பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 31, 2008

விடுதலைப் புலிகளின் கொடிய சாதனை!

இந்த வார கல்கி தலையங்கம்... ( மற்ற பத்திரிக்கைகள் எழுத தயங்கும் தலையங்கம் )

‘உலகின் பயங்கரவாத அமைப்புகளிலேயே மிகப் பயங்கரமா னது எல்.டி.டி.ஈ’ - இப்படிச் ‘சான்றிதழ்’ வழங்கியிருக்கிறது அமொ¢க்க உளவுத் துறையான எ·ப்.பி.ஐ. அல்கைதா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு உந்துசக்தியாக இருந்து உதவியும் வருகிறது விடுதலைப் புலிகள் அமைப்பு என்பதையும் எ·ப்.பி.ஐ. எடுத்துக் காட்டியிருக்கிறது. ‘மனித வெடிகுண்டுகளைக் ‘கச்சிதப் படுத்தி’, பெண்களைத் தற்கொலைப் படையினராக்குவதில் முன்னணி வகித்து, தற்கொலைக்கான ‘பெல்ட்’டை உருவாக்கி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே நான்காயிரம் பேரைக் கொன்று, இரண்டு சர்வதேச தலைவர்களையும் படுகொலை செய்திருக்கிறது எல்.டி.டி.ஈ. வேறெந்த பயங்கரவாத அமைப்பும் எட்டிப் பிடிக்காத சாதனை இது’ என்று எ·ப்.பி.ஐ.யின் இணைய தளம் அறிவிக்கிறது.

ஆனால், நம் நாட்டிலோ, தமிழர் நலன் என்ற பெயா¢ல் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு அனுதாபம் பெருகி, வெளிப் படையான ஆதரவாகவே மாறியிருக்கிறது. பா.ம.க. நடத்தும் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் பிரசார சி.டி.க்களும் வி.சி.டி.க் களும் பகிரங்கமாக விற்கப்படுகின்றன.

வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் போன்ற அரசியல் தலைவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.

இலங்கை அரசின் அழைப்பை ஏற்று, இந்தியப் பிரதமர் இலங்கை செல்ல முற்பட்டால், இங்குள்ள புலிகள் ஆதரவு தலைவர்கள் குடி மூழ்கிவிட்டதுபோல் அலறியடித்துக்கொண்டு கொடி பிடித்துப் போராடப் போவதாக மிரட்டு கின்றனர். அரசியல் நிர்ப்பந்தங்களைக் காரணம் சொல்லாமல், பிரதமரும் வேறு காரணம் கூறி அப்பயணத்தை ரத்து செய்கிறார்!

இன்னொரு பக்கம், தமிழகத்தில் தினமும் ஒரு விடுதலைப் புலி கைது செய்யப்படுகிறார். ஆயுதக் கிடங்குகள், குவியல்கள் என்று அதிர்ச்சி தரும் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. அகதிகள் முகாம்களில் தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்கள். தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலர் அளிக்கும் தார்மிக ஆதரவும் தமிழக முதல்வா¢ன் மௌனமும்தான் விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் ஊடுருவவும் நடமாடவும் துணிவைத் தருகின்றன.

போதும் போதாததற்கு, இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தமும் ரத்தாகிவிட்டது (ஒப்பந்தம் அமலில் இருந்தபோதே புலிகள் அதை மதிக்கவில்லை; அதனால் இலங்கை அரசும் அதை மீற நோரிட்டது). இப்போது இலங்கையில் போர்ச் சூழலே நிலவுகிறது. கரையோரக் கடல் பரப்பில் புலிகளின் நடமாட்டத்தைத் தடுக்க, இலங்கை அரசு கண்ணி வெடிகளைப் பதித்து வைத்துள்ளதாக அறிவித்து, தமிழக மீனவர்களை எச் சா¢த்திருக்கிறது! அந்த அபாய எல்லைக்குள் பிரவேசிக்காமல் தொழில் செய்வது நம் மீனவர் களுக்குச் சாத்தியமே அல்ல.

