"பாமரன் நீங்கள் கோழை" - என்று போனவாரம் லீனாமணிமேகலை குமுததில் பாமரன் எழுதியதை படித்துவிட்டு கிழித்திருந்தார். இந்த வாரம் பாமரனுக்கு ஞானம் வந்துட்டுது...
அந்த ரகசியத்தைச் சொல்லியே தீர வேண்டிய வேளை வந்து விட்டது. இனியும் மறைப்பதில் எந்தவித நியாயமும் இல்லை. மிகச் சரியாகச் சொன்னால் இருபது வருடங்களுக்கு முன்பு மதுரையில் ஒரு நிகழ்ச்சிக்காக நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். பெரியவர்கள் அரட்டையில் ஈடுபட்டிருக்க, நேரம் ஓடிக் கொண்டிருந்தது.
எதேச்சையாக பக்கத்து அறையைப் பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி. வயது ஏழோ அல்லது எட்டோகூட நிரம்பாத சிறுமி ஒருத்தி தலையணை சைஸ் புத்தகம் ஒன்றை சீரியஸாக புரட்டிக் கொண்டிருந்தாள். பெரியவர்களிடம் இருந்து நைசாக நழுவி சிறுமியின் அறைக்குள் நுழைந்தேன்.
‘பாப்பா........ஸ்கூல்ல இவ்ளோ பெரிய்ய்ய்ய்ய புத்தகமெல்லாம் படிக்கச் சொல்றாங்களா?’ என்றேன்.
‘அங்கிள் இது ஸ்கூல் புக் இல்ல........கார்ல் மார்க்ஸ் எழுதிய டாஸ் கேப்பிடல்........’ என்றாள் சட்டென்று. அட........இந்த வயதிலேயே இவ்வளவு ஞானமா? என்று அதிர்ந்து போனேன் நான்.
அப்போதுதான் அந்தச் சிறுமியின் டேபிளைக் கவனித்தேன். மேசை முழுக்க ஏதேதோ இங்கிலீஷ்........மலையாளம்........என்று ஏகப்பட்ட புத்தகங்கள். அதில் தாடி வைத்த ஒருவரின் படத்துடன் உள்ள புத்தகத்தை எடுத்து........
‘இது யாரு பாப்பா, திருவள்ளுவரா?’ என்று கேட்க........
‘ஷட்டப்........இது பிடல் காஸ்ட்ரோ’ என்று பதில் வந்து விழுந்தது. இதென்னடாது வம்பாப் போச்சு என்று எண்ணியபடியே அந்தச் சிறுமி அறையில் மாட்டியிருந்த படங்களை நோட்டமிட்டேன். அதிலும் ஒரு தாடிக்காரர். இந்தமுறை கொஞ்சம் முன் ஜாக்கிரதையாக........
‘இவர் யாருன்னு தெரியலியேம்மா.......’ என்றேன்.
‘அவர்தான் கியூபாவின்
வெற்றிக்குக் காரணமான சே குவேரா. இதோ இந்தப் புத்தகம் அவர் எழுதிய பொலிவியன் டைரி....’ .என்று ஏதேதோ பேசிக்கொண்டே போனது அச்சிறுமி. உண்மையிலேயே ஆடிப் போய்விட்டேன். சிறு வயதிலேயே பார்வதி தேவியிடம் பால் குடித்து ஞானம் பெற்ற திருஞானசம்பந்தரைப் போல இச்சிறுமியும் நிச்சயம் ஒரு ஞானக் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்று அப்போதே புலப்பட்டு விட்டது.
பால் கணக்கு எழுத மட்டுமே டைரியைப் பயன்படுத்தி வந்த எனக்கு சே குவேரா எழுதிய பொலிவியன் டைரி பற்றி எல்லாம் சொல்லிக் கொடுத்தது அந்தச் சிறுமிதான்.
