பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 22, 2008

தமிழகத்தில் பறவை காய்ச்சல் இல்லை: பசு மாடு காய்ச்சல் தான் !

பசு மாடு அறிக்கை நேற்று ஜெ; இன்று கலைஞர்!


ஜெ அறிக்கை

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 15க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிப்பின்றி, பட்டினியால் இறந்துவிட்டதாக வந்துள்ள செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. பசு மாட்டிற்கு தீவனம் கொடுக்கக் கூட வக்கில்லாத திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரத்தை பறைசாற்றும் திருக்கோயில்களின் நிர்வாகத்தை முறையாக பராமரிப்பது; மேற் பார்வையிடுவது, அறக்கட்டளை களை திறனுடன் நிர்வகிப்பது, திருக்கோயில் சொத்துக்களை பாதுகாத்து பராமரிப்பது, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவது, நிதி வசதி மிகுந்த திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து நிதி வசதியில்லாத திருக்கோயில்களுக்கு நிதி வழங்குதல் ஆகியவை இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் தலையாய கடமையாகும்.

அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை பின்னோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்ற கருணாநிதி தற்போது தன் முத்திரையை இந்து சமய அறநிலையத்துறையிலும் பதித்து இருக்கிறார். ராமேஸ்வரத் திலுள்ள ராமநாதசுவாமி திருக்கோயி லுக்கு தானமாக வழங்கப்பட்ட 55 பசுக்களில் 15 பசுக்கள் இறந்துவிட்டதாகவும், மேலும் சில பசுக்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

கோயிலுக்கு வரும் பக்தர்கள், இந்தியாவிலேயே புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் கோயிலுக்கு பசு மாடுகளை தானமாக வழங்குவது வழக்கம். இப்படி தானமாக வழங்கப்படும் பசுமாடுகளை பராமரிக்க கோயிலிலேயே "பசுப்பட்டி' உள்ளது.

மேற்படி பசுப்பட்டி சுகாதார மற்ற நிலையில் இருப்பதாலும், சரியான முறையில் பராமரிக்கப் படாததாலும், குறைந்தபட்ச தீனி கூட வழங்காததாலும் பசுக்கள் இறந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. இறந்த பசுமாடுகளை பரிசோதித்த மருத்துவர், மாடுகளை எந்தவிதமான நோயும் தாக்கவில்லை என்றும், சத்துக்குறைவு மற்றும் தீவனப்பற்றாக்குறை காரணமாகவே பசுக்கள் இறந்து போயுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். வாயில்லா ஜீவன்களை பட்டினியால் சாகடிப்பது என்பது மிகப்பெரிய பாவச் செயல். பசுக்களின் பராமரிப்பு செலவிற்காக நாள் ஒன்றுக்கு 900 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதுவும் முழுமையாக அவைகளுக்காக செலவழிக்கப்படுவதில்லை என்றும் தெரிய வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, பக்தர்கள் பசுக்களை தானமாக கொடுக்கிறார்களே தவிர, அவற்றை பராமரிப்பதற்கான செலவுகளை கொடுப்பதில்லை என்று கூறி, மேற்படி பசுக்களின் இறப்பை அவர் நியாயப்படுத்துகிறாரே தவிர, பசுக்களின் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறவுமில்லை; அதற்காக எந்த நடவடிக்கையும் எடுத்ததாகவும் தெரியவில்லை. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் இத்தகைய பேச்சும், போக்கும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எனவே தமிழகத்தின் நலனை முன்னிட்டு சட்டம், ஒழுங்கை பராமரிக்கத் தெரியாத, விலைவாசியை கட்டுப்படுத்த இயலாத, குப்பையை கூட அள்ள முடியாத, வாயில்லா உயிரினங்களை பராமரிக்க வக்கில்லாத, தமிழகத்தை இருளில் மூழ்கடிக்கச் செய்த, கையாலாகாத கருணாநிதி தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில், மத்திய அரசு அவரது அரசை உடனடியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்கலைஞர் அறிக்கை
அறநிலையத்துறை அமைச்சர் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். ராமேஸ்வரம் கோயிலில் இறந்தவை பெரிய பசுமாடுகள் அல்ல. சிறிய கன்று குட்டிகள் தான் இறந்துள்ளன.

