பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 31, 2008

இது "ஸேடிஸம்' ! துக்ளக் தலையங்கம்

இது "ஸேடிஸம்' ! துக்ளக் தலையங்கம்


தாழ்வுற்று, வறுமை மிஞ்சிக் கிடந்த தமிழர்களின் வாழ்வு இனி மலர்ந்தது!
தமிழ்ப் புத்தாண்டு மாற்றப்பட்டுவிட்டது. எல்லா அவமானங்களுக்கும் காரணமான,
சித்திரை மாத புதுவருடம் – இனி போயே போச்சு! பெருமையை அள்ளிக்கொட்டுகிற தை மாதத்தில், இனி புத்தாண்டு பிறக்கும். தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் போட்டார் உத்திரவு! மாறியது புது வருடம்!

தை மாதத்தில் அப்படி என்ன விசேஷம்? அது திருவள்ளுவர் பிறந்த மாதம்.

திருவள்ளுவர் அந்த மாதத்தில்தான் பிறந்தார் என்று ("பகுத்தறிவுவாதிகள்' ஏற்கிற வகையில்) எப்படித் தெரியும்? இப்படிக் கேட்பதே, பகுத்தறிவுக்கு விரோதம்.

சரி, தொல்காப்பியர் – கலைஞர் கையினால் உரை எழுதப்படுகிற பெருமையைப் பெற்ற தொல்காப்பியத்தை எழுதியவர் – தமிழுக்கு இலக்கணம் வகுத்தளித்த நூலை எழுதியவர், திருவள்ளுவருக்கு அறுநூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே
பிறந்தாரே? அவர் பிறந்த மாதத்தில் புத்தாண்டைத் துவக்க, ஏன் கலைஞர்
ஆணையிடவில்லை? உஸ்! அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசக்கூடாது. இது "கலைஞர் ஆதரவு தமிழறிஞர்கள்' ஏற்றுக்கொண்டுள்ள விஷயம்.

தவிர, கலைஞர் தனது முடிவிற்கு ஒரு ஆதாரமாக காட்டியிருக்கிற மாதிரி, "தை
பிறந்தால் வழி பிறக்கும்' என்ற பழமொழி இருக்கிறதே? ஹையா! இப்ப என்ன செய்வே? இப்ப என்ன செய்வே...?

சரி. இந்த மாதிரி பழமொழிகள், மற்ற எல்லா மாதங்களைப் பற்றியும் இருக்கின்றனவே!

ஆடிப் பட்டம் தேடி விதை... புரட்டாசி சம்பா பொன் போல விளையும்... ஐப்பசியில் அடைமழை... மாசிப் பிறையை மறக்காமல் பார்... என்று எல்லா மாதங்களைப் பற்றியும் பழமொழிகள் சொல்வதால், அந்த மாதங்களில் ஒன்றை வைத்துப் புத்தாண்டை தொடங்க வேண்டியதுதானே? அட, அவ்வளவு ஏன்? இப்போதுள்ள
சித்திரை மாதத் தொடக்கத்தையே பார்த்தால் – "சித்திரை மழை, செல்வ மழை;
சித்திரை மாதத்து உழவு பத்தரை மாற்றுத் தங்கம்' என்று பழமொழிகள் இருக்கின்றனவே! அப்படியிருக்க, பழமொழிச் சான்றைப் பார்த்து புது வருடத் தொடக்கத்தை சித்திரையிலிருந்து மாற்றுவானேன்?

இன்னும் சொல்லப் போனால், இப்போது நிச்சயமாகி இருக்கிற தை மாதத்தைப் பற்றி "தை பிறந்தது, தரை வறண்டது; தை மழை தவிட்டுக்கும் ஆகாது' என்று பழமொழிகள் இருக்கின்றனவே! தவிட்டுக்கும் ஆகாத தொடக்கமா, புது வருடத்திற்குத் தேவை?

இதோடு நிறுத்துவானேன்? கையில்தான் அதிகாரம் இருக்கிறதே! மாதங்களின் பெயர்களை சும்மா விடுவானேன்! பெரியாரிலிருந்து தொடங்கி, அண்ணா உட்பட, தனது குடும்பத்து அரசியல் வாரிசுகளையும் சேர்த்து, இடையில் ஒரு சில தமிழ்மொழிப் போர்க்காரர்களையும் நுழைத்து, பெரியார் மாதம், அண்ணா மாதம்... ஸ்டாலின் மாதம், கனிமொழி மாதம்... என்று பன்னிரண்டு புதுப் பெயர்களை வைத்துவிடலாமே! கேள்வி கேட்கத்தான் யாருமில்லையே! இஷ்டத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டியதுதானே!

