‘‘அப்படியா.. அது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று தெரியும். கலைஞருக்கு கொடுக்கத்தான் தெரியும். பறிக்கத் தெரியாது.’’

‘ஓட ஓட விரட்டினால் நான் எங்கேதான் போவேன்’ என தயாநிதி மாறன் சொல்கிறாராமே?

‘‘இது என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியல்ல. எனக்குச் சம்பந்தமில்லாதது இது. அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அவருக்கும் எனக்கும் எந்த ஒட்டோ, உறவோ கிடையாது.’’

ஒரு சீனியர் அமைச்சர் உங்களை உசுப்பிவிடுகிறார் என்கிறார்களே?

‘‘உசுப்பிவிடுவதற்கு நான் ஒன்றும் உறங்கிக்கொண்டிருப்பவன் அல்ல. மற்றவர்கள் சொல்வதைக் கேட்பேன். அதே நேரத்தில் சுயமாகச் சிந்திப்பேன். சுயமரியாதைக்கு பங்கம் வராதவாறு முடிவெடுப்பேன்.’’

‘ஹாத்வே’யில் உங்களுக்கும் அமைச்சர் ஆற்காட்டாருக்கும் பங்குண்டு என்கிறார்களே?

(சற்று கோபமாக) ‘‘எதில்தான் என்னை விட்டிருக்கிறார்கள்? ஏதாவது வில்லங்கம் என்றால் அதில் என் பெயரை இழுத்துவிடுவது வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் கூட மதுரை சம்பக்குளம் மயானத்தை மாநகராட்சியில் தீர்மானம் போட்டு அகற்றினார்கள். உடனே அதற்குக் காரணம் நான்தான் என சிலர் பேசினார்கள். இந்தச் சம்பவம் நடந்தபோது நான் சென்னையில் இருந்தேன். அதனால் எனக்கு இது குறித்துத் தெரியாது. என் காதுகளுக்கு இந்தத் தகவல் வந்தவுடன் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினேன். மீண்டும் மயானம் இருந்த இடத்தில் செயல்பட ஏற்பாடு செய்தேன். கடந்த ஞாயிறன்றே முடிந்த விஷயம் இது. பத்திரிகைகளிலும் இது தொடர்பான செய்தி வந்தது. மீண்டும் மயானம் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், மயானம் அகற்றப்பட்டு அப்படியே இருப்பது போலவும், மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருப்பது போலவும் இன்றைக்கு வந்த ஓர் இதழில் செய்தி வந்திருக்கிறது. இது விஷமத்தனமல்லவா. இதற்கு நான் என்ன சொல்லமுடியும்? இதுபோலத்தான் எல்லா விஷயங்களும்.’’

உங்கள் மகனை பங்குதாரராகக் கொண்டு ‘ராயல் கேபிள் விஷன்’ ஆரம்பிக்கப்பட்டிருக்கிறதாமே.?


‘‘வேறு யாராவது இந்த நிறுவனத்தைத் தொடங்கியிருந்தால், நீங்கள் கேள்வி கேட்டிருக்கமாட்டீர்கள். என் மகன் என்பதால் கேட்கிறீர்கள். அவர் என்ன பாவம் செய்தார்? அவர் தொழில் தொடங்கக்கூடாதா? தொழில் தொடங்குவது என்பது ஜனநாயக விரோதச் செயலா?’’

உங்கள் பிறந்தநாள் விழா முடிந்தபின்னரும் கூட அது ஆடம்பர விழா என்ற விமர்சனங்கள் ஓயவில்லையே?

‘‘இதற்கான பதிலை ஏழை எளிய ஐம்பத்தேழு ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தி வைத்தபோதே நான் சொன்னேன். என் பிறந்தநாள் விழாக்கள் மூலம் அளிக்கப்படும் நலத்திட்ட உதவிகளை தி.மு.க.வினர் மட்டும் பெறவில்லை. பல்வேறு கட்சியினரும் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் சாதி, மத பேதம் பாராமல் ஏழை எளிய மக்களும் பயனடைந்திருக்கிறார்கள். இது சிலருக்குப் பொறுக்கவில்லை. விமர்சனங்கள் மூலம் ஏழைகளுக்கு நல்ல பயன்கள் கிடைப்பதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். என்னுடைய பிறந்தநாள் விழா மட்டுமல்ல; கலைஞரின் பிறந்தநாளையொட்டி எண்பத்து நான்கு ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்தி வைப்பேன். யார் எந்த மூலையில் நின்று இது குறித்துக் கத்தினாலும் எனக்குக் கவலையில்லை. கலைஞருக்காக உயிரைத் தரவும் சித்தமாக இருக்கும் தொண்டனுக்காகவும் ஏழை, எளிய மக்களுக்காகவும் நல்லதை _ என்னால் முடிந்ததை என் உயிர் உள்ளவரை செய்து கொண்டே இருப்பேன்.’’

எப்போது பிரச்னை என்றாலும் உங்கள் பெயர்தானே அடிபடுகிறது. பிரச்னையில் சம்பந்தமில்லாமல் உங்கள் பெயரை பிறர் சொல்ல முடியுமா?


‘‘நீங்கள் சொல்வது உண்மைதான். அதே நேரத்தில் அது ஏன் என்றும் யோசித்திருக்கிறேன். இன்றைக்கு தி.மு.க.வுக்கோ, தி.மு.க. தொண்டனுக்கோ ஏதாவது ஒரு பிரச்னை என்றால், அவர்கள் திரும்பிப் பார்ப்பதும் நினைத்துப் பார்ப்பதும் என்னைத்தான். காரணம், பிரச்னைகளில் அவர்களோடு நான் நிற்பேன் என அவர்களுக்குத் தெரியும். கலைஞரின் தலைமை தொடரவும் காலகாலத்துக்கு தி.மு.க. இயக்கம் நாட்டை ஆளவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு என்னைப் போல வேகமாகச் செயலாற்றக் கூடியவர்கள் கட்சியில் பலர் இருக்கிறார்கள். கட்சித் தலைவரின் மகன் என்பதால் அந்தப் பலரில் நான் முதன்மைப்படுத்தப்படுகிறேன். ஏதாவது புகார் கூறினால், விமர்சித்தால் நான் சோர்ந்து போவேன், ஒதுங்கிக்கொள்வேன் என எதிர்க்கட்சியினர் நினைக்கலாம். புகார் கூறி என்னை முடக்கிவிட்டால் மற்றவர்களும் அமைதியாகிவிடுவார்கள் என அவர்கள் கணக்குப் போடலாம்.. அதற்காகவே அவர்களால் நான் குறிவைக்கப்படுவதாக நினைக்கிறேன். ஆனால், அவர்கள் தீயை காகிதத்தால் மூடப் பார்க்கிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்’’



பரபரப்பை ஏற்படுத்திய தயாநிதிமாறன்

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மக்களவையில் மத்திய அமைச்சர்கள் பகுதியில் அமர்ந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
முதல்வர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்ட பிறகு மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் ஓரங்கட்டப்பட்டார்.

சுமங்கலி கேபிள்ஸ் நிறுவனத்திற்கும், ஹாத்வே நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட போட்டியால் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீஸ் கமிஷனரிடம் தயாநிதிமாறன் புகார் செய்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாள் விளம்பரங் களை தினகரன் மற்றும் தமிழ் முரசு பத்திரிகைகள் வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று காங்கிரஸ் தலைவி சோனியாவையும், அவரது மகன் ராகுலையும் சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ரெயில்வே அமைச்சர் லாலு பிரசாத் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, அவருக்கு பின் வரிசையில் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டசுக்கு அருகில் தயாநிதிமாறன் அமர்ந்திருந்தார்.

மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஏ.ராஜாவுக்கு முன்வரிசையில் தயாநிதிமாறன் அமர்ந்திருந்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

பழைய பதிவு: எலாஸ்டிக் இல்லாத ஜட்டி

Read More...

அட நம்ம சரத்குமார் !

மகாகவி பாரதியாரைப் பற்றி கனிமொழி எம்பி பேசிய பேச்சுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பன்னாட்டு தமிழ் நடுவத்தின் 2வது தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய கவிஞர் கனிமொழி. "தமிழ் மெல்லச்சாகும் என்று கூறிய பாரதிக்கு இது ஒரு அரை கூவல் தமிழ்வாழும் அதையாராலும் அழிக்க முடியாது என்று மாணவர்கள் சூளுரை ஏற்க வேண்டும் என்று வீர உரையாற்றி இருப்பதாக வெளிவந்த பத்திரிகை செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

பாரதியின் பாடலை பழுதுற படித்துவிட்டு, அந்த பழுத்த கவிஞன் மீது பழிசுமத்தி இருக்கும் செயல்கண்டு நடுக்கமுற்றேன். தமிழால் பாரதி தகுதிபெற்றதும், தமிழ் பாரதியால் தகுதிபெற்றது என தமிழ் கூறும் நல்லுலகம் ஏகோபித்த குரலால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த முண்டாசுக் கவிஞனின் பாடலை முழுமையாகப் படிக்காமல், முரணாகப் புரிந்து கொண்டு, அவன் காண விருப்பப்பட்ட புதுமைப் பெண்களுள் ஒருவரான நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பழிசுமத்தி இருப்பது, அந்த இறவாத கவிஞனை அவமானப்படுத்து வதாகும்.

பாரதி தன் பாடல்களுள் ஒன்றாக தமிழ்தாய் என்னும் தலைப்பில் தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் என்னும் உப தலைப்பில் "தாயுமாணவர் ஆனந்த் களிப்புச் சந்தமாக எழுதிய கவிதை வரிகளில் மற்ற மொழிகளுக்கு நிகரான நுட்பங்களும், மேன்மை கலைகளும் தமிழினில் இல்லை என்று தமிழ் துவேசம் கொண்ட ஒரு பேதை உரைப்பதாகவும், அந்த பெரும் பழியைத் தீர்க்க எட்டுத்திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று தமிழ்மக்களை தமிழ்த்தாய் வேண்டுவது போலவும் ஒரு கற்பனையான உரையாடலை கவிதை வரிகளாக்கினான். அப்பாடல் வரிகள் இதோ

"இன்னொரு சொல்லினைக் கேட்டேன் இனி
ஏது செய்வேன் எனதாருயிர் மக்காள்
கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்
புத்தம் புதிய கலைகள்பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கேஅந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லைஅவை
சொல்லுத் திறமை தமிழ் மொழிக்கில்லை
மெல்லத்தமிழினிச் சாகும்அந்த
மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்
என்றந்தப்பேதை உரைத்தான்ஆ
இந்த வசை எனக்கெய்திடலாமோ!
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"


இது தான் அந்தப்பாடல்

இப்படி ஒரு பேதை தமிழை பதிக்க, அதற்கு வருந்திய தமிழ்த்தாய் தமிழ் மக்களிடம் வேண்டுவதாக வந்த அந்த கற்பனைப் பாடலை தவறாக உள்வாங்கிக் கொண்டு, அந்த மாபெரும் தமிழ்க் கவிமீது பாய்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்குங்காணோம்'
என்றவன் பாடலை பிழையுற உணர்ந்து கொண்டு, ஒரு பெருங்கவி மீது கரும்பழி சுமத்தியிருப்பது கவலைக்குறியது. அதுவும் தொல்காப்பியப் பூங்கா தந்த முதலமைச்சரின் "தமிழ்தோட்டத்தில் பூத்த கவிஞர்' இப்படி தவறாக தமிழ்க்கவியின் மீது தகாத பொருளால் குற்றம் சுமத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்

Read More...

Chak De Railways

"We have created an organization where every child in this country will say chak de Railways. Everybody is happy with the Railways" - Lalu

ரயில்வே பட்ஜெட்டை மத்திய அமைச்சர் லாலு பிரசாத் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்தார்....

2007-08ம் ஆண்டில் ரூ. 25,000 கோடி லாபம் பெற்று ரயில்வே துறை சாதனை படைத்துள்ளது.
இந்த ஆண்டு 53 புதிய ரெயில்கள் விடப்படும் என்றும், 10 ஏழைகள் ரதம் கூடுதலாக அறிமுகம் செய்யப்படும் என்றும் ரெயில்வே அமைச்சர் லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.

.
பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட் வழங்கப்படும் என்றும், வயதான பெண்மணி களுக்கு தற்போது வழங்கப்படும் 30 சதவீத சலுகை 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை ரெயில்வே அமைச்சர் லாலு பிரசாத் இன்று 12 மணியளவில் தாக்கல் செய்தார்.

முன்னதாக 11 மணிக்கு அவை கூடிய போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், விவசாயிகள் தற்கொலை பிரச்சனை தொடர்பாக ரகளையில் ஈடுபட்டதால் அவை 1 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து பகல் 12 மணியளவில் லாலு பிரசாத் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார்.

ரெயில்வேயின் லாபம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக உயர்ந்து இருப்பதாகவும் இந்த நிதி ரெயில்வேயை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பொது அறிவிப்பு வசதி ஏற்படுத்தப்படும்.
* நீண்ட தூர ரெயில்களில் அடுத்த நிலையம் பற்றிய அறிவிப்பு டிஜிட்டல் பலகையில் வெளியாகும்.
* பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் காலங்களில் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* இரண்டு ஆண்டுகளில் 15 ஆயிரம் தானியங்கி பயணச் சீட்டு இயந்திரங்கள் அமைக்கப்படும்.
* ரெயில்களில் மாடூலர் கழிப்பறை வசதி.
* 2009ல் ரெயில்களுக்கு தகவல் தொடர்பு இணைப்பு வசதி.

* சரக்கு போக்குவரத்துக்கான இலக்கு 790 மில்லியன் டன்னாக உயர்வு.
* திட்ட அளவு ரூ.11 ஆயிரம்
கோடியிலிருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்வு.

* எல்லா ரெயில்வேகளிலும் ஸ்மார்ட் காட் முறை.
* நாடு முழுவதும் 50 முக்கிய ரெயில் நிலையங்களில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதி.
* செல்போன் மூலம் ரிசர்வேஷனை உறுதி செய்து கொள்ளும் வசதி.

* ரெயில்வேகள் கால்சென்டரோடு இணைக்கப்படும்.
* ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக டிஜிட்டல் பலகை மூலம் தகவல்கள் தெரிவிக்கப்படும்.
* மேலும் அதிக மார்க்கங்கள் மின்மயமாக்கப்படும்.

* 195 ரெயில் நிலையங்களில் பயணிகள் நடைபாதை அமைக்கப்படும்.
* 200708ல் ரெயில்வேயில் 14 லட்சம் ஊழியர்கள் பணியாற்று கின்றனர்.
* சதாப்தி, ராஜ்தானி ரெயில்களில் பெட்டிகள் மேம்படுத்தப்படும்.

* டிக்கெட்களில் ரெயில்கள் வந்து சேரும் நேரம் அச்சிடப்படும்.
* புதிய வேகன்களை அமைக்க வெளிநாட்டு நிறுவனங்களோடு பேச்சு.
* 2 ஆண்டுகளுக்கு பிறகு வரிசையில் காத்திருக்கும் தேவை இருக்காது.

* 2010ல் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பெட்டிகள்.
* ரெயில் நிலையங்களில் தொடு கணினி மற்றும் கலர் டிவி வசதி.
* தாய்சேய் சுகாதார எக்ஸ்பிரஸ்.

* அனைத்து லெவல் கிராசிங்கிலும் கேங்மேன்.
* ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் அசோக் சக்ரா விருது வென்றவர்களுக்கு இலவசம்.
* மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரை இலவச சீசன் டிக்கெட்.

* வயதான பெண்மணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை.
* 16,548 ரெயில் பாதைகள் புதுப்பிக்கப்படும்.
* பதட்டமான ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு.

* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத சலுகை.
* எண்ணூர் மின் நிலையத்திற்கு புதிய லைன்.
* டெல்லியில் உள்ள ரெயில்வே மருத்துவமனை ஏசி வசதி கொண்டதாக ஆக்கப்படும்.

