பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 03, 2008

ஜெண்டில்மென்ஸ் கேம்

இரண்டு புத்தாண்டு பரிசு ஒருவருக்கு கிடைத்திருக்கு யார் என்று தெரிந்துக்கொள்ள கீழே படிக்கவும்.

சிட்னியில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் நடுவரின் தவறான தீர்ப்புகளால் ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீண்டது. இல்லை என்றால் இந்தியா நிச்சயம் ஜெயித்திருக்கும் என்று நான் சொல்லவில்லை. இருந்தாலும் ஒரு நப்பாசை.

ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. அட நம்ம பசங்களா இப்படி என்று யோசிக்கும் போது 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சைமண்ட்ஸ், பிராட் ஹாக் இணை ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. மாற்றத்துக்கு காரணம் நடுவரின் சில மோசமான தீர்ப்புதான்.

சைமண்ட்ஸ் 30 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, பந்து பேட்டில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் டோனியிடம் சென்றது. அதனை டோனியும் கச்சிதமாக கேட்ச் செய்தார். ஆனால் அந்த பந்து பேட்டில் படவில்லை என்று கருதி, நடுவர் பக்னர், சைமண்ட்சுக்கு அவுட் கொடுக்க மறுத்து விட்டார்.

`நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. 30 ரன்களில் அவுட் ஆக வேண்டியது. ஆனால் அவுட் கொடுக்கப்படவில்லை. கிரிக்கெட்டில் இது எல்லாம் சகஜம். இது போன்ற தவறான முடிவுகள் கிரிக்கெட்டில் பல தடவை வழங்கப்பட்டு உள்ளதை என்னால் சொல்ல முடியும். அதில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு அவுட்டையும் 3-வது நடுவர் ஆராய வேண்டும் என்று சொல்வது தேவையற்றது. நடுவரின் பணியை மேம்படுத்த எவ்வளவோ வழிகள் உள்ளன என்று பேட்டி வேற.

அடுத்தது ஸ்டம்பிங் ஆனார். அதுவும் நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு புத்தாண்டு பரிசுகளை நடுவர்கள் மூலம் பெற்ற சைமண்ட்ஸ் சும்மா விடுவாரா ? அதன் பிறகு வெளுத்து வாங்கி விட்டார்.

நடுவர் ஸ்டீவ் பக்னர் செய்தது தவறா அல்லது அவுட் என்று தெரிந்தும், சைமண்ட்ஸ் போகாமல் சதம் அடித்தது தவறா ?

கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மென்ஸ் கேம் என்று நாம் இன்னும் நினைத்துக் கொண்டிருந்தால் உங்களை நீங்களே அடித்துக்கொள்ளுங்கள்.

2 Comments:

Unknown said...

ponting snicked suarav when he was on 17 Dhoni caught It was turned down He went on to score a quick fire 55.But he was gioven out LBW when he should not have been.But the beuty is ponting cribbed when Murali agreed in India that he nicked one from Lee but did not walk.
Not only cricket is not gentleman game any more it is also hypocites game. It has become fully professional; they say which means professionals need not be ethical.

Anonymous said...

இட்லிவடை சார்,
அது மட்டும் அல்ல வாசிம் ஜபார் அவுட் ஆனது ஒரு நோ பாலில், ஆனாலும் என்ன செய்வது புலம்பிக்கொண்டே நானும் காலையே எழுந்து மேட்ச் பாத்தேன்?.