இதுபோன்ற கன்றுக்குட்டிகளை வைத்து வளர்க்க முடியாமல் சிலர் கோயிலுக்கு நேர்ந்து விட்டுவிடுவதால், தாய்பால் இல்லாத நிலையில் அந்த கன்றுகள் இறந்துபோக நேரிடுகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் கோயிலுக்கு விடப்படும் மாடுகளையும், கன்றுகளையும் அடிக்கடி ஏலம் விட்டு அவற்றை கூட்டம் கூட்டாக லாரியில் ஏற்றி கேரளாவிற்கு கொண்டு சென்று இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டது என்பதற்காக சிலர் நீதிமன்றத்திலேயே முறையிட்டு, அதற்கு 2001ஆம் ஆண்டிலும் 2004 ஆம் ஆண்டிலும் சென்னை உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்து திருக்கோயில்களுக்கு வழங்கப்படும் மாடுகளை ஏலத்தில் விற்பனை செய்யக்கூடாது என்று கூறியது.

அந்த ஆணையையும் அப்போதைய ஜெயலலிதா ஆட்சி முறைப்படி செயல்படுத்தாததை குறிப்பிட்டு உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. தற்போது ஆலயங்களில் விடப்படுகின்ற மாடுகளையும், கன்றுகளையும் பாதுகாக்க விரிவான ஏற்பாடுகளை இந்த அரசு செய்து வருகிறது.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் திருச்சந்தூரில் கோயில் மாடுகள் மட்டுமல்ல; எம்ஜிஆர் நகரில் வெள்ள நிவாரண உதவிகளை பெற்றிடச் சென்ற 50க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியானதே, அப்போது ஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்யவில்லை.

அதுமாத்திரமல்ல இவரும், இவருடைய உடன் பிறவா சகோதரியும் கும்பகோணம் மகாமகத்திற்கு சென்றுஇவர் குளிக்க அவர் நீரை ஊற்ற அவர் குளிக்க இவர் நீரை ஊற்றஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்ட கண்கொள்ளா காட்சியை காணத் துடித்த மக்கள் நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள்.

அவர்களுக்காக ஆட்சியை கலைத்திருந்தால் அந்த முன் உதாரணத்தை தற்போது பின்பற்றியிருக்கலாம். அப்போது மனித உயிர்களை துச்சமாக மதித்தவர், இன்றைக்கு மாடுகளின் உயிர்களை மதித்து அறிக்கை விட்டிருப்பது வாயில்லா பிராணிகளிடம் அவர் காட்டும் வாஞ்சையை விளக்குகிறது; வாழ்க அவரது வாஞ்சை.

6 Comments:

Anonymous said...

நீங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டது போதும் உங்க லட்சணம் எங்களுக்கு நன்றாகத் தெரியும், இன்னும் நீங்கள் ஒருவர் மேல் மற்றொருவர் சேறு வாரி இறைக்க வேண்டாம். ஐயா கேப்டன் அவர்களே, கவனித்துக் கொண்டிருக்கிறீர்களா?

www.chanakyansays.blogspot.com

Anonymous said...

Kalakarae kalaignare.....

Anonymous said...

கோவிலில் கொல்லப்பட்ட பசுக்கள்!
முகத்திரை கிழியும் பசு அரசியல்!

