பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 31, 2008

Uncommon 'Comman Man'

ஆர்.கே.லக்ஷ்மண் வாழ்நாள் சாதனையாளர் விருது நிகழ்ச்சி பற்றி...

இரண்டு நாட்களுக்கு முன், குரங்கு போல எல்லா சேனல்களுக்கும் தாவிக்கொண்டிருந்த போது, ஹர்பஜன் குரங்கு விவகாரம் தான் செய்தியாக இருந்தது. CNN-IBNக்கு போன போது சிறந்த 2007 அரசியல் பிரிவில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விருது வாங்கி முடித்திருந்தார். சரி என்று பார்க்க தொடங்கினால் 'வாழ் நாள் சாதனைக்கான விருது' என்று அறிவித்துவிட்டு R.K.Laxman (ராசிபுரம் கிருஷ்ணசுவாமி லக்ஷ்மண்) என்று அறிவித்தார்கள்.

பிராமில் குழந்தை அழுவதை பார்த்திருக்கிறோம், அதே போல் வீல் சேரில் லக்ஷ்மன் கண்ணீர் விட்டுக்கொண்டு சின்ன குழந்தை போல் அழுதுக்கொண்டிருந்தார். தினமும் திருவாளர் பொது ஜனம் மூலம் நம்மை சிரிக்க வைப்பவர் அழுதது மனசுக்கு என்னவோ செய்தது.

நீங்கள் கார்டூன் ரசிகர் என்றால் 'Brushing Up the Years' என்ற ஆர்.கே.லக்ஷ்மணின் கார்டூன் தொகுப்பை தைரியமாக வாங்கலாம். 1947 முதல் 2004 வரையிலான முக்கியமான அரசியல் நிகழ்வுகளை பிரதிபளிக்கும் நல்ல புத்தகம். லக்ஷ்மணின் 60 ஆண்டு கால உழைப்பு இதில் தெரியும். - முதல் தேர்தலில் ஆரம்பித்து நேருவின் ஐந்து அம்ச திட்டம், சீனா, பாகிஸ்தான் போர், இந்திராவின் எமர்ஜன்சி, ராஜிவ் காந்தி ஆட்சி, மாநில ஆட்சிகள், பாபர் மசூதி இடிப்பு என்று ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புத்தகம். (Brushing Up the Years, R.K. Laxman, Penguin, p.304, Rs. 750.)

பெரும்பாலும் இந்த மாதிரி விருது வழங்கும் விழாக்களில் வரும் மூர்த்திகளும், அம்பானிகளைக் காட்டிலும் என்னை லக்ஷ்மண் கவர்கிறார். ஏன் என்று தெரியலை.

விருது வாங்கியதும், லக்ஷ்மணால் பேச முடியவில்லை, லக்ஷ்மணின் மனைவி மைக்கை வாங்கிக்கொண்டு "இவர் இப்படி தான் அதிகம் உணர்ச்சிவசப்படுவார், Please excuse" என்றார்.

இந்த மாதிரி உணர்ச்சி இருப்பதால் தான் உணர்ச்சி பூர்வமாக கார்ட்டூன் வரைய முடிகிறதோ என்னவோ ? லக்ஷ்மணை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால், 'ஐ லவ் யூட செல்லம்' என்று பிரகாஷ் ராஜ் பாணியில் சொல்ல வேண்டும்.
( இவருக்கும் மட்டும் தான் அன்று எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். )

நிகழ்ச்சியின் வீடியோ காட்சி

1 Comment:

Anonymous said...

இட்லிவடை அய்யா,

ஆர் கே லக்ஷமண் அய்யா மாதிரி ஒரு கார்ட்டூனிஸ்ட் இனிமேல் வர முடியுமா என்றளவுக்கு சாதனை புரிந்தவர் அவர்.