பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 30, 2008

புத்தக சந்தை/சச்சரவு

இந்தியா டுடே கட்டுரை, அதற்கு பத்ரியின் பதில்

இந்தியா டுடே கட்டுரை ஸ்கேன்
பகுதி 1
பகுதி 2

பத்ரி கருத்து

இந்தியா டுடே (தமிழ்) இதழில் தரமற்ற புத்தகங்கள் பளபளப்பான அட்டைகளில் வந்து வாசகர்களை ஏமாற்றுகிறது என்று சிலர் புலம்பியிருந்தனர். எப்படியாவது இதுபோன்ற புத்தகங்களைத் தடுத்து நிறுத்துவதுதான் தமிழ்ப் பதிப்புலகை எதிர்நோக்கியுள்ள பெரும் சவால் என்று கட்டுரையாளர் முத்தாய்ப்பாக முடித்திருந்தார்.

அரசு வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். இதற்கென ஒரு வாரியத்தை நியமிக்கலாம். புத்தகம் ஒன்றைப் பதிப்பிக்க விரும்புபவர், முதலில் அரசிடம் காட்டி சான்றிதழ் பெறவேண்டும். தரமுள்ளதா இல்லையா என்று இந்த வாரியம் தீர்மானிக்கும். இந்த லைசென்சைப் பெற்ற ஒருவர்தான் புத்தகத்தைப் பதிப்பிக்க முடியும்.

அல்லது மதுரை மீனாக்ஷி கோயிலில் சங்கப் பலகை ஏதாவது இருக்கிறதா என்று தேடிக் கண்டுபிடித்து அதனைப் பயன்படுத்தலாம். (பத்ரி பதிவு)


இட்லிவடை கமெண்ட்: பதிப்பகங்கள் கவிதை, இலக்கியம் என்று புத்தகம் கொண்டு வந்தால் தலையில் துண்டு தான் போட்டுக்கொள்ள வேண்டும். சொத்தையான மேட்டரை பளபளப்பு அட்டையில் கொடுப்பது வியாபாரம், முடிந்தவர்கள் செய்கிறார்கள். இதில் தப்பு ரைட் என்று எதுவும் சொல்ல முடியாது. மார்கெட்டிங் அவ்வளவே.

4 Comments:

Anonymous said...

*****தரமற்ற புத்தகங்கள் பளபளப்பான அட்டைகளில் வந்து வாசகர்களை ஏமாற்றுகிறது********

இது 100% உண்மை. பளபளப்பை நம்பி இந்த முறை நான் நன்றாக கிழக்கில் ஏமாந்தேன்.

Anonymous said...

கிழக்குப் பதிப்பகம் மட்டுமின்றி இதே குற்றச்சாட்டினை பிற பதிப்பகங்கள் மீதும் வைக்க முடியும். சுஜாதா என்ற பெயரைப் பயன்படுத்தி அதிக
விலையில் மனுஷ்யபுத்திரன் விற்பது
சரியா? அவர் வெளியிடும் பல புத்தகங்கள் மறுபதிப்புகள் அல்லது
கட்டுரைகளாக முன்னர் வெளியானவை. இன்றைய பிரபலங்கள் எதை எழுதினாலும்
வெளியிட்டு காசு பார்ப்பதில்
விகடனும், உயிர்மையும் ஒன்றுதான்.

கிழக்கு பதிப்பகம்
ஒரு பாணியைப் பின்பற்றுகிறது,
அதில் நிறைகளும் உண்டு,குறைகளும்
உண்டு. ஆங்கில பதிப்பகங்களில்
ஒரு நூலை குறைந்தது வெளியாள்
அல்லது ஒரு நிபுணர் மதிப்பிட்ட
பின், திருத்தங்கள் செய்து, பதிப்பிக்கப்பட்டு வெளியாகும்.
தமிழில் இது போல் செய்கிறார்களா?

கிழக்கின் பலவீனம் உள்ளடக்கம்,
பலம் மார்கெட்டிங், வடிவமைப்பு.
அவசர கதியில் புத்தகங்களை எழுதும்
போது, படித்து, ஆய்ந்து உள்வாங்கி
எழுத முடியாது. மோசமான பிரதியை
பதிப்பாசிரியர் எவ்வளவுதான் முயன்றாலும் ஒரளவிற்கு மேல்
சரி செய்ய முடியாது. இணையம்
வந்த பின் வாசகர் புத்தகத்தினை
எளிதில் மதிப்பிட முடியும்- அதில்
உள்ளவை சரிதானா என்பதை
அறிய முடியும். இது சுஜாதா உட்பட
பலருக்கு எரிச்சல் தருகிற ஒன்று.
இன்றைய வாசகர்களில் பலர் மூன்றாம் தலைமுறையாக
பட்டப் படிப்பும், அதற்கு மேலும்
படித்தவர்கள். எனவே அவர்களுக்கு
சுஜாதா எழுதியோ அல்லது கிழக்கு
அவசர அவசரமாக வெளியிட்ட
புத்தகத்திலிருந்துதான் எதையும்
தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற நிலை இல்லை.
என்னைப் பொருத்தவரை தமிழில்
புத்தகங்கள் வாங்குவதை நிறுத்தி
விட்டேன் என்றே சொல்லலாம்.
தரம், மற்றும் நம்பகத்தன்மை ஒரு காரணம், விலை இன்னொரு காரணம்.பணமிருந்தும் பலர்
தமிழ் நூல்களை தவிர்ப்பதும்,
ஆங்கில நூல் என்றால் விலை
அதிகம் என்றாலும் வாங்க தயாராக
இருப்பதும் ஏன் என்பதை பதிப்பாளர்கள் யோசிக்க வேண்டும்.

Nilofer Anbarasu said...

Judging a book by its cover or its size is one of the cheapest ways of evaluating the book. It is a book fair not a fish market to buy something looks new and fresh. Before buying do some homework by reading the reviews of latest books which are unknown to you and buy if it sounds good. Else before buying in the shop spend few minutes in reading first few pages and proceed, doing so will help u to come a conclusion whether it is a good book from worst author or worst book from good author. One cannot blame the publisher since it is purely marketing strategy. The old saying "Don't judge a book by its cover" is very appropriate in our lives today

குயில் said...

மால்டீ மீடியா பகுதியில் சென்றமுறை இடம்பெற்ற தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கு இந்த முறை அரங்கு கொடுக்கப்படவில்லை. அரங்குகள் ஒதுக்கப்படும் போது அதற்கான அறிவிப்புகள் யாருக்கும் அனுப்பபடுவதில்லை. எனவே பதிப்பளார் சங்கம் இனி வரும் காலங்களில் ஒருமுறை பங்கெற்கும் அனைவரையும் நினைவுட்டல் கடிதங்கள் அனுப்பினால் அவர்கள் கண்காட்சியில் பங்கேற்க ஒரு வாய்ப்பகாக அமையும்

ரா.கி