பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 11, 2008

காமராஜர், மோடி, சோ

இன்று வந்த இரு செய்திகள்.


நரேந்திரமோடி சென்னை வந்தால் தடையை மீறி முற்றுகை போராட்டம்: முஸ்லிம் முன்னேற்ற கழகம்- விடுதலை சிறுத்தைகள் அறிவிப்பு
அறிக்கை:
ஒரு தாய் மக்களாக வாழ்ந்த இந்து, முஸ்லிம், கிறிஸ் தவ, தலித், மக்களை கூறு போட்டு இன கலவரங்களை நடத்திய குஜராத் முதல்- மந்திரி நரேந்திரமோடி 14-ந் தேதி சென்னை வருகிறார். எழுத்தாளர் சோ அவரை மேடை போட்டு அழைக்கிறார். அவருக்கு ஜெயலலிதா விருந்து அளிக்கிறார்.

குஜராத் கலவரத்துக்கு காரணமான அவரால் ஏராளமான உயிர்கள் பலியாகி உள்ளன. இது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும். இனப்படுகொலை நடத்திய நரேந்திரமோடி சென்னை வருகை தரும்போது எதிர்ப்பது மனசாட்சியுள்ள ஒவ்வொரு வரின் கடமையாகும்.

எனவே வருகிற 14-ந்தேதி மாலை 5மணி அளவில் ஜன நாயக முறையில் கருப்பு கொடி யுடன் விழா நடக்கும் காமராஜர் அரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறோம். அந்த நிகழ்ச்சியை வேறு இடத்திற்கு மாற்றினாலும் அங்கு சென்றும் போராட்டம் நடத்துவோம். தடையை மீறி முற்றுகை போராட்டம் நடந்தே தீரும்.


நரேந்திரமோடிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் தேச விரோதிகள்: இல.கணேசன் தாக்கு

குஜராத் முதல்- மந்திரி நரேந்திர மோடி 14-ந்தேதி காலை சென்னை வருகிறார். விமான நிலையத்தில் பாரதீய ஜனதா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவருடன் ரவிசங்கர் பிர சாத்தும் வருகிறார். மாலையில் துக்ளக் பத்திரிகை சார்பில் காமராஜர் அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.

பகலில் ஜெயலலிதா கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். நட்பு ரீதியாக நரேந்திர மோடியை, ஜெயலலிதா விருந்துக்கு அழைத்து இருக்கிறார். அவரும் அதை நட்பு ரீதியாகவே ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

நரேந்திர மோடி பயங்கரவாதிகளுக்கு எமன். தேசத்தின் அடையாள சின்னம். அவரை மக்கள் முதல் -மந்திரியாக தேர்வு செய்து இருக்கிறார்கள். 35 சதவீத இஸ்லாமியர்கள் வாக்குகளை பெற்று இருக்கிறார்.

தமிழகத்திற்கு நரேந்திர மோடி வரும்போது அவரை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் தேச விரோதிகள். அவர் வருவார். தேச பக்தர்கள் திரண்டு அவரை வரவேற்போம். எதிர்ப்பவர்களை அடக்கி ஒடுக்கி முன்னதாகவே கைது செய்ய வேண்டியது மாநில அரசின் பொறுப்பு.

காமராஜர் அரங்கத்தில் நரேந்திர மோடி பங்கேற்க கூடாது என்றால் காமராஜரின் மரணத்துக்கு காரணமான காங்கிரசின் கையில் அந்த மண்டபம் இருக்கலாமா? மோடியின் வெற்றியை பொறுக்க முடியாமல் வயிறு எரிபவர்கள்- மக்கள் தீர்ப்பை ஏற்க முடியாதவர்கள் அவரின் வருகை எதிர்த்து போராடுவோம் என்கிறார்கள்.
11/1/8 வந்த அறிக்கை
குஜராத்தில் நடந்த இனப் படுகொலைகள் மறக்க முடி யாதவை. ஆனால் அந்த மாநில மக்கள் நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்து அவரை தேர்வு செய்துள்ளனர்.

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தி னரும் அவருக்கு ஆதரவளித் துள்ளனர். ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்-மந்திரியை வரவிடாமல் தடுப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. மக்களிடையே மத ரீதியான விரோத மனப் பான்மையை உருவாக்கும்.

போராட்டம் என்ற பெயரில் ஜனநாயகத்துக்கு எதிராக எழுப்பப்படும் குரலை தமிழ் மாநில முஸ்லிம் லீக் வன்மை யாக கண்டிக்கிறது.

9 Comments:

Anonymous said...

