பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 04, 2008

புத்தக கண்காட்சி ஆரம்பித்துவிட்டது

பட்டாசு கடைக்கும் புத்தக கடைக்கும் என்ன தேவை ? நல்ல கூரை
கூரை எப்படி இருக்க வேண்டும் ? மழை அல்லது வெயிலை தாங்கும் கூரையாக இருக்க வேண்டும்.

சாதாரண மழைக்கே குடை மூஞ்சியை திருப்பிக் கொள்கிறது அப்படி இருக்கும் போது கூரை எப்படி இருக்கனும் ? எப்படி இருக்க கூடாது என்பதற்கு புத்தக கண்காட்சி கூரையே சாட்சி


கலைஞர் போன வருடம் கொடுத்த 1 கோடி ரூபாயில் முதலில் ஒரு நல்ல இடம் தேவை. (சென்னை டிரேட் செண்டர் ? ). இவர்களுக்குள் நடக்கும் பாலடிக்ஸ் எல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு யோசிக்க வேண்டும்.


ஏற்கனவே புத்தகங்கள் திருவல்லிக்கேணி குடிசை தொழிலில் பாதி காய்ந்தும் பாதி காயமலும் ஈரமாக இருக்கும் இப்ப மழை வேற. புத்தக கண்காட்சிக்கு அப்படியும் மக்கள் வர தொடங்கியுள்ளார்கள். ஏதோ நல்லது நடந்தால் சரி.

பிகு: கூரை இல்லாத நாமக்கல் அஞ்சநேரயை வேண்டிக்கொள்வதை தவிர வேறு வழி தெரியலை

2 Comments:

யோசிப்பவர் said...

//குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் வீசிய தேசிய புயல், விரைவில் கர்நாடகத்திலும், மத்தியிலும் வீசும். -பிஜேபி மாநிலத் தலைவர் இல.கணேசன் //

வாய்ப்பு குறைவுதான்

Anonymous said...

நெஞ்சில் ஈரமுள்ள மனசுக்காரங்க...

-- "என்மனசு"