* ஊழியர் நல நிதி 10 மடங்கு உயர்த்தப்படும்.
* ஹூப்ளி மற்றும் ஜெய்ப்பூர் ரெயில்வே மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.
* 10 புதிய ஏழைகள் ரதம், 53 புதிய ரெயில்கள்.

Read More...

P.A.Krishnan on Jeyamohan -"I wish the writer good luck"

ஜெயமோகன்-விகடன் கட்டுரை பற்றி பி.ஏ.கிருஷ்ணன்.....

Slaps and sticks for calling 'em slapstick
Jeyamohan is one of the well-known writers in Tamil. He is also an occasional iconoclast who manages to anger the establishment. He once annoyed the revered Chief Minister of Tamilnadu by stating that he, the Kalaignar, was no great shakes when it came to literature -- a statement which prompted an indignant poem from the old man. The poem more or less highlighted the point Jeyamohan was trying to make, but the Tamils didn't notice it. They don't easily dig irony.

Jeyamohan is again in trouble now. A few weeks ago, he wrote two rip-roaring pieces on the two great icons of the Tamil filmdom -- MGR and Sivaji. He published them in his blog as he thought no magazine in Tamil would dare to publish them. This is a rough version of what he says about fighting scenes in the MGR movies: "Our priest Kesavan compared these scenes with distribution of Prasad in his temple. The villains came -- almost neatly -- in a row, got whacked by MGR, returned to available corners to imbibe at leisure what they had received and came back to be whacked again." This is his complaint about the other thespian, Sivaji: "He breaks into singing at the most inopportune moments. The taxi will be waiting, the guests will all be in a hurry, but Sivaji has to sing an interminable song to bid farewell to his sister."

When I was young, I was infected by MGR. He used to come in pantaloons which would have looked garish on horses, but I loved him and his skill in fencing. In his earlier movies he paired with thick-waisted heroines who looked like his older sisters. He was perhaps not allowed to choose. When he was, he chose girls young enough to be his grand-daughters. I didn't mind at all. I was sort of neutral about Sivaji, but I hated his thick jowls. He was called, for some mysterious reason, the Marlon Brando of Tamil Nadu, but unlike the Hollywood mumbler, he spewed his dialogues like ticker-tapes which came out thick, convoluted and fast. I didn't know what good cinema was. Most Tamils still don't know what good cinema is.

What makes a good movie? I am not talking of a great movie. Just a good movie. I read somewhere that a good movie has a capacity to keep you engaged. I have no problem with this simple definition except that it should be able to keep you engaged 50 years hence. Watch Casablanca or our own Raj Kapoor's Awaara. You will know what I mean. Jeyamohan says in his piece on Sivaji that his children burst into laughter when a paunchy Sivaji, acting as the great destroyer Shiva, tried to open his third eye to burn to ashes an elephantine Shakti. This movie was supposed to be one of the many 'master-pieces' of Sivaji. I feel differently when I watch these movies today.

My stomach churns.

It is not that these two thespians have not acted in good movies. Some of their earlier films, which were shot when these actors were not contaminated by fame, are still watchable. But these films are not what these two great men are identified with.

Jeyamohan's essays were shortened and re-published in one of the famous Tamil weeklies, Anandavikatan. The magazine accused Jeyamohan, among other things, of irresponsible writing. The die-hard fans of MGR and Sivaji who would have never read the writer's blog had a chance to read what he wrote. They naturally did not like what they read. Jeyamohan now feels like a miniature Taslima Nasreen. Maniacs, he says, ring him everyday and threaten to tear him limb from limb. The plus point is that his blog now scores a zillion hits.

The Tamils are justifiably famous for many things. Unfortunately, subtlety and satire are not among them. Their cinemas, excepting the greatest of them, want to underline, highlight, repeat, exaggerate, and do whatever they can to make the audience understand what they want to convey. This was perhaps necessary initially, when people were new to the medium of cinema. But one would have expected the audience to grow up. That they haven't and are still less than juvenile in their appreciation is largely due to the long dominance of the duo.

"I've done a few things that have been comedies," Canadian actress Kathleen Robertson was supposed to have remarked during an interview. "But not intentionally." MGR and Sivaji too had done hundreds of comedies, without any intention of doing them.

The trouble is Jeyamohan has identified them as unintentional comedies, but the duo's fans haven't. I wish the writer good luck.

( Source: Dailypioneer)

Read More...

சூரியக் குடும்ப சூச்சியாம் - நம்மாளுங்க ராவடியாம்!

கலைஞர் கவிதை பற்றி நேற்று முனி பதிவில் ஒரு குறிப்பு இருந்தது. புரியவில்லை, விளக்கவும் என்று சிலர் கேட்டிருந்தார்கள்.
அவர்களுக்காக சென்னை தமிழில் கலைஞர் கவிதை...

சூரியக் குடும்ப சூழ்ச்சியாம்! - கலைஞர் கவிதை
"ஆரியக் குடும்பத்து ஆரணங்கு தான் நான்" என்று
அறை நடுவே அறைகூவல் விடுத்திட்ட அம்மையார்க்கு
அறுபதாம் அகவை வர;
வசந்தம் வந்தது என வாழ்த்துப் பாடி
ஆயிரக்கணக்கில் செலவிட்டு
அவர் சீடகோடி விளம்பரங்கள் செய்திடுங்கால்,

"சூரியக்குடும்பத்து சூழ்ச்சிகள் தாக்காது காத்திடும்
ஈரிலைப் பந்தலென" அவரை வர்ணித்து;
சூரியன் மீது சுள் என்று கோபத்தை உமிழ்கின்றாரே;
என்ன விந்தை?
அண்ணா கண்ட சின்னம் சூரியன் என்பதும்
அதன் பெயரையே டி.வி., க்கு வைத்துள்ளார் என்பதும்
அறியாமல் செய்த தவறா?

அண்ணாவையே மறந்து
அழுக்காறு மிகுந்ததின் விளைவா?
அம்மையே நீவீர்
வாழ்க நன்று;வாழ்க!

நம்மாளுங்க ராவடியாம்! - கவிதைக்கு விளக்கவுரை
பாப்பாத்தி நாந்தாம்மே, பப்பு வேவாதுன்னு
கூப்பாடு போட்டிச்சி கும்பலுக்கு நடுவால
காப்பாத்து சாமீ, கண்ணாலம் அறுவதாம்!
கஸ்மாலம் ஊரெல்லாம் கலீஜு பண்ணிட்டாங்க

சூரியன் சூழ்ச்சிக்கு ரெட்டயெல காவல், ஏரியாவெல்லாம் என்னான்னாமோ சொன்னாங்க பார்றா ங்கொய்யால பேருவெச்ச பெரியாளு யார்றான்னு கேக்குதுங்க எங்கபோயி முட்டிக்க நான்?

அண்ணாத்தொர தெரியாதா? மெய்யாவே தெரியாதா?
என்னாத்த நாஞ்சொல்ல ஏஞ்சாமி அவுருதான்யா.
அண்ணாரு வெச்சபேரு அல்லார்க்கும் தெரியும்டா பன்னாட இதுங்களுக்கு பலவிசயம் மறந்துடுச்சி

என்னாவோ போ, எகத்தாளம் பேசிடுச்சி
மன்னிச்சி வுட்ருமாப்ள மவராசி வாளட்டும்.

Read More...

Monday, February 25, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 25-02-08

இந்த வாரம் முனி இட்லிவடைக்கு எழுதும் கடிதம். கொஞ்சம் பெரிசு, வேலை இல்லை என்றால் படிக்கவும் ;-)

அன்புள்ள இட்லிவடை,

நலமா? உனக்கு சமைக்கத் தெரியுமா? தெரியாதென்றால் எதற்கும் திருமணத்திற்கு முன்பே வரப்போகும் மனைவிக்கு சமைக்கத் தெரியுமா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு முடிவெடு. பெண்ணியக்காரகள் குரலெடுப்பார்கள் என்று பயந்தால் சொந்தமாய் கற்றுக்கொள். எதற்கும் இந்த நியூஸைப் பார் - மனைவி நன்றாக சமைத்து போட வேண்டும் என்று ஒரு கணவர் எதிர்பார்ப்பது தவறல்ல. அதே நேரத்தில் சமையல் செய்யத் தெரியவில்லை என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து விவாகரத்து செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு பரபரப்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆக பெண்கள் எல்லாம் பிளாக்கில் மட்டும் தான் சமையல் செய்கிறார்கள் எழுதுகிறார்கள் போலிருக்கிறது. கணவனே கண்கண்ட தெய்வம் எல்லாம் பழைய படம். புதிய படம் கணவனே சமையல் செய்யும் தெய்வம்.

சமையல் பற்றி இன்னொரு செய்தி.

ருசியான உணவு வழங்காத அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தார் லாலுபிரசாத் யாதவ் - இது செய்தி. இதை தொடந்து மேலும் சில சஸ்பெண்ட் ஆடர்களை கல்கியில் படித்தேன் அவற்றிலிருந்து சில

- அமைச்சர் சொன்ன ஜோக்குக்குத் தாமதமாக சிரித்த அதிகாரி மாற்றம். (இனி எப்பவுமே சிரிக்கமுடியாது.)
- அமைச்சர் தலையில் உச்சாபோன காக்கையைப் பிடிக்காத அதிகாரிக்கு கல்தா. (அமைச்சரை மட்டும் காக்காபிடித்தால் போதாது.)

இது நம்ம சரக்கு..

- சாய்பாபா தந்த மோதிரத்தின் சைஸ் சரியாக இல்லாததால் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சஸ்பெண்ட்

சென்னையில் இயேசு யார்' என்று தலைப்பிட்ட 12 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை வீடு வீடாக வினியோகித்து வருகின்றனர். அதில் "இயேசுவை நம்புகிறவர்கள் நல்ல கதி அடைவார்கள் என்றும், நம்பாதவர்கள் நரகத்திற்குத் தள்ளப்படுவார்கள்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவை ஏற்றுக் கொள்கிறவர்கள் கீழ் கண்ட எளிய ஜபம் செய்யவும் என்று கேட்டு ஜபத்தின் வாசகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி மதமாற்றம் பற்றி எஸ்.குருமூர்த்தி அவர்கள் கட்டுரையை சில வருடங்கள் முன் எழுதியிருந்தார், முடிந்தால் அடுத்த வாரம் அனுப்புகிறேன்.

ஜாதிக் கட்சிகளுடன் நோ கூட்டணி என்று விஜயகாந்த் சொன்னதற்கு திருமாவளவன், "எங்கள் கட்சியினால் 107 பிற்படுத்தபட்ட ஜாதிகள் பயன் அடைந்துள்ளன" என்று பதில் சொல்லியுள்ளார். இனிமேல் "Cast your vote" என்று சொல்லுவதை காட்டிலும் "Caste your vote" என்று தான் சொல்லனும் போலிருக்கிறது..

'குடிசை' ஜெயபாரதி ஆனந்த விகடன் பேட்டியில், விவேக்/வடிவேலு இரண்டு பேரும் தேசிய விருது வாங்க இவரை அணுகினார்கள் என்று பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் இரண்டு பேரும் கதையெல்லாம் கேட்டுவிட்டு 'புரொடியூசரையும் பிடித்துக்கொண்டு வாருங்கள்' என்று சொல்லி அனுப்பிவிட்டார்களாம். காமெடி நடிகர்களிடம் வேற என்னத்தை எதிர்பாக்க முடியும் ?

அதிர்ச்சியில் ஆயா
அரைக்கீரை விற்கிறான்
அம்பானி

- பரிதியன்பன்

இந்த எஸ்.எம்.எஸ் ஹைக்கூ நன்றாக இருக்கிறதா? செல்ஃபோனில் சிற்றிதழ் நடத்தும் கன்னிக்கோவில் இராஜா என்பவர் அனுப்பியது. தினமும் ஹைக்கூ, சிற்றிதழ் அறிமுகம், இலக்கியவிழா, போலியோ தினம் ( போலி இல்லை ), இரத்த தான முகாம் என்று உபயோகமான தகவல்களை அனுப்புகிறார். உனக்கும் எஸ்.எம்.எஸ் வேண்டும் என்றால் 98412 36965 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்.

'வாட்டர்' படத்தில் நடித்த மனோரமா(வயது 81) என்ற நடிகை சில நாட்களுக்கு முன் காலமானார். அதை தொடர்ந்து, தீபா மேத்தா மனோரமா பற்றி பேட்டி கொடுத்தார்(DNA என்ற பத்திரிக்கைக்கு), இதெல்லாம் ஓ.கே, ஆனால் பேட்டிக்கு பக்கத்தில் பெட்டிச் செய்தி ஒன்றும் போட்டு பேத்தியிருக்காங்க. என்ன கொடுமை இது ஆச்சி? அவங்களுக்கு ஆயுசு நூறுதான்.

ஐபிஎல் நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் 8 அணிகளில் இடம் பெற உள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் மும்பையில் நடைபெற்றது பார்த்திருப்பாய். இதே மாதிரி தமிழ் வலைப்பதிவுலகில் ஏலம் நடந்தால் எப்படி இருக்கும்? சர்வேசனிடம் தான் கேட்க வேண்டும்.

ஆன்மிகமும் பகுத்தறிவு இயக்கமும் ஒன்றோடு ஒன்று மோதாமல் சமுதாயப் பணி செய்ய வேண்டும் என்று கலைஞர் சொல்லியுள்ளார். மோதாமல் + சீண்டாமல் என்று சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இந்தியாவிலுள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள் திமிர்ப் பிடித்தவர்களாக உள்ளனர். இதர நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு மிகுந்த அதிகாரமும் செல்வாக்கும் இருப்பதாலேயே, அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்கிறார் அத்வானி. நோ கமெண்ட்ஸ்.

எஸ்.வி.சேகர் பொதுக் குழு மீட்டிங் நடக்கும் போது எதற்கு தலைமைச் செயலகம் சென்றார் என்பது பெரிய புதிராக இருக்கிறது. ஒரு பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார்--
"அரசு, போக்குவரத்துத் துறையில், அரசு வாகனங்களுக்கு பயன்படுத்தபடுத்துவதற்காக சில கார் எண்களை தனியாக ஒதுக்கி வைத்திருப்பார்கள் அந்த எண்களில் ஒன்றை தனி நபர் ஒருவருக்கு ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால், அதை அரசுதான் செய்ய வேண்டும். அதற்காகவே நான் சட்டமன்றச் செயலாளரைப் பார்க்கப் போனேன்" என்கிறார். போன வாரம் "காதுல பூ" டிராமா பார்த்தேன் ,நல்ல தமாஷான நாடகம்.

இந்த வாரம் துக்ளக் கொஞ்சம் கனமாக இருந்தது, என்னடா என்று பார்த்தால் ஜெ-யின் 60வது பிறந்த நாள் வாழ்த்து விளம்பரம் இரண்டு பக்கம் வந்துள்ளது. துக்ளகில் வருவதில் ஆச்சரியபட என்ன இருக்கிறது? ஆனால் தினகரன், தமிழ்முரசு நாளிதழ்களில், அதிமுகவினர் கொடுத்த ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து விளம்பரங்கள் பார்த்தால் நிச்சயம் நீ ஆச்சரியபடுவாய். ஒரு பக்கத்துக்கு இரண்டு என்ற கணக்கில் நேற்றைய தினகரன் முழுவதும் அம்மா அம்மா என்று கூவியது. அதே போல் தமிழ்முரசு பேப்பரிலும், தமிழ்முரசு டைட்டில் தவிர மற்றவை எல்லாம் ஒரே அம்மா காவியம்தான். உடனே கலைஞர் (வேற என்ன செய்வார், கொதித்து போய் இதை பற்றி ஒரு) கவிதையை தன்பங்குக்கு எழுதியிருக்கிறார். அம்மாவுக்கு, ஏதோ அவரால் முடிந்த பிறந்தநாள் அன்புக் காணிக்கை.( அதிலும் "சூரியக்குடும்பத்து சூழ்ச்சிகள் தாக்காது காத்திடும் ஈரிலைப் பந்தலென" என்ற விளம்பரம் அவரை ரொம்ப டிஸ்டர்ப் செய்துவிட்டது )

டென்ஷன் செய்த விளம்பரம் கீழே...



