பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 21, 2008

கனிமொழிக்கு கண்டனம்

திருநெல்வேலியில் கோயில் ஒன்றுக்கு சென்று சிற்பங்களை பார்வையிட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், முதலமைச்சர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருநெல்வேலி கிருஷ்ணா புரத்திலுள்ள ஸ்ரீவெங்கடாஜலபதி கோயில் சிற்பங்களை ஜனவரி 19ம் தேதியன்று திமுக எம்.பி. கனிமொழி பார்த்தார். ஆனால் அரை மணி நேரத்திற்கு மேலாக கோவில் சிற்பங் களை பார்வையிட்டவர் பெருமாளை தரிசிக்கவில்லை. கோயில் அர்ச்சகர் சாமிக்கு தீபம் ஏற்ற முயன்ற போது வேண்டாம் என்று கூறி அவமதித்துள்ளார்.

இந்த செயல் தெய்வபக்தி உள்ளவர்களின் உள்ளங்களை புண்படுத்தியுள்ளது.

கனிமொழியுடன் டி.பி.எம். மைதீன்கான் போன்ற முஸ்லிம்களும் நுழைந்திருக்கிறார்கள். இது இந்துக்களையும், கோயில் விதிகளையும் அவமதிக்கும் செயலாகும். இதற்கு நேர்மாறாக கோவை பேரூர் கோயிலுக்கு சென்று துரைமுருகன், பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் சாமி கும்பிட்டு பிரசாதம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்துக்கள் கோயிலுக்கு சென்றால் சாமியைப் பார்க்கிறார்கள். ஆனால் கனிமொழி கலையை ரசிக்கிறாராம். நமது முன்னோர்கள் கலைகளை தெய்வீகத்திற்கு அர்ப்பணித்தார்கள். இதில் தெய்வீகம், கலைகள் என்று பிரித்து பார்ப்பது அறிவீனம். ஆனால் இந்த விஷயத்தில் துரைமுருகனும், பழனிச்சாமியும் பாராட்டுக் குரியவர்கள்.

மசூதி, சர்ச்சுகளுக்கு செல்லும் போது தலையில் குல்லா, முக்காடு போட்டும், முழங்காலிட்டும் வழிபட்டு, அந்த மதத்தினரின் உணர்வுகளை மரியாதையோடும், கௌரவத்தோடும் ஏற்றுக் கொள்ளும் இந்த போலி நாத்திகவாதிகள் இந்து உணர்வுகளை மட்டும் அவமதிப்பது ஏன்?

இந்துக் கோயில்கள் ஒன்றும் அருங்காட்சியகம் அல்ல. பக்தி உணர்வுகளை வெளிப்படுத்தும் பக்தர் களுக்கு மட்டுமே உரியது. கனி மொழியை கோயிலுக்கு வர வேண்டும் என்று யாரும் கட்டாயப் படுத்தவில்லை. அப்படி இருக்கும் போது முதலமைச்சரின் மகள் என்பதால் ஆணவத்தோடும், நாகரீகம் தெரியாமலும் இந்து உணர்வுகளை புண்படுத்திய கனிமொழி மன்னிப்பு கேட்க வேண்டும்.

7 Comments:

Anonymous said...

இது அரசியல் ரீதியாக அணுக வேண்டிய பிரச்சினை அல்ல. இந்துக்கள் அனைவருக்கும் ஒரு தன்மான உணர்ச்சி வர வேண்டும். பிறர் நம் முகத்திலே காறித் துப்பினாலும், சொரணையற்று இருப்பதைக் கைவிட வேண்டும். இந்துக்களை அவமதிப்பவர்கள் நாளை என்ன ஆனாலும் ஓட்டு வாங்க முடியாது என்று நிரூபிக்க வேண்டும். நண்பர்களுடன் பேசும் போது இந்தக் கருத்துக்களை விவாதியுங்கள். இந்தக் கருத்து அரசியல்வாதிகளுக்கும் எட்டும். அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்வார்கள். ஏனெனில், ஓட்டு என்று வந்து விட்டால் எதையும் செய்வார்கள் இந்தக் கேடுகெட்ட அரசியல்வாதிகள்.


சாணக்யன்.

www.chanakyansays.blogspot.com

Anonymous said...

என்னை கேட்டால் இந்த லூசு நாத்தீகவாதிகளை கண்டுக்காம விட்டுடனும் எதாச்சும் செஞ்சுட்டு போகட்டும்... நம்ம importance குடுக்க குடுக்க தான் ஏதோ இதுங்கல்லாம் பெரிசா ஏதோ புரட்சி பண்ணுறதா நெனச்சு அலம்பல் விடுதுங்க...
just dont care, what they do...
நம்ம என்னான்னா மன்னிப்பு கேளு, வழக்கு போடுவேன்னு எல்லாம் இதுங்களுக்கு free publicity குடுக்குறோம்...
உண்மையான பகுத்தறிவு: "இதில் மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பதும் அடங்கும் " என்பது இவர்களுக்கு புரியாத வரையில் இவர்கள் எல்லாம் வெறும் நாத்தீகவாதீகளே தவிர பகுத்தறிவுவாதிகள் அல்ல. அதிலும் வெறும் ஹிந்து நாத்தீகவாதிகள்.

Sunny said...

Use less statement & use less comments. People has their own rights to do whatever they like. And that was a public place. All guys are going to temple for worship? sure? bullshit.

R.Subramanian@R.S.Mani said...

Ceaser's wife - sorry - Princess is beyond criticism ;

Anonymous said...

What is wrong in seeing the celagal and not seeing the sawmi?
Nothing wrong Its indivgual ations. In a democratic country you can do anything except phyically distrub the others.
Pro sanikiyan

Anonymous said...

//மசூதி, சர்ச்சுகளுக்கு செல்லும் போது தலையில் குல்லா, முக்காடு போட்டும், முழங்காலிட்டும் வழிபட்டு, அந்த மதத்தினரின் உணர்வுகளை மரியாதையோடும், கௌரவத்தோடும் ஏற்றுக் கொள்ளும் இந்த போலி நாத்திகவாதிகள் இந்து உணர்வுகளை மட்டும் அவமதிப்பது ஏன்?//

I think that is not very accurate. Some political leaders ( I agree most of them are psedo-secular ) often go to the Iftar feast after the muslims fast in the holy month. They only go to eat the feast and they don't actually fast ;-). These psedo-secular politicians are smarter than you think.

I still think Kanimoli has the rights to visit the temple and choose not worship, but I agree that is not an act of a matured politician. You can't expect maturity from her when even her 85 year old father does not have it and she is considered getting the political power as family inheritance.

mans said...

i think idly vadai becomes RSS official website,there shouid be difference of opinion in all kind of articles.u should publish all

mansoor