இந்த பயலுவள குஜராத்திற்கு ஒரு ட்ரிப் அடிக்க சொல்லி, அங்க மோதிய விட்டு செமத்தியா கவனிக்கணும். அப்போ தான் மோடி பத்தி பேசாம மூடிகிட்டு இருப்பாங்க.

Anonymous said...

Modi is the man of future indian icon.
No need to worry, Modi will get more publicity, if they do like this.

IdlyVadai said...

தமிழ் மாநில முஸ்லிம் லீக் வன்மை யாக கண்டிக்கிறது. என்ற அப்டேட்

Anonymous said...

Free publicity for Modi&CHO. now more will come to see and listen to Modi out of curiosity. I think
CHO should hold a party to those who oppose Modi's visit for the free publicity given by them.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

மோடியின் வருகை குறித்து - ரவி ஸ்ரீநிவாஸ்

இந்திய குடிமகன் என்ற முறையிலும், ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற முறையிலும் சென்னைக்கு வருவதற்கும், பொது/தனி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நரேந்திர மோடிக்கு அனைத்து உரிமைகளும் உண்டு.

அவரது செயல்கள், நிலைப்பாடுகளை ஏற்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை.இது அடிப்படை உரிமைகள்
சார்ந்த ஒன்று. மோடி குற்றவாளி, அவருக்கு இன்ன தண்டணை என்று எந்த நீதிமன்றமும் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. அப்படியே வழங்கினாலும் கூட அவருக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு.அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். குற்றவாளிகளுக்கும் கூட பரோல் உண்டு. நீதிமன்ற அனுமதியுடன் அவர்கள் வெளியே வரலாம், நிகழ்ச்சிகளில் பங்கேற்க்கலாம். அப்படி இருக்கும் போது மோடிக்கு எதற்காக அந்த உரிமைகள் மறுக்கப்பட வேண்டும்.எனவே அவரது வருகை என்னைப் பொறுத்தவரை எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல.நான் அவருக்கு பூச்செண்டும் கொடுக்க மாட்டேன், கருப்புக் கொடியும் காட்டமாட்டேன். மோடியின் செயல்கள், நிலைப்பாடுகளை நான் விமர்சிப்பேன். அவர் இங்கு செல்லக்கூடாது, அங்கு பேசக் கூடாது என்று கூற மாட்டேன். ஒரு மாநில முதல்வர் என்ற முறையில் அவருக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். அவர் இன்னொரு மாநிலத்திற்கு வரக்கூடாது என்று கோருவது பொருத்தமானது அல்ல.மாறாக தனக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ள மாநிலத்திற்கும் அவர் வந்து செல்வதும்,
அங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுவதும் நல்ல அறிகுறிகள். ஒரு ஜனநாயக நாட்டில் அதுதான் நடைமுறையாக இருக்க வேண்டும். அந்த விதத்தில் ‘பெரியார் பிறந்த மண்ணிற்கு' மோடி வருவது
வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.உண்மையில் 'பெரியார் பிறந்த மண்ணில்' பெரியாரியத்திற்கு
மாற்றான நிலைப்பாடுகள் கொண்டவர்கள் வந்து செல்வதும், கருத்துக்களை வெளிப்படுத்துவதும், அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் இல்லாமல் இருப்பதும், அம்மண்ணிற்கு பெருமை சேர்ப்பதாகும்.

அவரது வருகையை எதிர்ப்பவர்களுக்கு கருத்துரிமை உண்டு. அவர்கள் எதிர்ப்பினை அமைதியாக வெளிக்காட்டலாம்.ஒரு கூட்டம் நடக்கின்ற இடத்தில்,அந்த அரங்கினை கருப்புக் கொடிகளுடன் முற்றுகையிடுவோம் என்பது கூட்டம் நடத்துவதற்கு இடையூறு செய்வதாகும. கூட்டத்திற்கு வருவோரை தடுக்கவும், அச்சுறுத்தவும் செய்யப்படும் ஒன்றாகும்.அமைதியான எதிர்ப்பு என்பது வேறு, முற்றுகை என்பது வேறு.முற்றுகையின் நோக்கம் நிகழ்ச்சியை தடுப்பதே.இதை வரவேற்க முடியாது. இவர்கள் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தட்டும்,உண்ணாவிரதம் இருக்கட்டும். இவ்வாறெல்லாம் செய்யாமல் கருப்புக் கொடிகளுடன் முற்றுகை இடுவோம் என்பது சரியான அனுகுமுறையல்ல.