கண்ணி வெடிகளுக்குப் பலியாகும் கொடுமையும் கொ¡¢ல்லா யுத்தமும் நாகா¢க உலகில் எந்த தேசத்திலும் நிகழக்கூடாத கொடுமைகள். எந்த மக்களுக்கும் நேரக்கூடாத கொடூரங்கள். இலங்கைத் தமிழர்களின் துயர் தீரவும் இந்தியத் தமிழர்களைச் சூழ்ந்து வரும் அபாயம் அகலவும் பிரதமர் உடனடியாகச் செயல்பட வேண்டும்.

முதலில், புலிகள் ஆதரவு பேசும் தமிழகத் தலைவர்களை அழைத்து, அவர்களது விபா£தப் போக்கை மாற்றிக்கொள்ளச் செய்ய வேண்டும். இலங்கை அரசுடன் விவாதித்து, இலங்கைத் தமிழர்களின் உ¡¢மைகளைப் பாதுகாக்கும் வகையிலான அரசியல் தீர்வுக்கு இந்தியா வற்புறுத்த வேண்டும். தமிழகத் தலைவர்கள் இதற்குத் துணை நின்று, புலிகளை வன்முறையிலிருந்து ஜனநாயகப் பாதைக்குத் திருப்பியாக வேண்டும். இல்லையேல், இந்திய-தமிழக மீனவர்கள் மடிவது மட்டுமல்ல; தமிழகத்திலும் அதையொட்டிய மாநிலங்களிலும் பயங்கரவாதம் பரவிப் பெருகுவது, விரைவிலேயே நாம் காணக்கூடிய கொடுமையாகிவிடும்.பத்ரி அவர் பதிவில் இவ்வாறு எழுதியிருக்கிறார் :

முதலில் எந்த இயக்கம் தடை செய்யப்பட்டாலும் அந்தத் தடை தேவையா, இல்லையா என்பதைப் பற்றிப் பேசுவதற்கான உரிமை நாட்டு மக்கள் அனைவருக்கும் இருக்கவேண்டும். எதற்கெடுத்தாலும் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது, தேசவிரோத நடவடிக்கை என்று சொல்லிச் சொல்லியே நியாயமான விவாதங்கள் நடைபெற விடாமல் செய்வதை அறிவுஜீவிகள் அனைவரும் கண்டிக்கவேண்டும்.


இந்த மாதிரி வழ வழ கொழ கொழ எழுத்து படிப்பதற்கு வேண்டும் என்றால் நன்றாக இருக்கலாம், ஆனால் சிந்தித்தால் எவ்வளவு அபத்தம், முட்டாள் தனம் என்று தெரியும். ஒரு தீவிரவாத இயக்கத்துக்கு யார் ஆதரவு குடுத்தாலும் கைது செய்ய முடியும், கைது செய்ய வேண்டும். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு பரவாயில்லை என்றால் இதை முன் உதாரணமாக வைத்து நாளை லஷ்கர்-இ-தொய்பா, ஜெயசி-இ-முஹமது போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள், அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர், தீவிரவாத அமைப்புக்கள், ஆந்திர நக்ஸலைட்டுகள் ஆதரவு தெரிவிப்பார்கள். இதனால் பெரும் ஆபத்தான சூழ்நிலை உருவாகலாம். மேலும் விடுதலை புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன், ராஜிவ் காந்தி கொலை குற்றத்தில் தேடப்பட்டு வரும் முதல் குற்றவாளி, அக்கியூஸ்ட். நளினி, முருகன் இன்னும் பலர் தூக்கு தண்டனை குற்றவாளிகள். இவர்களுக்கு ஆதாரவு தெரிவித்தால் அறிவிஜீவி என்று நினைக்கிறார்கள். ஆனால் சிந்தித்தால் இவர்களுக்கு அறிவு ஜீவித்திருப்பதே ஆச்சரியம் தான்

13 Comments:

Anonymous said...

