பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 29, 2008

நமது வரி பணத்தில் என்ன பேசிக்கொள்கிறார்கள்.

நேற்று சட்டசபையில் நடந்த விவாதம்

பா.ம.க. உறுப்பினர் வேல்முருகன்: தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மொழி, பண்பாடு, கலாசாரம், உறவு முறை ஆகிய அனைத்திலும் கலாசார சீரழிவை நோக்கி இட்டுச் செல்கிறது. தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை முறையை கொண்டுவர முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சன் டி.வி., ஜெயா டி.வி., ராஜ் டி.வி., விஜய் டி.வி., முதல்-அமைச்சர் பெயரை தாங்கி வரும் கலைஞர் டி.வி. போன்ற தொலைக்காட்சிகளில் வரும் ஜோடி நம்பர் ஒன், ஜில்லுன்னு ஒரு காதல், மானாட மயிலாட போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும், தொடர்களிலும் ஆபாசங்களும், வன்முறைகளும் நிறைந்துள்ளன.

துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி:- இதையெல்லாம் நீங்கள் காட்சிக்கு காட்சி ரசித்து பார்த்திருக்கிறீர்கள்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- உறுப்பினர் வேல்முருகனும் படத்தில் நடித்திருக்கிறார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனம், நாட்டியம் தான் ஆடுகிறார்கள். அதில் ஆபாசம் இல்லை. அதில் எந்த அணி வெற்றி பெறுகிறது என்பதை பொதுமக்கள் தான் பார்த்து முடிவு செய்கிறார்கள்.

வேல்முருகன்:- அந்த நிகழ்ச்சியில் நடுவராக வரும் நடிகை நமீதா அரைகுறை உடையில் தான் வருகிறார். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட ஒரு விழாவில் நடிகை சுரேயா (ஸ்ரேயா என்பதை அவர் அப்படித்தான் உச்சரித்தார். அதனை கேட்டு அனைவரும் சிரித்தனர்.) மிகவும் ஆபாசமாக உடை அணிந்து வந்துள்ளார்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- நடிகை ஸ்ரேயா விழாவில் வந்த விதம் குறித்து குறிப்பிட்டார். நடிகைகள் எல்லாம் இப்படித்தான் டிரஸ் போட வேண்டும் என்று சட்டம் கொண்டுவர முடியாது. அறிவுரை வேண்டுமானால் அவர்களுக்கு கூறலாம். எந்த உடை போட வேண்டும் என்று நடிகைகள் தான் முடிவு செய்கிறார்கள். அதை அரசு முடிவு செய்வதில்லை.

வேல்முருகன்:- இந்த ஆபாசங்களை எல்லாம் ஏன் தணிக்கைத்துறை கண்டிப்பதில்லை.


அமைச்சர் துரைமுருகன்:- ஆபாசத்திற்கு எந்தவித அளவுகோலும் கிடையாது. இத்தனை `இஞ்ச்' தான் இடுப்பு தெரிய வேண்டும். இத்தனை இஞ்சுக்கு பிரா போடலாம், இத்தனை இஞ்சுக்கு பாவாடை போடலாம் என்றெல்லாம் அளவு எதுவும் இல்லை. ஆபாசம் என்பது அவரவர் மனதை பொறுத்தது தான். வேல்முருகன் நடித்த படத்தையும் பார்த்தோம். அதிலும் தான் ஜிங்கு ஜிங்குன்னு ஆடும் நடனம் வருகிறது.(இதனை இடுப்பை ஆட்டிக் காட்டியபடி கூறினார். இதனை பார்த்த அனைவரும் சிரித்தனர்.)

ஜி.கே.மணி:- ஆபாசம் அவரவர் மனதில் தான் இருக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார். அதற்காக அரைகுறை ஆடை உடுத்தி ரோட்டில் போக முடியுமா? இதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். திரைப்படங்கள், பொது இடங்களில் இதுபோல் ஆபாசமாக உடை உடுத்தி வருவது கலாசார சீரழிவை ஏற்படுத்தும். எவ்வளவு கற்பழிப்புகள் நடக்கிறது என்ற புள்ளிவிவரங்கள் எல்லாம் வருகிறது. இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் காரணம் என்ன? சமுதாயத்தை நல்வழிப்படுத்தத்தான் இந்த கருத்தை தெரிவிக்கிறோம்.

வேல்முருகன்:- ஆங்கில கலப்பில்லாமல் ஒரு படம் வருகிறது என்பதால் தான் அதில் நான் நடித்தேன். ஆபாசத்தை விதைப்பதற்கு அல்ல. ``கட்டிப்புடி, கட்டிப்புடிடா'', ``எப்படி, எப்படி, சமைஞ்சது எப்படி'' என்ற பாடல்களெல்லாம் எப்படி அனுமதிக்கப்பட்டது? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை முறை வேண்டும். இவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. பண்பாடு, கலாசாரம் எல்லாம் மறைந்து போய்விடுமோ என்று தான் கூறுகிறோம்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- நாகரிகத்தை காப்பாற்ற நாளை முதல் வேல்முருகன் வேட்டி-சட்டை அணிந்து வந்தால் நல்லது.