(கிளிக் செய்து பார்க்கவும் )
டென்ஷனில் எழுதிய கவிதை
"ஆரியக் குடும்பத்து ஆரணங்கு தான் நான்" என்று
அறை நடுவே அறைகூவல் விடுத்திட்ட அம்மையார்க்கு
அறுபதாம் அகவை வர;
வசந்தம் வந்தது என வாழ்த்துப் பாடி
ஆயிரக்கணக்கில் செலவிட்டு
அவர் சீடகோடி விளம்பரங்கள் செய்திடுங்கால்,

"சூரியக்குடும்பத்து சூழ்ச்சிகள் தாக்காது காத்திடும்
ஈரிலைப் பந்தலென" அவரை வர்ணித்து;
சூரியன் மீது சுள் என்று கோபத்தை உமிழ்கின்றாரே;
என்ன விந்தை?
அண்ணா கண்ட சின்னம் சூரியன் என்பதும்
அதன் பெயரையே டி.வி., க்கு வைத்துள்ளார் என்பதும்
அறியாமல் செய்த தவறா?

அண்ணாவையே மறந்து
அழுக்காறு மிகுந்ததின் விளைவா?
அம்மையே நீவீர்
வாழ்க நன்று;வாழ்க!


பெருந்தலைவர் காமராஜரின் வாழக்கை வரலாற்றை காமராஜ் என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையைத் தழுவி 'முதல்வர் மகாத்மா' என்ற படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் கதை சுவாரசியமானது.

இந்தியா சுதந்திரமடைந்து அறுபது ஆண்டுகளுக்குப் பின் அவர் மீண்டும் வந்தால் இந்த நாடு எவ்வாறு அவரை எதிர்கொள்ளும்? நாட்டின் இன்றைய பிரச்சினைகளை அவர் எவ்வாறு எதிர்கொள்வார் என்பதைக் காட்டுகிறது இப்படம். தம் வாழ்நாளில் எந்த ஓர் அரசுப் பதவியையும் வகிக்காத மகாத்மா காந்தி இந்தியாவின் ஒரு மகாணத்தில் தேர்தலில் போட்டியிட்டு, வென்று முதல்வராவதுதான் கதை. எனக்கு ஒரு டவுட் காந்தி இருந்திருந்தால் ராமர் சேது பிரச்சனையை எப்படி எதிர்கொள்வார் என்பது தான். உனக்கு ஏதாவது தெரியுமா?

பிரிட்டனை பொருத்தவரை குண்டாக இருப்பவர்கள் ஆரோக்கியத்தை நினைத்து கவலைப்படு வதோடு, வரியையும் நினைத்து கவலைப்பட்டாக வேண்டும். காரணம் அந்நாட்டில் அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு அந்நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங் கள், உடல் பருமன் கொண்டவர் களுக்கு, பருமன் வரியை விதிக்க தீர்மானித் துள்ளனவாம். ( ஏதோ நமிதா படம் போட இந்த நியூஸ் )

Read More...

விஜயகாந்த் பற்றி கலைஞர் கவிதை

உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவு - கறுப்பு எம்.ஜி.ஆர். என்றவர் `டெபாசிட்' இழந்து நிற்கும் பரிதாபம் கருணாநிதி கவிதை

விஜயகாந்தால் பாதிப்பு;
கலைஞர் கொதிப்பு;
கவிதை உதிர்ப்பு

இது கவிதையா என்று கேட்பவர்கள், கீழே கலைஞர் எழுதியிருப்பது கவிதையா என்று விளக்கவும்


ஆர்ப்பாட்டமென்ன, போர்ப்பாட்டு என்ன;

"சார்பட்டா'' பரம்பரையென்ற சவுக்கடிப் பேச்சுத்தான் என்ன; என்ன?

வேர்பட்டுப் பிளக்கின்ற பூமியிலே மழை

நீர் பட்டு முளைக்கின்ற காளான் போலே

ஒரு கட்சி உதிக்கும் மறு கட்சி பிறப்பதற்குள்!

இரு கட்சி இருள் போக்குமென்று இங்குள்ள ஏடெல்லாம்

திருவிழா தினந்தோறும் நடத்திப் பார்த்து; ஏமாந்த காரணத்தால்

இரு விழி மூடிக் கொண்ட குருடுகளாய் ஆகிவிட்டார்!

நல்லாட்சி நடக்கும் தமிழகத்தில்

உள்ளாட்சி இடைத்தேர்தல் நடந்ததம்மா!

நடிகர் இருவர் ஆட்சியிலே: நாடு வரப்போகின்றதென்று;

நடுநிலை ஏடுகள்கூட நம்மீது கெடு மதி கொண்டு சீறி

நன்மையெது தீமையெது என்பதறியாது அறவழிகள் மீறி

உண்மையைப் பொய்யென்றும், பொய்யைப் புனிதமென்றும்

வெளியிட்டார் செய்திகளை: அவையனைத்தும்

ஒளிபட்ட இருளைப் போல் ஓடி ஒளிந்ததம்மா!

நூற்றுக்கு ஒரு விழுக்காடு இடம்கூட இவர்தம் பொய்க்

கூற்றுக்கு செவி சாய்த்து வெற்றியெனக் கிடைக்கவில்லை!

கறுப்புநிற எம்.ஜி.ஆர். என்றும், கர்ம வீரர் தொண்டர் என்றும் கர்ச்சித்தோர்

கட்டுத் தொகையைக் கூட இழந்து நிற்கும் பரிதாபத்தை என்ன சொல்ல?

எறும்புத் தலைகளை இமய மலைகளாய் வர்ணித்த இதழாளர்களே:

கரும்பிலும் இனிய செய்தியாய் கழகக் கூட்டணியன்றோ

பெருவெற்றி ஈட்டியது இன்று!

அன்பு உடன்பிறப்புக்காள், அதற்குள் துள்ளிக் குதிக்காமல் -

அடுத்து வரும் வெற்றிகட்கு இது அச்சாரமென அயராது உழைத்திடுக!

Read More...

Sunday, February 24, 2008

நான்(கேப்டன்) வளர்கிறேன் மம்மி !

ஜெ நான் தான் உண்மையான எம்.ஜி.ஆர் வாரிசு என்று அறிவிப்பு, கலைஞர் பற்றி குமுதம் இதழுக்கு விஜயகாந்த் அளித்தப் பேட்டியைத் தொடர்ந்து அவருக்கு மான நஷ்ட ஈடு வழக்கு, இன்று "அரசியலிலிருந்து விஜயகாந்த்தை விரட்டாமல் விட மாட்டோம்" என பாமக தலைவர் ஜி.கே.மணியும், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவனும் கூட்டறிக்கையில் சொல்லியுள்ளார்கள்.


இந்த சுண்டைக்காய் கூட்டறிக்கைக்கு எல்லாம் கேப்டன் பயப்படுவாரா ? விஜயகாந்தை கண்டு பேண்டிலேயே உச்சா போக ஆரம்பித்திருக்கிறார்கள்.






திரைப்படங்களில் காரசாரமாகப் பேசிக் கொண்டிருக்கும் நடிகர் ஒருவர், தமிழக அரசியலுக்குப் புதிய அரிச்சுவடி எழுதப் போகிறேன் என்று புறப்பட்டிருக்கிறார்.

இந்தப் பகுதி நேர அரசியல்வாதி பாமகவையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் சீண்டிப் பார்த்திருக்கிறார். சாதிக் கட்சிகள் என்றும், அவற்றுடன் கூட்டணி இல்லை என்றும் `வசனம்' பேசியிருக்கிறார்.

இவருக்கு முன்னால் கட்சிகள் எல்லாம் வரிசையில் நின்று தவம் கிடப்பதைப் போல வாய் நீளம் காட்டியிருக்கிறார்.

உயிர்த் தியாகம், ஓய்வில்லாத உழைப்பு, ஈடு இணையற்ற இன உணர்வு, அளவிட முடியாத மக்கள் ஈடுபாடு ஆகியவற்றை உரமாகக் கொண்டு ஓங்கி வளர்ந்து நிற்கும் இயக்கங்கள் தான் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும்.

இந்த நடிகருக்கு, இவையெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை. அரசியல் நாகரிகம் என்றால், பண்பாடு என்றால், பணிவு என்றால் என்னவென்று கேட்கும் ஒரு நபரிடம் இதை எதிர்பார்க்கவும் முடியாது.

நாங்கள் ஜாதிக் கட்சிகளா?:

பல தேர்தல்களைச் சந்தித்து மக்களின் ஆதரவையும், அங்கீகாரத்தையும் பெற்ற எங்களைப் பார்த்து சாதிக் கட்சி என்கிறார்.

ஆனால், அவர் கட்சியைத் தொடங்கிய குறுகிய காலத்திற்குள்ளாக அவருடைய போக்குப் பிடிக்காமலும், அவரை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற `சக்தி'களின் நடவடிக்கைகள் பிடிக்காமலும் அவரது கட்சியிலிருந்து வெளியேறிச் சென்றவர்களிடம் கேட்டால், அங்கே என்ன நடக்கிறது? எது ஆட்டிப் படைக்கிறது? எந்த அடிப்படையில் அங்கே கட்சியில் பதவி அளிக்கப்படுகிறது? என்று கேட்டால் அவர்கள் எல்லோரும் கதை கதையாகச் சொல்கிறார்கள்.

சாதி அரசியல் என்று பேசி, ஏதோ எல்லோருக்கும் மேலானவர் என்பது போல நாடகம் ஆடுகிற இந்த நடிகருக்குப் பாமக தோன்றிய வரலாறும், அதன் தியாகமும் தெரியுமா? விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் பிரவேசத்தின் மகத்துவம் புரியுமா?.

சாதிகள் ஒழிய வேண்டும், தமிழகத்தில் சமத்துவச் சமுதாயம் அமைய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு செயல்படுவதுதான் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு.

ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கைக் கீற்றாகத் தமிழக அரசியல் வானில் உதித்திருக்கும் இயக்கங்கள்தான் இவை. போராட்டக் களங்களைச் சந்தித்து, உயிர்த் தியாகங்களைச் செய்து வளர்ந்துள்ள கட்சிகள்.

எங்களால் 107 ஜாதிகளுக்குப் பலன்:

இட ஒதுக்கீட்டிற்காகப் போராட்டம் நடத்தப்பட்டது என்றால், அதனால் பலனடைந்திருப்பது குறிப்பிட்ட ஒரு சாதி மட்டுமல்ல, ஏறக்குறைய 107 சாதிகள் பலனடைந்திருக்கின்றன.

ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த இந்த சாதிகள் இன்று பலனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. அரசியல் அதிகாரம், பொருளாதார முன்னேற்றம் பெற்றிருக்கின்றன.

உலகத் தமிழர்களின் அடையாளம் அழிந்து போகாமல் தடுக்கவும், உள்ளூர்த் தமிழர்களின் உரிமைகள் பறிபோகாமல் இருப்பதற்கும் பாமகவும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவற்றின் வளர்ச்சியையும், செல்வாக்கையும் கண்டு பொறுக்க முடியாத ஆதிக்கச் சத்திகள் கடந்த காலங்களில் `சாதி' எனும் முத்திரை குத்தி தோற்றுப் போயிருக்கின்றன.

விஜயகாந்த் வலையில் தமிழகம் சிக்காது:

அந்த ஆதிக்கச் சக்திகளின் வழியில் இப்போது இந்த நடிகரும் எங்களுக்கு எதிராக அட்டைக் கத்தியைச் சுழற்ற ஆரம்பித்திருக்கிறார். தெளிவான சிந்தனையோடு உள்ள தமிழக மக்களைத் திசை திருப்பி, குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் நடிகரின் வலையில் இனி ஒரு போதும் தமிழகம் சிக்காது.

திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டுமே அரசியலுக்கான தகுதி என்று நினைத்துச் செயல்படும் இவர், தமிழகத்தின் பல்வேறு சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்காக இதுவரையில் ஒரு சிறிய துரும்பையாவது எடுத்துப் போட்டிருப்பாரா?

மொழிக் கொள்கையில் இவரது நிலைப்பாடு என்ன? மாநிலத்தின் மக்களுக்காகவும், அவர்கள் உயிரென மதிக்கும் தமிழ் மொழிக்காகவும், அவர்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்காகவும் இதுவரையில் இந்த நடிகர் எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.

இவரது பெயரிலும், இவரை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் சக்திகளின் பெயரிலும் கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது என்றும், ஆனாலும், 5 ஆண்டுகளுக்கு மேல் வருமான வரித்துறைக்கு கணக்கே காட்டவில்லை என்றும், வருமான வரித்துறையினரால் குற்றம் சுமத்தப்பட்டு வீடுகளிலும், நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்ட வரலாற்றை தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

வாலாட்டினால் அடையாளம் காட்டுவோம்:

நடிப்பதற்காக வெள்ளையில் வாங்கியது எவ்வளவு, கறுப்பில் வாங்கியது எவ்வளவு? அப்படி வாங்கி குவித்த பணம் எங்கெங்கு, யார் யார்? பெயரில் முதலீடு செய்யப்பட்டு பல்வேறு கல்லூரிகளாகவும், நிறுவனங்களாகவும் மாறியிருக்கின்றன என்ற கணக்கெல்லாம் எங்களிடம் இருக்கிறது.

எங்களிடம் வாலாட்டினால் அவற்றையெல்லாம் வெளியிட்டு மக்களுக்கு அடையாளம் காட்டிவிடுவோம் என்று எச்சரிக்கிறோம்.

அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களை எல்லாம் வளைத்துப் போட்டுக் கொண்டு, வேலி அடைத்துக் கொண்ட வரலாறும், விழிப்புற்ற தமிழக மக்களுக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.

எதேச்சையாக விமான நிலையத்தில் நடந்துவிட்ட ஒரு சந்திப்பை (காங்கிரஸ் பார்வாளர் அருண்குமாருடனான சந்திப்பு) சாதகமாகக் கொண்டு மனக்கோட்டை கட்டி மகாராஜா போலப் பேச ஆரம்பித்திருக்கிறார்.

எங்களுடன் கூட்டணி இல்லை என்று சொல்வதற்கு இந்த நடிகர் யார்? இதைச் சொல்ல ஒரு தகுதி வேண்டாமா? நாங்கள் சொல்லுகிறோம்; எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் தகுதி இந்த நடிகருக்கும் இல்லை. அவரது கட்சிக்கும் இல்லை.

விரட்டாமல் ஓய மாட்டோம்:

பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் போயும், போயும் ஒரு நடிகருடன், அவரது கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வோமா? அந்தத் தவறை நிச்சயம் நாங்கள் செய்யவே மாட்டோம்.

அரசியலிலிருந்து அரிதாரம் பூசிய இத்தகைய போலிகளை உற்ற தோழர்களின் உதவியோடு விரட்டியடிப்போம், அதுவரை ஓயமாட்டோம்.

Read More...

Saturday, February 23, 2008

கிரிக்கெட் ஏலத்தை பார்த்து கொதித்த நடிகர்

அரேபிய அடிமைகளை சந்தையில் சாட்டையை வைத்துக் கொண்டு ஏலம் விட்டதுப் போன்று விளையாட்டு வீரர்களை ஒரு ஜனநாயக நாட்டில் ஏலம் விடுவது மிகவும் கேவலமான செயல் அது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் இது ஜனநாயக நாடா? பண நாயக நாடா? என தோன்றுகிறது.

