சேதுகால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் கோரிக்கையை பிரதமரும், காங்கிரஸ் அமைச்சர்களும் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெற உள்ள சில மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள், அதனைத் தொடர்ந்து வரவுள்ள மக்களவைத் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அமைச்சரவையில் முடிவெடுக்கப் பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் வரும் 16ம் தேதி உச்சநீதிமன்றத்தில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோர முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெற உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் போன்ற முக்கிய மாநிலங்களின் சட்டசபை தேர்தலிலும், அதன் பின்னர் வரவிருக்கும் மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என சோனியா காந்தியும், மற்ற தலைவர்களும் அஞ்சுவதாக கூறப்படுகிறது.
தேவையில்லாமல் கிளம்பிய ராமர்பால சர்ச்சை காரணமாக பிஜேபியும், இந்து அமைப்புகளும் அதனை ஒரு பிரச்சாரமாக பயன்படுத்தியதால் காங்கிரசுக்கு வடமாநிலங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், குஜராத், இமாச்சலபிரதேச மாநிலங்களில் கட்சி தோல்வி அடைந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் காங்கிரஸ் கட்சி கருதுவதாக தெரிகிறது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, January 11, 2008
சேது திட்டதுக்கு நோ- மத்திய அரசு முடிவு
Posted by IdlyVadai at 1/11/2008 01:40:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
அப்போ காங்கிரஸும் இந்துத்வா கட்சியா?
கூடிய சீக்கிரம் மஞ்சள் துண்டு புட்டபர்த்திக்கு ஒரு ட்ரிப் அடிப்பார் பாருங்கள். (புட்டபர்த்தியில் எனக்கு சில பட்சிகள் உண்டு)
அப்பு, நாராயண ராஜு தான் கோபாலபுரத்துக்கு ட்ரிப் அடிப்பார் இத சொல்றதுக்கு எந்த ப்ட்சியும் தேவையில்லை.
What happened to the font in Posts section. Letters in the post section are viewed broken.
யோசிப்பவர், எனக்கு சரியாக தான் தெரியுது.
எனக்கும் சரியாதான் பொங்கலுக்கு முன்புவரை தெரிந்து கொண்டிருந்தது. இந்தப் போஸ்டுக்கு அப்புறம் நீங்கள் பதிவிட்ட போஸ்ட் எல்லாமே இப்படி உடைந்த எழுத்தக்களாகத்தான் தெரிகிறது. ஆனால் மற்ற பகுதிகளில்(தலைப்புகள் தவிர) எந்தப் பிரச்சனையும் இல்லை. Templateஐ செக் செய்யுங்கள்
யோசிப்பவர்.
நான் டெம்ப்ளேட் எல்லாம் change செய்யலை. மற்றவர்களுக்கு இதே பிரச்சனையா என்று பார்க்கிறேன். உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்.
நன்றி.
இட்லிவடை
மன்னிக்கவும் இட்லிவடை,
எனது கணிணியில்தான் ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன்.
Post a Comment