பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 07, 2008

ஷங்கரின் ரோபோவில் ரஜினி - அதிகாரபூர்வ அறிவிப்பு

சிவாஜிக்கு பிறகு ஷங்கரும், ரஜினியும் மீண்டும் ரோபோ படம் மூலம் இணைகிறார்கள். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ரோபோ படத்தை இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க ஐங்கரன் இண்டர் நேஷனல் மற்றும் ஈரோஸ் மல்டி மீடியா இந்தியத் திரையுலகம் இதுவரை கண்டிராத வகையில் பிரம்மாண்டமாக மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக தயாரிக்கின்றனர்.

ரோபோ தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இசையுலகின் முடிசூடா மன்னன் ஏ.ஆர்.ரஹ்மான் ரோபோ படத்திற்கு இசை அமைக்கிறார்.

வியக்க வைக்கும் தொழில் நுட்ப யுக்தியுடன் கலையம்சம் மிக்க படைப்பாக ரோபோவை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் ஷங்கர், முன்னணி கதாநாயகி நடிக, நடிகையர் மற்றும் பிற முக்கிய தொழில் நுட்ப கலைஞர்களை இயக்குனர் ஷங்கர் விரைவில் அறிவிப்பார்.

இந்தி திரையுலகின் முன்னணி நிறுவனமான ஈரோஸ் மல்ட்டி மீடியா ஏற்கனவே தேவதாஸ், முன்னாபாய் எம்.பி.பி.எஸ், ஓம் சாந்தி ஓம், பார்ட்னர் போன்ற பிரம்மாண்ட படங்களை உலகம் முழுவதும் திரையிட்டுள்ளனர். திரைப்படம், ஸ்டூடியோ, டி.வி. நிகழ்ச்சிகள், ஹோம் என்டர்டெயின்மென்ட் இசை ஆல்பம் மற்றும் திரையரங்குகளைப் பராமரிப் பதிலும் முத்திரை பதித்தவர்கள்.

ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் ஆகிய முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களைத் தயாரிப்பதுடன், மேலும் எழுபது இந்திபடங்களை தற்போது தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் தமிழ்படங்களை திரையிடுவதில் முத்திரை பதித்த முன்னணி நிறுவனமான ஐங்கரன் இன்டர் நேஷனல் இதுவரை 1500 படங்களுக்கு வினியோக உரிமை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் சிவாஜி, படையப்பா, சந்திரமுகி, முதல்வன், இந்தியன், ஜீன்ஸ், பாய்ஸ், போக்கிரி கில்லி, சிவகாசி, காதலுக்கு மரியாதை, அலைபாயுதே, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், கன்னத்தில் முத்தமிட்டால், பில்லா(2007) போன்ற பல வெற்றிபடங் களை வெளியிட்ட நிறுவனம் ஐங்கரன் இன்டர் நேஷனல் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோபோ படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்க இருக்கிறது.

யார் ஹீரோயினாக நடிப்பார் என்பது அடுத்த கேள்வி ( ஜொள்வி ) !

5 Comments:

IdlyVadai said...

'ரோபோ' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் கதாநாயகி தீபிகா படுகோனே நடிப்பார் என்று கூறப்படுகிறது. ரஜினி தோனி போல முடி வளர்ப்பாரா ?

Anonymous said...

சிவாஜியை அடுத்து மறுபடியும் "தமிழ் நாட்டையும்", தமிழனையும் கொள்ளையடித்து, சுரண்டி , இரத்தத்தையும் குடிக்க வரும் ரஜினி, சங்கர் போன்ற "கருப்புப் பண" பன்றிகளை" இப்பொழுதிலிருந்தே புறக்கணிப்போம்.

இட்லி வடையாரே ! நீங்களும், உங்கள் blog - ல் ரோபோவை புறக்கணியுங்கள்.

- தமிழன்

Anonymous said...

Mada Thamizha, Even if you continue to shout your gibberish from the rooftops like the boorish Australian cricketers, overwhelming majority in and outside Tamil Nadu, will shower their love and affection to the Entertainer Par Excellence Super Star Rajinikanth & thereby rubbing slat into your inflated ego. Continue your bark & grab some waste lying near the dustbin to gain strength.

Anonymous said...

""ரஜினி படத்துக்கு ஆரம்பத்துலயே சிக்கல் உருவாயிட்டு வே...'' என்று அடுத்த விவகாரத்தை கூற ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

""ஷங்கர் இயக்கத்துல புதுப் படத்துல ரஜினி நடிக்கப் போறதா இப்ப தான் தகவலே வந்திருக்கு... இன்னும் எந்த வேலையும் துவங்கலை... அதுக்குள்ள என்ன சிக்கல் பா...'' என்று கேட்டார் அன்வர்பாய்.

""படத்தோட பெயர் தான் பிரச்னை... ரஜினியோட புதுப் படத்துக்கு "ரோபோ'ன்னு பெயர் வைச்சிருக்காங்க... தமிழில் பெயர் வைச்சா தான் கேளிக்கை வரியில விலக்கு கிடைக்கும்... இல்லேன்னா, தியேட்டர் காரங்க அரசுக்கு கேளிக்கை வரி செலுத்த வேண்டியிருக்கும்... ஏற்கனவே "சிவாஜி' படத்தோட தலைப்பு தமிழ் பெயர் இல்லாவிட்டாலும் "பெயர்ச் சொல்'ன்னு கூறி வரி விலக்கு வாங்கிட்டாங்க...

""ஆனா, "ரோபோ'ங் கறது சுத்தமான ஆங்கிலப் பெயர்ங்கறது எல்லாருக்கும் தெரியும்... அதுக்கு எந்த விளக்கத்தை சொல்லி வரி விலக்கு வாங்க முடியும்... படத்தை நாலு மொழிகள்ல எடுக்கறதால பொதுவான பெயரை வைக்கத் தான் ஷங்கர் விரும்புதாரு... வரிவிலக்கு இல்லேன்னா தியேட்டர்காரங்களும் படத்தை திரையிட தயங்குவாங்க... அந்த பிரச்னை தான் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கு வே...'' என்றார் அண்ணாச்சி.

Dinamalar

Anonymous said...

இந்த கிழக் கூ..முட்டை இந்த படத்திலயாவாது வயசுக்கு தகுந்த மாதிரி நடிக்குதான்னு பார்ப்போம்?