இப்படி வீரர்களை ஏலத்தில் எடுப்பது சாதாரண மக்களின் மனதை மிகவும் பாதிக்கும். விளையாட்டை விளையாட்டிற்காக நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த காலம் போய் விஷமத்தனமான சூதாட்டக் களமாக மாறி வந்தால் பிறகு எல்லா துறையிலும் இந்த வழக்கம் வேரூன்றி விடும்.


சொன்னவர் நடிகர் மன்சூர் அலிகான்.

Read More...

திருவண்ணாமலையில் ராக்கெட் சித்தர்

செய்தி, படம் கீழே... ( அனுப்பிய அன்பருக்கு நன்றி )


Read More...

விஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு கலைஞர் எச்சரிக்கை!

"கலைஞர் பேசாத அநாகரீக வார்த்தைகளா" என்ற தலைப்பில் குமுதம் வார இதழ் விஜயகாந்த் பேட்டியை இந்த வாரம் வெளியிட்டது. அதில் கலைஞர் 'பாவடை நாடா' பற்றிய பேச்சை விஜயகாந்த குறிப்பிட்டு பேசியிருந்தார்.

முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு களங்கம் ஏற்படும் வகையில் இந்த பேட்டி உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதை கண்டித்து முதல்-அமைச்சர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கும், குமுதம் வார இதழ் ஆசிரியர் ராமச்சந்திரன் மற்றும் வெளியீட்டாளர் செல்வரங்கம் ஆகியோருக்கும் வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார்....

இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் கேப்டன் பயப்படமாட்டார்


குமுதத்தில் வந்த விஜயகாந்த் பேட்டி
சமீபகாலமாக தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்த் கலக்குகிறார். ஆளுங்கட்சிக்கு எதிராக சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்குவதும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எதிர்த் தாக்குதலில் இறங்குவதும் தமிழக அரசியலில் இப்போதே தேர்தல் நேரத்து ஜுரம். கேப்டனை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். தி.மு.க. அரசுக்கு எதிராக புதிய கணைகளைத் தொடுத்தவர் பேச்சில் நிறைய காரம்! அவ்வப்போது அவருக்கேயுரிய பிரத்யேக நமட்டுச் சிரிப்பு.

‘சட்டசபைக்கு வராமல் சந்து முனையில் சிந்து பாடுகிறார்’ என்று உங்களை முதல்வர் கிண்டலடிக்கிறாரே?

ஜெயலலிதாவின் ஆட்சியின்போது இவர் ஐந்து வருடங்கள் சட்டசபையில் சிந்து பாடினாரா அல்லது கோபாலபுரம் சந்துல சிந்து பாடினாரா? எதிர்க்கட்சி தலைவி என்ற முறையில் ஜெயலலிதா இரண்டு தடவை வந்தாரே! இவர் வெறும் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு போயிருக்கார். நான் பல தடவை பேசியிருக்கேன். ஸ்டாலின் முதற்கொண்டு எல்லா மந்திரிகளின் ரூமிற்கும் போயிருக்கேன். கலைஞரையே மூணு தடவை பார்த்திருக்கேன். இந்தத் தொடரின்போது தொண்டரின் மறைவுக்காக என் தொகுதிக்கு போயிருந்தேன்.

வெள்ள நிவாரணப் பணிகளைப் பார்வையிட கடலூர் பக்கம் வந்த முதல்வர் மந்தாரகுப்பம் வரை வந்துவிட்டு போயிருக்கார். என் தொகுதியில் தண்ணீர் தேங்கலையா? சரி, அப்படித்தான் சட்டசபையில் உருப்படியாக என்னதான் பேசுகிறார்கள்? ‘ஐம்பது வருஷம் முன்ன நீ என்ன பண்ணினே?’ என்று பேசவா அங்கே போறோம்! நான் மக்கள் மன்றத்தில் பேசியதால்தான் இவ்வளவுதூரம் எனக்கு பதில் சொல்றார். சட்டசபையில் நான் பேசியபோது ஒரு தடவையாவது பதில் தந்திருக்கிறாரா? சந்து முனையில் ஓட்டுக் கேட்கப் போறீங்களே... பேசக்கூடாதா? (குரலை உயர்த்துகிறார்)

தை திங்கள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளதற்கு மற்றவர்கள் விழா எடுக்கும் போது, தமிழர் என்ற முறையில் நீங்கள் அதை வரவேற்கக்கூட இல்லையே?

நாட்டில் ஆயிரத்தெட்டு பிரச்னை இருக்கு. இதுவா இப்போது பிரச்னை? வருஷப்பிறப்பு என்றால் ஜனவரி_1 என்பது மக்கள் மனதில் பதிந்துவிட்டது. அதேபோல் தமிழ் வருஷம் என்றால் சித்திரைதான் என்று பதிந்துவிட்டது. நாட்டின் திட்டகமிஷன் ‘ஏழையின் சதவிகிதத்தைக் குறையுங்கள்’ என்றால் அது கூடிக்கிட்டே போகிறது. குஜராத் மாதிரி அதைப் பத்து சதவிகிதத்திற்கு கொண்டு வந்துவிட்டால் அதுவல்லவா சாதனை! இதுவா சாதனை? இதனால் வேலைவாய்ப்பு ஒழிந்துவிடுமா? ஊழல்தான் ஓடிவிடுமா?

வள்ளுவர் கோட்டத்தில் ஜெகத்ரட்சகன் ஏரியா புராவும் ஜிகினா விளக்குப் போட்டு ஒரு விழா கொண்டாடினாரே... எதற்கு? ‘தை’க்கா? (சிரிக்கிறார்) வாலாஜாபாத்தில் மதுபான ஆலையை அனுமதித்தால் வள்ளுவர் கோட்டத்தில் விழா எடுக்கலாம்! நாளைக்கு விருதுநகரில் இன்னொருத்தருக்குக் கொடுத்தால் விழுப்புரத்தில் பாராட்டு விழா நடத்தலாம். இந்த ஊழலை மக்கள் பேசுகிறார்கள் சார்!

உங்களுக்கு அடக்கம் தேவை... ஆணவம் கூடாது என்கிறாரே முதல்வர்?


அடடா... அடக்கத்தைப்பற்றி, அரசியல் நாகரிகம் பற்றி இவர் பேசலாமா? அந்தக் காலத்தில் இந்த ‘அடக்கமான தலைவர்’ எவ்வளவு பேசியிருக்கார் தெரியுமா? காமராஜரையும், ராஜாஜியையும் இவர் பேசாத பேச்சா? எல்லாமே பேப்பரில் இருக்கு. மதுரையில் இந்திராகாந்தியை கறுப்புக் கொடி காட்டி அடித்தவர்கள்தானே... இவர்கள்! நான் அந்த பயங்கரத்தை கண்ணால பார்த்து ஓடினவன். அப்போ எனக்குச் சின்ன வயசு.

சட்டசபையில் திராவிடநாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பினார் காங்கிரஸின் அனந்தநாயகி. இவர் உடனே எழுந்து, ‘நாடாவைக் கழற்றி பாவாடையை தூக்கிப் பார். அங்கே தெரியும்’ என்றார். சட்டசபை அல்லோலகல்லோலப்பட்டது. அரசுக் கோப்பின் நாடாவை அவிழ்த்து பார்ப்பதைத்தான் அப்படி சொன்னதாக அப்புறம் வியாக்யானம் தந்தார். கச்சத்தீவுப் பற்றி எனக்குத் தெரியாது என்கிறாரே.... சட்டசபையில் அனந்தநாயகி கேள்விக்கு இவர் பதில் சொன்னதே ஞாபகம் இருக்கே?

காமராஜர்... காமராஜர் என்று இப்போது முழங்குகிறாரே... விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரை தோற்கடிக்கவேண்டும் என்று ஒரே மூச்சில் நின்றவர்தான் இவர். அண்ணா ‘வேண்டாம்’ என்றதையும் கேட்கவில்லை. இவர் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய்க் கொடுத்தார் _ திருட்டுத்தனமாக! யாரிடமிருந்து அடக்கத்தை கற்றுக் கொள்வது? என்னை எறும்பு என்றார். ஆமை என்றார். இப்போது சந்துல சிந்து பாடறார் என்கிறார். ஆணவத்தில் பேசுவது யார்?

கூட்டணி விஷயத்தில் ரொம்பவும் குழம்புவதுபோல தெரிகிறதே... பொதுக்கூட்டங்களில் மக்களிடம் அவ்வப்போது கேட்கிறீர்கள். கூட்டணி வைத்தால் கரை சேரலாம் என்று நினைக்கிறீர்கள். அதேசமயம் மரியாதை போய்விடும் என்று பயப்படுகிறீர்கள்... இப்படியா குழம்புவது?

நான் ஸ்டெடியாகத்தான் இருக்கேன் (சிரிக்கிறார்). என் விசுவாசிகளைக் கேட்கிறேன். தப்பில்லையே. ஒண்ணும் ஒண்ணும் இரண்டு உண்மை. நானும் மக்களும் கூட்டு வைச்சாலும் இரண்டுதானே! ஏன் எல்லாக் கட்சியிலிருந்தும் ஐந்து, ஐந்து சதவிகிதத்தினர் பிரிந்து வந்து எனக்கு ஓட்டுப் போடக்கூடாது? தவிர, இதுவரை ஓட்டுப் போடாத இளசுகள் எத்தனைப் பேர் நாளைக்கு தே.மு.தி.க.வுக்கு ஓட்டு போடப்போகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

‘தி.மு.க. ஆட்சியின் நல்ல திட்டங்களையெல்லாம் அலங்கோலம் என்று விபரமில்லாமல் பேசுகிறார்’ என்று முதல்வர் உங்கள் மீது குற்றஞ்சாட்டுகிறாரே?

நல்ல கதை! சிமெண்ட் அலங்கோலத்தைப் பாருங்கள். முதலில் தாசில்தாரிடம் திட்டத்தோடு கொடுக்கச் சொல்கிறீர்கள். அப்புறம் பிளான் இல்லாமல் கொடுக்கலாம் என்கிறீர்கள். அப்புறம் 200 மூட்டை தர்றேன் என்கிறீர்கள். சிமெண்ட்டை இந்த விலைக்குத்தான் கொடுக்கணும்னு ஆர்டர் போடவேண்டியதுதானே... ஏன் 160 ரூபாய்க்கு தரமுடியாதா? 200 ரூபாய் என்கிறார்கள். காஞ்சிபுரத்தில் ‘அரசாங்கம்’ படப்பிடிப்பின்போது ஜனங்களை இதுசம்பந்தமாக கேட்கிறேன்.

‘‘அட நீங்க வேற சார்... தாசில்தாரிடமிருந்து எல்லோரையும் பார்த்து லஞ்சம் கொடுத்துட்டு வாங்கறதும், வெளியில் 250 ரூபாய் கொடுக்கறதும் ஒண்ணுதான்’’ என்கிறார்கள். இது அலங்காரமா அலங்கோலமா?

இலவச டி.வி. தர்றேன் என்கிறீர்கள். ரேஷன் கார்டைப் பார்த்துத் தரவேண்டியதுதானே... எதற்காக முதல் நாள் ராத்திரி போய் டோக்கன் தருகிறீர்கள்? அதில்தான் முறைகேடு. தமிழகத்தில் வேலையில்லாதவர்களுக்கு வேலை தந்ததாகச் சொல்லும் இவரது புள்ளி விவரமும் தப்பு. சேது சமுத்திர திட்டம் பற்றி இவரிடம் யாராவது கருத்துக் கேட்டோமா? இவரது கருத்துக் கோளாறால்தான் பிரச்னை ஆனது.

பேனர், கட்_அவுட் கூடாது என்று முழங்குகிறார். நீங்கள் வேலூருக்குப் போய் பார்த்திருந்தால் தெரியும். சட்டத்தைப் போட்டவரே மீறுகிறார்.

‘எம்.ஜி.ஆரின் வேனை திருப்பித்தர வேண்டும்’ என்று ராமாவரத்திலுள்ள அவரது வாரிசு ஒருவர் கேட்டிருக்கிறாரே?

அவருக்கு என்ன உரிமை இருக்கு? அவர் யார் என்றே தெரியாதே? எம்.ஜி.ஆர். நடந்து போன பாதையை இடிச்சுப் போட்டது யார்? அந்தத் தோட்டத்தையே சின்னா பின்னப்படுத்தியவர் இந்த விஜயன். தவிர எனக்குக் கொடுக்கப்பட்ட வேன், அன்பளிப்பு. அதைக் கேட்கும் உரிமை இவர்களுக்கு இல்லை. கொடுத்தவர்கள் கேட்கட்டும். நான் பிறந்ததிலிருந்து எம்.ஜி.ஆர். ரசிகன். ரசிகர்கள் அன்பால் ‘கறுப்பு எம்.ஜி.ஆர்.’ என போஸ்டர் போடுகிறார்கள்..



வக்கீல் நோட்டீஸ்
27-2-2008 தேதியிட்ட குமுதம் வார இதழில் நீங் கள் (விஜயகாந்த்) பேட்டி கொடுத்துள்ளீர்கள். அதில் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறானவை, அடிப்படை ஆதாரம் இல் லாதவை.

பேட்டியில் நீங்கள், "சட்ட சபையில் திராவிட நாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பி னார் காங்கிரசின் அனந்த நாயகி. இவர் உடனே எழுந்து, நாடாவைக் கழற்றி பாவா டையை தூக்கிப்பார் அங்கே தெரியும் என்றார். சட்டசபை அல்லோகலப்பட்டது. அரசுக் கோப்பின் நாடாவை அவிழ்த்து பார்ப்பதைத்தான் அப்படி சொன்னதாக பிறகு வியாக் யானம் தந்தார். கச்சத் தீவுப் பற்றி எனக்குத் தெரியாது என்கிறாரே- சட்டசபையில் அனந்தநாயகி கேள்விக்கு இவர் பதில் சொன்னதே ஞாபகம் இருக்கே''- என்று தெரி வித்துள்ளீர்கள்.

முதல்-அமைச்சர் கருணா நிதி இதை வன்மையாக மறுக் கிறார். சட்டசபையில் எந்த ஒரு உறுப்பினரும் இப் படி அவரிடம் கேள்வி எழுப் பியதே இல்லை என்று கூறுகி றார். குறிப்பாக அனந்தநாயகி இத்தகைய கேள்வி எதுவும் கேட்கவில்லை. அதற்கு நான் இப்படி பதில் சொல்லவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனந்தநாயகி எந்த தேதியில் இப்படி ஒரு கேள்வி கேட்டார் என்று நீங் கள் சொல்லவில்லை. அது போல முதல்-அமைச்சர் கருணாநிதி எப்போது, இப்படி பதில் சொன்னார் என்றும் குறிப்பிட வில்லை.

மலிவான அரசியல் ஆதாயம் தேடவும், தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இப் படி ஒரு கேள்வி பதில் பேசப் பட்டதாக நீங்கள் (விஜய காந்த்) வேண்டும் என்றே பேட்டி அளித்துள்ளதாக முதல்-அமைச்சர் கருணா நிதி கருதுகிறார். நாட்டின் மூத்த அரசியல் தலைவரான அவரை நீங்கள் தவறான எண்ணத்துடன் அவமானப் படுத்தும் வகையில் குற்றச் சாட்டுக்களை கூறி இருக்கி றீர்கள். அவருக்கு இருக்கும் மரியாதையை சீர்குலைக்கும் வகையில் உங்கள் கருத்துக்கள் உள்ளது.

அந்த பேட்டி முழுவதும் பொய் மூட்டைகளாக உள்ளது. அதில் எதுவும் அடிப்படை இல்லாதது. நீங்கள் சொன்னது போன்ற எந்த விவாதமும் சட்டசபையில் நடக்கவில்லை. சட்டசபையில் அதற்கான குறிப்புகளும் இல்லை. எனவே இந்த பேட்டி மூலம் நீங்கள் சட்டசபை உறுப்பினர் நடத்தை விதிகளை மீறி உள்ளீர்கள்.