நரகாசுரன் நல்லவன்; அவன் அழிந்த தினத்தைக் கொண்டாடுவது அநியாயம்; அதனால் அவன் பிறந்தநாளைக் கண்டுபிடித்து, (அதற்கு சில அறிஞர்கள் கிடைக்க மாட்டார்களா, என்ன?) அந்த நாள்தான் விளக்கேற்றி கொண்டாடப்படுகிற தீபாவளி என்று அறிவித்துவிடலாமே?

இந்த முதல்வருக்கும், அரசுக்கும் வேண்டியது என்ன? – ஹிந்து மத நம்பிக்கைகளுடன் ஒன்றிய விஷயங்களை எள்ளி நகையாட வேண்டும்; ஹிந்து மத நம்பிக்கையுடன் ஒன்றிவிட்ட பழக்கவழக்கங்களை மதிக்காமல் நடந்துகொள்ள வேண்டும். இந்த ஒரு வகையான "ஸேடிஸம்' தவிர, இந்த புது வருட மாற்றத்திற்கு, வேறு எந்தக் காரணமும் கிடையாது.

பிரிட்டிஷார் கூட, மக்களின் நம்பிக்கைகளில், அவர்களுடைய கலாச்சாரத்தில், கை வைக்கவில்லை. முதல்வர் அதைச் செய்ய முனைந்திருக்கிறார்.

ஆனால், ஒரு மக்கள் கூட்டத்தின் கலாச்சாரத்தை ஒரு அரசு உத்திரவு மாற்றிவிடப் போவதில்லை. கலைஞரின் புத்தாண்டு, அவருடைய அரசின் பதிவுகளில் மட்டுமே செல்லுபடியாகும்; ஆட்சி மாறுகிறபோது அதுவும் கூட மாறிவிடும். அந்த மாற்றத்திற்காகக் காத்திருப்போம்.

15 Comments:

Anonymous said...

தமிழனுக்கு ஏதாவது நன்மை நடக்குதுன்னா பாப்பானுக்கு பொறுக்காதே?

IdlyVadai said...

மாற்றத்தினால் தமிழனுக்கு என்ன நன்மை என்று சொல்ல முடியுமா ?

பார்ப்பான் என்றால் பதிவுக்கு எதிர்வினை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நான் உங்களின் கையாலாகாத தனம் என்று நினைக்கிறேன். நன்றி

Anonymous said...

Nalla Serupadi...Atchi avar kita irutha yenna venalum seivanga.....LOOSU PASANGA.. keta ne papaannn, ne tamilna illa yellam pesuvanga

ஜயராமன் said...

ஐயா,

தங்கள் கடை இட்லிவடை கொஞ்சம் பழைய சரக்கு. இதை நான் காலையிலேயே போட்டுவிட்டேன். jayaraman.wordpress.com

இருந்தாலும், இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். வலையேற்றியதற்கு நன்றி.

இவர் சொல்லும் சந்தேகம் - தை மாதத்தில் ஏன்? திருவள்ளுவர் யார் என்பதே தெரியாது. அவர் பெயர், ஊர், மதம் எல்லாம் செவிவழிக்கதைகள்தான். இதை வைத்து மாதத்தை மாற்றுவதா? -

சோ அவர்களின் கேள்வியில் நியாயம் இருக்கிறது.

நன்றி

Anonymous said...

திருவள்ளுவர் எந்த ஆண்டு என்று பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? கருணாநிதியிடம் பர்த் சர்ட்டிஃபிக்கேட் இருக்கிறதா? அல்லது அவரைப் பிரசவம் பார்த்த மருத்துவர் கருணாநிதியின் காதில் வந்து சொன்னாரா? அல்லது திருக்குறளில் ஏதாவது ஒரு இடத்தில் தன் பெயர், ஊர், பிறந்த தேதி போன்ற பயோ டேட்டாவைத் திருவள்ளுவர் எழுதி வைத்துள்ளாரா? அல்லது வேறு எந்த இலக்கியத்திலாவது அவர் பிறப்பு பற்றி சொல்லப் பட்டிருக்கிறதா? ராமன் பிறந்தானா, இருந்தானா என்று கேள்வி கேட்க்கும் கருணாநிதியே திருவள்ளுவர் பிறந்த தேதி உனக்கு எப்படித் தெரியும்? கிறிஸ்துவ மிஷ நரிகளிடம் காசு வாங்கிக் கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துத் தமிழர்கள் கொண்டாடும் ஒரு வருடப் பிறப்பை மாற்ற உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கோடிக்கணக்கான மக்களைக் கொடூரமாகக் கொன்ற ஒரு படுகொலையாளியான ஸ்டாலின் பெயரை உன் மகனுக்கு வைத்திருக்கிறாயே? உன் சொந்த மகனுக்கே உருப்படியாகப் பெயர் வைக்கத் தெரியாத உனக்கு தமிழ் வருடத்தின் பிறப்பு பற்றி என்ன தெரியும்? பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் தான் இருக்கும். கருணாநிதி ஆட்சி செய்தால் இதுதான் நடக்கும். விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள்,இஸ்லாமியத் தீவீரவாதிகளின் சொர்க்க பூமியான தமிழ் நாட்டில் இது போன்ற அக்கிரமங்கள் நடப்பதில் ஏதும் அதிசயம் இல்லைதான். இந்தப் பேயாட்டத்துக்கும் ஒரு முடிவு வரும்.