பத்ரி பேசுவது அறிவுஜீவித் தனம் அல்ல. பச்சையான வியாபாரம். இவர் விடுதலைப் புலிகளை எதிர்த்தால் இவர் வெளியிடும் தமிழ் புத்தகங்களை பெரும்பாலும் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும், தமிழ் புத்தகங்களை வாங்கக் கூடியச் சந்தையான இலங்கைத் தமிழர்கள் பாய்காட் செய்து விடுவார்களோ என்ற அச்சம். நாளைக்கே பிரபாகரன் புகழ் பாடினால்தான் இவருக்குப் பிசினஸ் ஆகும் என்றால் அதையும் செய்வார். பத்ரி ஒரு பிசினஸ்மேன் அதனால் மனசாட்சி என்ற ஒன்றை கழட்டி வைத்து விட்டு தன் வியாபரத்துக்கு எது நல்லதோ அதைச் செய்வார், சொல்வார். இதில் நேர்மை, அறிவுஜீவித்தனம் எல்லாம் கிடையாது. தீவீரவாதிகளுக்கு எந்த விதத்தில் ஆதரவு காட்டினாலும் அப்படிக் காடுபவர்கள் தீவீரவாதிகளே. பத்ரியின் கையில் இருப்பது அச்சு மசி அல்ல அப்பாவிகளின் ரத்தம், தீவீரவாதிகளை ஆதரிக்கும் பத்ரியையும் பொடா சட்டம் கொண்டு வந்து உள்ளே தள்ள வேண்டும். குறைந்த பட்சம் இப்படித் தேசத் துரோகக் குற்றம் செய்து தீவீரவாதிகளுக்குத் துணை போகும் போக்கிற்காக அவரது புத்தகங்களை உண்மையான இந்தியர்கள் பகிஷ்கரிப்புச் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவர் விடுதலைப் புலிகளுக்கும், இஸ்லாமியத் தீவீரவாதிகளுக்கும் போட்டுக் கொண்டிருக்கும் ஜால்ராவை நிறுத்துவார். இவர் ஏற்கனவே லண்டன் குண்டு வெடிப்பின் பொழுது நன்றாக வேண்டும், ப்ளேருக்கு ஓட்டுப் போட்டவர்களைக் கொன்றது சரிதான் என்று எழுதி இருந்தார். பத்ரி தீவீரவாதிகளுக்கு ஆதரவு தருவதை நிறுத்தும் வரை கிழக்குப் பதிப்பகத்தைப் பகிஷ்கரிக்க வேண்டும். மதானியும், பின் லாடனும், தாவூதும் புத்தகம் போட்டால் நாம் வாங்குவோமா? அவர்களை ஆதரிப்பவர்களின் புத்தகங்களை நாம் ஏன் வாங்க வேண்டும்?

Anonymous said...

//முதலில் எந்த இயக்கம் தடை செய்யப்பட்டாலும் அந்தத் தடை தேவையா, இல்லையா என்பதைப் பற்றிப் பேசுவதற்கான உரிமை நாட்டு மக்கள் அனைவருக்கும் இருக்கவேண்டும்.//

நிச்சயமாக. ஆனால் எதற்காக அந்த விவாதம் நடைபெறுகிறது என்ற modus operandi தெளிவாக சொல்லப் படல் வேண்டும்.

விடுதலை புலி போன்ற தீவிரவாத அமைப்புகள், இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கம் கொண்ட அமைப்புகள், போன்றவைகளை பற்றி பெருமையாக, ஆதரவாக பேசுவதற்கு என்ன மாதிரியான ஊக்கிகள் இவர்களுக்கு தேவைப்படுகின்றன?

இன உணர்வு மட்டும் போதுமா? சிறீலங்காவிலேயே விடுதலைபுலிகளை ஏற்று கொள்ளாத தமிழர்கள் எத்தனை?

சாதாரண 'இன தலைவர்' போன்ற பட்டங்கள் தவிர, இவர்களுக்கு வேறு என்ன ஆதாயங்கள் கிடைக்கின்றன என்பது நிச்சயம் ஆராய்ச்சிக்குரியது.