சங்பரிவார சக்திகளின் முக்கியமான முழக்கம் பசு பாதுகாப்பு, பசுவைப் பாதுகாப் பதற்காக அவர்கள் மாநாடுகளெல்லாம் நடத்துவார்கள். பசுமாட்டை தாய்க்குச் சமமாகப் பாவித்து 'கோமாதா' எனப் புகழ்வார்கள். பசுவின் சிறுநீரைக் கூட 'கோமியம்' என்று கொண்டாடுவார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தில் பசுமாட்டின் தோலைக் கையில் வைத்திருந்ததாகக் கூறி தலித் சகோதரர்கள் ஐந்துபேரை காவல்நிலையத்தில் வைத்தே அடித்துக் கொன்றார்கள் பஜ்ரங் தளத்தின் பக்தர்கள்(!) இந்தக் கொடுமை தொடர்பாக ''மனிதர்களைவிட பசு உயர்ந்ததா?'' என வி.ஹெச்.பி. தலைவர் அசோக் சிங்காலிடம் கேட்கப்பட்டபோது. ''ஆம், வேதங்கள் அப்படித்தான் சொல்கின்றன...'' என்று திமிராகப் பதிலளித்தார்.
ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிக்கூடங் களில் இப்படி ஒரு கேள்வி பதில். ''ஒரு முஸ்லிம் தன் வாழ்நாளில் 12 பசுக்களைக் கொன்று தின்கிறான். அப்படியென்றால் 36 பசுக்களைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்?'' இது கேள்வி, ''3 முஸ்லிம் களைக் கொல்ல வேண்டும்'' லி இது பதில். பசுவின் பெயரால் ஒரு பயங்கரவாதம்.
இப்படிப் பசுக்களை வைத்து பயங்கர வாத அரசியல் நடத்தும் இவர்கள், உண்மையிலேயே பசுக்களைப் பாதுகாப் பவர்களோ, பராமரிப்பவர்களோ அல்ல.
வீதியெங்கும், குப்பைகளில் மேய்ந்து, புனிதமான (?) சினிமா போஸ்டர்களைப் பிய்த்துத் தின்று, காய்கறி வண்டிகளிலும், டீக்கடை போண்டாக்களையும், திருடித் திரியும், அனாதைக் கோமாதாக்களைப் பார்த்தாலே, பசு நேசர்களின் வண்ட வாளம் விளங்கும்.
ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசுவாமி திருக்கோவிலில், உள்ள கோசாலையில் 15 பசுக்கள் பட்டினி கிடந்து பரிதாபமாக செத்துள்ளன. மேலும் பல பசுக்கள் சாகக் கிடக்கின்றன.
பல்வேறு மாநிலங்களிலிருந்து ராமேஸ்வரத்துக்கு புனித யாத்திரை வரும் இந்து பக்தர்கள், நேர்த்திக் கடனாக கோவிலுக்குப் பசுமாடுகளை வழங்கு கின்றனர். இந்தப் பசுமாடுகளைக் கட்டி வைக்கும் இடம்தான் கோசாலை.
கோவில் விதிமுறைகளின்படி, நேர்த்திக் கடனாக வந்த பசுக்களை, விற்கவோ ஏலம் விடவோ கூடாதாம்.
அதனால் கட்டிப்போட்டே வைத்துள் ளார்கள். தானமாக வந்த கோமாதாக் களுக்கு(?) தீனி போடவும் இல்லை. பராமரிக்கவும் இல்லை.
பலநாள்கள் பட்டினி கிடந்த 15 பசுக்கள் 19.01.2008 அன்று பரிதாபமாகச் செத்துள்ளன. மேலும் பல சாகக் கிடக் கின்றன.
பசு அரசியல் நடத்தும் பயங்கர வாதிகள் கோசாலைகளில் பட்டினியால் வாடும் பசுக்களைப் பராமரிக்க வேண்டி யது தானே? செய்ய மாட்டார்கள்.
அவர்களுக்குப் பள்ளிவாசல்களை இடிக்கவும், தேவாலயங்களை கொளுத் தவும், கன்னியாஸ்திரிகளைக் கற்பழிக் கவுமே நேரம் போதவில்லை.
இதையெல்லாம் செய்வார்களா?
''ஒரு பெண், தான் வளர்க்கும் ஒரு பூனையைக் கட்டிப் போட்டிருந்தாள். அந்தப் பூனை பசியால் இறந்து விட்டது. உணவைத் தேடிப்போக முடியாமல் பூனையைக் கட்டியும் போட்டு விட்டு, அதற்கு உணவும் கொடுக்காத அந்தப் பெண் நரகத்திற்குப் போவாள். தாகத்தில் தவித்த ஒரு நாய்க்குத் தண்ணீர் புகட்டிய பெண் சொர்க்கத்துக்குப் போவாள்'' லி என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஜீவகாருண்ய சிந்தனையின் பக்கம் எல்லோரும் வரலாமே.
........சமத்துவன்.................

Anonymous said...

சமத்துவன் அவர்களுக்குச் சில கேள்விகள்.

முதலில் இந்தப் பசுக்கள் இறந்தது அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருந்த போது. கோவிலில் வரும் வருமானத்தை எல்லாவ்ம் பிற காரியங்களுக்கு எடுத்துச் செலவிடும் இந்து அறநிலையத்துறை பசுக்களைக் கவனிக்கத் தவறியது யார் குற்றம்? இந்துக்களுக்கும் ஒரு தனியான வக்பு போர்டு இருந்தால் இந்தப்பசுக்களும் காப்பற்றப் பட்டிருக்கும்.


அடுத்தது, தலித் சகோதரர்கள் மேல் என்ன பாசம் உங்களுக்கு. என் மெய் சிலிர்கிறது. காரணம் இல்லாமலா உங்கள் பாசம்? சந்தடி சாக்கில் மதம் மாற்றுவதற்கு ஒரு பிட்டைப் போட்டு விட்டீர்கள். மசூதிகளை இடிக்கிறோம் என்று சொல்கிறீர்களே, மலேசியாவில் ஆயிரக் கணக்கான இந்துக் கோவில்களை இடித்துக் கொண்டிருக்கிறார்களே, நீங்கள் சொல்ல வேண்டியதுதானே "ஐயா, நாங்கள் இங்கு மத சுதந்திரத்தை நன்றாக அனுவபித்துக் கொண்டிருக்கிறோம், ஆகவே தயவு செய்து அதெ அளவு அல்லது சிறிது குறைந்த அளவிலாவது மலேசியாவில் உள்ள இந்துக்களுக்கு அளியுங்கள்" என்று.