தஸ்லீம நஸ்ரின் இந்தியாவில் இருக்கக் கூடாது, தமிழ் நாட்டிற்கு வரக்கூடாது என்று கூறிய தமுமுக

மோடியையும் வரக்கூடாது என்கிறது.தஸ்லீம நஸ்ரினின் கருத்துரிமையை, இந்தியாவில் இருக்கும்

உரிமையை ஏற்க மறுப்பவர்கள் தாங்கள் பாசிசத்தினை எதிர்ப்பதாக கூறுவது கேலிக் கூத்து.இவர்களுடன்

சேர்ந்து சில அமைப்புகள் ஏற்படுத்தியுள்ள பாசிச எதிர்ப்பு முண்ணனி, தமிழ்ச் சூழலில் மிகவும் நைந்து போன

ஒரு சொல்லைக் பயன்படுத்தி சொல்ல வேண்டுமானால், அது பாசிச முண்ணனிதான்.போலி மதச்சார்பின்மை

போல் இது ஒரு போலி பாசிச எதிர்ப்பு.ஸ்டாலின்ஸ்ட்கள், இந்து மதம், இந்தியாவை சிதைக்க

விரும்புவர்கள்,மத அடிப்படைவாதிகள்,வன்முறை மூலம் அரசு அதிகாரத்தினை கைப்பற்ற விரும்பும்

இயக்கங்களை ஆதரிப்பவர்கள் கூட்டுச் சேர்ந்து அமைத்துள்ள ஒரு முண்ணணிதான் இது. மோடியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அவரை எதிர்ப்பவர்களையெல்லாம், அவர்கள் யாராக, என்ன நிலைப்பாடுகள் எடுத்திருந்தாலும்,இப்போது எடுத்தாலும் அவர்கள் மோடியை எதிர்க்கிறார்கள் என்பதால் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்பதை ஏற்க இயலாது. அப்படி ஆதரிப்பது என்பது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதத்தினை ஆதரிப்பது போலாகும். அவர்கள் முன்னிறுத்தும் விழுமியங்களை,கொள்கைகளை,செயல்பாடுகளை,நிலைப்பாடுகளையும் கருத்தில் கொண்டே அந்த எதிர்ப்பினை மதிப்பிட முடியும்.அப்படி மதிப்பிடும் போது இந்த பாசிச எதிர்ப்பு முண்ணனியை ஆதரிக்க முடியாது என்றே நான் கருதுகிறேன். தேவை ஏற்படின் விரிவாக அடுத்த வாரம் எழுதுகிறேன்.

sathish (bengaluru) said...

As a Citizen of India Modi has every right to visit everywhere.

People are trying to create confusions and gain something from this issue. They will also try to make it as an minority issue.

ulakathamizhchemmozhi said...

இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையாளர்களின் நேரடி வாக்கு மூலங்களை உலக அரங்கில் அம்பலப்படுத்திய தெஹல்கா செய்தியாளர் ஆசிஸ்கேதானுக்கு சங் பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இத்தகவலை ஆசிஸ் கெதான் A.F.P. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார். படுகொலைகளையும் பாலியல் வக்கிரங்களையும் இழைத்தவர்களும், சராசரி குஜராத்திகளும் கூட நடந்த பாதகச் செயல் குறித்து வெட்கப்படுவதாகத் தெரியவில்லை.

ஒவ்வொரு குஜராத்தியின் மனதிலும் விஷம் நிறைந்திருக்கிறது என்று வேதனை தெரிவித்த ஆசிஸ் கேதான் தன்னை கொலை செய்ய இரண்டு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சுற்றி வளைத்தது. நான் இரண்டு வாகனங்களில் உள்ளவர்களையும் நேரடியாகப் பார்த்தேன் நுண்ணிய காமெராக்களால் நான் படம் பிடித்து வேன் என எண்ணியதாலோ எண்ணவோ அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள்.

நான் என கடமையைச் செய்தேன் அது சிலருக்கு கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. அந்த சமூக விரோதிகள் தொலைபேசி வழியாகவும் ஈலிமெயில் மூலமாகவும் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். கொலையாளிகளின் பட்டியலில் என்பெயர் உள்ளது. நான் கொல்லப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது என மனம் வெதும்பி ஆ.எ.ட. என்ற வெளி நாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ஆசிஷ் கேதான்.

ulakathamizhchemmozhi said...

தோழரெ நான் இத்துடன் இணைத்திருக்கும் லிங்கை கிளிக் செய்து பாருங்கள்
www.youtube.com/v/jdbn5IjUXMM&rel=1

Anonymous said...

http://tamilarangam.blogspot.com/2008/01/blog-post_8742.html