ஊர் திரும்பியவுடன் நிறை மாத கர்ப்பிணியாய் இருந்த மனைவியிடம் நமக்குப் பையன் பொறந்தா
சே குவேரான்னுதான் பேர் வைக்கணும். பொண்ணு பொறந்தா........மதுரையில் சந்தித்த அந்த ஞானக் குழந்தையின் பெயர்தான்........ என்று அடித்துச் சொல்லிவிட்டேன்.
விதியின் விளையாட்டால் 1989_ல் பையன் பிறந்து தொலைக்க சே குவேரா என்று பெயரிட்டோம். எல்லாம் அந்த ஞானக் குழந்தை இருபது வருடம் முன்பு புகட்டிய அறிவுதான்.
அவ்வளவு ஏன்........?
எழுதப்படிக்கக் கூட தெரியாத தற்குறியான என்னை........
என் காதைப் பிடித்துத் திருகி........
கையைப் பிடித்து இழுத்து........
ஸ்லேட்டின் மேலே வைத்து........
‘ம்ம்ம்........ அங்கிள் நான் சொல்றதை அப்படியே எழுதுங்க’ என்று........
பெ........
ரி........
யா........
ர்........
என்று எழுத வைத்துப் பழக்கியதும் எட்டு வயது கூட நிரம்பாத அந்தச் சிறுமிதான்.
ச்சே........உணர்ச்சி வசப்பட்டு எதையெதையோ எழுதிய நான், அந்த ஞானக் குழந்தையின் பெயரை எழுதாமல் விட்டுவிட்டேன். பெயர் எழுதாவிட்டால் அந்த ஞானக் குழந்தை கோபித்தாலும் கோபித்துக் கொள்ளும்........
சரி சொல்லிவிடுகிறேன். வேறு வழியில்லை.
அந்த ஞானக் குழந்தையின் பெயர்தான்:
லீனா மணிமேகலை..
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, January 28, 2008
ஞானக் குழந்தை - லீனா மணிமேகலை
Posted by IdlyVadai at 1/28/2008 10:49:00 AM
Labels: கருத்து, பத்திரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
பாமரன் (சோவைவிட) சில (சில மட்டும்தான்) கேவலமான சிந்தனைகளை கொண்டவர் என்பதை அவரது அண்மைக்கால எழுத்துக்களை படித்து தெரிந்து கொண்டேன். இவருடைய எழுத்து, தீவிரமான சிந்தனைகள் கொண்ட இளைஞர்களை கவருவது(இளைஞிகளை கவரும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை), தமிழ் சூழலில் நிகழும் பல ஆபத்தான நிகழ்வுகளில் ஒன்றாக நினைத்திருந்தேன். அவரது எழுத்து திறமையும் நடையும் கூட இத்தனை கேவலமானது என்பதை இந்த பதிவை படித்துத்தான் அறிந்தேன். அத்தனை ஆபத்தானவர் இல்லை என்றுதான் இப்போது தோன்றுகிறது.
குமுத புரட்சியாளர்களிடமிருந்து வேறென்ன எதிர் பார்க்க முடியும்..
ரோசா வசந்த், பாமரன் ஆறு ஒற்றுமைகள்
1, இருவரிடமும் சரக்கையை விட வெட்டி சவடால்கள் அதிகம்
2, இருவரும் அரைகுரையாக தெரிந்து கொண்டு அடுத்தவர்களை
திட்டுவார்கள்
3, இருவரும் தீவிர பெரியார் ஆதரவாளர்கள்
4, இருவரும் தேவையற்ற சர்ச்சைகளில் மாட்டிக் கொள்வார்கள்
5, இருவருக்கும் எரிச்சல் வரும் போது வார்த்தைகள் சரியாக வராது,
கோர்வையாக எழுத முடியாத. எதையாவது எழுதி சமாளிப்பார்கள்.
6, இருவரும் கிளப்பும் சர்ச்சைகளில்
கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது. அவை வெட்டிச் சர்ச்சைகள்.
pamaran sonnadhu sari
Post a Comment