இலவசக்கொத்தனார் said...

நம்ம பெனாத்தலார் இது பற்றிப் போட்டு இருக்கும் பதிவைப் பார்த்தீர்களா?

Anonymous said...

//திருவள்ளுவர் அந்த மாதத்தில்தான் பிறந்தார் என்று ("பகுத்தறிவுவாதிகள்' ஏற்கிற வகையில்) எப்படித் தெரியும்? இப்படிக் கேட்பதே, பகுத்தறிவுக்கு விரோதம்.//

'திருவள்ளுவர் பிறந்தார்' என்ற ஒன்று போதுமே இதை செய்வதற்கு.

'ராமர் பிறந்தார்' 'கிருஷ்ணர் பிறந்தார்' போன்ற 'இந்துமத பகுத்தறிவின்'பால் நடக்கும் ஏக பல விசேசங்களுக்கும் இதுபோன்று ஒரு தலையங்கம் போட்டால் தான் என்னவாம்.

- கோய்ந்தன்

ஹரன்பிரசன்னா said...

Cho - brilliant.

Kumaran said...

எவ்வளவு தான் சொன்னாலும் எல்லாவற்றையும் மறந்து மறுபடியும் மக்களால் (!!!) தேர்ந்தெடுக்க படுவார்...

Anonymous said...

Karunanidhikku ippadi edhaavadhu
silvishamangal seivadil eppavumey
vazhakkamaaga kondirukkiraar. Adhuvum hindukkalai cheenduvadhil oru migapperiya sadistic anandam.
Indian Expressley udaney vanda oru
katturaiyil koorappattirundha vaanaviyal, ariviyal poorvamana
vishayangalai pittu pittu vilakkiyathai parkattum; paarthiruppar; anaal saridhan poda enru geemunu kidappaar. Arivu
poorvamaana samaacharathai chonnal
avarukku porukkadhey. En kaiyil
adhikaaram irukku, naan edhai veenalum eppadi venaalum seiven enra aanavam dhan indha utthiravu
pirappirkku kaaranam.

R.Subramanian@R.S.Mani said...

Now CHO has earned the enemity of AZHAGIRI- HOW DARE HE HAS NOT MENTIONED THE NAME OF A MONTH IN AZHAGIRI'S AND HIS DAUGHTERS' NAME - CHO HAS DEFINITELY TO FACE THIS CONSEQUENCY- SUPPAMANI

Anonymous said...

அடப்பாவி ,மஞ்ச துண்டின் வாரிசுகளின் பெயர்களை மாதங்களின் பெயர்களாக வைக்கணும்னா வருஷத்துக்கு 100 மாசம் வேணுமே?லெஜிடிமேட்/இல்லெஜிடிமேட் கும்பலை சேர்த்தா ஒரு கெளரவப் படையே இருக்குதப்பா.

Anonymous said...

Idly vadai = thuklak No: 02

Anonymous said...

Karuna vaya thoranthaal Cho avvalavuthan. karuna cho vukku simma soppanam endrall athu mihayaahathu.

Anonymous said...

டேய் விளக்கெண்ணெய்களா, பூமிய பாயாசுருட்டி கடலுக்குள்ள ஒளிஞ்சுட்டதா சொல்லறத நம்புற
வெண்ணெய் நீங்க !!!கிருஷ்ணர் வாய தொறந்தாராம்!!! உலகமே தெரிஞ்சுதாம்னு!!!??? சொன்னா நம்புவ, ஆனா திருவள்ளுவர் பிறந்த நாள ஏத்துக்கமாட்ட!

குரங்கு ஆகாயத்துல பறந்துபோய், ராவணன பாக்குது, ஆனா அவதார புருசன்(யாரோட புருசன்) பாலம் கட்டி நடந்து போராரு!!!!,

இன்னும் இந்து சந்து, பொந்துனு சொல்லிகிட்டு அலையிறீங்க,
சொன்னா கிறித்துவன்ட்ட காசு வாங்கிட்டம்னு பொய்யு வேற.

ஏண்டா இப்பிடி,,, திருந்தவே மாட்டிங்களா.