உங்களால் கூறப்பட்டுள்ள இந்த கேள்வி-பதில் பெண்களை மிகவும் இழிவு படுத்துவதாக உள்ளது. முதல்-அமைச்சர் கருணா நிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தில் நீங்கள் இப்படி அபாண்டமான பொய்யை கூறியுள்ளீர்கள். பொது வாழ்வில் அவருக்கு கண்ணியத்தை மாசுப்படுத்த இப்படி தர்மமே இல்லாமல் கருத்து தெரிவித்து இருக்கி றீர்கள்.

இந்த தவறான தகவலை ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளாமல் குமுதம் ஆசிரி யரும், வெளியீட்டாளரும் பிர சுரித்துள்ளார்கள். இது தவறானது. ஒரு மூத்த தலைவரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் இந்த கருத்தை யாராலும் ஏற்க இயலாது.

தவறாக தகவல் தெரி வித்த உங்கள் பேட்டி முக்கியத் துவம் கொடுத்து பிரசுரிக்கப் பட்டுள்ளது. இவை இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499,500,501 மற்றும் 502ன்படி குற்றமாகும். இந்த சட்டத்தின் கீழ் உங்களை தண்டிக்க
முடியும்.

எனவே முதல்-அமைச்சர் கருணாநிதி சொல்லாததை நீங்கள் திரித்துப் பேசியதற்காக 2 நாளில் நிபந்தனையற்ற மன் னிப்பு கேட்க வேண்டும். உங் களது மன்னிப்பு தகவல் அனைத்து முக்கிய நாளிதழ் களிலும் இன்னும் 2 நாளில் வரவேண்டும். அதோடு குமுதம் இதழின் அடுத்த வார இதழிலும் உங்களது மன்னிப்பு இடம் பெற வேண்டும்.

இல்லையெனில் உங்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும். உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இனி எதிர்காலத் தில் முதல்-அமைச்சர் கருணாநிதி பற்றி எந்த அடிப்படை இல்லாத தகவல்களையும், பொய்யான கருத்துக்களையும் நீங்கள் (விஜய காந்த்) பேசக்கூடாது. மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Read More...

Friday, February 22, 2008

பா.ம.கவுடன் நோ கூட்டணி - விஜயகாந்த்

இன்றைய நிலவரம் - விஜயகாந்த் கூட்டணி என்கிறார். நாளை என்ன சொல்லுவார் என்று தெரியலை.
ஜாதி கட்சிகளான பா.ம.க., விடு தலை சிறுத்தை ஆகியோருடன் நாங்கள் கூட்டணி பற்றி பேச மாட்டோம் என்கிறார். இந்த ஒரு காரணம் போதும், இவருக்கு ஓட்டு போட.....


நாங்கள் ஊழலுக்கும் ஜாதி, மதங்களை ஆதரிப்போருக்கும் எதிரானவர்கள். இவற்றை எதிர்க்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி சேர நாங்கள் தயா ராக இருக்கிறோம்.

காங்கிரஸ், இடது சாரி கட்சி கள் இந்த கொள்கைகளை கடைப்பிடிக்கின்றன. ஜாதி கட்சிகளான பா.ம.க., விடு தலை சிறுத்தை ஆகியோருடன் நாங்கள் கூட்டணி பற்றி பேச மாட்டோம்.

தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அருண்குமார் மூத்த அரசியல்வாதி, நாங்கள் சந்தித்தது பற்றி வெளியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அப்படி சொல்வது சரியல்ல, எங்கள் கட்சி வேக மாக வளர்வதால் காங்கிரஸ் தலைவர்கள் எங்களை நெருங்கி வருகிறார்கள்.

எங்கள் கட்சி அடுத்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கும். இதில் எந்த வித சந்தேகமும் இல்லை. தி.மு.க., அ.தி.மு.க.கட்சிகளுக்கு மாற்று சக்தியாக எங்கள் கட்சி உரு வாகி வருகிறது. மக்கள் தே.மு.தி.க. மீது நல்ல எண்ணம் வைத்து இருக்கிறார்கள்.

2006 சட்டசபை தேர்தலில் பெரிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக எங்கள் கட்சி 8.38 சதவீத ஓட்டு பெற்று இருக்கிறது. உள் ளாட்சி தேர்தலிலும் எங்கள் கட்சியின் பலம் அதிகரித்துள்ளது.

எங்கள் கட்சி 3-வது அணி என்பதை ஏற்க முடியாது. நாங்கள் தான் பிரதான அணி. எங்கள் தலைமையில் மற்ற கட்சிகள் வந்தால் வரவேற்போம். ஊழலுக்கும், சாதி மத, அரசியலுக்கும் எதிராக பாடுபடுவோம் என்று நான் மக்களுக்கு உறுதி அளித்திருக்கிறேன். இதை மக்கள் ஏற்பார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மக்கள் ஆதரவை இழந்து விட்டன. ஏனென்றால் அவர் கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. தி.மு.க. ஆட்சியின் நிர்வாகம் மோசமாக உள் ளது. சிமெண்ட் விலை குறைப்பு உள்பட பல பிரச்சினைகள் முறையாக செயல்படுத்தப்பட வில்லை.

கேபிள் டி.வி. பிரச்சினை யில் அரசு குழப்பத்தில் இருக்கிறது. முதல்-அமைச்சர் கருணாநிதி, எம்.ஜி.ஆருடன் 40 ஆண்டுகள் நண்பராக இருந் தவர். என்றாலும் எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தவரை தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அது போன்று எங்கள் கட்சியையும் மக்கள் ஆதரிப்பார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட் டணி தமிழ்நாட்டில் 40 தொகுதி களையும் பெற்றது. ஆனால் முதல்-அமைச்சர் கருணாநிதி சேது சமுத்திரம் பிரச்சினையில் ராமர் பற்றி பேசியது காங்கி ரசுக்கு எதிராகி விட்டது. வட மாநிலங்களில் நடந்த சட்ட சபை தேர்தல்களில் 400 இடங் களை காங்கிரஸ் இழந்து விட்டது. மத நம்பிக்கைக்கு எதிராக பேசியதால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

முதல்-அமைச்சர் கருணா நிதியும், அ.தி.மு.க. பொது செய லாளர் ஜெயலலிதாவும், கட்சி தொண்டர்களை ஏமாற்று கிறார்கள்.

எனவே அந்த கட்சிகளில் உள்ள இளைஞர்களும், பெண் களும் அங்கிருந்து வெளி யேறுகிறார்கள். எங்கள் கட் சியை விரும்புகிறார்கள்.

Read More...

Thursday, February 21, 2008

ஆயுள் விருத்தி ஹோமம் ஜெ இன்று காலை 4 மணி நேரம் சாமி தரிசனம்

திருக்கடையூர் கோவிலில் ஜெயலலிதா நடத்திய ஆயுள் விருத்தி ஹோமம் இன்று காலை 4 மணி நேரம் சாமி தரிசனம்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது 60-வது பிறந்த நாளையொட்டி நாகை மாவட்டம் திருக்கடைïரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்ய முடிவு செய்தார்.

ஜெயலலிதா வருகையை யொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் கோவிலை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். நேற்றும், இன்று காலையும் ஜெயலலிதா கோவிலுக்குள் சென்றதும் மற்ற பக்தர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை. இன்று காலை திருமணம் செய்வதற்காக கோவிலுக்கு வந்து இருந்த மணமக்கள் கோவில் வளாகத்தில் வெகு நேரம் மாலையுடன் காத்து இருந்தனர்.

ஜெயலலிதா வருகையையொட்டி நாகை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஓ.எஸ்.மணியன், துணை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயபாலன், திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர் பவுன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் உள்பட அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கோவில் முன்பு திரண்டு இருந்தனர்.

"கடவுள் முன் அனைவரும் சம்மம்" என்று போர்டில் எழுதியிருந்ததாக சொன்னார்கள்.

Read More...

சுப்பிரமணியசாமி கோரிக்கை

சுப்பிரமணியசாமி கோரிக்கை. சீரியஸாக எடுத்துக்கொள்ள கூடாது....

பெல்ஜியம் நாட்டின் விருது பெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியாவின் குடியுரிமை ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: சேதுசமுத்திர திட்டத்தில் தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொண்டுள்ள நிலைபாடுகள் அவர்களுக்கே பாதக விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பது மத உணர்வுகளை புண்படுத்தும் செயல் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறுஆய்வு மனுவில் கூறியது. இதே வாதம் சேதுசமுத்திர திட்டத்திற்கும் பொருந்தும். ராமர் பாலத்தை இடிப்பது, கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நடவடிக்கையாகும்.

இதே போல் மத்திய அரசு ராமர் பாலம் மனிதரால் உருவாக்கப்பட்டது அல்ல என்றும், இயற்கையாக தோன்றியது என்றும் கூறியது. தற்போது அஸ்ஸாமில் ஜோர்ஹாத் மாவட்டத்தில் ஒரு ஆற்றின் இடையே அமைந்துள்ள மஜூலி தீவு புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று யுனஸ்கோ அமைப்பிடம் மத்திய அரசு கோரியுள்ளது.

இந்த தீவு கலாச்சார பின்னணி கொண்ட இயற்கை அமைப்பு என்று மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, ராமர் பாலம் இயற்கை அமைப்பு என்று கூறி அதை இடிக்கலாம் என்ற மத்திய அரசின் கருத்து அர்த்தமற்றதாகி உள்ளது.

பெல்ஜியம் நாட்டு மன்னரிடமிருந்து கடந்த 2006ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆர்டர் ஆப் லியோபால்ட் என்ற விருதை பெற்றுள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தின் படி இந்த விருதை பெற்றுள்ள சோனியா, நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க தகுதி இழக்கிறார்.

இது குறித்து தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீசுக்கு சோனியா பதில் அளிக்காமல், காங்கிரஸ் கட்சி சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம் நாட்டின் விருதை பெற்றுள்ள சோனியா, அந்நாட்டு மன்னருக்கு என்னென்றும் விசுவாசம் காட்டுவதாக பிரமாணம் எடுத்துக் கொண்டு, ஆர்டர் ஆப் லியோபார்ட் உறுப்பினர்கள் சங்க பதிவேட்டில் கையொப்பம் இட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த 1985ம் ஆண்டில் சென்னை சட்ட மேலவை உறுப்பினராக இருந்த கே.எஸ்.ஹாஜா ஷரீப் ஐரோப்பிய நாடான மோனாக்கோவின் கவுரவ தூதுவராக பதவி ஏற்றார்.

இதற்காக சென்னை உயர்நீதிமன்றம் அவர் எம்எல்சி பதவி வகிக்கும் தகுதியை இழந்து விட்டதாக தீர்ப்பளித்தது. இதன் அடிப்படையில் சோனியாவின் எம்பி பதவியும் பறிக்கப்படவேண்டும்.

மேலும், சோனியாவுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்திய குடியுரிமை ரத்து செய்யப்படவேண்டும். தமிழகத்தில் இந்து கோயில்களின் நிர்வாகத்தை மத தலைவர்கள் அமைப்பிடம் அரசு ஒப்படைக்க வேண்டும். இதுகுறித்து முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதி உள்ளேன். அவர் பதில் அளிக்காவிடில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறினார்.
( செய்தி: மாலைமலர் )

Read More...

Wednesday, February 20, 2008

தமிழே, தப்பிச்சுக்கோ!


நான் இளையராஜாவின் இசைக்கு ரசிகன். அவரது தொடக்ககாலப் பாடல்கள் முதல் நேற்றைக்கு வெளியானதுவரை அநேகமாக எதையும் தவறவிட்டதில்லை என்று நினைக்கிறேன். தியானமாகக் கொள்ளத்தக்க இசை வடிவங்களை வழங்கிய சில இசை வல்லுநர்களுள் அவர் ஒருவர். சுயம்பு, குழம்பு என்றெல்லாம் என்னால் சிலிர்க்கமுடியாது. கண்டிப்பாக மூழ்கி எடுக்கவேண்டிய முத்தைத்தான் அவர் எடுத்திருக்கிறார். கடும் பயிற்சியும் சிந்தனை ஒழுக்கமும் அர்ப்பணிப்புணர்வும் அவரது இசைக்குத் தனியொரு அந்தஸ்து அளிக்கிறது. மேதை என்று நிச்சயம் சொல்வேன். இந்திய இசை உலகில் அவரது தரத்துக்கு நெருக்கமான மேதைகள் என்று உடனே யாரையும் எனக்குச் சொல்லத் தோன்றாது.
மேதைகளுக்கு பலவீனம் இராதா என்ன? இளையராஜாவுக்குச் செய்யுள்.


அவர் ஏன் எழுத விரும்புகிறார் என்கிற கேள்விக்கு பதில் கிடைப்பது சிரமம். ஆனால் அதை ஏன் எல்லோரும் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்பது புரியவில்லை. வாழ்நாளெல்லாம் புகழ்ந்து தீர்க்க அவருடைய இசை இருக்கிறது. போதாதா? எதற்காக அவரைக் கொம்பு சீவி விட்டு வெண்பாவும் விருத்தமும் எழுத அல்ல - யாக்க வைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நேற்றைக்குச் சென்றிருந்தேன். இளையராஜாவின் இரண்டு புத்தகங்களுக்கு வெளியீட்டு விழா. ஆய்வுக் கோவை என்று ஒன்று. அடியார் அடியொற்றி என்று இன்னொன்று. ஆய்வுக்கோவை, அவரைப் பற்றிப் பல கல்வியாளர்களும் கவிஞர்களும் சேர்ந்து எழுதியது. அடியார் அடியொற்றி, அவரே யாத்தது.

இளையராஜாவின் எழுத்துத் தாக்குதல்கள் இதற்கு முன்பும் வெளிவந்திருக்கின்றன. சில அனுபவக் கட்டுரைகள் அவற்றின் விஷயத்துக்காகப் பொருட்படுத்தக்கூடியவையாக இருக்கும். புதுக்கவிதை மாதிரி சிலவும் மரபுக்கவிதையின் வாசனையில் டி.ராஜேந்தர்பாணி மோனைகள் மிக்க உரை வீச்சுகள் சிலவும் எழுதியிருக்கிறார். அவை நூலாகவும் வந்துள்ளன. மௌனம், மரணம், தவம், மனிதன், ஆத்மா, உள்ளே, வெளியே, வானம், வெட்டவெளி, அறிந்தவை, அறியாதவை, விடுதலை, வேள்வி என்று வரிசையாக நூறு சொற்களை இந்த ரகத்தில் எடுத்து வைத்துக்கொண்டு பெர்முடேஷன் காம்பினேஷனில் தொகுத்தால் கிடைக்கக்கூடிய கவியுருவங்கள் அவருடையவை.

சரி, நான் பாக்குப் போடுகிறேன், இளையராஜா கவிதை எழுதுகிறார் என்றுதான் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நேற்றைய விழாவில் அவரை மாணிக்கவாசகராகவும் சுந்தர மூர்த்தி நாயனாராகவும் பத்ரகிரியாராகவும் பட்டினத்தாராகவும் உருவகப்படுத்தி (ஒரு அம்மாள் - அவர் ஒரு புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர், பெயர் மறந்துவிட்டது. அறுபத்தி நாலாவது நாயன்மார் என்றே அடித்துச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.) பேசிய தமிழறிஞர்களின் வீர உரைகளைக் கேட்டபோது அடிவயிறு கலங்கிவிட்டது. சுகி. சிவமும் தெ.ஞானசுந்தரமும் இளையராஜாவைக் காட்டிலும் சிறந்த புலவரே இல்லை என்று பேசுவதைக் கேட்டால், இத்தனை காலம் இவர்கள் வாயாரப் புகழ்ந்த கம்பனும் பாரதியும் அரை டிரவுசர் அணிந்து ராஜாவின் முன் மண்டியிட்டு அமர்ந்து யாப்பிலக்கணமும் இன்னபிறவும் படிக்கவேண்டுமென்று சொல்லாமல் சொல்லுவது போல் இருந்தது.