ஹரன்பிரசன்னா said...

கல்கி தலையங்கமும் பத்ரிக்கு உங்கள் பதிலும் நன்று.

தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் மீதான விவாதம் தேவை என்பது சரிதான். முதலில் விவாதம் செய்துவிட்டு பின்னர் ஆதரவைப் பற்றி சம்பந்தப்பட்ட கட்சிகள் யோசிக்கலாம். அதற்கு எவ்வளவு வருடங்கள் ஆகும் என்றால் எங்கு அந்த இயக்கங்கள் மீது தடையில்லையோ அங்கு சென்று இருந்துகொண்டு, ஆதரவும் கொடுத்து விவாதமும் செய்யலாம்.

யோசிப்பவர் said...

அட, விட்டுத் தள்ளுங்கள். பத்ரி ஒரு 'அறிவு ஜீவி'!!

Anonymous said...

LTTE being branded as the Most Deadliest Terrorist Organisation in the world is a PROUD MOMENT for all those "Hypocratic Tamilians and Brahmin-bashers" who shed lip sympathy to Tamilians' cause & I hope they will not let LTTE celebrate this achievement by helping it conduct yet another assasination in TN.

Indian Voter said...

தடை செய்யப்பட இயக்கங்கள் மீதான விவாதம் தேவை என்பது சரி தான். ஆனால், அதை எப்படி, எவ்வாறு, எந்த வறைமுரைக்குட்பட்டு விவாதிக்க வேண்டும் என்பதில் நிறைய விஷயங்கள் அடங்கியுள்ளது. விவாதிக்கப்படும் விஷயம் பற்றி பலவித கருத்துக்கள் கொண்ட அனைவரும் ஓரிடத்தில் கூடி, சாதக-பாதகங்களை மன முதிர்ச்சியோடு விவாதிக்கும் சூழ்நிலை இருந்தால் பரவாயில்லை. இவ்வாறன்றி, புலிகளைப் பற்றி விவாதிக்கிறேன் பேர்வழி என்று ஒரு கட்சி ஒரு பொது இடத்தில் நின்று கோஷம் எழுப்பி, கூப்பாடு போட்டு, 'ஆயுதம் கடத்துவதை பெருமையாக கருதுகிறேன்' என சொன்னால் அது ஆக்கபூர்வமான செயல் அல்ல.

தீவிரவாத இயக்கங்கள் பற்றி பொது விவதான்கள் செய்வது நடைமுறையில் சாத்தியமில்லாமல் போக நிறைய காரணங்கள் உள்ளன. உளவுத்துறையினர் தரும் பல ரகசிய விஷயங்களை வைத்து சில இயக்கங்கள் மீது தடை விதிக்கப்படுகிறது. அதையெல்லாம் பொதுவில் விவாதிக்க முடியாது.

தீவிரவாத இயக்கத்தினர் யாராக இருப்பினும் எந்த பாவமோ, பச்சாதபமோ இன்றி நசுக்கினாலேயன்றி இதற்கு தீர்வு இல்லை.

Anonymous said...

idlyvadai sir,

ippa vara vara ungaloda blog padikaradhae bore adikudhu...always, you write what badri says and illustrate on what badri wears !

Let this blog not become a counter to badri's one..

your blog was supposed to be a funny one....romba naal vijayakanth sambadhama yedhuvum varala...adhunaal, it is boring a bit..

On LTTE, indian government does not have a policy as such. We just keep on saying that prabhakaran is the prime accused in rajiv gandhi's case. And we do not take any effort to catch him. He conducts a press interview in public where the press from india too participates. And i don't agree with rajiv gandhikku mun, rajiv gandhikku pin policy too. LTTE has killed many more people before and after rajiv's killings. And so, either we take a stand against LTTE or if it suits our foreign policy, we try not to support srilankan government directly. Formation of LTTE is solely because or srilankan government stepmotherly treatment to a particular community. And that is why a terrorist organization like LTTE still garners support from the same community all over the world. Are we from TN should be a part of the same community ? I don't think so but tamil scholars (kanimozhi, thiruppaaachi - sorry tamilachi ) seems to think differently

And there is no point in countering thirumaalvalavan, vaiko, ramadoss and karunanidhi. They all used to support LTTE and if killing 10,000 or more people is not enough to change their opinions, then killing rajiv should not change theirs.


