பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 07, 2008

அடடே ஐகாரஸ் பிரகாஷ்

தினமணி மதியின் கார்ட்டூனுக்கு நான் ரசிகன். ( பொதுவாகவே கார்ட்டூன்களுக்கு என்று படிக்கவும்)

இட்லிவடையில் சைடில் மதியின் கார்ட்டூன் நிறைய வந்திருப்பதை பார்த்திருக்கலாம்.

ஐகாரஸ் பிரகாஷ் அவர்கள் பத்ரியின் வலைப்பதிவில் இந்த பின்னூட்டம் 'அடடே' போடவைத்த நல்ல கட்டுரைகளில் ஒன்று.

உங்கள் பார்வைக்கு ( நன்றி: ஐகாரஸ் பிரகாஷ்) ....


மதியின் கார்ட்டூன்கள் பற்றி எனக்கு அத்தனை உயர்வான அபிப்ராயம் இல்லை என்பதை முதலிலேயே தெளிவுபடுத்திவிடுகிறேன். தமிழில் அபூர்வமாக கிடைக்கக் கூடிய, விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ட்டூனிஸ்ட்டுகளில் அவர் முதன்மையானவர் என்பது மறுப்பதற்கில்லை. எண்ணற்ற கார்ட்டூன்கள் மூலம் நியூஸ்டுடே, துக்ளக்,கல்கி, மற்றும் தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ்களில் அவர் செய்திருக்கும் சாதனைகளையும் மறுப்பதற்கில்லை. ஆனால், மதி என் ·பேவரைட் இல்லை. தமிழ் வாசகர்களுக்கு நகைச்சுவை உணர்வு கம்மி என்பதுதான், தமிழில் கார்ட்டூனி
ஸ்ட்டுகள் அருகி வருவதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

கார்ட்டூன் பற்றி சமீபத்தில் ஒரு கருத்து படித்தேன். படத்தை மறைத்துவிட்டு வசனத்தை படியுங்கள். புரிகிறதா? வசனத்தை மறைத்து விட்டு படத்தை பாருங்கள். இப்போதும் புரிகி றதா? புரிந்தால் அது கார்ட்டூன் இல்லை. (யார் இதை சொன்னது என்று சரியாகச்
சொல்பவர்களுக்கு வாத்தியாரின் திக.எ.எ புத்தகம் பரிசாக அளிக்கப்படும் :-) இந்த
முறையை நான் சோதித்துப் பார்த்தேன். குறிப்பாக டைம்ஸின், அஸ் யூ லைக் இட் பகுதி
க்கு. சரியாகவே இருந்தது. ஆயினும் மதியின் கார்ட்டூன் என்றால் சற்று யோசித்து இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் தினமணிடூன் புத்தகத்தை பார்க்க வில்லை என்றாலும் ( ஆல் சோல்ட் அவுட்டாம்) தினமணியில் வந்த கார்ட்டூன்கள்
என்பதால், தொகுப்பு எப்படி இருந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறது.

மதி அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு, மதனுக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வெற்றிடம் என்றுதான் சொல்ல வேண்டும். ராகவன் தன் கட்டுரையில் சொல்லி இருப்பது போல, மதி படம் வரைவதில் வல்லவர். அற்புதமான நியூஸ் சென்ஸ் இருக்கின்றது. ஆயி
னும் அவை ஒரு சிறந்த கார்ர்ட்டுனாக வந்திருக்கின்றதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வம்புதும்புக்கு போகாமல் இருப்பது, கான்டிரவர்ஸியில் சிக்காமல் இருப்பது என்பதெல்லாம், ஒரு கார்ட்டூனிஸ்ட்டுக்கு பலம் சேர்ப்பதாகக் கொள்ள முடியாது. கார்ட்டூணிஸ்டாக இருப்பவர்கள் பட்டையைக் கிளப்ப வேண்டும். படித்தால் பக்கென்று சிரிப்பு வரவேண்டும். அல்லது சுருசுருவென்று கோபம் வரவேண்டும். இந்த மாதிரி இல்லாத சில குறைகளை மதி கார்ட்டூனில் பளிச்சென்று எனக்கு தென்பட்டிருக்கிறது.

படிப்பதை விட்டுவிட்டு, பேசாமல் சச்சின் மாதிரி கிரிக்கெட் விளையாடு. வரி தள்ளுபடியாவது கிடைக்கும்' என்று அர்த்தம் வருகிற மாதிரி வந்த டைம்ஸ் ஆ·ப் இண்டியா கார்ட்டூனைப் பார்த்துவிட்டு, நீதிபதி ஒருவர் suo motu ஆக சச்சினின்·பெராரி கேஸ் விஷயமாக நோட்டீஸ் அனுப்பியது, ஒரு பத்து நாட்களுக்கு முன் வந்த
செய்தி. கார்ட்டூன்கள், எக்ஸைட் செய்கிற விதமாக இருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. ஏதாவது உணர்ச்சியைத் தூண்டவேண்டும். சும்மா படித்துவிட்டுப்
போக அது பாக்ஸ் மேட்டர் இல்லை.


ஒரு கேள்வி: படத்தில் இருப்பது நல்ல கார்ட்டூனா ?

1 Comment:

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

கார்ட்டூனைப்பார்த்தால் 'பக்'கென்று சிரிப்பு வருகிறது.