அத்தனாம்பெரிய தமிழறிஞர்களெல்லாம் புகழ்கிறார்களே என்று அவரும் தம்பங்குக்கு எம்பாவாய், எம்பாவாய் என்று வம்படியாக த் திருவெம்பாவை ஸ்டைலில் பா, பாவாகப் பாடிப் பொழிந்து தீர்க்கிறார். மாணிக்கவாசகருக்குக் கூடக் கொஞ்சம் மீட்டர் பிரச்னை வருமோ என்னமோ. இளையராஜாவுக்குச் செய்யுள் என்பது சர்க்கரை வியாதிக்காரருக்குச் சிறுநீர்போல் தங்குதடையற்றுப் பொழிந்துகொண்டே இருக்கிறது. இதன் அபாயம் என்பது சர்க்கரை வியாதியின் அபாயமேதான் என்பது ஏன் அவருக்குப் புரியவில்லை என்று தெரியவில்லை.

புகழ்பெற்ற சந்தங்களை வைத்துக்கொண்டு பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்பி இன்னொரு பா புனைவது பெரிய தொழில்நுட்பமோ, கலையோ அல்ல. இதற்கு தியானமெல்லாம் வேண்டாம். மனம் குவிந்து, கண்கள் மூடி, நெஞ்சு நெகிழ, அவனருளாலே அவன் தாள் வணங்கித்தான் ஆரம்பிக்கவேண்டுமென்பதுமில்லை. மிக எளிய குழந்தை விளையாட்டு போன்றதுதான். யாரால் வேண்டுமானாலும் எளிதில் செய்துவிட முடியும். மொழிப்பயிற்சி மட்டும் கொஞ்சம் இருந்தால் போதுமானது. இணையத்தில் அறிமுகமான நண்பர், கவிஞர் ஹரி கிருஷ்ணனுடன் (மரபிலக்கியம்) மெசஞ்சரில் உரையாடும்போதெல்லாம் தவறாமல் இந்த விளையாட்டை விளையாடுவேன்.

ஏதோ ஒரு தேர்தல் சமயம் நடிகை ரம்பா பிரசாரத்துக்குப் போகவிருக்கிறார் என்று செய்தி வர, அந்தச் சமயம் ஹரி லைனில் வந்தார். கம்பராமாயணம் தொடர்பான ஒரு புத்தக முயற்சியில் அவர் இருந்த சமயம் அது. சும்மா சீண்டிப்பார்ப்பதற்காக

கொம்பா இது கொடியா வெறும் அம்பாவென எண்ணி
ரம்பாவெனும் விண்மீனினை ரசியாதொரு கூட்டம்
அம்போவென அவரேறிட அம்பாசிட ரீந்து
லம்போதரன் துணையோடொரு தேர்தல் பணி தந்தார்.

என்று ஆரம்பித்தேன். நியாயமாக என்னை அவர் கொலையே செய்திருக்கலாம். உருப்படமாட்டீர் என்பதுடன் நிறுத்திக்கொண்டார். மாறாக, கம்பனிடம் சந்தம் இருந்தாலும் நுட்பம் குறைவு; அது உங்களிடம் மிகுந்திருக்கிறது என்று ஆரம்பித்து அரை மணிநேரம் பேசியிருப்பாரேயானால் என்ன நினைப்போம்?

அப்படித்தான் இருந்தது நேற்றைய விழாவில் இளையராஜாவின் பாப்புலமையை வியந்து சிலாகித்த தமிழறிஞர்களின் பேருரைகள்.

வாஜ்பாயி, அப்துல் கலாம், இளையராஜா போன்றோரையெல்லாம் அவர்களது உண்மையான திறமை புதைந்துகிடக்கும் இடத்தைக் குறிப்பிட்டு பாராட்டினாலோ, மதிப்புரை வழங்கினாலோ, விமரிசித்தாலோ அவர்களது துறையில் அவர்களுக்கு உபயோகமாகவும் தனிப்பட்ட முறையில் ஊக்கமளிப்பதாகவும் உத்வேகம் தரத்தக்கதாகவும் இருக்கும். இவர்களையெல்லாம் கவிஞர்கள், புலவர்கள் என்று அங்கீகரித்து, கிரீடம் சூட்டிவிட்டால் தாளுக்கும் மைக்கும்தான் கேடு.

இசையில் இளையராஜா தொட்ட உயரங்கள் அதிகம். என்னால் ரசிக்கவும் வியக்கவும் மட்டுமே முடியும். ஆனால் பா விஷயத்தில் அவர் அடிக்கிற கூத்துகள் அதிர்ச்சிகரமாகவே உள்ளன. இன்றைக்கு மாணிக்கவாசகரை வேஷ்டி உருவி ஓடவிட்டதுபோல நாளைக்கு யார் இவரிடம் அகப்படுவார்களோ என்று உள்ளம் பதறுகிறது. அப்பர், சம்பந்தர், ஆழ்வார்கள் பன்னிருவர், அடுத்த வரிசை ஆசாமிகளெல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கவேண்டும். ஏற்கெனவே பாரதியாருக்குக் குறிவைத்து ஏதோ ஒரு காரியம் செய்திருக்கிறார் போலிருக்கிறது. வெளிவரவிருக்கும் ‘அஜந்தா' என்கிற படத்தில் டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் தெரியாமல் தானே ஏதோ ஒரு பாடல் அல்லது செய்யுள் 'யாத்து' பாடி இணைத்துவிட்டதாகப் பேசும்போது குறிப்பிட்டார். அது பாரதியாருக்கு என்னவோ ஒரு பதில் சொல்கிறதாம்.

கண்டிப்பாக மேற்படி தமிழறிஞர்கள் அதற்கொரு விழா வைத்துப் பழிவாங்காமல் விடப்போவதில்லை. இசைத்தாயின் தலைமகன், தமிழ்த்தாயைப் படுத்தாமல் விடுவது தமிழ்கூறும் நல்லுலகுக்கு அவர் செய்யும் பேருபகாரமாக இருக்கும் என்பது திண்ணம்.
(நன்றி: பா.ராகவன் )

Read More...

Tuesday, February 19, 2008

ரேவதி தமிழ் பெயரா ?

செங்கல்பட்டு நகர திமுக செயலாளர் நா.சதீஷ்பாபு-ரேவதி திருமணத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார்.

அப்போது பேசிய முதல்வர், மணமகன் பெயர் சதீஷ்பாபு வடமொழியை சேர்ந்தது. அதை மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். மணமகள் ரேவதி பெயர் வடமொழியா, தமிழா எனத் தெரியவில்லை என்றார்.

அப்போது மணமகன் சதீஷ்பாபு தனது பெயரை மாற்றி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து குன்றக்குடி அடிகளாரிடம் ஆலோசித்த முதல்வர், அவருக்கு அன்புச்செல்வன் என தமிழ்ப்பெயர் சூட்டுவதாக அறிவித்தார்

நீங்களே சொல்லுங்கள் ரேவதி தமிழ் பெயரா ? ஓட்டு பெட்டி சைடில் இருக்கு

ஒரு அவுட் ஸ்டாலின் தமிழ் பெயரா ?

Read More...

உனக்கு இருபது எனக்குப் பதினெட்டு!

பாக் தேர்தல் குறித்து பா.ராகவன் எழுதிய கட்டுரை...

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததைப் போலவே வந்துகொண்டிருக்கிறது.

ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ), தான் முன்பு பெற்றிருந்த இடங்களில் மூன்றில் இரு பங்கினைக் காட்டிலும் அதிகம் இழந்துள்ளது. முஷரஃப் சந்தேகத்துக்கு இடமின்றி இனி வீட்டுக்குப் போகவேண்டியதுதான்.

அதே சமயம் மறைந்த பேனசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் சரி, நவாஸ் ஷரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்)கும் சரி. அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை. எனவே கூட்டணி பேரங்கள் தொடங்கும் நேரம் இது.

முஷரஃபின் வீழ்ச்சி எதிர்பார்த்ததுதான் என்றாலும் பேனசிருக்கான அனுதாப அலை என்று தனியே எதுவும் அங்கு இல்லை என்பது வியப்பு கலந்த நிம்மதியளிக்கிறது. ஒருவர் அகாலமாக இறந்துவிடுவதனாலேயே அவர் புனிதராகிவிட மாட்டார். பாகிஸ்தான் சரித்திரத்தில் நிறையவும் நிறைவாகவும் ஊழல் புரிந்தவர்கள் யாரும் அவ்விஷயத்தில் பேனசிரை நெருங்க முடிந்ததில்லை. அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரிக்கு பத்து பர்சண்ட் சர்தாரி என்றே அங்கு பெயர்.

தவிரவும் பேனசிருக்குப் பிறகான பாக். மக்கள் கட்சியில் குறிப்பிடும்படியான நட்சத்திரம் யாருமில்லை. என்னதான் ஒண்ணரை ரூபா ஸ்டாம்பு பேப்பரில் அவர் தனக்குப் பின் தன் மகன் என்று எழுதிவைத்துவிட்டுச் சென்றிருந்தாலும் ஹார்லிக்ஸ் குழந்தைகளை ஆளவைத்து (அல்லது அழவைத்து) அழகுபார்க்க மக்கள் அவ்வளவாக விரும்பவில்லை என்று தெரிகிறது.

தி.மு.கவும் அ.தி.மு.கவும் கூட்டணி கொள்வது தமிழகத்தில் வேண்டுமானால் சாத்தியமில்லாமல் இருக்கலாம். பாகிஸ்தானில் பிபிபியும் பி.எம்.எல். என்னும் கூட்டு வைக்க இயலும். அடிதடிகள், வெட்டு குத்துகள், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள், ஊழல் அனைத்தும் இருக்கவே போகிறது.

அதனாலென்ன? இப்போதைக்கு முஷரஃப் போகிறார். போதும். பட்டாசு வெடித்தால் தப்பில்லை.

(இன்னும் தேர்தல் முடிவுகள் முழுமையாக வரவில்லை. வந்தபிறகு விரிவாக எழுதப் பார்க்கிறேன்.)
( நன்றி: பா.ராகவன் )

Read More...

நோயாளிகளை நாடும் அல்கொய்தா

தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு மனித வெடிகுண்டு களாக பயன்படுத்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு தேர்வு செய்து வருவதாக அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

மனநல மருத்துவமனைகளுக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் மனநோயாளிகளை அல்கொய்தா தேர்வு செய்து வருவதாக கூறப் படுகிறது. சமீபத்தில் 100 பேரின் உயிரை பலி வாங்கிய 2 குண்டுவெடிப்பு தாக்குதல் களில் ஈடுபடுத்தப்பட்ட பெண் மனித வெடிகுண்டுகள் இருவரும் மனநோய் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாக அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் கிரகரி ஸ்மித் கூறியுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை தனிப்பட்ட முறையில் அணுகி அவர்களை மருத்துவமனை யிலிருந்து அழைத்துச் சென்று பின்னர் அவர்களை மனித வெடிகுண்டுகளாக அல்கொய்தா பயன் படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் உதவியுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்களை அல்கொய்தா சேகரித்து வøத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பல சம்பவங்கள்ள ஈடுபட்ட அல்காயிதா தற்கொலைப் படையினருக்குக் கால் கிடையாது அல்லது வாய் பேசாது அல்லது காது கேக்காது.

உண்மையான மனநேயாளிகள் இந்த மாதிரி தீவிரவதிகள் தான்.

Read More...

Monday, February 18, 2008

ஜெ பேட்டி - கருணாநிதி அறிக்கை

நேற்று காலை முதல் ஜெயா டிவியில் மாலை 9:30 மணிக்கு ஜெ பேட்டி என்று ஓடிக்கொண்டிருந்தது. அந்த பேட்டிக்கு கலைஞர் பதில் அறிக்கை(என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று ரபி பெர்னாடிடம் எழுதி கொடுத்திருப்பார் என்றே நம்புகிறேன்)

ஜெ பேட்டி செய்தி:(தினமணி)
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுருவல் தொடர்பான பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்தப் பிரச்னையை சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் பேரவையில் எழுப்பினார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்திலும் தமது கட்சியினர் இந்தப் பிரச்னையை எழுப்பப் போவதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு திராணி இல்லை. எனவே நாடாளுமன்றத்தில் இப் பிரச்னையை எழுப்புவோம் என்றார்.

இதுகுறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம்:

விடுதலைப் புலிகள் தொடர்பான விஷயங்களில் திமுக அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீது கூட எந்த நடவடிக்கையும் அரசு எடுப்பதில்லை.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு அதே நாளில் விடுதலையும் செய்யப்படுகின்றனர். விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்தியாவில் உள்ள உல்பா, நக்சலைட் போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள்ளனர்.

ஒரு அமைப்பு மட்டுமல்ல... இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக விடுதலைப் புலிகள் அமைப்பை ஏற்க முடியாது. அந்த நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை விடுதலைப் புலிகளை கொன்று குவித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

கருணாநிதிக்கு சவால்... "தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவது குற்றமாகாது' என்று பொடா வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக கருணாநிதி கூறுகிறார். அந்த தீர்ப்பை அவரால் காட்ட முடியுமா?

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டு வைகோ ஜாமீனில்தான் விடுவிக்கப்பட்டுள்ளார், அவர் மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விடுதலைப் புலிகளின் ஊடுருவல் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப நாட்டின் பாதுகாப்பில் நம்பிக்கையுள்ள கட்சிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.




எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா தனது சொந்த தொலைக்காட்சிக்கு தானே அளித்த நேர்காணல் பேட்டி ஒன்றினை அனைத்து ஏடுகளும் முக்கியத்துவம் தராத நிலையில், ஒரு நாளிதழ் மட்டும் அந்தப் பேட்டியினை முதல் பக்கத்திலேயே வெளியிட்டிருக்கின்றது.

அந்தப் பேட்டியிலே அந்த அம்மையார் எனக்கொரு சவால் விடுத்திருப்பதாக வந்த செய்தியில் "தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவது குற்றம் ஆகாது என்று பொடா வழக்கில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக கருணாநிதி கூறுகிறார். அந்தத் தீர்ப்பை அவரால் காட்ட முடியுமா?'' என்று கேட்டதாக அந்த நாளிதழ் கூறுகிறது.

25-1-2008 அன்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் விடுதலைப் புலிகள் குறித்து பேசிய பிரச்சினை குறித்து 29-1-2008ஆம் தேதியன்று தமிழகச் சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஓர் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

அதன் மீது நான் பேசும்போது, "அருமை நண்பர் திருமாவளவனும் மற்றும் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுகின்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை யெல்லாம் சட்ட ரீதியாகத் தான் சந்திக்க வேண்டி யிருக்கிறது. வேறு வழியில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். பொடா சட்டம் பயன்படுத்தியும்கூட, அந்தப் பொடா சட்டத்தைப் பயன்படுத்தியது சரியா அல்லவா என்ற வினா எழுந்த போது, உச்ச நீதி மன்றத்தினுடைய தீர்ப்பு அது பற்றி என்ன வெளியிட்டது என்றால், தடை செய்யப்பட்ட எந்த ஒரு இயக்கத்திற்கும் ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது என்று உச்ச நீதி மன்றத்தினுடைய தீர்ப்பிலே ஒரு வரி வெளி வந்திருக்கிறது. குற்றம் ஆகாது என்பதற்காக இப்பொழுது இங்கே ஞானசேகரன் எடுத்துக்காட்டிய அந்த வார்த்தைகள், முன்னாள் முதலமைச்சரைப் பற்றி அல்லது இப்பொழுது விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கொண்டிருப்பவர்களை பற்றி சொல்லப்பட்ட இந்த வாசகங்களை எல்லாம் பேசலாம் என்று பொருள் அல்ல. அது எங்கே கொண்டு போய் விடும் என்பதையும் நாம் அறியாதது அல்ல. அதை நான் ஆதரிப்பவனும் அல்ல''

என்று கூறி அது அவைக் குறிப்பிலே இடம் பெற்றுள்ளது. என்னுடைய இந்தப்பேச்சுத் தான் தவறு என்றும்,
உச்சநீதி மன்றத் தீர்ப்பிலே தடை செய்யப்பட்ட எந்தவொரு இயக்கத்திற்கும் ஆதரவாகப் பேசப்படும் பேச்சு
குற்றம் ஆகாது என்று தீர்ப்பில் எந்த இடத்திலும் சொல்லப் படவில்லை என்றும் பேரவையில் ஜெயலலிதா
பேசினார்.