கன்னியாஸ்த்ரீகளைக் கற்பழித்த விவகாரம்: மத்திய பிரதேசத்தில் நடந்த விஷயம் ஒரு மத அடிப்படை விவகாரம் அல்ல. அந்தக் கற்பழிபில் ஈடுபட்டவர்கள் ஒரு கொள்ளைக் கூட்டம், அவர்களில் பாதி பேர் இந்துக்கள் மீதி பேர் கிறிஸ்தவர்கள். ஆகவே இது முழுக்க முழுக்க கொள்ளை சம்பத்தப்பட்ட் விவகாரம், அவர்கள் கைது செய்யப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனையும் அடைந்து விட்டார்கள்.

அடுத்த கன்னியாஸ்த்ரி விவகாரம், பீகாரில், ஒரு கன்னியாஸ்த்ரி காரில் கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்ட விவகாரம், இல்லையா? அந்தப் பெண் கூட தமிழ்நாட்டில், விருதாசலத்தைச் சேர்ந்தவர், அவருக்காக நமது கபிஸ்தலம் பண்ணையார் தலைமையில், M P பதவிக்காக, கட்சி மாறியவுடன் தனது பெயரையும் ஜெயஸ்ரீ நாகராஜன் என்று அழைப்பிதழில் போட்டுக் கொண்ட திருமதி. ஜெயந்தி நடராஜன், ஆகியோர் சேர்ந்து மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி பட்டப் பகலில் ஊர்வலம் போனர்கள்.

ஆனால் அந்த சம்பவத்தின் முடிவு என்ன தெரியுமா? அப்போது ஆட்சியிலிருந்தது சமூக நீதிக் காவலர், மைனாரிட்டிகளின் நண்பர் திரு.லல்லூ பிரசாத் யாதவ் அவர்கள். முதலில் அந்தக் கன்னியாஸ்த்ரி மருத்துவ பரிசோதனைக்கு உட்பட மறுத்து விட்டார். பின்பு அவரைக் கட்டாயமாம மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி ரிப்போர்ட் வெளிவந்த பிறகு, அதைப் பற்றி யாரும் பேசவில்லை. The Hindu பத்திரிக்கையில் ஒரு மூலையில் இந்த செய்தியை வெளியிட்டிருந்தார்கள். அந்த மருத்துவ அறிக்கை சொல்வது இதுதான்: " கற்பழிப்பு ந்டந்ததற்கான அறிகுறிகள் ஒன்று கூட இல்லை. அது மட்டும் இல்லை, அவரது உடலில் உள் இருந்த பிற அடையாளங்கள், she has got previous experiences in the act of sex, like abortion, etc என்று காட்டுகின்றன"

சமத்துவரே இப்போது கூறுங்கள், முதலில் அவர் கன்னியே இல்லையே பிறகு எப்படி அவர் கன்னியாஸ்த்ரி ஆனார்?

சரி, சாத்வீக்மான மதம் என்று கூறினீர்களே, பிறகு ஏனையா ஒசாமா பின் லேடனுக்கு இவ்வளவு ஆதரவு? எந்த நாட்டிலாவது இந்துக்கள் தீவிரவாதிகளாய் இருந்திருக்கின்றனரா? இஸ்லாமியர்கள் அல்லாத யாவரும் பாவிகள், கத்தி முனையிலாவது அவர்களை மதம் மாற்ற வேண்டும், அப்படியும் மாறாவிட்டால் அவர்கள் இருப்பதை விட சாவதே மேல், என்று சொன்னது எந்த மதம் சமத்துவரே?

தயவு செய்து மதப் பிரச்சாரத்தினை நிறுத்திக் கொள்ளவும். இது தேவையில்லாமல் மக்களிடையே பிரிவினையைத் தூண்டுகிறது என்பதை நினைவு கொள்ளவும்.

சாணக்யன்.

www.chanakyansays.blogspot.com

Anonymous said...

//அடுத்தது, தலித் சகோதரர்கள் மேல் என்ன பாசம் உங்களுக்கு. என் மெய் சிலிர்கிறது. காரணம் இல்லாமலா உங்கள் பாசம்? சந்தடி சாக்கில் மதம் மாற்றுவதற்கு ஒரு பிட்டைப் போட்டு விட்டீர்கள்.//

மத மாற்ற பிட்டை கடாசுங்கள்.
நடந்த கட்டுமிராண்டிதனதுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?

-Nanban

R.Subramanian@R.S.Mani said...

Chanakyan,
Is thee any "KANYA" (virgin) sthree ?