பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 08, 2008

லேட்டஸ்ட் ரஜினி நியூஸ்

ரோபோ படத்தில் யார் கதாநாயகி, மற்றும் ரோபோவிற்கு முன் ரஜினி நடிக்கும் பி.வாசு, கே.பி படம்

கதாநாயகி - நயன்தாரா, தீபிகா படுகோனே !

தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் தயாராகும் ரோபோ படத்துக்கு இந்தி, தெலுங்கு நடிகர்களும் நடிக்க ஒப்பந்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ரஜினி ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சம்பளத்தை குறைத்துக் கொள்கிறோம். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கால்ஷீட் கொடுக்கிறோம். என்றெல்லாம் தூது அனுப்பி வருகின்றனர்.

ரோபோ மெகா பட்ஜெட்படம் என்பதால் இரு கதாநாயகி களை நடிக்க வைக்க ஷங்கர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா, தீபிகா படுகோனே ஆகியோர் ஜோடி களாக பிரகாசமான வாய்ப்பு உள்ளது. நயன்தாரா, `பில்லா'வில் நடித்து மேலும் பிரபலமாகி யுள்ளார். மலையாளத்திலும் இப்படம் வெற்றிகரமாக ஓடு கிறது. தெலுங்கிலும் நயன்தா ராவுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

எனவே அவர் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என படக்குழுவினர் கருதுகின்றனர்.

தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். சமீபத்தில் ரிலீ சான `ஓம் சாந்தி ஓம்' இவ ருக்கு உலகளவில் ரசிகர் பட்டாளத்தை ஈர்ந்துள்ளது. எனவே இன்னொரு கதாநாயகி யாக நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது.

அடுத்த படம்

`ரோபோ' படம் வருவதற்கு முன்பாக, பாலசந்தருக்காக புதிய படத்தில் நடிக்கிறார் ரஜினி. இதற்காக மலையாளத்தில் மம்முட்டி நடித்த படத்தின் `ரீ மேக்' உரிமை அவசரமாக வாங்கப்பட்டுள்ளது. தற்போது, ரஜினியின் புதிய படம் யாருக்கு என்ற நிலையில் `ரோபோ' அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது. `ரோபோ' படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாரிக்கப்படுவதால், இரண்டு ஆண்டு காலம் ஆகும். அதற்கு முன், குறுகியகால தயாரிப்பாக பாலசந்தருக்கு ரஜினி நடித்து கொடுக்கிறார். மலையாளத்தில், மம்முட்டி நடித்த `கதா பறையும் போல்' படத்தை பார்த்த இயக்குனர் பி.வாசு படம் பற்றி ரஜினியிடம் கூறியிருக்கிறார்.இப்படத்தையும் தமிழுக்கு தகுந்தபடி கதையில் சில மாற்றங்கள் செய்தால், ஜெயித்து விடலாம் என்றும் வாசு கூறியிருக்கிறார். படத்தை, ரஜினிக்கு போட்டு காட்டியிருக்கிறார். ரஜினிக்கு பிடித்து போக அவசர, அவசரமாக படத்தின் `ரீ மேக்' உரிமை வாங்கப்பட்டுள்ளது. இந்த படத்தை, பாலசந்தருக்கு செய்து கொடுங்கள் என்று ரஜினி கூறியதை அடுத்து, பாலசந்தரும் வாசுவும் சந்தித்து பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில், பிரபல திரைப்பட நிறுவனமான செவன் ஆர்ட்ஸ் நிறுவனமும், பாலசந்தரின் கவிதாலயா நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் முறையான அறிவிப்பு வரும் 15ம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஹீரோவாக ரஜினியும், சவரத் தொழிலாளியாக நடிகர் பசுபதியும் நடிக்கின்றனர். பி.வாசு இயக்குகிறார். ரோபோ' படம் வெளிவருவதற்கு முன்பே தயாரித்து, வெளியிடும் வகையில் ரஜினி `கால்ஷீட்' தேதிகளை ஒதுக்கியுள்ளார். அடுத்த சந்திரமுகி ?