வேல்முருகன்:- இதனை நான் விளையாட்டுக்காகவோ, சிரிப்புக்காகவோ சொல்லவில்லை.

அமைச்சர் பொன்முடி:- ஆடை அணிவது நாகரிகத்தின் வெளிப்படுதல் தான். முன்பு பெண்கள் புடவை அணிந்து வந்தனர். இப்போது சைக்கிள், இருசக்கர வாகனங்களில் செல்கிறார்கள். அதற்கு வசதியான உடைகளை அணிந்து வருகிறார்கள். அதற்காக கலாசாரம் அழிந்துவிட்டது என்று கூற முடியுமா? கலாசாரத்தை காக்கத்தான் சமத்துவ பொங்கல் என்று கலாசார திருவிழாவை நடத்தும்படி முதல்-அமைச்சர் கூறியிருக்கிறார்.

ஏர் உழுபவன் கோவணம் கட்டிக்கொண்டு தான் உழுகிறான், அதற்காக அதை ஆபாசம் என்று கூறமுடியுமா? காலத்திற்கேற்ப மாறுவது இயற்கை. வேல்முருகன் கூறுவதை நான் முழுமையாக மறுக்கவில்லை. இதனால் கலாசாரம் சீரழிகிறது என்று மிகைப்படுத்தி கூறுவதை ஏற்க முடியாது.

வேல்முருகன்:- நான் ஒட்டுமொத்த திரைப்படங்களையும் குறை கூறவில்லை. 90 சதவீதம் இப்படித்தான் இருக்கிறது என்று தான் கூறுகிறேன். அதேபோல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் டி.ஆர்.பி.ரேட் (மக்கள் பார்க்கும் விகிதம்) அதிகமாக வேண்டும் என்பதற்காகவும், தனிப்பட்ட வருமானம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படிப்பட்ட ஆபாச காட்சிகளை திணிக்கிறார்கள். நம்மை கேட்க யாருக்கும் நாதியில்லை என்று சென்று கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் சுட்டிக் காட்டுகிறேன். தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சரிடம் கூறினால் இதற்கும் நியாயம் கிடைக்கும், வழி பிறக்கும் என்று தான் கூறுகிறேன். இளைஞர்கள் தடம் மாறிச் செல்வதை தடுக்க வேண்டும். ஒரு மாணவன் படம் பார்த்துவிட்டு கொலை செய்தேன் என்கிறான். எனவே இதுபோன்ற ஆபாசம், வன்முறை ஆகியவற்றை தடுத்து நிறுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேற்று நம் வரி பணத்தில் நடை பெற்ற விவாதம். படித்து அனுபவியுங்கள

10 Comments:

Anonymous said...

இந்தப் பேச்சுகளினால் தமிழ் எத்தனை இஞ்ச் வளர்ந்தது என்று தகவல் அறியும் சட்டத்தின்கீழ் தகவல் பெற முடியுமா?

Anonymous said...

அப்ப சட்டசபைல கலாச்சாரம் பத்திலாம் பேசவே கூடதுங்க்ரீரா !
இதுல என்ன தப்பு இருக்கு ..
நமது வருங்கால மாணவர் எல்லாம் நடிகைகளுடிய இடுப்பு அளவுக்கு மட்டும் சிந்திக்காமல் இருந்தால் சரி ...
அதுக்காக மாணவர்கள் சிந்திக்கவே இல்லன்னு சொல்ல வரல ..
இந்த மாதிரி விசயத்த அப்ப அப்ப சுட்டிகட்டுவது நல்லதே என்பது என் கருத்து ...

NDTV,BBC,DISCOVERY,போன்றவை
இன்னும் பல கிராமங்களில் சென்று அடையவே இல்லை ...( இதை கூர்ந்து யோசித்தால் புரியும் ).

IdlyVadai said...

//NDTV,BBC,DISCOVERY,போன்றவை
இன்னும் பல கிராமங்களில் சென்று அடையவே இல்லை ...( இதை கூர்ந்து யோசித்தால் புரியும் ).//

இதுக்கு மின்சாரம் இருக்கனும், இன்னும் 12 லட்சம் கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருக்கு. அதைவிட்டு விட்டு ஷ்ரேயா பற்றி ( இதுல ஸ்பெலிங் மிஸ்டேக் வேற)யும் மானாட மயிலாட பற்றி பேசுவதும் முட்டாள் தனம். நீங்க உட்கார்ந்து யோசித்தால் புரியும் :-)

vijayprasanna said...

