பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 09, 2008

பப்பாசி வேலை செய்கிறது !

இந்த ஆண்டு இந்த தளத்தில் பழைய விவரங்களே காணப்படுகின்றன. ஏன் புதுப்பிக்கப் படவில்லை என்று தெரியவில்லை. இத்தனை பெரிய அளவிலான கண்காட்சியை நடத்தும் பெரிய பதிப்பாளர்களால் ஒரு இணைய தளத்தை நிர்வகிக்க ஏற்பாடு செய்திருக்க இயலாதா?
என்று சிந்தாநதி தன் வலைப்பதிவில் தெரிவித்திருந்தார்
இவர் சொன்னது http://www.bapasi.org/

ஆனால் http://www.bapasi.com என்ற இணையதளம் இருக்கிறது என்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இதில் புகைபடங்கள், ஸ்டால்கள் என்று நிறைய விஷயம் இருக்கு. இன்றைய தினமணியிலும் செய்தி வந்திருக்கு. ( கீழே )


http://www.bapasi.org/ - Created and Maintained by anyindian.com என்கிறது.
http://www.bapasi.com/ - Designed & Maintained by tamilcinema.com என்கிறது.
இது எனக்கு தெரியாத விஷயம், அதனால் தயவு செய்து இதை என்னிடம் கேட்காதீர்கள் பிளீஸ் :-)


இதை பற்றிய இன்றைய தினமணி செய்தி கீழே...

31-வது சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி அதைப்பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளும் விதத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஓர் இணையதளத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் சென்னை புத்தகக் காட்சியில் தேவையான புத்தகங்களை எளிதில் வாங்க முடியும்.

இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.சண்முகம் கூறியதாவது:

""எங்கள் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் இணையதளம் சென்னை புத்தகக் கண்காட்சியைப் பற்றி நிறையத் தகவல்களை அளித்துள்ளது.

புத்தகங்கள் என்றால் தேடல்தான். அந்தப் புத்தகத்தை எளிதாகத் தேடுவதற்கு வழிசெய்வதுதான் எங்கள் இணையதளம்.

ஒருவர் புத்தகக் கண்காட்சியில் அரை மணிநேரம்தான் செலவிட முடியும் என்ற நிலையில் இந்த இணையதளத்தில் உள்ள தகவல்களைக் கொண்டு எளிதில் புத்தகங்களை வாங்கிச் செல்லலாம்.

புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள கடைகளின் பட்டியல், அவை இருக்கும் இடம், அங்கே கிடைக்கும் புத்தகங்களின் விவரம் போன்ற அனைத்தும் இந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளன. ஒருவர் தனக்குத் தேவையான புத்தகம் எந்தக் கடையில் கிடைக்கும் என்பதை இதன்மூலம் உடனே தெரிந்து கொள்ளலாம்.

இதுதவிர எங்கள் சங்கத்தைப் பற்றிய தகவல்களும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே நடந்த கண்காட்சிகளின் புகைப்படத் தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை எங்களுக்காக ஆன்டோ பீட்டர் வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.'' என்றார்.

இணையதள முகவரி: http://www.bapasi.com

3 Comments:

Venkatramanan said...

Bapasi.com தளத்தில் இருந்து:

//புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள கடைகளின் பட்டியல், அவை இருக்கும் இடம், அங்கே கிடைக்கும் புத்தகங்களின் விவரம் போன்ற அனைத்தும் இந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளன. ஒருவர் தனக்குத் தேவையான புத்தகம் எந்தக் கடையில் கிடைக்கும் என்பதை இதன்மூலம் உடனே தெரிந்து கொள்ளலாம்//

தளம் முழுக்க தேடிவிட்டேன். புத்தகப்பட்டியலோ, அவை எந்தெந்தக் கடைகளில் கிடைக்கும் என்ற விவரமோ எங்கும் கிடைக்கவில்லை. பபாசி அமைப்பினர்தான் விளக்க வேண்டும்.

அன்புடன்
வெங்கட்ரமணன் (venkatramanan@gmail.com)

விருபா - Viruba said...

Bapasi.com தளத்தில் இருந்து:

//புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள கடைகளின் பட்டியல், அவை இருக்கும் இடம், அங்கே கிடைக்கும் புத்தகங்களின் விவரம் போன்ற அனைத்தும் இந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளன. ஒருவர் தனக்குத் தேவையான புத்தகம் எந்தக் கடையில் கிடைக்கும் என்பதை இதன்மூலம் உடனே தெரிந்து கொள்ளலாம்//

தளம் முழுக்க தேடிவிட்டேன். புத்தகப்பட்டியலோ, அவை எந்தெந்தக் கடைகளில் கிடைக்கும் என்ற விவரமோ எங்கும் கிடைக்கவில்லை.

?????????????

விருபா - Viruba said...

பாப்பாசியின் புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்.