அன்றையதினமே சட்டத்துறை அமைச்சரான தம்பி துரைமுருகன் பேரவை யிலேயே உச்சநீதி மன்றத்தின் முழுத் தீர்ப்பினையும் கொண்டு வந்து, நான் குறிப்பிட்ட பகுதி எங்கே வருகின்றது என்பதையும் எடுத்துக் காட்டினார். அந்தச் செய்தி அவைக் குறிப்பிலும் இடம் பெற்றுள்ளது. மறுநாள் முரசொலியிலும் இடம் பெற்றுள்ளது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதா பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசியதையும் காது கொடுத்துக் கேட்கவில்லை. மறுநாள் ஏட்டில் வெளி வந்த செய்தியைப்பார்க்கவில்லை. அவருக்கு தீர்ப்பினைக் காட்டிய வழக்கறிஞர்களிடமும் அதைப் பற்றி முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் பேரவையில் தவறாகப் பேசியிருக்கிறார். அது மாத்திரம் அல்ல. "இந்து'' நாளிதழ் இந்தச் செய்தி பற்றி என்னிடம் சிறப்பு பேட்டி ஒன்றினைக் கேட்டு, அது 3-2-2008 தேதியன்று தெளிவாக "இந்து" நாளிதழிலே வெளி வந்திருக்கிறது. அதையும் ஜெயலலிதா படிக்கவில்லை. இது மாத்திரமல்ல, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், பேரவையில் ஜெயலலிதா இவ்வாறு தவறான செய்தியினைக் கூறியிருக்கிறார் என்று ஒரு உரிமைப் பிரச்சினையைக் கொடுத்து, அந்தச் செய்தியும் ஏடுகளிலே வெளி வந்திருக்கின்றது. அதற்குப்பிறகாவது முதலமைச்சராக இருந்த ஒருவர் தனது வழக்கறிஞர்களிடம் கூறி, அந்தத் தீர்ப்பினைக் கேட்டுப் பெற்று முழுமையாகப் படித்து தெரிந்து கொண்டிருக்க வேண்டும், அதன் அடிப்படையில் நேர்காணல் பேட்டியில் உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் எதையும் செய்யாமல், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்பதைப் போல, திருப்பித் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளையாக மாறி பேரவையில் முதன் முதலில் என்ன பேசினாரோ, அதையே சொல்லி வருவது மட்டுமல்ல, எனக்கு சவாலே விடுத்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் கூற்று எவ்வளவு தவறானது என்பதை நான் ஏற்கனவே இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியிலே தெளிவாக்கியிருக்கிறேன் என்ற போதிலும், ஜெயலலிதாவின் நேர்காணல் பற்றி அந்த நாளிதழில் வெளி வந்த செய்திக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை தெளிவாக்குவது நல்லதென நினைக்கிறேன்.

16-12-2003 அன்று உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகள் எஸ். ராஜேந்திர பாபு மற்றும் ஜி.பி. மாத்தூர் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா கேட்டுள்ள வினா பற்றி நீதிபதிகள் தெரிவித்திருக்கும் பகுதி வருமாறு:-

"நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பொடா சட்டம் 3(1) பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படும். கிரிமினல் நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே, அது பயங்கரவாதச் செயலாகக் கருதப்படும் என்று நாடாளுமன்றம் வகுத்துள்ள போது, ஒரு நபர் "பகிரங்கமாக அறிவிப்பதாலோ'' (20வது பிரிவின் கீழ் உள்ளபடி) அல்லது "ஆதரவைக் கோரினாலோ'' அல்லது "ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தாலோ, நிர்வகித்தாலோ, அல்லது ஏற்பாடு செய்ய உதவினாலோ அல்லது "ஒரு கூட்டத்தில் பேசினாலோ'' (21வது பிரிவு), ஒரு பயங்கர வாத அமைப்பின் எந்தவிதமான நடவடிக்கைக்கும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் நோக்கம் அல்லது திட்டம் அல்லது பயங்கரவாதச் செயலைச் செய்ய உதவும் திட்டம் எதுவும் அவருக்கு இல்லாத நிலையில் அந்த நபர் குற்றம் இழைத்துள்ளார் என்று எப்படிக் கூற முடியும்ப அப்படி இல்லை என்று நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எனவே 20 அல்லது 21 அல்லது 22வது பிரிவுகளின் கீழ் குற்றம் என்பது தெளிவாக உணரப்பட வேண்டும். ஒரு நபர் பயங்கரவாதச் செயலுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் அல்லது பயங்கர வாதச் செயலைச் செய்ய உதவும் நோக்கத்துடன் செயல்பட்டார் என்பது தெளிவாக உணரப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், பயங்கர வாத நடவடிக்கைகளுக்கு ஊக்கமும், ஆக்கமும் அளிக்கும் அல்லது செய்து முடிக்க உதவி செய்யும் நோக்கம் கொண்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமே, இந்தப் பிரிவுகள் பொருந்தும். இந்த முறையில் இந்தப் பிரிவுகள் புரிந்து கொள்ளப்பட்டால் தவறாகப் பயன்படுத்துகிற வழி இருக்காது''என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் கூற்று தவறு என்பதற்கும், நான் பேரவையில் கூறியது உண்மையானது என்பதற்கும் தீர்ப்பில் உள்ள இந்த வரிகள் போதும் என்பதை இதனைப் படிக்கும் அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் பருவ காலத்தில் மழை பெய்யத் தவறினாலும் அல்லது உழவர்களின் எதிர்பார்ப்புக்கு மேல் மழை பொழிந்தாலும் ஒரு கொள்ளையோ, கொலையோ நடந்து அதை நடத்திய கொடியவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாலும் ஏதாவது ஒரு குக்கிராமத்தில் குடி தண்ணீர் கிடைப்பதில் சற்று சுணக்கம் ஏற்பட்டாலும் எங்கேயோ ஒரு நகரத்தில் சாலை விபத்து ஒன்று நடந்தாலும் விலைவாசியில் சற்று உயர்வு தென்பட்டாலும் "தி.மு.க. ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும்'' என்று மத்திய அரசைப் பார்த்து ஆணையிடுவதும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழக ஆட்சியினுடைய சாதனைகள், தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு தொகை தொகையாக பெருக்கெடுப்பதைப் பார்த்து ஜெயலலிதா பெருமூச்சு விடுகிறார், புலம்புகிறார், அலறுகிறார்.

ஐயோ, இந்த ஆட்சியைக் கலைத்தால் தான் தனக்கு நிம்மதி என்றும் கலைப்பீர்களா, மாட்டீர்களா என்று தூது விட்டும் பார்க்கிறார். கலைத்தே தீருவேன் என்று தோள் தட்டி முழக்குகிறார்.

தேர்தல் நேரத்து வாக்குறுதிகளையெல்லாம் ஒவ்வொன்றாக வரிசையாக ஏழையெளியோர், உழவர் பெருமக்கள், உழைப்பாளி வர்க்கத்தினர் உவகை அடையும்படி தொடர்ந்து நிறைவேற்றி வருகின்ற கழக ஆட்சி இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் தொடருமேயானால்,

திட்டமிட்டபடி புதிய சட்டமன்ற மாளிகை கட்டி முடித்து விடுவார்களே சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி தமிழகம் எதிர்காலத்தில் வளம் கொழிக்கும் அற்புதத்தை விளைவித்து விடுவார்களே மெட்ரோ ரெயில் திட்டம் வரவிருக்கிறதே, சென்னையிலிருக்கும் நெரிசல் குறைந்து விடுமே ஊராட்சி, பேரூராட்சிகளுக்கெல்லாம் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத் தின் கீழ் உரிய நிதி வழங்கி பட்டிதொட்டி முதல் பட்டினங்கள் வரை வளமை கொழிக்கும் பூமியாக தமிழகம் மாறி விடுமே இப்பொழுதே இருபது லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய அளவிற்கு தொழிற்சாலைகள் தொடங்கும் நிலை தோன்றியுள்ளதே ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம், ஒகனேக்கல் குடிநீர் திட்டம் போன்ற பெருந் திட்டங்கள் எல்லாம் முடிவுற்று அந்தப்பகுதி மக்களின் தாகம் தணிந்து விடுமே சென்னையில் மட்டும் மையம் கொண்டிருந்த தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி தமிழகம் முழுவதும் பரவி விடுமே மாநிலத்திற்குள் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டமும் செயல்படத் தொடங்கி விட்டதே அனைத்து தரப்பினருக்கும் தனித்தனியாக வாரியங்கள் அமைக்கப் பட்டு, அவர்களுக்கெல்லாம் கோடிக்கணக்கான ரூபாய்க்கான உதவி நிதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறதே எல்லோராலும் மறக்கப்பட்ட அரவாணிகளுக்குக் கூட வாரியம் அறிவிக்கப்பட்டு விட்டதே அருந்ததியருக்கு தனி ஒதுக்கீடு தர அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோசிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதே என்று இத்தனையும் இன்னும் எத்தனையோ திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு முடிவடையும் என்றால் பிறகு தன்னைப் போன்ற தன்னலச் சுகவாசி களுக்கு தமிழ்நாட்டில் மதிப்பு மரியாதை மகிமை மாண்பு என்று எந்த மண்ணாங்கட்டி தான் மிஞ்சப் போகிறது அதனால் இவையெல்லாம் கண்ணுக்கு இனிய சாதனைகளாக கருத்துக்கு இனிய பணிகளாக விதைத்து, முளைத்து, வேரோடி, செடியாகி, கொடியாகி, பூத்துக் குலுங்குகின்ற புதிய தமிழ்நாட்டை மக்களும் காணாமல் மனச்சாட்சியற்ற தானும் காணாமல் அதற்குள் சாதனை புரியும் சரித்திரப் பொன்னேடாம், தி.மு. கழக ஆட்சியை இல்லாமல் செய்து விடுவது ஒன்று தான் பிறவி எடுத்தப் பயனாகும் என்றும், தன் இனத்துக்கு தேடித் தந்த வரப் பிரசாதம் என்றும் எண்ணுகிற ஜெயலலிதா,

விடுதலைப் புலிகளை நாம் ஆதரிக்கிறோம் என்று பொய்யான ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி மத்திய அரசிடம் மண்டியிடுகிறார். மக்களைப் பயமுறுத்துகிறார்.

அன்று மகாமக குளத்திலே நடத்திய மாயாஜாலங்களை மறைத்தது போல் இவரது ஆட்சியில் நடத்தப்பட்ட மகா பாதகங்களை மறைத்திடலாம் என்று அந்தப் பாதகச் செயல்களால் பழி வாங்கப்பட்ட மக்கள், அரசு அலுவலாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் இவர்கள் எல்லாம் அந்தக் கொடுமைகளை மறந்து விடுவார்கள் என்றும்; தவறுக்கும் தவறான தப்புக் கணக்குகளைப் போடுகிறார். விடுதலைப் புலிகளுக்கும், பிரபாகரனுக்கு,ம் எம்.ஜி.ஆர். உதவிய அளவுக்கு அதில் கடுகளவு கூட கருணாநிதி உதவவில்லை என்றும் பிரபாகரனுக்கு இலங்கையிலே ஒரு துன்பம் என்றால் தமிழ்நாடு எரிமலை ஆகுமென்றும், பூகம்பம் ஆகுமென்றும் இந்து, எக்ஸ்பிரஸ் நாளேடுகளுக்கு அளித்த சிறப்பு பேட்டிகளிலும் எச்சரித்த ஜெயலலிதா அய்யோ; இன்றைக்கு விடுதலைப் புலிகளை இந்த அரசு எந்த வகையிலும் ஆதரிக்காமல் இருக்கும்போதே அவர்களின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும்போதே மீறி நடப்பவைகளை தடை செய்து கடுமையான தண்டனைகளை வழங்கிக் கொண்டிருக்கும்போதே அதற்கான புள்ளி விவரங்களை ஆதாரப் பூர்வமாக அவைநடுவே எடுத்துக் காட்டிய பிறகும் அம்மையார் ஜெயலலிதா ஆவேசமாக அலறுகிறார், ஆட்சியைக் கலை, கலை என்று அண்டப்புளுகுகளை அள்ளிக் கொட்டுகிறார்.

என் செய்வதுப சகல சுக பாக்கியங்களுடனும், சப்ர கூட மஞ்சத்தில் அவர் சயனித்திருப்பதற்கும் சகல செளபாக்கியங்களுடன் உல்லாச வாழ்வில் உருண்டு புரண்டு திளைப்பதற்கும் அவருக்கு தேவைப்படுகிறது பதவி, பதவி, பதவி, பதவி.

அதனால்தான் மத்தியில் உள்ள அரசைப் பார்த்து கூப்பாடு போடுகிறார் உதவி, உதவி, உதவி, உதவி என்று மக்கள் பணியே மகேசன் பணி என்று தொண்டாற்றும் இந்த மண்ணின் மைந்தர்களை ஆட்சியிலிருந்து விரட்ட வேண்டுமாம்! மக்களின் தலைகளை உருட்டிப் பந்தாடிய மாபாவிகள் மீண்டும் மகுடம் புனைய வேண்டுமாம் இதை ஏற்றுக் கொள்ள எமது தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்த சோணகிரிகளாப இளித்தவாயர்களா? இல்லை, இல்லை, இல்லை.

Read More...

வெறும் ஈடுபாடு, ஆனால் விசுவாசம் அல்ல! - எஸ்.குருமூர்த்தி

சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட "கிங் ஆஃப் லெபால்ட்' விருது பற்றி எஸ்.குருமூர்த்தி கட்டுரை ( நன்றி: தினமணி )

எர்ணாகுளத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மட்டும் அத்தகைய வழக்கைத் தொடரவில்லை என்றால், இந்தியர்களில் பலருக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட "கிங் ஆஃப் லெபால்ட்' விருது பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. அந்த வகையில் வழக்கறிஞர் ராஜனுக்கு நாம் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்.

2006-ம் ஆண்டு சோனியா காந்திக்கு பெல்ஜியம் அரசு வழங்கிய "ஆர்டர் ஆஃப் லெபால்ட்' விருது குறித்து மற்றவர்களைப் போல வழக்கறிஞர் ராஜன், அவ்வளவு அசிரத்தையாக எடுத்துக் கொள்ளவில்லை.

மற்றவர்களுக்கு தமாஷாகப்பட்ட விஷயத்தை அவர் அவ்வளவு எளிதான விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

2006-ம் ஆண்டு நவம்பர் 15-ம் நாள் பெல்ஜியத்தின் மிக உயரிய விருதுக்கு சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

பெல்ஜியம் அரசின் இரண்டாவது மிக உயரிய விருது என்ற பெருமையும் இதற்கு உண்டு.

பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர், பிற நாட்டின் விருதை ஏற்கக் கூடாது; அதன் மூலம் அவர்களுடைய நாட்டுப் பற்றுக்குக் குந்தகம் ஏற்படலாம்.