அவர்கள் பேசியதை விடுங்கள் ...மானாட மயிலாட பற்றியும் ஷ்ரேயா பற்றியும் தங்களது அபிப்பிராயம் என்ன ?

என் கண்களுக்கு மானாட மயிலாட சற்று அபாசமாகத்தான் தெரிகிறது.
கமேர்ஷியலாக இருக்க வேடியதுதான் அதற்காக இவ்வளவு கூடாதப்பா...
அதுவும் ஒரு முதலமைச்சர் தயவில் நடத்தப்படும் தொலைக்காட்சியில் :(

சரி மீதம் இருக்கும் கிராமங்களில் மின்சாரம் இர்ருகிறது அல்லவா ...அவர்களுக்கு பல நன்மைகள் செய்ய வேண்டாம் ஆனால் அவர்களது வெளிஉலக பார்வையை நடிகைகளின் மார்புக்குள் புதைக்க வேண்டாமே .ஒரு வேலை எங்கே அவர்களுக்கு புத்தி வந்துவிட்டால் தன்னுடைய ஆட்சிக்கு பங்கம் வந்துவிடுமோ என்று நினைக்கிறார்கள் போல..

யோசிப்பவர் said...

//இதுல ஸ்பெலிங் மிஸ்டேக் வேற//

அட! அது சுபெல்லிங் மிச்டேக் இல்லீங்க. தமிழ்'படுத்த'ல்!!??!!

Anonymous said...

கலைஞர் தொலைக்காட்சியில் இப்படி நிகழ்ச்சிகள் வருவது பெரியாரின் கொள்கைகளுக்கு பொருந்தி வருவது,
பெரியார் பெண்களை ஆண்கள் போல் உடை உடுத்தச் சொன்னார், லுங்கி கட்டச் சொன்னார், இவர்கள் அதை சற்று மாற்றி செய்கிறார்கள், அதில் ஆபாசம் இல்லை என்று வீரமணி அறிக்கை விடுவார் :).
நமீதா, ஸ்ரியா தமிழை வளர்ப்பதும்,
கலைகளை வளர்ப்பதும், அதனை
கலைஞர் தொ.கா ஆதரிப்பதையும்
எதிர்க்கும் பார்பனிய புத்தியை கண்டிக்கிறோம் என்று லக்கி லுக்
எழுதுவார் :).

manju said...

These politicians just want to make some publicity, by taking up petty issues like this, stating that its offending tamil culture. There might be hundreds of people begging in the streets with torn clothes allover. These politicians will not bother about them, why don't they buy good clothes to them if they are really bothered about tamil culture.

Unknown said...

பா.ம.க என்னும் கட்சிக்கும் தி.மு.க என்ற கட்சிக்கும் ஓட்டு போட்ட தமிழன் இந்த விவாதத்தை பார்த்து பெருமைப்படுகிறான்!!!!!!!
இவ்ளோ கிளுகிளுப்பா பேசினதுனாலதான் இன்னிக்கு யாருமே வெளிநடப்பு செய்யலயோ????

Anonymous said...

நான் இந்த விஷயத்தில் பா. மா. க வை ஒத்து போகிறேன். (Note: வேறு எந்த விஷயத்திலும் இல்லை :) ). நிச்சியமாக சின்ன திரையில் ஆபாசம் என்பது பெருகி வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை தேவை தான். தி.மு.க விக்ற்கு இது நிச்சயம் தேவை. நன்றாக அவதி படுகிறார்கள் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. மிக விரைவில் மருத்துவர் அய்யா ஒரு காரசார அறிக்கை ( இது நீல நீல....ஆபாசம் !!!) எதிர்பார்க்கலாம்.

Anonymous said...

ஜி.கே.மணி அவர்களின் வாதம் மிகவும் சிந்திக்க வேண்டிய ஒன்று ஏன் என்றால் நடிகைகள் அரைகுறை உடையுடன் வருவதை மட்டும் கருத்தில் கொண்டு சட்டம் இயற்றுவதை விட பொதுவாக தமிழ்நாட்டுக் கலாச்சரத்தை சீரழிக்கும் வகையில் இப்போது ஐ.டி.நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் இந்த போக்கை மற்றும் வகையில் ஒரு சட்டம் இயற்றுவது பயனுள்ளதாக இருக்கும். அப்போது தான் நமது தமிழ்பண்பாடு காப்பற்றப்படும். பாவடை தாவணி என்ற ஒன்று இருந்த அடையாளம் இப்போது கிராமங்களில் மட்டும் தான் காணப்படுகிறது. எங்கு நோக்கிலும் ஆபாசம் விளம்பரபோர்டுகளில் கூட ஆபாசம். இது போல் பெண்களை ஆபாசபடுத்தி வெளியாகும் அனைத்து விளம்பரங்களையும் தொலைக்காட்சிகளில் தடைசெய்வதற்கு ஒரு தணிக்கை கண்டப்பாக தேவை.

ரா.கி