Try to retain the identify of your blog and try hard not to target just badri's one !

with regards
manikandan

Anonymous said...

பத்ரியின் கருத்தை விட்டுவிட்டு அவர் வியாபாரதுக்காகவே இப்படி எழுதுகிறார் என்று சொல்வது சரியான வாதம் இல்லை. இது ad-hominem argument ஆகவே எனக்கு தெரிகிறது.

LTTE போன்ற இயக்கங்கள் மீதுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கூறுவது சரிதான். ஆனால் விவாதத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். தடையை நீக்கும்வரை அதற்கு யார் ஆதரவு குடுத்தாலும் தண்டிக்கத்தான் வேண்டும்.

விவாதம் என்பது ஆதரவு அல்ல. அப்படி ஒப்புக்கொண்டால் எந்த தடையையும் மக்களால் நீக்கவே முடியாது.

மற்றபடி IV-யும் indian-voter-உம் சொன்னது சரியே என்று எனக்கு படுகிறது.

IdlyVadai said...

எல்லா கருத்துக்கும் நன்றி. ஸ்பெஷல் நன்றி மணிகண்டனுக்கு :-)

பத்ரி பதிவுக்கு நான் எதிர்வினை சொன்னது தற்செயல்.

Anonymous said...

//( மற்ற பத்திரிக்கைகள் எழுத தயங்கும் தலையங்கம் )// இது நல்ல காமெடி.

கல்கி மற்றும் சோவையும் ஒரு பொருட்டாக நாங்கள்(அனேக தமிழர்கள் ) எடுத்துகொல்வதிலை ..

விடுதலை புலிகள் செய்த கொடுரங்களை பற்றி மட்டும் எழுதினால் ஸ்ரீலங்கா அரசு ஹீரோ ஆகிவிடுவார்கள் .

பத்ரி வியாபார நோக்குடன் எழுதுவது இருக்கட்டும் ...மற்ற தமிழர்கள் இட்லி வடை நண்பர்(கள்) போல் முட்டாள்கள் இல்லையே :) .

என்னை பொறுத்த வரை பத்ரி இதற்க்கல்லாம் பதிவு போட தேவையே இல்லை.

பி.கு
இதை தங்களுடிய பின்னுட்டத்தில் இணைப்பீர்கள் என நம்புகிறேன் !

hoooooo haaaaaa lol நல்ல காமெடியான பதிவு போட்டதற்கு நன்றி அவ்வ்வ்வ்...

Anonymous said...

அம்பி,

தமிழர் பத்திரிக்கையில் எல்லாம் இந்த மாதிரி தலையங்கம் எல்லாம் வராது. மோடியை புகழ்ந்தும் தமிழர்களை இகழ்ந்தும் எழுதுவதற்கென்றே துக்ளக், தினமணி, தினமலர், கல்கி போன்ற சாதிவெறி பத்திரிக்கைகள் இருக்கின்றன. ஆனால் இந்த கோயபெல்ஸ் பத்திரிக்கைகளையெல்லாம் மானமுள்ள தமிழர்கள் படிப்பதில்லை.

Anonymous said...

^^^^
மொதல்ல தமிழன்னு சொன்னீங்க.. இப்போ, மானமுள்ள தமிழன் - மானம் இல்லாத தமிழன்.. இன்னும் கொஞ்ச நாட்கள்ல இன்னொரு கதை உடுவீங்க... இன்னும் எத்தன categoryடா உருவாக்குவீங்க??!! உங்களுக்கெல்லாம் மூளைங்கறத ஆண்டவன் தலையில வெக்க மறந்துபோய்ட்டானா...

Anonymous said...

Do you want someone to come to Badri's office like this?
http://www.youtube.com/watch?v=sUdUEOVdEuc