3 Comments:

Anonymous said...

I have heard that 'kada parayambol' is a very good movie, just released recently. Its a different movie, and not the run of the mill one. But I don't understand why P.Vasu has to direct it. He is one of the over-rated directors of tamil cinema, and he is good for spoiling good scripts. Best example being Chandramukhi.

Anonymous said...

சிவாஜி படத்தால் கோடிக்கணக்கில் நஷ்டம் ரஜினி உதவ விநியோகஸ்தர்கள் வலியுறுத்தல்


சேலம், ஜன. 9: ஏ.வி.எம். தயாரிப்பில் ரஜினி, ஸ்ரேயா நடித்த படம் ‘சிவாஜிÕ. ஷங்கர் இயக்கி இருந்தார். இப்படத்தின் வெள்ளிவிழா 11ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இப்படத்தின் விநியோக உரிமையை பெற்றவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதை ஈடு செய்ய ரஜினி உதவ வேண்டுமெனவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் சிவாஜி படத்தை வெளியிடும் உரிமை 8 விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் 3 விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ‘விகாஷ் பிக்சர்Õ சி.பிரகாஷ். சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விநியோக உரிமையை பெற்ற இவர் கூறியதாவது:
சிவாஜி படம் எவ்வளவுக்கு போகும் என தெரியாத நிலையில், ரூ.5 கோடிக்கு விநியோக உரிமையை பெற முன்வந்தோம். ஐந்தரை கோடி நிர்ணயித்து எங்களுடன் அக்ரிமென்ட் போட்டார் தயாரிப்பா ளர். முதலில் 5 கோடி கொடுங்கள், 50 லட்சத்திற்கு செக் கொடுங்கள். ஏதாவது என்றால் பார்த்துக்கொள்கிறோம் என உறுதியளித்தனர். சம்மதித்தோம். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 33 திரையரங்குளில் ரிலீஸ் செய்தோம். படத்தின் மூலம் கிடைத்த வருவாய் ரூ.4 கோடியே 30 லட்சம்தான். சுமார் 1 கோடிக்கு மேல் இழப்பு. இதுகுறித்து ஏ.வி.எம் நிறுவனத்திற்கு தெரிவித்தோம். பதிலோ, ஆறுதலாக வார்த்தையோ வரவில்லை. இந்த விஷயத்துல் எங்களுக்கு பணம் கிடைக்க ரஜினி உதவ வேண்டும்.
இவ்வாறு பிரகாஷ் கூறினார்.
செங்கற்பட்டு மற்றும் புதுவை விநியோகஸ்தர் நாக் ரவி கூறும்போது, ‘’21 சென்டரில் சிவாஜி படம் வெளியிட விநியோக உரிமையை ரூ.4 கோடியே 65 லட்சத்திற்கு எடுத்தோம். ஆனால் கிடைத்தது ரூ.3 கோடியே 30 லட்சம் தான். மினிமம் கியாரண்டி முறையில் அல்லாமல் டிஸ்ட்ரிபூஷன் கேரண்டி முறையில் படத்தை வாங்கினேன். கொடுத்த பணம் அளவுக்கு வருவாய் கிடைக்கவில்லை என்றால் இழப்புத்தொகையை தந்து விடுவார்கள் என நம்பினேன். ஆனால் ஏ.விஎம் நிறுவனத்தினர் மறுத்து விட்டனர்’’ என்றார்.
இதே கருத்தை திருச்சி விநியோக உரிமை பெற்ற நிறுவனத்தின் ஆடிட்டர் ரமேஷ்குமாரும் தெரிவிதார். திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 22 சென்டர்களில் வெளியிட சிவாஜி பட விநியோக உரிமையை ரூ.6 கோடிக்கு எடுத்ததாகவும், ரூ.1 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Anonymous said...

This collection figure does not include the extra black amount collected by theatres over & above the offical ticket rates with the active connivance of the Govt. which is anyway unaccounted. These buggers are just trying to throw stones at a tree - if fruit comes fine; otherwise no harm. But ultimately the stone is going to fall on their own head.