இந்த அடிப்படையில் லெபால்ட் விருது குறித்து மேலும் தீவிரமாக ஆராய்ந்துள்ளார் ராஜன். இது வழக்கமான நம்ம ஊர் ரோட்டரி சங்க விருதைப் போன்றோ அல்லது லயன்ஸ் கிளப் விருதைப் போன்ற ஜிலுஜிலு காகிதம் அல்ல; பெல்ஜியம் நாட்டின் மீது பக்தியுடனும், விசுவாசத்துடனும் இருப்பவர்களுக்கு அந்நாட்டு அரசர் வழங்கிக் கெüரவிக்கும் பட்டயம் இது என்பதும் அவருக்குப் புலனாகியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த இந்தியப் பிரஜையான வழக்கறிஞர் ராஜன், இது குறித்து புகார் மனுவை 2007-ம் ஆண்டு மே மாதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதோடு, பெல்ஜியம் அரசரின் உயரிய விருதை ஏற்றுக் கொண்டதற்காக சோனியா காந்தியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

நல்லவேளை, அப்போது குடியரசுத் தலைவராக இருந்தவர் நாணயத்துக்கும் சுதந்திரமாக இயங்குவதற்கும் பெயர்போன ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

ஒருவேளை இவருக்கு அடுத்து வந்த சோனியா காந்தியின் விசுவாசியான பிரதிபா பாட்டீலிடம் இந்தப் புகார் மனு போயிருந்தால், இந்த விவகாரம் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

தம்மிடம் வந்த புகார் மனு குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்தார் அப்துல் கலாம். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணைய உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

தலைமைத் தேர்தல் ஆணையர் தவிர மற்ற இரு உறுப்பினர்களும் சட்டத்திற்கு விசுவாசம் இல்லாமல் வேறு எங்கோ விசுவாசம் உள்ளவர்களாக இருந்தனர். அதனாலேயே சோனியா காந்தியை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்பதற்கான காரண விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்புவது தொடர்பாக தீவிர அக்கறை காட்டவில்லை.

இதனாலேயே இவ்விரு உறுப்பினர்களும் இந்த புகார் மனுவை தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பாமல் பல மாதங்களைக் கடத்தி வந்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தில் மட்டுமே புகைந்து வந்த இந்த பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக செய்தி ஊடகங்களுக்குக் கசியத் தொடங்கியது.

இனியும் இதைத் தவிர்க்க முடியாது என்ற சூழ்நிலையில், பிப்ரவரி 13-ம் தேதி கூடிய தலைமைத் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் இரு வேறுபட்ட முடிவுகளை எட்டினர்.

தலைமைத் தேர்தல் ஆணையரின் முடிவுப்படி சோனியா காந்திக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்புவதற்கு ஆணைய உறுப்பினரில் ஒருவரான நவீன் சாவ்லா மட்டும் ஒப்புக் கொண்டார்.

மற்றொரு உறுப்பினரான எஸ்.ஒய். குரேஷி, பெல்ஜியம் அரசு வழங்கிய லெபால்ட் விருது குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கலாம் என்று கருத்துத் தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சகத்திடம் சாதகமான பதிலைப் பெற்று அதன் மூலம் சோனியா காந்தி தப்பிப்பதற்கு வழி ஏற்படும் என்பதால் குரேஷியின் கருத்தைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏற்கவில்லை. அந்தவிதத்தில் குரேஷியுடன் ஒத்துப்போனார் சாவ்லா!

உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையிலும் சோனியாவுக்கு நோட்டீஸ் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. பொதுவாகத் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் விவாதிக்கும் விஷயங்கள் பத்திரிகை ஊடகங்களுக்கு வருவதில்லை.

ஆனால் இம்முறை உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல் வெளிச்சத்துக்கு வந்து பொது விவாத விஷயமாகிவிட்டது.

மக்களவை உறுப்பினரோ அல்லது மாநிலங்களவை உறுப்பினரோ வெளிநாட்டு விருதை ஏற்றுக் கொண்டாலோ அல்லது அதற்குச் சம்மதித்தாலோ, அவரைத் தகுதி நீக்கம் செய்யலாம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் (விதி 102) கூறுகிறது.

அந்த வகையில் பெல்ஜியம் அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் லெபால்ட்' விருதை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டது, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தகுதி நீக்கம் செய்யும் அளவுக்கு இட்டுச் சென்றுள்ளது.

"ஆர்டர் ஆஃப் லெபால்ட்' விருதில் அப்படி என்னதான் உள்ளது?

இது குறித்து "கூகுள்' தேடுபொறியில் "ஆர்டர் ஆஃப் லெபால்ட்' குறித்து அலசினால் ஏறக்குறைய 5,46,000 பேர் இவ்விருதுக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

"ஆர்டர் ஆஃப் லெபால்ட்' அமைப்புக்கு தனி இணையதளம் உள்ளது. மேலும், இதுகுறித்து "விக்கி பீடியா'-வில் (தகவல் களஞ்சியம்) இடம் பெற்றுள்ள விஷயம் வியப்பானது.

""உறுப்பினர்களுக்கு மட்டுமே பெல்ஜியம் அரசர் கையால் இவ்விருது வழங்கப்படும். இந்த விருது பெறுவோர் பெல்ஜியம் குடிமக்களாக இருக்க வேண்டும். சில சமயங்களில் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கும் இவ்விருது வழங்கப்படும்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் வெளிநாட்டுப் பிரஜை, பெல்ஜியம் ராணுவத்துக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்தவராக இருக்க வேண்டும். அல்லது பெல்ஜியம் மக்கள், பெல்ஜியம் மாகாணத்துக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவியவராக இருத்தல் வேண்டும்.''

"ஆர்டர் ஆஃப் லெபால்ட்' விருதுக்கான சங்கம் 1944-ம் ஆண்டு பெல்ஜியம் சட்ட விதிகளின்படி ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சங்கம் உருவாக்கப்பட்டதன் அவசியம் குறித்த விளக்கம் சிறப்பானது.

பெல்ஜியம் அரசருக்கும், பெல்ஜியம் நாட்டிற்கும் உள்ள முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் இவ்விருது பெறுவோர் இருக்க வேண்டும் என்பதே விருதுபெறும் பெல்ஜியம் பிரஜைகளுக்கான விளக்கம்.

விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் (வெளிநாட்டவர்களாக இருந்தாலும்) பெல்ஜியம் அரசருக்கும், பெல்ஜியம் நாட்டவர்களுக்கும் தனது முழு ஈடுபாட்டை, விசுவாசத்தை, ராஜபக்தியை வெளிபடுத்துபவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியெனில் சோனியா காந்தி இந்தத் தகுதி வரையறைகளை பூர்த்தி செய்கிறாரா?

அப்படியெனில் இவ்விருதுக்காக பெல்ஜியம் நாட்டின் மீது தனது விசுவாசத்தை சோனியா காந்தி வெளிப்படுத்த வேண்டுமல்லவா? அது மட்டுமல்ல; அந்நாட்டு மக்களுக்கும், அந்த நாட்டு அரசருக்கும் தனது ராஜபக்தியை வெளிப்படுத்த வேண்டும்.

இது எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, இந்த விருதைப் பெறுவோர், அந்நாட்டுச் சட்டப்படி உறுதி மொழி எடுக்க வேண்டும்.

""ஆர்டர் ஆஃப் லெபால்ட் விருதைப் பெறும் நான், இந்த விருதுக்கான பெருமையைக் குலைக்கும் வகையில் செயல்படமாட்டேன். விருதுக்கான சட்ட திட்டங்களை மதித்து அதற்குரிய உறுப்பினராகக் கட்டாயம் செயல்படுவேன்,'' என்று உறுதி மொழியும் எடுக்க வேண்டும்.

அந்த வகையில் பார்க்கும்போது, இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்தியும், இத்தகைய உறுதி மொழியைக் கட்டாயம் எடுத்தாக வேண்டும்.

தற்போது தேர்தல் ஆணையம் முன் உள்ள பிரச்னை இதுதான். மக்களவை உறுப்பினர் ஒருவர், பெல்ஜியம் மக்களுக்காகவும், அரசருக்காகவும் இத்தகைய உறுதி மொழியை ஏற்று, அந்த விருதைப் பெற ஒப்புக் கொள்வதை அனுமதிக்கலாமா? என்பதுதான்.

இந்த விஷயத்தைத் தேர்தல் ஆணையம் எப்படிக் கையாள்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.

ஆர்டர் ஆஃப் லெபால்ட் விருதைப் பெற்றுக் கொள்ள சோனியா காந்தி சம்மதம் தெரிவித்ததை, பெல்ஜியம் நாட்டுக்கு விசுவாசம் காட்டும் செயல்போலத் தோன்றுகிறது என்று கருதினார் தலைமைத் தேர்தல் ஆணையர். இது தெரிந்தவுடன் அதிர்ந்துபோனார் ஆணையத்தின் ஓர் உறுப்பினர்.

தலைமைத் தேர்தல் ஆணையரின் கருத்தை மாற்ற அந்த உறுப்பினர் கொஞ்சம் மிகையாகச் செயல்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இன்னும் சொல்லப்போனால் அவரே சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, தில்லியில் உள்ள பெல்ஜியம் தூதரகத்தின் கருத்தை வெளியுறவு அமைச்சகம் மூலம் கேட்டுப் பெற்றிருக்கிறார்.

அந்தக் கடிதத்திலும், வெளியுறவுத் துறையின் விளக்கத்திலும், ஆர்டர் ஆஃப் லெபால்ட் பெறுபவர்களுக்கான அமைப்பு பற்றிய சட்டத்தைப் பற்றியோ அல்லது அந்தச் சட்டத்தில் கூறியுள்ளபடி பெல்ஜியம் நாட்டுக்கு விசுவாசத்துடனும் அனுசரணையாகவும் லெபால்ட் பட்டயம் பெறுபவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி எந்த விளக்கமும் இல்லை என்பதை தலைமைத் தேர்தல் ஆணையர் சுட்டிக்காட்டினார் என்று தெரிகிறது.

இதற்கு மறுப்பாக இந்திய அரசியல் சட்டத்தில் விசுவாசம் மற்றும் அனுசரணை என்கிற வார்த்தைகள் லெபால்ட் பட்டயத்தில் இல்லை என்று பிடிவாதம் பிடித்ததாகவும் தெரிகிறது.

அதேசமயம், பட்டயத்தில் குறிப்பிட்டுள்ள ராஜபக்தி, முழு ஈடுபாடு குறித்து குரேஷி எதுவுமே தெரிவிக்கவில்லை என்றும் தெரிகிறது.

எது எப்படியிருப்பினும் "பக்தி' என்ற வார்த்தை பட்டயத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் பெல்ஜியம் அரசரை வணங்கித்தான் சோனியா இந்த விருதைப் பெற வேண்டும். வெறும் விசுவாசத்துடன் மட்டுமல்ல.

இந்த விஷயத்தில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு சட்டத்தின்மேல் விசுவாசம்.

மற்ற இரு உறுப்பினர்கள் சோனியாவின் விசுவாசிகள். இந்த விசுவாச வித்தியாசத்தால்தான் சோனியா காந்திக்கு நோட்டீஸ் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது.

தேர்தல் ஆணைய உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் செய்தி ஊடகங்களில் மேலும் பெரிதாகாமல், தாற்காலிகமாகத் தடுக்கப்பட்டுவிட்டது.

சோனியா காந்திக்கு காரண விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்புவதென தலைமைத் தேர்தல் ஆணையர் எடுத்த முடிவை ஒருபுறம் ஆதரித்தும் மற்றொருபுறம் வெளியுறவு அமைச்சகத்தின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று குரேஷி கூறிய கருத்தையும் ஆதரித்திருக்கிறார் நவீன் சாவ்லா.

இப்படி வெளியுறவு அமைச்சகத்தை இந்த பிரச்னைக்குள் கொண்டுவர அவசியமில்லை என்கிற தலைமைத் தேர்தல் ஆணையரின் கருத்தை மற்ற இரண்டு உறுப்பினர்களும் ஏற்கவில்லை.

அந்த இரண்டு உறுப்பினர்களும் வெளியுறவு அமைச்சகத்தின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்குக் காரணம் என்ன?

இதுதான் சோனியா காந்தி பெற்ற பட்டயம், பெல்ஜியம் நாட்டுக்கு விசுவாசம், பக்தி தெரிவிக்கும் ஒன்று அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் கூறிவிட்டால் அந்த அடிப்படையில் பிரச்னை முடிந்துவிடலாம் அல்லவா? அதற்குத்தான் சோனியா விசுவாசிகளான அந்த இரண்டு உறுப்பினர்களும் இப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இப்போது தேர்தல் ஆணையம் முன் உள்ள பிரச்னை இதுதான்:

சோனியா காந்தி, பெல்ஜியம் நாட்டின் மீது தனது ஈடுபாடு மற்றும் ராஜபக்தியை வெளிக்காட்ட உறுதிமொழி எடுத்துக் கொள்வதானது, நமது அரசியல் சட்டப்படி பெல்ஜியம் நாட்டுக்கு விசுவாசத்துடனும் அனுசரணையுடனும் இருப்பதுபோல ஆகுமா என்பதே.

ஆக பிரச்னை பெல்ஜியம் நாட்டின் மீது "பக்தி'யுடன் இருப்பது, பெல்ஜியம் நாட்டின் மீது விசுவாசத்துடன் இருப்பதற்குச் சமமா என்பதுதான். ஆமாம் என்றால் சோனியா காந்தி பதவி பறிபோகும்.

ஆனால் இரண்டு தேர்தல் உறுப்பினர்கள் சோனியாவுக்கு ஆதரவாக இருப்பதனால் பெல்ஜியம் நாட்டின் மீது பக்தியுடன் இருப்பது, பெல்ஜியம் நாட்டின் மீது விசுவாசத்துடன் இருப்பதாக ஆகாது என்றுதான் அவர்கள் முடிவு செய்வார்கள் என்று தோன்றுகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையரை அவர்கள் ஒதுக்கிவிடுவார்கள் என்றும் தோன்றுகிறது.

அப்படி அவர்கள் முடிவு செய்தால், தேர்தல் ஆணையம் செய்தது சரியா, தவறா என்று மக்கள்சபைதான் முடிவு செய்ய வேண்டும்.

Read More...

Saturday, February 16, 2008

விகடன் எரிப்பு - ஜெயமோகன் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கனும்.

இன்று நடிகர் சிவாஜி கணேசன் ரசிகர்கள் பூமிநாதன் தலமையில் ஆனந்த விகடன் அலுவலகம் முன் கூடி, விகடன் பத்திரிக்கையை எரித்தார்கள். எதற்கு ? ஜெயமோகன் எழுதிய கட்டுரைக்கு கண்டனமாம். அங்கே இருக்கும் ஒரு ரசிகரிடம் "ஏம்பா ஜெயமோகன் எழுதியதற்கு விகடனை எரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் தான் விவரம் தெரியாமல் எழுதுகிறார் என்றால், விகடனுக்கு எங்கே போச்சு மூளை அதை ஏன் பிரசுரிக்கனும் என்று கேட்டார். நியாயமான கேள்வி.

இப்போது விகடன் அலுவலகம் முன் 100 போலீஸ் பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள். 11 பேர் அரஸ்ட் ஆகியிருக்கிறார்கள்.

இன்றும் மட்டும் சுமார் 100 போன் கால்கள் விகடனுக்கு வந்திருக்கும். ஜெயமோகன் போன் நபர் என்ன சொல்லுங்க என்று. தமிழ்நாட்டில் சில நபர்களை பற்றி உயிருடன் இருந்தால் பிறந்த நாள் வாழ்த்தும், உயிருடன் இல்லை என்றால் நினைவுநாள் என்று ஒருபக்க விளம்பரம் தான் போட முடியும் என்று ஜெயமோகனுக்கு தெரியவில்லை. ஜெயமோகன் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கனும்.

Read More...