பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 17, 2008

பதிப்பாளர் ஒருவர், அரங்குகள் நான்கா?

பதிப்பாளர் ஒருவர், அரங்குகள் நான்கா? என்ற தலைப்பில் இன்று வந்த தினமணி செய்தி ? யாராவது இதை பற்றி சொல்லுங்கப்பா !

31-வது சென்னை புத்தகக் கண்காட்சிக்காக நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பித்திருக்கும் பதிப்பகங்களில் ஒன்று தமிழ்மண் பதிப்பகம். இப்பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனைச் சந்தித்தோம்.

அவர் கூறியதாவது:

""இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் கட்டமைப்பு பாராட்டும்படி உள்ளது. நிறைய இட வசதி, பார்வையாளர்கள் எளிதில் புத்தகங்களைப் பார்வையிட வசதி ஆகியவற்றைப் பாராட்டியே ஆக வேண்டும்.

ஆனால் பதிப்பாளர்களுக்கு இடம் ஒதுக்கிய முறையில் சிறிய குறை உள்ளது. இங்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்களுக்கு அரங்கம் அமைக்க இடம் கொடுக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஒரு பதிப்பகத்தைச் சேர்ந்தவர்களே ஒன்றுக்கும் மேற்பட்ட அரங்குகளை எடுத்து தங்களுடைய புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். இதனால் சிறுபதிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பதிப்பாளர் சங்கத் தலைமையிடம் செல்வாக்கு உள்ளவர்களுக்கு இவ்வாறு இடம் ஒதுக்கப்படுகிறதோ என்று சந்தேகம் ஏற்படுகிறது.

சிறுபதிப்பாளர்கள் ரூ.17 ஆயிரத்துக்கும் மேலாக அரங்கத்துக்கு வாடகை கொடுத்து புத்தக விற்பனைக்கு வந்திருக்கும்போது, இப்படி வலுத்த பதிப்பகங்கள் பெரிய அளவுக்குப் புத்தகக் கண்காட்சியை ஆக்கிரமித்துக் கொள்வதால் ஒரு நாளைக்கு ரூ.5000-க்குக் கூட சிறுபதிப்பகங்களுக்கு விற்பனையாகாமல் போய்விடுகிறது. இதனால் சிறுபதிப்பாளர்கள் பெருத்த நஷ்டத்துக்கு உள்ளாகிறார்கள்.

வரும்காலத்தில் இம்மாதிரி நிலை ஏற்படாமல் ஒரு பதிப்பகத்துக்கு ஓர் அரங்கம் மட்டுமே ஒதுக்கிக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்'' என்றார்.

2 Comments:

Anonymous said...

இட்லி வடை சார்
இந்த பதிவை பார்த்திங்களா?

http://allaboutpolitics.blogspot.com

அதற்குள்ளாக ஒரு மிக விரிவான அலசல்.

யோசிப்பவர் said...

இது இந்த வருடம் மட்டுமே நடந்த ஒன்றில்லையே! நான் பார்த்தவரையில் கடந்த சில வருடங்க்ளாகவே இப்படித்தான் நடக்கிறது!?